நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்” என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். முதுபெரும் தலைவர் கருணாநிதியை விமர்சிக்கையில் நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது.
வைகோ பிறகு மன்னிப்புக் கேட்டார். வைகோவிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றாலும், மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. பொதுமேடைகளில் இதை அரசியல் கலாச்சாரமாக வார்த்தெடுத்ததில் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. சாதியத்தையும் சாதியையும் சாடுவது வேறு; எல்லா மனிதர்களையும் அவர் பிறப்பின் அடிப்படையில் சாதியோடு சேர்த்துப் பொதுமைப்படுத்தி வசைபாடுவது வேறு. சாதி ஒழிப்புக்காக இறுதி வரை போராடிய பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. “பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.
தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் கருணாநிதி மீதான விமர்சனங்களில் சாதி கூர்மையாகத் தனித்து இயங்கு வதை ஒரு ஊடகனாகப் பல்வேறு தருணங்களில் கவனித்திருக்கிறேன். கருணாநிதி சாதிரீதியிலான இழிவை எதிர்கொள்ளும்போதெல்லாம் என் ஞாபகங்கள், மறைந்த கலை விமர்சகர் தேனுகாவை நோக்கி இயல்பாகச் செல்லும்.
கும்பகோணத்துக்குக் கடந்த அரை நூற்றாண்டில், எந்த எழுத்தாளர், கலைஞர் சென்றிருந்தாலும் அவர்கள் தேனுகாவைச் சந்திக்காமல் பெரும்பாலும் ஊர் திரும்பியிருக்க மாட்டார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தேடித் தேடி ஓடிப் படைப்பாளிகளைப் போஷித்து, உவகை அடைந்தவர் அவர். எந்தக் கோயிலுக்குப் போனாலும், அங்குள்ள சிற்பங்களைப் பார்த்த மாத்திரத்தில், அது எந்தக் காலத்தையது, யாருடைய ஆட்சி பாணி என்று தேனுகாவால் சொல்ல முடியும். சிற்பங்களின் தாள லயங்களைப் பேசிக்கொண்டே நம்மூர் ஸ்தபதிகளின் வாழ்க்கை, ஐரோப்பியப் போக்குகள், கீழைத் தத்துவங்கள் என்று சில நிமிடங்களில் எங்கெங்கோ அவரால் பறக்க முடியும்.
தேனுகாவைப் பலரும் ஒரு பிராமணர் என்று நினைப்பதுண்டு. தேனுகா என்கிற அவரது பெயர்; கோயில் கலைகளில் அவருக்கிருந்த ஆர்வம், நுண்கலைகளில் அவருக்கிருந்த புலமை, இசையில் அவருக்கிருந்த ஞானம் இவற்றையெல்லாம் பார்த்து அப்படி எண்ணியதாகப் பலர் அவரிடம் சொன்னது உண்டு. அப்படிச் சொல்பவர்களிடம், “எந்த அறிவும் யார் ஒருத்தருக்கும், எந்தச் சமூகத்துக்கும் மட்டுமானது இல்லை” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிடுவார் அவர். தேனுகா பிராமணர் அல்ல. இசை வேளாளர். பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் சீனிவாசன். ‘தேனுகா’ ராகத்தின் மீது அவருக்கிருந்த அலாதியான பிடிப்பு, அந்த ராகத்தின் பெயரையே தன் பெயராக்கிக்கொள்ள வைத்தது.
தேனுகாவுடன் நாள்கணக்கில், மணிக்கணக்கிலான உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். சாதி தொடர்பாக அரிதாகவே அவர் பேசுவார்.
“தலித் சமூகங்கள் மட்டும்தான் சாதிய அவமானத்துக்கு ஆளாக்கப்படுதுங்குறது இல்ல; தமிழ்நாட்டுல தலித் சமூகமும்கூட ஒருபடி கீழவெச்சிப் பேசக் கூடிய சமூகம் எங்க சமூகம். எங்க குடும்பம் நாகஸ்வரக் குடும்பம். சுவாமிமலை முருகன் கோயில்ல ஆறு காலப் பூஜைகளுக்கும் நாகஸ்வரம் வாசிக்கிறது எங்க குடும்ப சேவகம். எங்கப்பா, எங்கண்ணன் வாத்திய இசையிலதான் ஊர் கண் முழிக்கும். கோயில்லயும் ஊர் விசேஷங்கள்லயும் கச்சேரி நடக்குற வரை முன்வரிசையில எங்க அப்பாவும் அண்ணனும் நிப்பாங்க. கச்சேரி முடிஞ்ச பின்னாடி, பின் பக்கத்துக்கு எங்களைத் திருப்பிவிட்ருவாங்க. சாப்புடுற எடத்துலகூட அவமானம் காத்திருக்கும். எத்தனையோ எடங்கள்ல கொல்லையில உட்கார வெச்சுச் சோறு போட்டுருக்காங்க. வயலுக்குக் கொண்டுபோய் சாப்பிடச் சொன்னவங்ககூட உண்டு. சின்ன வயசுல அவமானம் தாங்காமப் பல நாள், இலையை அப்படியே மூடிவெச்சுட்டுப் பசியோடவே வீட்டுக்கு வந்திருக்கேன்.
