புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்


                 காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டி இருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது-ரசமானது!

பூமியைப் பூச்சிகளிடம் கொடுக்கிறோமா?



           ரு மோட்டார் சைக்கிள். சாயுங்காலம் பணி முடிந்ததும் அலுவலகத்திலிருந்து வெளியே வரும் அந்த இளைஞன்  மோட்டார் சைக்கிளை எடுக்க எத்தனிக்கிறான். குப்பென்று பறக்கின்றன அதுவரை அந்த மோட்டார் சைக்கிளைச் சூழ்ந்திருந்த கொசுக்கள். நூறல்ல, இருநூறல்ல... ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசுக்கள். அந்த இளைஞன் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் தட்டுகிறான். மேலும் பல்லாயிரம் கொசுக்கள். அவனை அவை ஆக்கிரமிக்கத் தொடங்க தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்புகிறான். விளக்கொளியைச் சூழ்கின்றன... அந்தச் சாலை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் கொசுக்கள். சென்னையில் இந்த வருடம் பலருக்கும் காணக் கிடைத்த ஓர் அனுபவம் இது.



                ஒருகாலத்தில் கிராமங்களில் வேப்ப இலைகளுக்கும் நொச்சி இலைகளுக்கும் அடங்கிய கொசுக்கள், வேப்ப எண்ணெய் விளக்குக்கும் கற்பூரத் தண்ணீருக்கும் மயங்கி விழுந்த கொசுக்கள், மின் விசிறிக் காற்றுக்கு முன் பறக்க முடியாமல் முடங்கிய கொசுக்கள்... இன்றைக்கு மின் விசிறி, கொசுவர்த்திச் சுருள், பூச்சிக்கொல்லி தெளிப்பான், கொசுக்கொல்லி திரவம்... அத்தனையையும் தாண்டி படை எடுக்கின்றன. நள்ளிரவில் தூக்கம் கெட்டு எலெக்ட்ரிக் பேட்டுகள் துணையோடு போராடுகிறோம். கொசுக்கள் வர வர சாகின்றன... சாக சாக வருகின்றன. ``எங்கள் வாழ்நாளில் இவ்வளவு கொசுக்களை நாங்கள் பார்த்தது இல்லை’’ என்று சொல்கிறார்கள் வயது முதிர்ந்த பெரியவர்கள். நமக்கு கொசுக்கள் எங்கிருந்து வருகின்றன என்று யோசிக்க நேரம் இல்லை. அடுத்து எதை வாங்கி கொசுக்களைச் சமாளிக்கலாம் என்று யோசிக்கிறோம். சரி, வீட்டுக்குள் வரும் கொசுக்களை இன்னும் வீரியமான விஷத்தைத் தெளித்துக் கட்டுப்படுத்திவிடலாம் என்று தேற்றிக்கொள்கிறோம். வீட்டுக்கு வெளியில்?

திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை!


            திருவானைக்கா.
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும் அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கிவிடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று... கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று... திரும்பத்திரும்பச் சாப்பிட அழைக்கும் 'பார்த்தசாரதி விலாஸ்' ஒரு ஜோடி நெய் தோசை.


                            தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம்பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ''என் பிள்ளைக்கு மூன்று வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடும்'' என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப்பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு, தான் மட்டும் திருட்டுத்தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும் தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தி இருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்கு கிடைப்பதேயில்லை. காலமெல்லாம் சுற்றித்திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும் அப்படியொரு தோசை 'பார்த்தசாரதி விலாஸ்' நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காகாரர்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.

கும்பகோணம் பூரி-பாஸந்தி!


      கும்பகோணம்.
 வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்
முன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா?


                         கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு 'வெங்கடா லாட்ஜ்' அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் 'பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை' காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். 'மங்களாம்பிகா' இட்லி... அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு!