கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்

திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.

திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
அரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள். ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு, தலைவர் உடல் நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம். களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது!

இரு ஒளிக் கலைஞர்கள்!

 ‘ஸ்ருதி டிவி’ கபிலன், பிரபு காளிதாஸ்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு. மார்கழி பனி சன்னமாக நகரத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையின் புதிய கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றாகிவரும் புத்தாண்டு புத்தக இரவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி.

சாலை என்றோ தெரு என்றோ முழுமையாகச் சொல்லிவிட முடியாத குறுகலான அந்த வீதியில் அந்த இரவிலும் சரசரவென்று போகின்றன வாகனங்கள். வீதியின் இடது ஓரத்தில் எதற்காகவோ நீளமான பள்ளம் தோண்டப்பட்டு கிடக்க வலது ஓரத்தில் விழா மேடையை அமைத்திருந்தார்கள். திறந்தவெளி மேடை. மேடைக்கு முன் மூன்று வரிசையாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஐம்பது அறுபது பேர். எல்லோருக்கும் பின்னால் ஒரு மூலையில் நின்றபடி, கசியும் பனியிலிருந்து தன்னுடைய வீடியோ கேமராவைப் பாதுகாக்க தான் கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்து கேமராவுக்குச் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கபிலனை முதன்முதலாக நான் பார்த்தேன். பிரபு காளிதாஸைப் பார்த்ததும் அதே இரவில்தான். இன்னொரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ அது. விடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் அங்கு வந்திருந்த எழுத்தாளர்களையும் தருணங்களையும் படம் எடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

சென்னையின் இந்த நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் தவறாமல் பார்க்கக் கூடிய முகங்கள் இவர்கள் இருவரும். பிரபுவின் ஸ்டில் கேமரா சமகால தமிழ் இலக்கிய ஆளுமைகளைத் துரத்துவது; கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளையும் உரைகளையும் சமூக ஊடகங்கள் வழி நேரடியாக ஒளிபரப்புவதோடு, காணொலி ஆவணங்களாகவும் அவற்றை மாற்றிவிடுகிறார். சமகாலத்தில் சென்னைப் புத்தகக்காட்சியோடு பிரித்துப் பார்க்கவே முடியாத இந்த இரு ஒளிக்கலைஞர்களின் பின்னணியிலும் சுவாரசியமான கதைகள் உண்டு.

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?


உலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார்கள். கதைகளின் வழியாகவே அதிகாரத்தின் சூட்சமக் கயிறுகள் இயக்கப்படுகின்றன.

நரேந்திர மோடி அதிகாலை நான்கு மணி வரை உழைக்கிறார் என்று நேற்று செல்பேசிக்கு வந்த ஒரு கதை சொன்னது. ஆச்சரியம் என்னவென்றால், அவர் நள்ளிரவு மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார் என்று முந்தைய வாரத்தில்தான் இன்னொரு கதையை வாசித்திருந்தேன். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பின் இப்படி தமிழ்நாட்டைச் சுழற்றியடிக்கும் ஒரு கதை, ‘தமிழ்நாட்டு அரசியலில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது!’