அன்னைக்கு இசை வேளாளர் பெண்கள் ஆடுன ஆட்டம் இன்னைக்குப் பிராமணப் பெண்கள் காலுக்குப் போனதும் புனிதமாயிடுச்சு. பிராமணர்கள் கை மாத்திக்கிட்ட பரதமும் இசையும் மட்டும் இல்ல; புல்லாங்குழல், வீணை எல்லாமும் புனிதமாயிடுச்சு. நாகஸ்வரம் பிராமணர்களுக்கு வசமாகலை. அதனாலதான் இன்னைக்கும் நாகஸ்வரம் வசை பாடப்படுது. பிராமணர்கள்கிட்ட இருக்குறப்போ புனிதமா தெரியுற கலையை இசை வேளாளர்கிட்ட அற்பமா பார்க்கச் சொல்றதும் பேசச் சொல்றதும் எது? ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளேயும் இருக்கிற இழிவுகளை இன்னும் எவ்ளோ காலத்துக்கு இங்கே கீழ்நிலையில இருக்குற சமூகங்கள் சுமக்கணும்கிறது தெரியலை. எப்படியும் நம்மளைக் காட்டிலும் திறமையில மேல இருக்குற மனுஷங்களைச் சாதிரீதியா மட்டப்படுத்திப் பேசி அந்தரங்கமா சந்தோஷம் அடையறது மாதிரி பெரிய அசிங்கம் வேற எதுவும் கிடையாது.”
அன்றைய தினம் உடைந்து அழும் நிலைக்குச் சென்றார் அந்த மாமனிதர்.
கருணாநிதியிடம் பேட்டி எடுத்தபோது, தேனுகாவிடம் வெளிப்பட்ட ஒரு தருணம் கருணாநிதியிடமிருந்தும் வெளிப்பட்டது. “எதிலும் இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டேன். “அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள்” என்று சொன்னார் கருணாநிதி. “இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டபோது கருணாநிதி சொன்னார், “ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று தாக்குதல் நடத்தும்.”
இதைச் சொல்லும்போது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். மேலதிகமாகச் சில விஷயங்களைத் தனிப்பட்ட வகையில் அவர் குறிப்பிட்டார். அப்போது அவருடைய கண்களில் நீர் திரண்டது.
கருணாநிதி அரசியலில் சோதனைகளுக்கு உள்ளாகும்போதெல்லாம், சாதிரீதியாகத் தான் தாக்கப்படுவதாகக் கூறுவது வழக்கம். இதை அவர் ஒரு உத்தியாகக் கையாள்வதாகப் பலரும் கூறுவது உண்டு. ஆரம்பக் காலத்தில் நானும் அப்படியே நினைத்திருக்கிறேன். பின்னாளில், ஊடகங்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னரே, சாதி எங்கெல்லாம் படர்ந்திருக்கிறது, எப்படியெல்லாம் அவரைத் துரத்துகிறது என்பதைப் பார்த்தேன். ஏனையோர் தம் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் கருணாநிதி எப்போதும் கூடுதல் தண்டனைகளை அனுபவிக்க அவருடைய சாதி எவ்வளவு முக்கியமான காரணம் என்பதை உணர்ந்தேன். அன்றைய அதிமுக உருவாக்கத்தில் தொடங்கி, இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் வரையிலான கருணாநிதி எதிர்ப்பு அரசியலின் ஒவ்வொரு புள்ளியிலும் சாதி பொதிந்திருப்பதை அடையாளம் கண்டேன்.
கருணாநிதி எவ்வளவோ தவறுகளை இழைத்திருக்கிறார். சாதியால் அவர் கடுமையாக அடிபட்டபோதும், அதிகாரத்தின் நிமித்தம் சாதி அரசியல் மேலோங்குவதற்கு அவரும் உடன்பட்டிருக்கிறார். திமுகவும் இடைநிலை சாதிகளின் கோட்டையாக மாற்றப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்குண்டு. தேர்தல் காலங்களில் சாதிய சக்திகளுடன் அவரும் கைகோத்திருக்கிறார். இன்றைக்கும்கூட, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன், ஏனைய எல்லா ஆதிக்கச் சாதி சக்திகளாலும் கட்டம் கட்டப்பட்டிருப்பதை மௌனமாகப் பார்த்திருக்கிறார் என்ற வருத்தம் கருணாநிதியின் மீது எனக்குண்டு. ஆனால், எல்லாக் குற்றச்சாட்டுகளையும் தாண்டியும் இந்தச் சாதிய இந்திய வெகுஜன அரசியல் களத்தில் கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கேரளத்தில் நம்பூதிரிகள், நாயர்கள்; ஆந்திரத்தில் ரெட்டிகள், கம்மாக்கள்; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் என்று இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதி அரசியல் இன்றைக்கும் ஆதிக்கச் சாதிகளின் கைகளில் மட்டுமே இருக்க முடியும் என்றிருக்கும் நிலையில், ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மாநிலத்தின் இரு மைய சக்திகளில் ஒன்றாகத் தன்னை கருணாநிதி நிலைநிறுத்திக்கொண்டிருப்பது இந்தச் சாதியச் சமூகத்தில் கருணாநிதி நிகழ்த்திருக்கும் மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் ஏனைய எந்த மாநிலத்திலும் இன்றுவரை நிகழாத அற்புதம். தமிழ்நாட்டின் பெருமிதம்.
