தமிழ்நாட்டின் தாலிபன்களா நாங்கள்?: அன்புமணி ராமதாஸ்


                    பா.ம.க இப்போது  வேறு அரசியலுக்குள் நுழைகிறது. ‘புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்னும் முழக்கத்துடன் கட்சியை முன்னெடுக்கும்  அன்புமணி  ராமதாஸின் சமீபத்திய பேச்சுகள் அவர்கள் செல்லவிருக்கும் திசையைத் தெளிவாக்குகிறது.  எடுத்த எடுப்பிலேயே, ‘‘திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவரும் தமிழரே இல்லை. தமிழர்த் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்’’ என்று ஆரம்பித்த அன்புமணியை சென்னையிலுள்ள அவருடைய ஆடம்பரமான இல்லத்தில் சந்தித்தேன். கார்பரேட் கலாசார  உபசரிப்போடு தொடங்கியது உரையாடல்.

                             ‘‘தமிழர் என்ற சொல்லுக்குப் பா.ம.க. புதிய வரையறை வகுக்கிறதா?’’
‘‘ஆமாம். தமிழ்ப் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், ... தவிர  வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம்... இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சியில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர்கள் இல்லை என்பதுதான்.’’


                             ‘‘அதென்ன புதிய அரசியல், புதிய நம்பிக்கை?’’
‘‘கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன். போதும். திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா.ம.க-வுக்கு இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா.ம.க-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை'. இனி எங்கள் அரசியல் ‘சயின்டிஃபிக் பேஸ்டு’ அரசியலாக இருக்கும்; ‘மைக்ரோ பிளானிங்’ அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!’’

                             ‘‘உங்கள் அகராதியில் சாதிய அரசியல்தான் நவீன யுகத்துக்கான அரசியலா?’’
‘‘சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா.ம.க-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சாதிரீதியாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால், சீர்திருத்தத்தை இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.’’

                             ‘‘இடையில் கொஞ்ச நாள் பா.ம.க-வைச் சாதிய அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. சாதி வெறிக்குத் தூபம் போடுகிறீர்கள். தொடர் தோல்விகள் பா.ம.க-வை அடையாளச் சிக்கலில் தள்ளி இருக்கிறதா?’’
‘‘அப்படி எல்லாம் இல்லை. அடிப்படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா.ம.க. தமிழகத்திலேயே அதிகக் குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு  பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். நாங்கள் சாதி அரசியல் செய்கிறோமா, சமூக நீதி அரசியல் செய்கிறோமா என்று இப்போது நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.’’

                             ‘‘அடுத்தடுத்தத் தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?’’
‘‘திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.’’

                             ‘‘இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?’’
‘‘சத்தியமாக.’’

                         ‘‘அப்படியென்றால் எதிர்காலத்தில் பா.ம.வி-ன் வியூகம் என்னவாக இருக்கும்?’’
‘‘எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.’’

                      ‘‘அதாவது, சாதியக் கூட்டணி...’’
‘‘சமூக நீதிக்கான கூட்டணி என்று சொல்லுங்கள்’’

                       ‘‘உங்கள் தந்தை ஐயா, நீங்கள் சின்ன ஐயா... இது பண்ணையார் மனோபாவத்தை வெளிப்படுத்தவில்லையா?’’
‘‘அப்பாவுக்கும் சரி; எனக்கும் சரி. இதில் விருப்பமே இல்லை. அதுவும் நான் என்னை ‘அன்புமணி’ என்று பெயரைக் குறிப்பிட்டுதான் அழைக்க வேண்டும் என்று வலிறுத்தியே சொல்லி இருக்கிறேன். ஆனால், மக்களின் விருப்பத்துக்கு நாம் எப்படிக் குறுக்கே நிற்க முடியும்?’’

                             ‘‘சரி, வாரிசு அரசியலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’
‘‘இதற்கு நான் கொஞ்சம் விரிவாக பதில் அளிக்க வேண்டும். என் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடுமாடு மேய்த்து, சாணிப் பொறுக்கி, மூட்டைத் தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் அப்பா டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போதெல்லாம் என்னுடைய கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகள் எல்லாம் புதிது புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும் ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்திலிருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் ‘பசுமைத் தாயகம்’ அதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், லட்சோலட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!’’

