என்றும் அழியாத கோலம்






திடீரென்று அழைக்கிறார்: இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?”

பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்குஎன்றவர், சத்யா என்பவரை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர் வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன செய்யப்போறன்னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்என்கிறார்.

சத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவருடைய கைகள் நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள் சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா?” என்கிறார்.

அது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது. “‘மூன்றாம் பிறையில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது. ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே தெரியாதுஎன்பவருக்குள் இருக்கும் புகைப்படக்காரர் வெளியே வருகிறார். நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு படத்தைக் காட்டுகிறார்: என்னா அழகு!

கூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை ரசித்துப் பார்க்கும் படம் அது.

தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப் படத்தைப் பார்த்தார். சார்... மாதவியோட பார்வையைப் பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான் பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா?” - சிரிக்கிறார்.

அந்தக் காலத்தில் அட்டகாசமாக இருந்திருக்கிறீர்கள் சார்…”

ஏன், இப்போது மட்டும் என்னவாம்?” மீண்டும் சிரிப்பு.

எல்லோர் படமும் இருக்கு. சில்க் ஸ்மிதா படம் இல்லையே?”

ஏன் இல்லை? என் மனசுல இருக்குஎன்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு,“சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய உதட்டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும் கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு.

ஸ்ரீதேவியைவிடவும் சில்க் அழகா?”

ஆமாம். திராவிட அழகோட உச்சம் இல்லையா அவ?ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்லஎன்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்? அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடுஎன்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார்.  உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.

சத்யாக்களைவிடவும் நாராயணமூர்த்திகளே இந்தியாவுக்குத் தேவை!



சத்யா நாதெள்ள


லகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. பெப்சிகோநிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கியின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோநிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்‌ஷைர் ஹாத்வேநிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட மைக்ரோ சாஃப்ட்நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
சத்யா கொண்டாடப்பட வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை?

சுகுமார் சென் எனும் ஜனநாயகத் தூண்



சுகுமார் சென்


நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டாடுபவராக இருந்தால், சுகுமார் சென்னையும் கொண்டாட வேண்டும். இந்தியாவின் தேர்தல் ஜனநாயகப் பாதைக்கு அடித்தளம் அமைத்தது காந்தி; பாதையை வகுத்தது நேரு என்றால், பாதையைக் கட்டமைத்தவர் சுகுமார் சென். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்.

ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்





 திருவாரூர். 1938. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13 வயது கருணாநிதியின் மனதில் அரசியல் விதையாக விழுகிறது அழகிரியின் பேச்சு. பின் கருணாநிதி மாணவர் மன்றம் தொடங்குகிறார்; பத்திரிகை தொடங்குகிறார்; பேசுகிறார், எழுதுகிறார், நாடகம் போடுகிறார்; பெரியார், அண்ணாவைச் சந்திக்கிறார்பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு. சரியாக 77 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் வரலாற்றில் பட்டுக்கோட்டை அழகிரி இடம்பெற்ற சூழலையும் இன்றைக்கு மு.க.அழகிரி இடம்பெறும் சூழலையும் இணைத்துப் பாருங்கள்திராவிட இயக்கமும் கருணாநிதியும் தமிழக அரசியல் சூழலும் எவ்வளவு சீரழிந்திருக்கின்றன?

திராவிட இயக்கத்தின்பால் பற்றுகொண்ட எவரும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்: கருணாநிதிக்குப் பின் தி.மு.க. என்னவாகும்? இதோ அதையும் தன் காலத்திலேயே நடத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.

இலங்கை அரசு மாறாதவரை நல்லிணக்கம் உருவாகாது: இரா. சம்பந்தன்

சமஸ் - சம்பந்தன் உரையாடல்
ராஜவரோதயம் சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் அரசியல் குரல். வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். போருக்குப் பின் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் சர்வதேசம் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறைக்கு முக்கியக் காரணம், எண்பதைத் தொடும் நிலையிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தனின் முயற்சிகள். ஒருபுறம் தமிழர்களிடம் சாத்வீகத்தையும் சிங்களர்களிடம் நல்லிணக்கத்தையும் போதித்துக்கொண்டே மறுபுறம் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான தம்முடைய அறப் போராட்டங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்கிறார் சம்பந்தன்.

போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பை ஏற்படுத்திய போர் இது. எம் மக்கள் தம் வாழிடங்களை, வாழ்வாதாரங்களை, சொந்தங்களை எல்லாவற்றையுமே இழந்தார்கள். யுத்தம் முடிந்தாலும் அது ஏற்படுத்திய பாரிய பாதிப்பிலிருந்து இன்னமும் அவர்கள் வெளிவரவில்லை. அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை; அரசு சார்பில் அப்படி உதவிகள் என்று செய்யப்பட்டவை மிகவும் அற்ப சொற்பமானவை.
உள்ளபடி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆக்கபூர்வமான சில உதவிகள்தான் மக்கள் தலையெடுக்க ஓரளவேனும் உதவுகின்றது. ஒருபுறம் மக்களின் மறுவாழ்வைக் கட்டி எழுப்புவதில் இப்படி அலட்சியம் செய்யும் அரசு, மறுபுறம் போருக்குப் பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும்கூட ராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டே செல்கின்றது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் படைப்பிரிவினர் - அதாவது, தமிழர் பகுதியில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற வீதத்திலே - அங்கே ராணுவத்தினர் நிற்கின்றார்கள்.
ராணுவம் எல்லாக் கருமங்களிலும் ஈடுபடுகின்றது. ராணுவம் விவசாயம் செய்கின்றது; வியாபாரம் செய்கின்றது; பலவிதமான போர்வைகளில், எம் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. எவ்வளவோ நெருக்கடிகளுக்கும் சங்கடங்களுக்கும் இடையிலேதான் எம் மக்கள் இருக்கின்றார்கள். சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று சொல்லும் நிலை இல்லை. இந்த நிலை மாறவேணும்; மாறாவிட்டால், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது.

அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன்: நம்மாழ்வார்




வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக் கணக்கான விவசாயிகளைத் திசைதிருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தேபோன சிறுதானியங்கள் இன்று பேரங்காடிகளில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் சுருக்கப்பட்ட தொகுப்பு இது.

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

 ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்

ந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் பத்தியாளர். தி இந்துகுழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தி இந்துவின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.

கொலைக் குற்றமா கருக்கலைப்பு?



 

                     டந்த ஆண்டு அயர்லாந்து இருந்த இடத்தில் இந்த ஆண்டு ஸ்பெயின். பெண்கள் அமைப்புகள் கொடிகளை ஏந்தி நிற்கின்றன. அயர்லாந்து சட்டம் கருக்கலைப்பை அனுமதிக்காத நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சவிதா அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டு உயிரிழந்தபோது அயர்லாந்து சர்ச்சையில் சிக்கியது; ஏற்கெனவே உள்ள சட்டத்தை மேலும் இறுக்கிக் கிட்டத்தட்ட கருக்கலைப்புத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஸ்பெயின். பெண்களின் கருப்பைக்கான உரிமையை மேலாதிக்கம் செய்வதில் வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லை; உயிர்களைவிடவும் மதமும் நம்பிக்கைகளுமே அங்கு முக்கியம்.



அமுதா ஏன் இறந்தார்?



நம்மூர் கதைக்கு வருவோம். மதுரையைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய மூன்றாவது வீட்டுப் பெண்களுக்குக்கூட அமுதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியாது. காய்ச்சலில் கிடந்து அவர் இறந்துபோனதாக அமுதாவின் உறவுக்காரர்கள் எல்லோரிடமும் சொன்னார்கள். உண்மையான காரணம் - கருக்கலைப்பின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நோய்த்தொற்று.