எது சாதி ஆதிக்கர்களை கருணாநிதி மீது சாதி சார்ந்து காலங்காலமாக வெறுப்பை உமிழச் செய்கிறதோ, அதுவே தமிழ்நாட்டின் சாதி மீறல் வரலாற்றில் என்றைக்கும் கருணாநிதியின் பெயரைப் பொறித்துவைத்திருக்கும்; சாதி துவேஷத்தோடு அவர் மீது இன்றும் என்றும் விழும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றின் அந்த இடத்தில் நெருப்பின் மீது பட்ட தூசியாகக் கருகும்!
ஏப்ரல், 2016, ‘தி இந்து’
வெளிப்படையாக சாதி ஆணவ கொலைகளை கண்டிக்க தயங்கினவரும் அவரே !
பதிலளிநீக்குஎல்லா ஒடுக்குமுறைகளையும் தாங்கி எதிர்த்து ஒருவன் முன்னேறுவது, அவனது சுய முன்னேற்றமாகும்... சற்றே சமூகத்திற்கும் பெருமை தான்.. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கும்போது...ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த தலைவராக இருக்கும் கருணாநிதியின் பங்கென்ன? ஓட்டை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கும் அவறின் போக்கு எப்படி விளிம்புநிலை சமூகம் பெருமை கொள்ள முடியும்...
நீக்கு"ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மாநிலத்தின் இரு மைய சக்திகளில் ஒன்றாகத் தன்னை கருணாநிதி நிலைநிறுத்திக்கொண்டிருப்பது இந்தச் சாதியச் சமூகத்தில் அவர் நிகழ்த்திருக்கும் மிகப் பெரிய சாதனை" :)
பதிலளிநீக்குWhat is the intention of this article to praise Karuna?
பதிலளிநீக்குI started reading your articles since you wrote about Sahayam after the big rally in Chennai by youth. I use to read your article every now and then and I felt it was brilliant way of expressing your thoughts.
Here also you have tried to express your thoughts praising Karuna at the same time you taking about his mistakes too (to show a honesty feel to the readers. but I feel it is to cheat readers and to keep them on your side to inject your thoughts/wishes.)
Though Vaico did a small mistake, You media has projected in a big big way negatively. I have also watched the interview but after reading all your shares and facebook comments only.
AS a HONEST inference to my SOUL, Vaico tried to express his emotions on Karuna's deeds on DMDK alliance and later realised that his words will be interpreted in a selfish manner by the DMK Paid media to talk ill on him and his alliance which are their main motto . Before he corrects himself in those few seconds during the speech everything went wrong and it happened as he feared few seconds before. This was my honest inference after seeing the interview and I remained in neutral position. In the evening when I have read his apologies, I really felt happy that I could predict his emotions very correctly. No leader with such a high experience will apologise in a few hours publicly. (you know how Karuna will do apologise). In this article you trying to show Karuna is gentle and Vaico is culprit which is quiet opposite in reality.
I am telling you if you media project Vaico's gentleness (at-least no negative marketing on him), People will surely find him as true genuine leader. All people are not wise thinkers in their hectic life only you media has to guide them in a proper way. But ......
I feel that you also in same common media and I will have a different eye on your articles while I read them.
#THOUGH VAICO DID A SMALL MISTAKE#
நீக்குThis is where Samas and rationalist differ from you..!
Until you treat Casteism as small mistake. You can't be with the grassroots.!
Dear Freak and Steepa, Thanks for your replies and I respect your emotion on Casteism. I agree with your words.
நீக்குThe mistake grade is depends on the person who speaks (his history) and on a person he is talking. As a neutral man I would rate Vaico's mistake is "small" on both reasons. If he would have used this word against Kamarajar the grade will be given high and it is "big" mistake.
Also my emotions rating him as low, when I see the intention of the article is to bring Mercy to Karuna in this election time.
சமஸ், உங்களது கருத்தோடு நான் ஒத்துப்போகவில்லை. சாதீயவேறுபாடுகளில் குளிர் காய்ந்தவர் கருணாநிதி என்பது மறுக்கஇயலாத உண்மை. பிராமண துவேஷம், இந்து வெறுப்பு கொண்டு அரசியல் காய் நகர்த்தியவரை சாதனை சிகரமாய் கொண்டாடுவது வருந்தத்தக்கது.
பதிலளிநீக்குதேனுகா அவர்களுடன் நான் பழகிய நிலையில் தாங்கள் கூறியதை அறிந்திருக்கிறேன். ஒரு நடுநிலையாளராக இருந்து இக்கட்டுரையை நீங்கள் எழுதியதை உணரமுடிகிறது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை முன்வைக்கும் தங்களின் எண்ணம் எங்களில் பலருக்கும் உண்டு. தூசியாகக் கருகும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி.
பதிலளிநீக்குIt is not the Brahmin community that indulge in cheap caste politics. It is the intermediate caste that is doing all these. But one need a common enemy.. that too very small in numbers, subtle and above all who keep quite all the time inspite of abuses... who will fill that category other than the Brahmins? That is why even this author subtly blames the Brahmins by invoking the supposedly conversation of an eminent sculptor. All these people are indulging in shadow boxing and has no intention of eradicating these evil casteist thinking.
பதிலளிநீக்குWho preached it to the Intermediate caste?
நீக்குAccused No.1 is who was the mastermind of the happening and not the person who commits mistake.!
Freak-Pandian, you mean to say that Brahmins taught caste divide to the intermediate castes 'reflections' is referring to. Give me your sources.
நீக்குIt is not the Brahmin community that indulge in cheap caste politics. It is the intermediate caste that is doing all these. But one need a common enemy.. that too very small in numbers, subtle and above all who keep quite all the time inspite of abuses... who will fill that category other than the Brahmins? That is why even this author subtly blames the Brahmins by invoking the supposedly conversation of an eminent sculptor. All these people are indulging in shadow boxing and has no intention of eradicating these evil casteist thinking.
பதிலளிநீக்குi accept ur views brahmins nor mally do their work thoug theeir ancestor for responsible for caste system
நீக்குtodays brahmins not sticking to that can u think a brahmin family involving in honour killing( castiest physicho killings)
i accept ur views brahmins nor mally do their work thoug theeir ancestor for responsible for caste system
நீக்குtodays brahmins not sticking to that can u think a brahmin family involving in honour killing( castiest physicho killings)
Karuna spoke really bad things about kamarajar, his caste and looks. Don't you have anything to write about that?
பதிலளிநீக்குDo you have any proof for kalaingar spoke bad things about kamarajar ?
நீக்குKaruna spoke really bad things about kamarajar, his caste and looks. Don't you have anything to write about that?
பதிலளிநீக்குஅன்புள்ள சமஸ்,
பதிலளிநீக்குவழக்கம் போல சமநிலையாகவும், தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். ஒரே ஒரு சிறு தகவல்பிழையை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கேரளாவில் ஆதிக்க சாதிகளான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கையில் தான் அதிகாரம் உள்ளது என்பது தவறு. கேரள முதலமைச்சர்கள் பட்டியலை பார்த்தோமானால் கடைசியாக ஒரு நாயர் முதல்வராக இருந்தது 1991-95 ல் திரு கே. கருணாகரன் அவர்கள் சமயத்தில் தான். நானறிந்தவரை முதல்வராக இருந்த ஒரே ஒரு நம்பூதிரி திரு இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு அவர்கள் தான். ஆனால் இந்திய கம்யூனிச பெரும் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ். அவர்கள் முதல்வரானது நம்பூதிரிகளின் ஆதிக்கம் என்றோ சாதி வெற்றி என்றோ சொல்ல முடியாது அல்லவா? மக்கள் தலைவர்களான திரு அச்சுதானந்தன் அவர்களோ, உம்மன் சாண்டி அவர்களோ, மறைந்த திரு இ.கே. நயனார் அவர்களோ நானறிந்தவரை ஆதிக்க சாதியினர் அல்லர். திரு ஏ.கே. அந்தோணி அவர்களும் அவ்வாறே. ஆகவே ஆதிக்க சாதியினரே கேரளாவில் முதல்வராக முடியுமென்ற தவறான பொதுப் புரிதலை தாங்கள் திருத்திக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Vanakkam . Kerala is unique in its characteristics. Church has an important role in Politics and they have a major say because of the monetary backing of Syrian Christians. It is also unique because of the caste organizations like NSS for Nairs , SNDP for Ezhavas. These groups have disproportionate influence on how people organize. By the way , Nayanar is one of the sub-caste within Nairs and Oomen Chandy is a Syrian Christian . So , that effectively invalidates your statement //ஆகவே ஆதிக்க சாதியினரே கேரளாவில் முதல்வராக முடியுமென்ற தவறான பொதுப் புரிதலை தாங்கள் திருத்திக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//
நீக்குஉண்மையிலேயே, சாதிய அடிப்படையிலான நம சமூகத்தில், கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சாதனைதான். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு1.உங்களுக்கு ஒரு கட்டுரையை வடிவமைக்கத்தெரியவில்லை.. தேனுகாவின் பெயரையும் தலைப்பிலிட்டிருந்தால் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம்.
பதிலளிநீக்கு2.கலைஞரை வஞ்சத்துடன் வருடியிருக்கும் உங்கள் உண்மையான நோக்கமென்னவென்று என்னை போன்ற பாமரனும் புரிந்துகொள்ள முடிகிறது.
3.சாதிய வசவுகளை திராவிட இயக்கங்கள் வார்த்தெடுத்ததாக புகழாரம் சூட்டியிருக்கிறீர்கள்.ஆம் அதற்குமுன்பு ப***த்தே***யா பயலே என்று தமிழ்நாட்டில் யாருமே திட்டியதில்லை..அரசியல்வாதிகள் உட்பட! உங்களை இந்த விசயத்தில் வாஸ்கோடகாமா என்று வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.
5.உங்கள் கூற்றுப்படி கலைஞர்தான் சாதிய அரசியலை வளர்த்தார்.வேறுயாருக்கும் சுய அறிவே இல்லை.எல்லோரும் கலைஞர் சொல்படியே நடந்தனர் ஜெயல்லிதா உட்பட
6.இன்னொன்று கூட சொல்லியிருக்கிறீர்களே.. ஸ்டாலினைக்கூட கட்டுப்படுத்த திராணியற்ற கலைஞர்.. அருமை!!