                             ‘‘அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தேன் என்று சொல்கிறீர்கள்?’’
‘‘ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம் கேட்டேன், ‘இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ ’’ (கண்கள் கலங்க யோசனையில் ஆழ்கிறார்).

                             ‘‘உங்கள் தந்தை, ‘என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்’ என்று அறிவித்தவர். நினைவிருக்கிறதா?’’
‘‘ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள் என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.
இந்தியாவிலேயே எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா. தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.’’

                             ''சரி, உங்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்? அவர்கள் நாளைக்கு அரசியலுக்கு வர மாட்டார்கள், பா.ம.க-வில் இனி வாரிசு அரசியல் இருக்காது என்று உங்களால் சொல்ல முடியுமா?''    
''என்னுடைய மூத்த மகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் படிக்கிறார். அடுத்த இரு மகள்களும் சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் என் கருத்துகளை எப்போதும் திணிப்பதில்லை. பா.ம.க-வில் வாரிசு அரசியல் இருக்காது. அதேசமயம், என் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளில் நான் தலையிட முடியாது.''      
                       
                             ‘‘மது, புகைப்பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பஃப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல், சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு... நீங்கள் என்ன ‘தமிழ்நாட்டின் தாலிபன்’களா?’’
‘‘வேறு வழியில்லை. அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. காதலுக்கு நாங்கள் எதிரி இல்லை. அதேசமயம், காதல் என்ற பெயரில் பெண்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, ‘அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்’ என்று.  அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.’’

                             ‘‘உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?’’
‘‘ம்ஹூம்... தொட்டதே இல்லை.’’

                      ‘‘அரசியலுக்கு வந்த பிறகு மருந்துவம் செய்வதில்லை என்று தெரிகிறது. வேறு என்ன செய்கிறீர்கள்?’’
‘‘ரியல் எஸ்டேட் துறையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவருகிறேன்.’’

‘‘எப்போதாவது உங்கள் தந்தையின் அரசியல் பாதை தவறானது என்று யோசித்திருக்கிறீர்களா?’’
‘‘ஒருபோதும் இல்லை. அவர் ஒரு சமூகப் போராளி. தந்தையாக மட்டும் அல்ல; தலைவராகவும் அவரையே பார்க்கிறேன்.’’ 
ஆனந்த விகடன் மார்ச் 2012

22 கருத்துகள்:

 1. Mr. anbumani given wrong information about kereala CM , KERALA ALREADY ACCEPTED CRISTIAN CM MORE THAN 4 TIME, A K ANTONY 2 TIMES ,UMMEN CHANDI 2 TIMES AND ACHUDANANDAN 4 TIMES HE WAS ELAVA CAST.

  BY SATHEESH KOCHI KERALA

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க அறிவை கண்டு நான் வியக்கிறேன்... அங்கிட்டு உள்ள கிருத்தவன் எல்லாம் என்ன நேரே ரோமன்ல இருந்து குதிச்சவங்களா? எல்லாம் இங்க இருக்க நாடார்,வன்னியர், மீனவர் கிருத்தவர் மாதரி தான். எல்லா கிருத்துவனுக்கு பின்னாடியும் அவன் சாதி இன்னமும் இருக்கு. இனிமேலும் இருக்கும்.

   நீக்கு
 2. Ramadoss studied Doctor in poor backround..Then how he made his son to studying in Anglo indian school..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. O my god, how u create such a great stupids like him???? Mr.stupid Dr.ramadoss studied doctor in poor background because of his father is not doctor, But Dr.anbumani father is doctor thats why he studied in anglo indian school understand?

   நீக்கு
 3. ex central health minister expressed his views; But TN people are not accustomed with caste-based politics.they will teach a lesson for all this violence.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. You talking about AIADMK, DMK, VCK violence? if you seen PMK as violence party, then there is no party without violence background, if you see PMK is cast bassed party, then there is no party without cast background. so just something new... dont make foolish comment.

