நானும் விகடனும்: நன்றி கண்ணன் சார்!

நண்பர்களுக்கு... ஒரு தகவலுக்காக...
   நான்  'ஆனந்த விகடன்’ பணியில் இருந்து விலகிவிட்டேன். 'புதிய தலைமுறை' நிறுவனம் புதிதாகத் தொடங்க உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து இருக்கிறேன்.
    பன்னிரெண்டு ஆண்டு ஊடக அனுபவத்தில் இது மூன்றாவது தாவல். முதல் பணி 'தினமல'ரில். அடுத்து 'தினமணி'. அதற்கடுத்து 'ஆனந்த விகடன்'. இப்போது 'புதிய தலைமுறை.' முதல் தாவல் நான் மகிழ்ச்சியோடு உருவாக்கிக்கொண்டது. மற்ற அனைத்துமே காலம் உருவாக்கியது.  அது கிடக்கிறது... ஒவ்வோர் இடத்திலும் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன்; இழந்தும் இருக்கிறேன். தினமலரில் திரு. சேகர் சார், தினமணியில் திரு. வைத்தியநாதன் சார், திரு. சிவக்குமார் சார்... எங்கும்விட நான் நிறையக் கற்றுக்கொண்டதும் நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதித்ததும் விகடனில்தான். திரு. பாண்டியன் சார், திரு. மானா சார், திரு. சிவசு சார், திரு. கதிரேசன் சார், நண்பர்கள் கார்த்தி, கலீல், சுகுணா, சஞ்சீவ், பாரதி தம்பி, சரண், கவின், ஆதி, ராஜன், முத்துக்குமார், அண்ணன் ராஜசேகரன், தம்பிகள் ராஜீவ், நாகப்பன்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். முக்கியமாக... நன்றி கண்ணன் சார்!
   பின்குறிப்பு: என்னுடைய செல்பேசி எண் மாறி இருக்கிறது. நண்பர்கள் தொடர்புக்கு: writersamas@gmail.com கட்டுரைகள் வழக்கம்போல இந்தத் தளத்தில் வாராவாரம் காணக் கிடைக்கும்!

14 கருத்துகள்:

  1. கடந்த சில வாரங்களாகவே விகடனில் உங்களுடைய கட்டுரைகளை பார்க்க முடியவில்லை. அப்போதே ஏதோ விபரீதம் என்று நினைத்தேன். இந்த பகிர்வு அதை உறுதியாக்கிவிட்டது. விகடனில் நான் முதலில் தேடுவது உங்கள் கட்டுரையைத்தான். உங்களுக்கோ விகடனுக்கோ இழப்பில்லை. ஆனால், என்னை போன்ற வாசகர்களுக்கு இழப்புதான். என்ன காரணத்தினால் வெளியேறினீர்கள் என்று தாங்கள் சொல்லவில்லை. சொல்ல முடியாத காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விகடனிலிருந்து ஏன் இப்படி வரிசையாக எல்லாரும் வெளியேறுகிறீர்கள் என்று தெரியவில்லை. விகடன் யோசிக்க வேண்டும்.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களைப் போல் தான்.....சில வாரங்களாக கட்டுரை வராமலிருப்பதனால் வலைதளத்திற்கு வந்து பார்த்தேன்....நீங்கள் விலகியது அதிர்ச்சியாக இருக்கிறது......மீள முடியவில்லை.....விகடன் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் சமஸ் .....புதிய பணியிலும் உங்கள் முத்திரை பதியட்டும் ....விஜயராகவன்

    பதிலளிநீக்கு
  3. Please continue your valuable Articles and Interviews..All the very best boss.. :)

    பதிலளிநீக்கு
  4. ஏன் என்ன ஆச்சு.
    நல்லாத்தான ரோயிக்கிட்டு இருந்துச்சு..
    அதுக்குள்ள ஏன் இந்த முடிவு...

    பதிலளிநீக்கு
  5. Anbu Nanbaaa,

    Naanum kadantha 30 varudankalaga Vikadan Vaasagan than. Ungal samooga paarvai vikadanil milirthandhu.
    all the best. ellaam rail payanangale. We may get into the same Train when time permits...


    ALL THE BEST IN ENDEVOURS

    பதிலளிநீக்கு
  6. Wish you good luck with your move Samas...esp..to my fav. place Puthiya thalaimurai

    உங்களது எழுத்தின் வீரியம்...உங்களுக்கான இடத்தை தானாக உருவாக்கிவிடும் ...நன்றி..

    பதிலளிநீக்கு
  7. பத்திரிகையாளன் ஒரே இடத்தில் செக்குமாடு போல் உழலுவதில் யாருக்கும் நன்மையில்லை. அச்சு ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்திற்குப் போவது மிகப்பெரிய உயர்வே. ரசிகர்களுக்கு லாபமே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அந்த‌ "சமஸ்" ஸா நீங்க‌.
    வாவ், மிக்க‌ ம‌கிழ்ச்சி.
    நான் உங்க‌ள் எழுத்தின் ர‌சிக‌ன்.

    பதிலளிநீக்கு