இன்றுவரை நான் பல கட்சிகளில்,அதில் ஒரு முக்கியம் சாதி ஒழிப்பு,சமத்துவம் பேசும் கட்சிகளின் முக்கிய தலைவர்களை பேசும்போது அருகில் இருந்து கேட்டு உள்ளேன்.ஒருவர் பேசிவிட்டு சென்றவுடன் அவன் கிடக்கான் அவன் ----பையன் சொல்லிக்கேட்டுருக்கேன்.ஆனால் பார்ப்பனர்கள் இருக்கும் கட்சிகளின் அவர்கள் இதை சொல்லுவதில்லை,அதே கட்சியை சார்ந்த மத்த தலைவர்கள் பேசசியுள்ளனர்.இதுதான் இப்ப இருக்கும் நிலைமை தமிழகத்தில்...சமஸ்
நீக்குகருணாநிதி ஆட்சி பீடத்திற்கு உயர்ந்தது சாதனை என்றால் அந்த உயரத்தில் வீற்றிருந்து செய்தவையனைத்தும் அற்ப அரசியல் ஆதாயத்திற்கான சாதி அரசியலும் ஊழலும் மட்டுமே. ஏனைய தமிழ் அரிதாரம் யாவும் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தவே.
பதிலளிநீக்குசாதீயத் தீமையைச் சாட சமஸ் கருணாநிதி புகழ் பாடியிருப்பதற்கான தேவை அதன் பின்னே இருக்கக் கூடிய காரணிகளைத் தேடச் சொல்கிறது.
மதிப்பீடுகளில் சமஸ் இனி இறங்கு முகம் காண்பார் என்றே தோன்றுகிறது.
கருணாநிதி ஆட்சி பீடத்திற்கு உயர்ந்தது சாதனை என்றால் அந்த உயரத்தில் வீற்றிருந்து செய்தவையனைத்தும் அற்ப அரசியல் ஆதாயத்திற்கான சாதி அரசியலும் ஊழலும் மட்டுமே. ஏனைய தமிழ் அரிதாரம் யாவும் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தவே.
பதிலளிநீக்குசாதீயத் தீமையைச் சாட சமஸ் கருணாநிதி புகழ் பாடியிருப்பதற்கான தேவை அதன் பின்னே இருக்கக் கூடிய காரணிகளைத் தேடச் சொல்கிறது.
மதிப்பீடுகளில் சமஸ் இனி இறங்கு முகம் காண்பார் என்றே தோன்றுகிறது.
YESSSS
நீக்குEverything is right but karunanidhi is not the right one to support. Because he has done everything to be in power and earn money
பதிலளிநீக்கு///ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு./// -
பதிலளிநீக்குஅருமையாக சொன்னிர்கள் அண்ணா!!
நீக்குIt looks paid article at election time. Just also i would ask Samas to write an article of MK family property value growth now and 50 years back and it will tell the reality of this so called innocent vilimbu nilai aasaami and family.
பதிலளிநீக்குCompare it with other CMs of Kerala.
TN's political sabakedu is this MK.
காலம் கடந்து கருனாநிதி பற்றிய புகழ்உரை!! பல முறை கருனாநிதி இதனை சொல்லியுள்ளார்! தன் மீதான விமர்சனங்களை அவர் பெரிதாக நினைப்பவர் அல்ல என்றாலும் சாதிய வன்மம் தான் அவரை அவரை பாதிக்க செய்கிறது!! சாதீ நாம் எந்த நிலை சென்றாலும் நம்மை விடாது!! கருனாநிதி அவர்களுக்கே இந்த நிலை என்றால் அதிகார இல்லாத ஏழை தலித் மக்களின் நிலை நினைத்து பார்க்க முடியாதவை!! ஆனால், பாவம் திரு.சமஸ் நீங்கள் விரும்பியோ அல்லது, அறம் சார்ந்தோ எழுதினிர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது!! ஆனால் உங்கள் எழுத்து வன்மையயயை, ஆற்றலை, அறத்தை, இத்தனை ஆண்டுகள் போற்றி வந்த பல ஆன்றோர்கள்? இனி உங்களை விமர்சனம் செய்ய தவறாது!! பல விருதுகள் பறிபோகலாம் (கடைசி நேரத்தில்கூட வேண்டாம் என மறுக்கலாம்) அப்போது இன்னும் நன்கு அறிவிர்கள் கருனாநிதி எதிர்ப்பு அரசியலை!!!!
பதிலளிநீக்கு============================
பதிலளிநீக்குகலைஞர் கருணாநிதி குறித்த
வைகோவின் விமர்சனத்திற்கு கண்டனம்!
============================
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
=============================
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோஅவர்கள் சென்னையில் கலைஞர் கருணாநிதி குறித்துஅரசியல் விமர்சனம் செய்த நேர்காணல் பேச்சில்(06.04.2016), கலைஞரை சாதிக் குறிப்பிட்டு கிண்டல்செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.இவ்வளவு காலமும் அவர் சாதி வெறியராகவோ,சாதியவாதியாகவோ அடையாளம் காணப்படவில்லை.இப்பொழுதும், மேற்கண்ட தமது தவறானவிமர்சனத்திற்கு கலைஞரிடம் நிபந்தனையற்றமன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவரவேற்கத்தக்கது.
கலைஞர் கருணாநிதி குறித்த விமர்சனத்தில் அவர்பிறந்த சாதியையும் – வேறொரு தொழிலையும் குறித்துவைகோ பேசியதற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாய்தொடர்ந்து வந்த சாதி உணர்வு முற்போக்காளர்கள்உட்பட அனைவரது ஆழ் மனத்திலும் அறிந்தோஅறியாமலோ உரைந்து கிடக்கிறது. ஓர் உளவியல்வெப்பம் உருவாகும் போது, உரைந்து கிடந்தது உருகி,தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறது.