   நீக்கு
 4. சாதிக்குள் திருமணம் என்பது கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக தான் நடந்து வரும் ஒன்று. ஆண் தனக்கு கீழ் உள்ள வர்ணங்களில் இருந்து துணைவியை வைத்து கொள்வதை/மணந்து கொள்வதை எந்த வர்ணமும் எதிர்த்தது கிடையாது
  சாதி என்னவென்று புரிந்து கொண்ட பிறகு பேசுவது நல்லது அல்லவா. ஐநூறு கிலோமீட்டர் தள்ளி வசிக்கும் அதே சாதி பெயரை கொண்டவர்களை தன சாதி என்று கணக்கிட்டு கொள்வதே நல்ல நகைச்சுவை தான்
  எண்ணிகைக்காக பல சாதிகளின் கூட்டமைப்பு தான் இன்றைய சாதிகள்.சில ஆயிரம் பேருக்கு அதிகமாக இருக்கும் எல்லாசாதிகளும் அரசியல் வலிமைக்காக பல சாதிகளை ஒன்றாக சேர்த்து கொண்டவை தான்

  ஒரு சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்

  Born in Chinnagollapalem, a remote island village in Krishna district on Andhra coast, Mutyala Raju comes from a marginal farmer’s family. He belongs to Agnikula Kshatriya caste of fishermen community among the Other Backward Classes. His two elder brothers are also into farming.

  http://www.rediff.com/news/report/civil/20070516.htm

  இவருக்கும் சொந்தம் கொண்டாடி விட்டு ,பின்பு மற்றவரை telugu என்று அழைப்பது என்ன அரசியலோ
  தமிழக சாதி பட்டியலில் அக்னிகுல க்ஷத்ரிய என்று வன்னியரின் கீழ் வருகிறது

  ஆந்திராவில் வன்னியர்கள் ஏழு சதவீதம்,எட்டு என்றும் IAS தேர்வில் முதலிடம் பெற்ற இவர் வன்னியர் என்றும் வன்னியர்களின் பத்திரிகை அச்சமில்லை கொண்டாடுவது .

  ஒரே குழப்பம் தான்
  இவரின் சாதியான அக்னிகுல க்ஷத்ரிய தமிழகத்தில் வன்னியரின் கீழ் வருகிறது.ஆனால் மீனவர் தொழில் செய்யும் குடும்பம் என்றும் வருகிறது. ஆந்திராவில் மீனவர்களாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்னிகுல க்ஷத்ரியர் என்று ஆந்திராவில் மட்டுமல்ல, திகளர் என்று கர்நாடகாவிலும் வருகிறது. வன்னியர்களின் எல்லை நெல்லூர், சித்தூர், திருப்பதி, பெங்களூர் என பறந்து விரிந்தது, பின்னர் இப்பகுதிகள் எல்லாம் வந்தேறி திராவிடர்களால் தாரைவார்த்து கொடுக்கப்பட்டது, இதற்கு இந்திய தேசியம் பேசிய சில தலைவர்கள் அப்பொழுது உடந்தை காரணம் காங்கிரசில் தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள வன்னியர்களின் ஜனத்தொகையை உடைக்க வேண்டிய தேவை அப்பொழுதய காங்கிரஸ் தலைமைக்கு. இருந்தாலும் காங்கிரசில் அமைச்சரை இருந்த வன்னியர். மா.பொசி யால் தளபதி என்று அழைக்கப்பட்ட விநாயகம் ரெட்டியார் காமராஜருக்கு எதிர் திசையில் பயணித்து தாரை வார்க்கப்பட்ட தணிகை மீட்டார். இப்படி பலரின் சாதி வெறிக்காக பல்வேறு மாநிலங்களில் சிதறடிக்கப்பட்ட சமூகம் தான் வன்னியர் சமூகம், இது ஆந்திராவில் மீனவராய் இருப்பதில் என்ன ஆச்சர்யம்? ராமநாதபுரம் தொண்டியிலும், கன்னியாகுமரியிலும் கூட மீனவராய் தான் இருக்கின்றனர். இவர்கள் வரலாற்றில் பல நூறு ஆண்டுகாலமாய் மீனவராய் இருக்கிறார்கள் என்று சொன்னால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். எனவே வரலாற்றில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், காலத்தின் சூழல் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வரலாறை வரலாறாய் பேசத்தெரிந்தால் பேசுங்க, இல்ல மூடிட்டு போங்க. இப்படி மூக்குடை பட்டு நிக்காதிங்க.

