சமஸ் என்றால் என்ன அர்த்தம்?

சமஸ்

ன்னை முதன்முதலாகச் சந்திக்கும் நண்பர்கள் அதிகம் கேட்கும் கேள்வி...
சமஸ் என்றால், என்ன அர்த்தம்?
சமஸ் என்பது என் தாய், தந்தையினரின் பெயரோடு அவர்கள் என்னை அழைத்த பெயரை இணைத்து உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல். அது புனைப்பெயர் அல்ல. என்னுடைய அதிகாரபூர்வமான பெயர். ஆரம்பத்தில் யாராவது கேட்டால், சமஸுக்கு என்ன அர்த்தம், அது ஒரு பெயர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவேன். அப்புறம் எனக்கே ஓர் ஆர்வம் உண்டாக சமஸ் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உலகின் பல்வேறு மொழிகளை ஆராய ஆரம்பித்தேன். நிறைய அர்த்தங்கள் கிடைத்தன. அவற்றுள் தொகுக்கப்பட்ட இந்த அர்த்தங்களை என் பெயரின் விளக்கமாக அளிக்கிறேன்.
சமஸ் என்றால், நல்ல என்று பொருள்.
சமஸ் என்றால், அனைவருக்கும் சமமானவன் - அதாவது யாரைவிடவும் உயர்ந்தவனும் இல்லை, யாரைவிடவும் தாழ்ந்தவனும் இல்லை - என்று பொருள்.
சமஸ் என்றால், சாமானியன் என்று பொருள்!
மே 2013

10 கருத்துகள்:

  1. indru kalai thaan ninaithen thozhar....athatkul pathivittu viteerkal.... nandru ...

    பதிலளிநீக்கு
  2. வாழ்துக்கள் சமஸ் தெளிவான விளக்கம்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்து. மதச் சார்பின்மையையே நம் நாட்டில் மாற்றி விட்டார்கள்.'Secular' என்பது கடவுள் சாரா அரசாங்கப் பணி என்ற நிலையல் தான் இங்கிலாந்தில் இருந்தது. நாம் காப்பி அடிப்பதில் கூட சரியாக அடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  4. "சமஸ்"
    நல்ல பெயர்...
    நல்ல விளக்கம்...

    பதிலளிநீக்கு
  5. தி இந்து தமிழ் நாளிதழ் படிக்க ஆரம்பித்ததும் , ....தங்களின் கட்டுரைகளை உன்னிப்பாக படித்துவருகிறேன்.. மிக்க நன்றி. சமஸ்...

    பதிலளிநீக்கு
  6. சமஸ் என்றால் எளிமையானவர், மனிதர்களை மதிக்கும் பண்பாளர் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
    T.RamaKrishnan, KanyaKumari.

    பதிலளிநீக்கு
  7. சமஸ் என்றால் : ச= சக
    ம= மனித
    ஸ்= ஸ்நேகம்

    என்று நினத்தேன்

    பதிலளிநீக்கு
  8. தமிழ் தி இந்து நாளிதழில் தங்களுடைய கட்டுரைகளை தொடர்ந்து ஆவலுடன் வாசித்து வருகிறேன். உண்மையில் சமஸ் என்ற பெயரின் விளக்கம் தங்களுடைய கட்டுரைகளைப் போன்றே அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு