காற்றில் கரையும் திருவையாறு அசோகா!


            
            திருவையாறு.  
          காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்த அழகான ஊரின் பெயரை வாசிப்பதே இசை ரேகைகளை மனமெல்லாம் பரவச் செய்யும். நீண்ட இசை மரபைக் கொண்ட இந்த ஊரின் பெருமையை உலகம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை இசையால் மட்டுமே அறிந்திருந்தது. ஆனால், நிகழ்காலத் திருவையாற்றின் கதையை அசோகாவை விட்டுவிட்டு எவரேனும் எழுத முற்பட்டால் அது ஒருபோதும் நிறைவடையாது. வெற்றுப் புகழ்ச்சியல்ல; அத்தனையும் உண்மை!

ஆளுக்கொரு செய்தி... ஜமாய்!

         
             புது தில்லி மீது எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும்  விஷயங்கள் நிறைய உண்டு. அங்கு நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் உடனடியாக ஊதிப் பெருக்கிவிடும் ஊடகவியலாளர்களின் சாமர்த்தியமும் அதில் ஒன்று. ஆனால், சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை - முக்கியமான செய்தியை - இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக அவமானகரமான நிகழ்வும் செய்தியும்கூட  அது -  தில்லியில்தான் நடந்தது -  ஊடகவியலாளர்கள் மூடி மறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பெரும்பான்மையான ஊடகங்கள் இருட்டடிப்பில் ஈடுபட்டன. இத்தனைக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு அது. ஏன் ஊடகங்கள் மூடி மறைத்தன? என்ன நிகழ்வு அது?

ஒரு கோப்பை டீ


          
                "எ
ன்னய்யா உங்க ஊர்? ஒரு இது இல்ல; ஒரு அது இல்ல. இதெல்லாம் ஒரு ஊரா'' என்று எதற்கெடுத்தாலும் வாயால் அவல் அரைக்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். நம் நாட்டில் ஊர் என்று ஓர் இடத்தை அழைக்கலாம் எனில், அதற்கு என்னென்ன தகுதிகளை வரையறுக்கலாம் என்று ஒரு முறை உண்மையாகவே விவாதம் வந்ததாம். பலரும் பல மாதிரி தீவிரமாய்ப் பேசிக்கொண்டிருக்க, திடீரென எழுந்த ஒருவர், "ஒரு டீக்கடை இருந்தால் அதை ஊர் ஏன்று ஒத்துக்கொள்ளலாம்'' என்றாராம். கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே, "இதையும் ஒரு தகுதியாக வைத்துக்கொள்ளலாம்'' என்றார்களாம்.

சுவடுகள்


து
அவள் நடந்து சென்ற
பாதை
இவை எல்லாம்
அவள் விட்டுச் சென்ற
சுவடுகள்
அவள் நடை பயின்று துள்ளி ஓடி விலகிப் பிரிந்த
சுவடுகள்
ஒருநாள்
எங்கிருந்தோ வரும் புழுதிக் காற்று
இந்தச் சுவடுகளையும்
அள்ளிச் செல்லக் கூடும்
இந்தப் பாதை
எனக்குப் போதுமானது.

1998, கல்லூரிக் காலத்தில் வெளியிட்ட 'கண்ணீர்க் காதலன்' புத்தகத்திலிருந்து... 

தஞ்சாவூர் காபி


                 
                 "விருந்தின் பயனெல்லாம் வீணாகும் காபி;
                 அருந்தத் தராமல்விட் டால்'' 
- இப்படி ஒரு பகடிப் பாடல் உண்டு, தாத்தா காலத்தில். எல்லாம் காபி படுத்திய பாடுதான். தமிழர்களாகிய நம் வாழ்வில் பாழாய்ப்போன இந்த காபி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் லேசுபாசுபட்டதில்லை. காபி நல்லதா, கெட்டதா என்று ஒரு பக்கம் காலங்காலமாக விவாதம் நடந்துகொண்டிருக்க, "குடிக்கிறதைக் குடிக்காமல் வேறென்ன செய்வதாம்'' என்று கேட்டபடி டம்ளர்-டபரா சகிதம் பீப்பாய்பீப்பாயாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

காஷ்மீரிகள் ஏன் போராடுகிறார்கள்... இந்தியா என்ன செய்ய வேண்டும்?


       ம் சமூகத்தில் எனக்கு வெறுப்பேற்றக் கூடிய ஒரு குணம் எந்தவொரு விஷயத்திலும் கண நேரத்தில் உள்ளே நுழைந்து மாபெரும் விவாதத்தை நடத்தி ஒரு தீர்வையும் முன்வைக்கும் நம்முடைய ஆற்றல். ஒருபுறம் கோபம் வந்தாலும் மறுபுறம் எனக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது; தனக்கு முன்பின் தெரியாத ஒரு விஷயத்தை இவ்வளவு தீர்க்கமாகப் பேச உலகில் நம்மைத் தவிர வேறு எவராலும் முடியுமா என்று!

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?


      
      கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?