   நீக்கு
 5. மலேசியாவில் இன்றும் தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட ஆதி திராவிடர்,வன்னியர்,கள்ளர் போன்றவரிடையே உள்ள சாதி வேற்றுமைகளும் அதனால் உள்ள ஒற்றுமை இன்மை பற்றியும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் உண்டு
  அன்றைய தலித்தில் இவர்கள் எல்லாம் அடக்கம்.
  ^ a b Culture and economy:Tamils in the plantation sector 1998-99 (

  the Tamil cinema hall and bus-services are owned by
  members of Adi-Dravida caste. Secondly, as I had discussed in my earlier study, even on the
  estates the purity-impurity opposition between the higher (non-Brahman) and lower (Adi-Dravida)
  castes had become considerably reduced. Members of all castes irrespective of their ritual status
  had contributed from their wages money to build the central Mahamariamman temple on Pal
  Melayu. On collective festive occasions like Adi Tiruvila, estate workers sat for a feast in the
  temple premises irrespective of their caste status (Jain 1970, Chapter 9). This development
  reached its culmination during the current phase of the Tamilians’ emancipation from estates in the
  Pal Melayu region. Not only is Muniandy the Chairman of the Thandayundapani Temple
  Committee in Batang Berjuntai a Parayan, but both in his perceptions and reactions to caste
  questions, he displays at once an intimate knowledge of the workings-out of caste distinctions in
  Tamil Nadu and an utter disdain for the claim of being an original high caste by the non-Brahman
  Vanniars whom we had discussed as the `dominant caste’ on Pal Melayu (ibid, 347-349).

  கருணாநிதியை தெலுகர் என்று சொல்லும் அன்புமணி ராமதாஸ் இதை பார்த்தால் என்ன சொல்வார்

  The ideological
  and political umbrella under which this upwardly mobile Adi-Dravida category is functioning
  is provided squarely by Dravidian Tamilian ideology, rhetoric and organization. In this
  42
  respect the understanding between Muniandy (temple chairman), Nallathamby and
  Parasuraman (DMK spokesperson) and Rajagopal (ambitious teacher of the “paradigm
  shift” fame) is remarkable. The rhetoric and vanity of Muniandy is worth documenting. He
  discusses the Vanniars as Telugu refugees (rather than self-claimed rulers) in Tamil Nadu-
  the titles Reddi, Naicker, Naidu etc. he says are all from the Telegu country. The real
  Tamilians are the Adi-Dravidas. While on the one hand, he connects himself up with
  Tamilnadu, he also speaks of the earlier hauteur of the Ceylon (Jaffna) Tamils against
  Indian Tamilians (especially the lower castes) and the present 180 degree turn which
  impels the Jaffna Tamils to show solidarity with their Indian counterparts.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செம்ம காமெடி வரலாறு தெரியாத அரைகுறை கூட உங்களை விட நல்லா பேசுவான், வன்னியர்கள் கீழ் சாதி என்று வெள்ளைக்காரர்கள் காலத்தில் அன்றைய சென்செக்ஸில் சொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் அதற்காக அப்பொழுதே 1921 -இல் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வன்னியர்கள் க்ஷத்ரிய வர்ணத்தார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, வன்னியர் பற்றி தவறான அவதூர் பரப்பியவர்களுக்கு அப்பொழுதே 200 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. வரலாறு என்பது ஆவணப்படுத்தபட்டது அல்ல, ஆவன்கங்கள். எங்கே ஒரே ஒரு கல்வெட்டு, செப்புபட்டயம், ஓலைச் சுவடி ஏதாவது ஒன்றில் வன்னியர்கள் வேளாளர்கள் என்றோ அல்லது கீழ் குடியினர் என்றோ ஒரு வார்த்தை இருந்ததற்குண்டான ஆதாரத்தை காட்டுங்க பாப்போம்??

