ஒடுக்குமுறைத் தேர்வுகள்


உஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. நெருக்கடியான, நெரிசல் மிக்க கட்டிடங்கள். அனேகமாக ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பையும் வெவ்வேறு வண்ணங்களிலான பத்துப் பதினைந்து பெயர்ப் பலகைகள் மூடியிருந்தன. சாலையின் இரண்டு ஓரங்களிலும் விளம்பரத் தட்டிகள். சாலைக்குக் குறுக்கே வாகனங்களைத் தொந்தரவுக்குள்ளாக்காத உயரத்துக்கு மேலே, அணி அணியாக விளம்பரப் பதாகைகள், தோரணங்கள். எல்லாம் நம்மைப் போட்டித் தேர்வுகளுக்கும், நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி எடுக்கக் கூப்பிடுபவை. முகர்ஜி நகரை மொத்தமாகவே பயிற்சி மையங்களின் சந்தை என்று சொல்லிவிடலாம்.

அரசுப் பணிகளுக்கு உள்ள பசியும் போட்டியும்தான் இங்குள்ள பயிற்சி மையங்களின் மூலதனம். மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், மேலாண்மைப் பணிகள், இதரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான மையங்கள் என்று பல வகைமைகள் இருந்தாலும், முகர்ஜி நகரின் பெரிய அடையாளம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் அந்தச் சின்ன பகுதியில் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முகர்ஜி நகரில் மட்டும் இயங்கும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம். கட்டிடங்களுக்குள் நுழைந்து பார்த்தபோது, மேல் தளங்களிலேயே விடுதிகளோடு ஒவ்வொன்றும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போல இருந்தன.

இந்த ஐந்தாண்டுகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உண்டாக்கியிருக்கும் அழுத்தத்தில் சண்டிகர், அலகாபாத், லக்னோ, மதுரா, பாட்னா, கயை, மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, அசன்சோல், புவனேஸ்வர், போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம் என்று நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் பல வீதிகள் நெருக்கடியான பயிற்சி மையங்களால் நிறைந்திருக்கின்றன. இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - ‘எஜுகேஷன் மால்’. ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

ஆந்திர முடிவு தவறு… ஒரு மாநிலம் – ஒரு தலைநகரம் ஏற்பாடே சிறந்தது!



இந்தி பேசாத மாநிலங்களில் பெரியதாக இருந்ததும், மொழிவழி எல்லையைக் கடந்து பிரிவினையை எதிர்கொண்டதுமான ஆந்திரம் இப்போது மூன்று தலைநகரங்கள் எனும் முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலங்கானாவுடன் ஹைதராபாத் சென்றுவிட்ட நிலையில், புதிய தலைநகரமாக அமராவதியைக் கட்டமைத்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலையும் அறிவித்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவைக் குலைக்கும் வகையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்குப் பின், பல்வேறு தனிப்பட்ட அரசியல் கணக்குகள் ஆந்திர அரசியலில் சொல்லப்பட்டாலும், அவற்றைத் தாண்டி நிர்வாகரீதியில் இந்த முடிவை எப்படிப் பார்ப்பது? இது எத்தகைய தாக்கங்களை உருவாக்கலாம்? அரசு நிர்வாகத் துறையில் நெடிய அனுபவம் கொண்டவரும், விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அஷோக் வர்த்தன் ஷெட்டி பேசுகிறார்.

சமத்துவத்தின் தாய்


கெட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்கிறார்கள் என்று வாசித்துக்கொண்டிருந்தேன். பின்லாந்து பிரதமர் சன்னா மரினின் செய்தி கவர்ந்திழுப்பதாக இருந்தது. “ஒரு சமூகத்தின் பலம் அதில் எத்தனை பேர் பணக்காரர்கள் என்பதில் அல்ல; அதனுடைய நலிவுற்ற பிரிவு மக்கள் எப்படி வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது… ஒரு சமூகத்தில் எல்லோருமே கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி” என்று சொல்லியிருந்தார் சன்னா மரின். கூடவே தன்னுடைய செய்தி வெறும் மாய்மாலம் அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2020 ஜனவரி முதலாக அவருடைய அரசு செயல்படுத்தவுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, பின்லாந்தின் எழுபது சத மக்களின் வருமானத்தை இந்த மாற்றங்கள் உயர்த்தும் என்று நம்பிக்கையும் விதைத்திருந்தார்.

இதற்குச் சில நாட்கள் முன்புதான் ‘வாரத்தில் நான்கு நாட்கள்; ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டும் வேலை’ கொள்கையை முன்னிறுத்தியிருந்தார் மரின். அவருடைய சமூக ஜனநாயகக் கட்சியின் 120-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். பின்லாந்தில் இப்போது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மக்கள் வேலை செய்கின்றனர்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதே விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.