அடிப்படையாக, சாதி என்பது ஒரு மன அழுக்கு! தமிழர்அறம் கொண்டும் சமத்துவக் கருத்தியல் கொண்டும்அவ்வப்போது, மனத்தைத் தூய்மைப்படுத்தினால்தான்சாதி மறையும்.
தமிழ்நாட்டு அரசியலில் சாதியை தனக்குச்சாதகமாகவும், தனது அரசியல் எதிரியை சாடவும்பயன்படுத்தி வரும் சீரழிவுப் பண்பாடு நீண்டகாலமாகத்தொடர்கிறது. அனைவரும் இந்த சாதி குறித்து இழிவுசெய்யும் சீரழிவு விமர்சன முறையை முற்றிலுமாகக்கைவிட வேண்டும்.
“ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்”
என்ற பெரும்பாவலர் பாரதியார் வரிகளை அண்ணன்வைகோ அவர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது நலம்.
“தமிழ் இந்து” தமிழ்த்தேசியத்தைச் சாடுவதேன்?
தமிழ் இந்து நாளேடு தனது சிறப்புக் கட்டுரை ஒன்றில்(08.04.2016), வைகோ அவர்கள் கலைஞரைச் சாதிகுறித்து விமர்சித்தது தவறு என்று கண்டனக் குரல்எழுப்பியுள்ளது. அது சரி!
ஆனால், “அன்றைய அ.தி.மு.க. உருவாக்கத்தில்தொடங்கி, இன்றைய தமிழ்த் தேசிய அரசியல்வரையிலான கருணாநிதி எதிர்ப்பு அரசியலில்சாதிக்கும் முக்கியப் பங்கிருக்கிறது” என்று கூறுகிறது.
இதில் மட்டுமின்றி, அவ்வப்போது பல்வேறுகட்டுரைகளில், சந்தடி சாக்கில் தமிழ்த்தேசியத்தைவிமர்சிப்பதில் தமிழ் இந்து மிகை உற்சாகம்காட்டுகிறது.
“தமிழ்த்தேசியம்” என்பது தமிழ்நாட்டு அரசியல் –சமூகவியல் அரங்கில், புதிதாக எழுந்து வரும் ஒருகருத்தியல். இதை ஏற்றுக் கொண்ட அமைப்புகள் பல.தனி நபர்களும் ஏராளமானோர். தமிழ்த் தேசியஅமைப்புகளில் அல்லது தனி நபரில் யார் சாதிஅடிப்படையில் கலைஞரை விமர்சித்தார்கள் என்றுசுட்டிக்காட்டி எழுதினால், அது ஒரு விமர்சனமாகஇருக்கும்.
அ.தி.மு.க. உருவான போது, கருணாநிதி எதிர்ப்புஅரசியலில் சாதிக்கு முக்கியப் பங்கிருந்தது என்றுகூறியதில், ஒரு கட்சி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதுபோல், தமிழ்த் தேசிய அமைப்பில், எது சாதிஅடிப்படையில் கருணாநிதியை எதிர்க்கிறது என்றுகூறாமல், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலையேகுற்றம் சாட்டுவது ஞாயமா? தமிழ்த்தேசியத்தின் மீதுஅத்தனை எரிச்சல் ஏன்?
தமிழ்த்தேசியம் என்பது, தமிழினத்தின் அரசியல் முகம்,பண்பாட்டு முகம்! இதில், குறைபாடுள்ள தமிழ்த் தேசியஅமைப்புகளை விமர்சிக்கவும், குற்றம்சாட்டவும்அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், பொத்தாம்பொதுவில் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தையும்கொச்சைப்படுத்துவது போல் சந்தடி சாக்கில் குறைகூறுவது நேர்மையன்று.
தமிழ்த்தேசியம், “தமிழர் அறம்“ என்ற அடித்தளத்தின்மேல் நிற்கிறது. தமிழர் அறம் என்பது, மனிதர்கள்அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்என்பதாகும்.
இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
=====================================
அறிக்கை வெளியீடு
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9047162164
=====================================
ஊடகம்: www.kannotam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
====================================
'அன்னைக்கு இசை வேளாளர் பெண்கள் ஆடுன ஆட்டம் இன்னைக்குப் பிராமணப் பெண்கள் காலுக்குப் போனதும் புனிதமாயிடுச்சு. பிராமணர்கள் கை மாத்திக்கிட்ட பரதமும் இசையும் மட்டும் இல்ல; புல்லாங்குழல், வீணை எல்லாமும் புனிதமாயிடுச்சு. நாகஸ்வரம் பிராமணர்களுக்கு வசமாகலை. அதனாலதான் இன்னைக்கும் நாகஸ்வரம் வசை பாடப்படுது. பிராமணர்கள்கிட்ட இருக்குறப்போ புனிதமா தெரியுற கலையை இசை வேளாளர்கிட்ட அற்பமா பார்க்கச் சொல்றதும் பேசச் சொல்றதும் எது? ' - This is another thing I totally disagree. Music in sabhas is only hitham for the ear and soul. But tamil brahmin community gave a unique place to Nagaswaram & Thavil. They called it 'Mangala Vadhyam' and made sure it stays for the most auspicious occassions like marriages, temple festivals and so on. To say that they could not master that instrument and hence could not take it to sabhas could be an extreme lie for a self-deprecating human. :(.