   நீக்கு
 6. சமஸ் இது கூர்மையான விவாதமா?அல்ல காமெடி கலாட்டாவா?எந்த மக்கள் அவர்களை இப்போது நாட்டின் நிலையை திருத்துவதற்காக அரசியலில் நுழையச் சொன்னார்களாம்?காடுவெட்டி குரு மீது எதனை கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கவே பாவம் அவர்களுக்கு நேரம் போதாது.இதில் இவர்கள் எப்பிடி நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறார்கள.வெற்று அரசியல் கொள்கைகளை வைத்துக் கொண்டு தைலாத் தோட்டத்தில் வேண்டுமானால் ஆதிக்கம் செலுத்தலாம்.அவரது மகள் அண்ணாப் பல்கலைகழகத்தில் எத்தனை மதிப்பெண் எடுத்து சேர்ந்தார் என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா?ஆனால் எவ்வளவு பணம் கொடுத்து சேர்த்தார் என்று கண்டிப்பாக சொல்ல முடியும் அவரால்.பத்தாண்டுகளில் தமிழகத்தில் எல்லா இளைஞர்களும் மது பழக்கத்துக்கு அடிமை ஆகிவிடுவார்கள் என்றால் உங்கள் குழைந்தைகளையும் சேர்த்து தானே சொல்கிறீர்கள்.பத்து ஆண்டுகள் இல்லை சாகும் வரை மது அருந்தாத,புகைப் பிடிக்காத என்னைப்போன்ற இளைஞர்கள் இந்த நாட்டின் நிலைமையை மாற்றத்தான் போகிறார்கள்.உங்களைப் போன்ற ஜாதி அரசியல் பண்ணும் இழிவானவர்களை விரட்டி அடிக்கத்தான் போறோம்.உங்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட சாதி அரசியாலால் வெற்றி பெற முடியாது.படித்த இளைஞன் என்ன உங்களின் பேச்சை கேட்டு ஆர்பரித்து கைதட்டுவான் என்று நினைக்காதீர்கள்.ஓங்கி ஒரு அறை அறைந்து உங்களை நிலைகுலைய செய்துவிடுவான்.ஜாதி அரசியலில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நீங்களா புதிய அரசியலை கொண்டுவரப் போகிறீர்கள்.புதிய மாற்றத்தை உங்கள் கட்சியில் ஏற்படுத்துங்கள்.நீங்க எப்ப உங்க அப்பா மாதிரி சவுக்க எடுத்து எங்க கைல கொடுக்க போறீங்க.இந்த தடவ பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்.மரண அடி தான்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடேய் கேன நீ இதை எழுதிய பிறகு தான் அன்புமணி தர்மபுரியில் வெற்றி பெற்று எம்.பி ஆகி இருக்கார். போய் எங்கயாவது தூக்கு போட்டு சாவுடுடா.

   நீக்கு
 7. அழுத்தமான கேள்விகளும், அபத்தமான பதில்களும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன அபத்தம்?? அன்புமணி கிட்ட சாதி பத்தி கேட்டதே மொதல்ல அபத்தம், கருனானிதி கிட்ட போயிட்டு ஏன் உன் சாதியை வன்னியர் இடஒதுக்கீட்டில் சேர்த்து சாதி அரசியல் செய்திங்கன்னு கேட்டு இருகிங்கின்களா? ஏன் அழகிரி, காந்தி காதலுக்கு எதிரிப்பு தெரிவிச்சிங்கன்னு கேட்டு இருகிங்களா? ஏன் 2004 தேர்தலில் சாதி வாரியா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதில் நீங்களும், உங்க மகன் ஸ்டாலினும் இசை வேளாளர் சாதியினராக காட்டிக்கொண்டீர்கள் என்று கேட்டு இருகிங்களா? ஒரு தலித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு கொடுத்த வேலையே திரும்ப பறித்து, நீதிமன்றத்தில் அப்புறம் எல்லா பார்பன பெண்களும் தலித்தை கல்யாணம் பண்ணி தலித்கள் இட ஒதுக்கீட்டில் வேலை கேப்பாங்கன்னு காதலுக்கு எதிராகவும், கலப்பு மனத்துக்கு எதிராகவும் பேசினீர்கள் என்று கேட்டிங்களா? நாடு சட்டமன்றத்தில் நான் ஒரு பார்ப்பாத்தி என்பதில் பெருமை அடைகிறேன் என்று கூறிய ஜெயா கிட்ட போய் ஏன் சாதியை சொல்றிங்கன்னு கேட்டிங்களா? 41 இல் 19 சீட் தன் சொந்த சாதி நாயிடுவுக்கு ஒதுக்கின விஜயகாந்தை கேட்டிங்களா? குறிஞ்சா குளத்தில் பறையர்கள் கட்டிய கோயிலை இடித்து, இரண்டு பறையர்களை கொலை செய்த வை.கோ வின் தம்பிகளை தன் அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்றினாரே வை.கோ அவரிடம் கேட்டிங்களா? மரக்காணத்தில் 2 வன்னியர்களி கொலை செய்து தற்பொழுது ஆயுள் தண்டை பெற்றுள்ள 6 வி.சி.க வினர காட்டி திருமா கிட்ட கேட்டிங்களா?? ஏன் இப்படி எல்லாம் சாதி அரசியல் செயரிங்கன்னு? என்னங்கடா உங்க திகிடு தித்தம்??? பெரும்பான்மை வன்னியர்களை அரசியலில் வளர விட்டா அப்புறம் நம்ம பிழைப்பு நாறிடும் என்கிற சுயநலம் தாண்டா உங்களுக்கெல்லாம் பா.ம.க மீதான வெறுப்பே.. அதனால நீங்க எல்லாம் மூடிட்டு போங்க, உங்க எவன் ஆதரவும் இல்லைன்னாலும் பா.ம.க ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி.

   நீக்கு
 8. இங்குள்ளவர்களெல்லாம் வந்தேறிகள் என்றால் நீங்க எங்கிருந்து வந்தீங்க , லவ்பெல்.
  அப்டி நீங்க அவ்ளோபெரிய அப்படாகர்-னா அப்புறம் ஏன் சர்ச் பார்க்(ஆங்கிலேயர் ) பள்ளியில் படிக்கவைகுறீங்க.
  ஐயோ இவன் லொள்ளு தாங்க முடியலைடா சாமி, மக்கள் அழைச்சு தான் அரசியல் கு வந்தாராம்.,பதவி பிடிக்காதாம்.,.......ஏதோ சொல்லுவாங்களே கிராமத்துல,கேக்குறவன் கேனையா இருந்தா...,?....ஆ....அதே தானுங்க..,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க திருட்டு திராவிட ஆட்சியில் சர்ச் பார்க் அளவுக்கு தரமான தமிழ் பள்ளிகளை திறந்து இருந்தா அவர் ஏன்யா அங்குட்டு சேர்க்க போறார்?