பதிலளிநீக்குசாதி வெறி அதிகரிக்க கலைஞரும் முக்கிய காரணம் என்ற தங்கள் வாதத்தில் துளியாவது உண்மையுண்டா .கலைஞர் என்னமோ எண்ணிக்கை அதிகமுள்ள/வன்கொடுமைகளில் முன் நிற்கிற பயங்கரமான ஆதிக்க சாதி போல காட்டபடுவதே சாதி வெறி தான். பல ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடந்து வரும் திருப்பணி அது.
பதிலளிநீக்குசாதி வெறி தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆட அதற்கு தூபம் போட்டு எண்ணெய் விட்டவர்கள் முதல்வர் ஜெயாவும்,அவர் தோழி சசிகலாவும் தான்.வெளிப்படையாக சாதிய பெருமைகளை ,கொண்டாட்டங்களை ஊக்குவித்தது அவர்கள் தான்.முக்குலத்தோர் சாதியை தனக்கு முழு ஆதரவாக மாற்ற நடந்த நிகழ்வான வளர்ப்பு மகன் திருமணம் ,குரு பூஜைகளே அதற்கு சாட்சி.
கலைஞர் அமைச்சரவையில்,கட்சியில் தன் சாதிக்கு போதிய இடம் இல்லை,அவர் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை ,அதன் தலைவர்களை வளர விடாமல் செய்பவர் என்ற குற்றசாட்டு 50 ஆண்டுகளாக கலைஞர் மீது வன்னியர்,முக்குலத்தோர்,கொங்கு கௌண்டர் தலைவர்களால்,சாதி சங்க பத்திரிக்கைகளால் வைக்கபடுகிறது.கலைஞரின் அமைச்சரவையை எடுத்து கொண்டால் கூட அங்கு எந்த குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கமும் இருக்காது.ஆனால் அ தி மு க வில் 2011 இல் பதவி ஏற்ற அமைச்சரவையில் 8 கொங்கு கௌண்டர்,6 முக்குலத்தோர் ,5 வன்னியர்கள்.1991 அமைச்சரவையில் முக்குலத்தோர் மிக அதிகம். 2001 இலும் அதே நிலை தான்.எம் எள் ஏக்களிலும் ஆதிக்க சாதிகள் அதிக எண்ணிக்கை இருப்பது அ தி மு கவில் தான்.
எண்ணிக்கை குறைவான சாதியை சார்ந்த ஆதிக்க சாதிகளால் ஏளனத்தோடு,வன்மத்தோடு பார்க்கப்பட்ட சாதியை சார்ந்த கலைஞர் 1996 க்கு பிறகு சாதிரீதியான பல சமரசங்களை எடுத்தார்.91-96 சாதி வெறி தூண்டப்பட்டு பற்றி எறிந்த காலகட்டம்.
https://www.facebook.com/PeruSarakku/posts/1153879177963903?comment_id=1153885887963232&reply_comment_id=1154429081242246¬if_t=feed_comment_reply¬if_id=1459994046223202
பதிலளிநீக்குகண்டிப்பாக எழுத வேண்டும். யார் தலித் என்று பார்ப்பதில்,ஏற்று கொள்வதில் சாதியை வைத்து கண்டுபிடிப்பதில் சீமானுக்கு முன்னோடியாக சில தலித் அறிவுஜீவிகள் இருப்பது மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு.அரசு உருவாக்கிய பட்டியல்களில் சில சாதிகள் வரும் சில போகும். அம்பேத்கர் அவர்களின் மகர் சாதியிலும் பொட்டு கட்டி விடும் வழக்கம் உண்டு. சில மாநிலங்களில் பொட்டு கட்டி விடும் சாதிகள் பட்டியல் இனத்தின் கீழ் வருகிறார்கள்.
Like · Reply · April 6 at 7:50pm
Vivek Peri
Vivek Peri Saravana you have to answer this
Like · Reply · Yesterday at 3:04am
Saravanakumar Perumal
Saravanakumar Perumal Poovannan Ganapathy நான் முன்வைக்கும் பிரதான பிரச்சனை யார் தலித் யார் சூத்திரர் என்பதல்ல. பெரியாரின் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாகியிருக்க சாதியொழிந்த அல்லது சாதிகளுக்கிடையே குறைந்தபட்ச நல்லிணக்கம் நிலவியிருக்க கூடியச் சமூகம் கலைஞரின் தவறான அட்சியாலும் பின் வந்த அதிமுக அரசுகளின் அடாவடியான ஆட்சியாலும் சாதிய முரன்பாடுகள் முற்றியது என்பதே. வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக சூத்திர சாதிகளை ஏற்றி விட்டு இன்றளவும் அந்த சிக்கலை தீர்க முயலாமல் தம் குடும்பத்தையும் கட்சியையும் காக்க கள்ள மெளனம் சாதிக்கிறார் ஜெயாவை ஏன் கேள்வி கேட்பதில்லை என்றால் அவர் ஒரு ஃபாசிஸ்ட் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார். கேள்வி கேட்க என்ன இருக்கிறது. பெரியாரின் வழி வந்த கலைஞர் இந்த செயலை செய்யலாமா என்பதே எம் கோபத்தின் அடிநாதம்.