   நீக்கு
 9. பதில்கள்
  1. என்ன இது குட் கேள்விகள்? என்ன அபத்தம்?? அன்புமணி கிட்ட சாதி பத்தி கேட்டதே மொதல்ல அபத்தம், கருனானிதி கிட்ட போயிட்டு ஏன் உன் சாதியை வன்னியர் இடஒதுக்கீட்டில் சேர்த்து சாதி அரசியல் செய்திங்கன்னு கேட்டு இருகிங்கின்களா? ஏன் அழகிரி, காந்தி காதலுக்கு எதிரிப்பு தெரிவிச்சிங்கன்னு கேட்டு இருகிங்களா? ஏன் 2004 தேர்தலில் சாதி வாரியா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதில் நீங்களும், உங்க மகன் ஸ்டாலினும் இசை வேளாளர் சாதியினராக காட்டிக்கொண்டீர்கள் என்று கேட்டு இருகிங்களா? ஒரு தலித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு கொடுத்த வேலையே திரும்ப பறித்து, நீதிமன்றத்தில் அப்புறம் எல்லா பார்பன பெண்களும் தலித்தை கல்யாணம் பண்ணி தலித்கள் இட ஒதுக்கீட்டில் வேலை கேப்பாங்கன்னு காதலுக்கு எதிராகவும், கலப்பு மனத்துக்கு எதிராகவும் பேசினீர்கள் என்று கேட்டிங்களா? நாடு சட்டமன்றத்தில் நான் ஒரு பார்ப்பாத்தி என்பதில் பெருமை அடைகிறேன் என்று கூறிய ஜெயா கிட்ட போய் ஏன் சாதியை சொல்றிங்கன்னு கேட்டிங்களா? 41 இல் 19 சீட் தன் சொந்த சாதி நாயிடுவுக்கு ஒதுக்கின விஜயகாந்தை கேட்டிங்களா? குறிஞ்சா குளத்தில் பறையர்கள் கட்டிய கோயிலை இடித்து, இரண்டு பறையர்களை கொலை செய்த வை.கோ வின் தம்பிகளை தன் அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்றினாரே வை.கோ அவரிடம் கேட்டிங்களா? மரக்காணத்தில் 2 வன்னியர்களி கொலை செய்து தற்பொழுது ஆயுள் தண்டை பெற்றுள்ள 6 வி.சி.க வினர காட்டி திருமா கிட்ட கேட்டிங்களா?? ஏன் இப்படி எல்லாம் சாதி அரசியல் செயரிங்கன்னு? என்னங்கடா உங்க திகிடு தித்தம்??? பெரும்பான்மை வன்னியர்களை அரசியலில் வளர விட்டா அப்புறம் நம்ம பிழைப்பு நாறிடும் என்கிற சுயநலம் தாண்டா உங்களுக்கெல்லாம் பா.ம.க மீதான வெறுப்பே.. அதனால நீங்க எல்லாம் மூடிட்டு போங்க, உங்க எவன் ஆதரவும் இல்லைன்னாலும் பா.ம.க ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி.

   நீக்கு
 10. COMEDIES AND FUN INTERVIEWS ARE THE SOUL OF LIFE DEAR.KEEP IT UP SAMAS.WE NEED SUCH INTERVIEWS.NOWADAYS I AM WATCHING MAKKAL THOLLLLLLLAIKAATCHI INSTEAD OF WATCHING ADITYA AND SIRIPPOLI.

  பதிலளிநீக்கு
 11. அன்புமணி இவர்களை வன்னியர்கள் என்பாரா,சென்றேறி என்பாரா

  http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Dalits-attacked-over-temple-festival-row/articleshow/20040527.cms

  According to information, Vanniyars (palli kapu), a dominant caste in Tada mandal, are the local landlords who dictate village politics and financial matters. The villagers traditionally celebrate the jathara of the local goddess Draupathamma by taking out the deity’s idol in a procession through the main thoroughfares of the village. Recently, the dalits of Ramapuram demanded that the procession be routed through the dalit colony as well instead of only the main village. The vanniyars, however, opposed the demand, resulting in tension in the village.

  ஆந்திராவில் தமிழே தெரியாத தெலுகை தாய்மொழியாக கொண்ட சாதி எப்படி தமிழ்நாட்டில் தெலுகு தெரியாத தமிழை தாய்மொழியாக கொண்டு வாழும் அதே சாதி பெயரை கொண்டவர்களோடு ஒன்றாக கருதப்படுகிறது
  சில ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் இருக்கும் எல்லா சாதிகளும் மற்ற சாதிகளை ஒன்றாக இணைத்து கொண்ட ஒரே குழுவுக்குள் நடந்த சாதி ஒழிப்புகள் தான்.
  பல சாதிகளை ஒன்றாக்கி கொண்டு இப்படி எண்ணிக்கை பெரிதான சாதிகள் தான் இன்று சாதிவெறி கொண்டு அலைவது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. WTF u talkin about? is samas writing article about politics or cast? if you wanna cast debate about vanniyar kula kshatriya just do it with vanniyar research scholars. but i understand y u asking too much question about vanniyar coz anbumani attacking your golti political invading in tamilnadu. hahah so just chill or go to andra to do this politics.

   நீக்கு
 12. katchikarakal aluththam koduththa nalaikku Ramathan cm akavum mattrum sila kudumba uruppinarkal inna pira pathavikku varavum vaippu undu. yena makkal viruppatha thadai seiya mudiyuma?????

  பதிலளிநீக்கு