ஏற்றி விட்டு ,தவறான ஆட்சி என்பதை தவிர மற்ற அனைத்தும் உண்மை,உடன்பாடானவை தான்
பதிலளிநீக்குஆனால் சென்ற மத்திய ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்து 12 மந்திரிகள் இன்று ஒன்றே ஒன்று கண்ணே கண்ணாக அதுவும் காபினெட் மந்திரி கூட கிடையாது எனபது ஏன் என்றால் காரணம் என்ன.இப்போதுள்ள மக்கள் ஆட்சியின் முக்கிய குறைபாடே அது தான்.திராவிட கட்சிகள் ஆரம்பத்தில் இருந்து சூத்திர மக்களின் வலுவான பிடியில் தான் உள்ளன.தேர்தலில் மிக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன.அவர்களை நேரடியாக எதிர்த்து கொண்டு தேர்தல் அரசியல் செய்ய முடியாது.அது திராவிடர் கழகம் செய்திருக்க வேண்டிய வேலை.பெரியாருக்கு பிறகு மிகவும் வலுவிழந்த இயக்கமாக திராவிட கழகம் மாறி போனதே இதற்கு முக்கிய காரணம்.சாதிமறுப்பில் முன்னணியில் இருந்து போராடி இருக்க வேண்டிய இயக்கம்,ஒவ்வொரு ஊரிலும் உள்ள சாதிமருப்பாலர்களை ஒருங்கிணைத்து வலுவான சக்தியாக உருவாக்கி இருக்க வேண்டிய இயக்கம் எதுவும் செய்யாமல் கட்டெறும்பாக தேய்ந்து வந்தது தான் நடந்தது.
கட்சியின் மேல் .கட்சி மாவட்ட தலைவர்களின் மேல் எம் ஜி ஆர் உக்கும் ,முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் உள்ள பிடி கலைஞருக்கு கிடையாது. இதற்கு அவர் சாதியும் முக்கிய காரணம். கோ சி மணி,வீரபாண்டி ஆறுமுகம்,தூத்துக்குடி கோவை பெரியசாமிகளுக்கு அவர்களில் ஒருவரை தலைவராக முன் நிறுத்தினால் அவர்களின் சாதி ஆதிக்கம் மிகவும் அதிகரிக்கும் என்பதால் தான் கலைஞரின் பின் நிற்கிறார்கள்.கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின் முன் நிறுத்தபடுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.
சூத்திர சாதிகள் இடையே பெரும் ஒற்றுமை எல்லாம் கிடையாது.அ தி மு க ,தி மு க ஆட்சியில் இல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் தனி மாநிலம் வேண்டி தெலெங்கானாவை விட வீரியமான போராட்டங்கள் தான் இங்கு நடை பெற்றிருக்கும்.சாதிவலுவாக உள்ள இடங்களை கொண்டு தனி மாநிலம் உருவாக்க போராடி இருப்பர்.
திரு.சமஸ் அவர்கள் நாங்கள் சொல்லும் கருத்துகளை கவனம் கொன்டவர்! நேற்று வந்த இந்த கட்டுரைக்கு பிறகு விமர்சனம் அதிகமாகும் என, சொல்லி இருந்தேன் பாருங்கள் ஜெயமோகனுக்கு அப்படி ஒரு வந்து இருக்கிறது!! இதற்க்கு தான் சொன்னேன் கருனாநிதி பத்திலாம் பேசுனிங்கனா, இதான்
பதிலளிநீக்குதிரு.சமஸ் அவர்கள் நாங்கள் சொல்லும் கருத்துகளை கவனம் கொன்டவர்! நேற்று வந்த இந்த கட்டுரைக்கு பிறகு விமர்சனம் அதிகமாகும் என, சொல்லி இருந்தேன் பாருங்கள் ஜெயமோகனுக்கு அப்படி ஒரு வந்து இருக்கிறது!! இதற்க்கு தான் சொன்னேன் கருனாநிதி பத்திலாம் பேசுனிங்கனா, இதான்
பதிலளிநீக்குஎல்லா ஒடுக்குமுறைகளையும் தாங்கி எதிர்த்து ஒருவன் முன்னேறுவது, அவனது சுய முன்னேற்றமாகும்... சற்றே சமூகத்திற்கும் பெருமை தான்.. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கும்போது...ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த தலைவராக இருக்கும் கருணாநிதியின் பங்கென்ன? ஓட்டை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கும் அவறின் போக்கு எப்படி விளிம்புநிலை சமூகம் பெருமை கொள்ள முடியும்...
பதிலளிநீக்குகருணாநிதிக்கு ஆதரவாக பேசி உங்கள் யோக்யதையை கெடுத்து கொண்டீர்கள். நிச்சயம் ஒரு சமுதாயம் உண்மையாய் நடந்து கொள்ளும் ஒருவருக்கு துணை நிற்கும். ஏன் காமராஜர் பிற்படுத்தப்பட்ட சமுதயாத்தில் இருந்து வரவில்லையா? அவருக்கு இங்கே வரவேற்பு தரப்படவில்லையா ?
பதிலளிநீக்குநரேந்திர மோடி யும் ஒரு பிற படுத்த பட்ட சமுதாயத்தை சார்ந்தவரே..
கீழ்காணும் காணொளியை காணுங்கள் ..
Merchant of death
https://www.youtube.com/watch?v=KOaMeO3kYhg
மக்களுக்கிடையில் வேறுபடுத்திக் காண்பதற்கான ஒரே அளவுகோல்
பதிலளிநீக்கு[49:13] மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள் வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங் களாகவும் மற்றும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர், மிகவும் நன்னெறியுடையவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.
(இறுதிவேதம்)