ஆனால், அமுதாவின் மரணத்துக்கான காரணம் ஏன் மறைக்கப்பட்டது? இத்தனைக்கும், அமுதாவுக்குக் கணவர் இருக்கிறார்; மேலும், இரு குழந்தை களுக்கு அவர் தாய்.


பதில்... குற்ற உணர்வும் அவமானமும்.

முன்மாதிரியா கெஜ்ரிவால் அரசியல்?


                ரலாற்றில் இடம்பெற்றுவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் தேர்தலிலேயே அவருடைய ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் வென்றிருக்கும் 28 இடங்கள்; ஆளும் காங்கிரஸை வெறும் எட்டு இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கொடுத்த தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல், டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டின் அரசியல் போக்கையும் அவர் தீர்மானிக்கும் வியூகம்சந்தேகமே இல்லாமல் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்.

அதே சமயம், தேசிய ஊடகங்கள் சித்தரிக்கும் இந்திய பாணி அரபுப் புரட்சியா இந்த வெற்றி? அமார்த்திய சென் சொல்வதுபோல, மிக முக்கியமான புறப்பாடா? ராகுல் சொல்வதுபோல, ஆம்ஆத்மியிடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமா? சில அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோல, இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டிய சித்தாந்தமா ஆம்ஆத்மியின் சித்தாந்தம்? சுருக்கமாக, இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கொண்டாடும் முன்மாதிரியா கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசியல்?

நாம் நிறைய உணர்ச்சிவசப்படுகிறோம் என்று தோன்றுகிறது.

நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின்  பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.  ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது,  “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.

எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது?





ம் காலத்தின் மிகச் சிறந்த அறம்சார் அரசியல் முன்னோடி என்று நெல்சன் மண்டேலாவைக் குறிப்பிடலாமா?
இன்றைய தலைமுறையின் முன் ஒரு சே அளவுக்கு,  ஃபிடல் அளவுக்கு, ஏன் சாவேஸ் அளவுக்குக்கூடப் புரட்சி பிம்பம் இல்லாதவர் மண்டேலா. வரலாறோ மண்டேலாவையே முன்னிறுத்தும்.
எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது? ஆப்பிரிக்கப் பின்னணியில் அவர் நடத்திய போராட்டங்களைவிட, அவர்  தொடங்கிய வேகத்திலேயே கைவிட்ட – நடத்தாத  ஆயுத  யுத்தமே தனித்துவப்படுத்துவப்படுத்துகிறது.

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் ஒரு குரூர நகைச்சுவை: குணால் சாஹா


மருத்துவ ஆராய்ச்சியாளர் குணால் சாஹா.
ந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.

ஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.
நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.

அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் உளவியல்துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.
நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.


கைப்பிள்ளை இந்தியா!






ண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

நான் சொன்னேன், “இந்திய ஊடகங்களை ஆங்கில ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர, பொதுவாக நம்முடைய ஊடகங்கள் காப்பி ஊடகங்கள். நம்முடைய ஆங்கில ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களை காப்பியடிக்கின்றன; பிராந்திய ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களை காப்பியடிக்கின்றன.

மேலோட்டமாக இது சாதாரணமான விஷய மாகத் தெரியலாம். அப்படி அல்ல. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற - மேற்கத்திய மன்னராட்சிக் கால - ராபர்ட் கார்லைல் சிந்தனையேகூட மேலோட்டமானதுதான். என்னைக் கேட்டால், ஊடகங்கள்தான் நவீன சமூகத்தின் எதிர்காலத்தைக் கல்வித் துறையோடு சேர்ந்து கட்டியமைக்கும் கொத்தனார்கள் என்று சொல்வேன்.

எங்கிருந்து வருகிறது பார்வை?

இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பார்வை இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மோடியைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மம்தாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். சன்னி லியோனைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்துகளைத் தாண்டி பொதுவில் - நம் அனைவர் மத்தியிலும் - ஒரு கருத்து இருக்கிறது. மன்மோகன் சிங் எதையும் வேகமாகச் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்; மோடி ஒரு காரியக்காரர் என்று நினைக்கிறோம்; மம்தாவைக் கோபக்காரராகவும் சன்னி லியோனை எதற்கும் துணிந்தவராகவும் பார்க்கிறோம். நம்மிடம் இந்தப் பொதுவான பார்வையை உருவாக்கியது யார்? யோசித்துப்பாருங்கள். மன்மோகன் சிங்கையோ சன்னி லியோனையோ நம்மில் எத்தனை பேருக்கு நேரடியாகத் தெரியும்? எந்த அடிப்படையில் நாம் அவர்களைத் தீர்மானிக்கிறோம்? இந்தத் தீர்மானங்கள் மன்மோகன் சிங்கின் எதிர்காலத்தையோ, மோடியின் எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றால், இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்?

சந்தேகமே வேண்டாம். ஜனநாயகத்தில் ஊடகங்கள் அவ்வளவு சக்தி பெற்றிருக்கின்றன. கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் போக்கையே தீர்மானிக்கின்றன. ஆனால், ஒரு சமூகத்தின் பார்வையை உருவாக்கும் ஊடகங்கள் ஒரு நாட்டில், காலனிய இரவல் சிந்தனையோடும் பார்வையோடும்தான் காலம் தள்ளுகின்றன என்றால், அந்தச் சமூகத்தின் - நாட்டின் பார்வையும் சிந்தனையும் எப்படி இருக்கும்?

பங்காளிகள் என்ன சொல்கிறார்கள்?






மீப காலமாக உச்ச நீதிமன்றம், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்தியப் புலனாய்வு அமைப்பு உபயத்தில் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரவி மற்றும் அன்ஷுமன் ருயா, நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், சஞ்சய் சந்திரா, குமார்மங்கலம் பிர்லா என்று பெருநிறுவன முதலாளிகளின் பட்டாளமே ஊழல் - முறைகேடு விசாரணைகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

மக்களாகிய நமக்கு இது களிப்பையும் உவப்பையும் அளிக்கலாம். சரி, நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்?

உள்ளது உள்ளபடி:

இந்தியா ஔரங்கசீப்பின் ஆட்சியில் இல்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவுக்குச் சென்று முதலீடுசெய்ய முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். அங்குதான் பெரும் பணக்காரர்கள் சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். ரஷ்யாவைப் போல இந்தியா மாறிவிடாமல் இருப்பதை நீதித் துறையும் புலனாய்வு அமைப்புகளும் உறுதிசெய்ய வேண்டும்” - அமைச்சர் வீரப்ப மொய்லி.

ஒரு மகத்தான தொழிலதிபர் மீது எப்படி வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது என்பதை யோசித்துப்பார்க்கவே முடியவில்லை. முதலில் தகவல் தொழில்நுட்பத் துறை, அடுத்து எரிசக்தித் துறை, இப்போது நிலக்கரித் துறை என்று வரிசையாகக் கொலை நடக்கிறது... பெருநிறுவன அதிபர்களை அரசு மதிக்கிறது. அவர்களின் நேர்மை குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது” - ஆனந்த ஷர்மா.

சர்வாதிகாரம் X பயங்கரவாதம்




ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சிஎன்பார். நவீன உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.

சுஸ்தர் ஹோல்ச்சருக்கு 16 வயது. அதிகாலையில் 25 கி.மீ. ஓடுகிறார். தோள்பட்டையில் துப்பாக்கி. கடந்த மாதம் வரை சுஸ்தர் மாணவி. இப்போது சிரியாவின் குர்து இனக் குழுக்களில் ஒன்றான குர்திஷ் இஸ்லாமிய விடுதலை முன்னணியின் வீராங்கனை. லட்சியம் சிரிய குர்திஸ்தான். பொது எதிரி பஷார் அல் அஸாத்.

கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் அபு. இப்போது 'இராக் - சிரிய இஸ்லாமிய தேசம்' அமைப்பின் ஜிகாதி. லட்சியம் இராக்-சிரிய இஸ்லாமிய தேசம். பொது எதிரி பஷார் அல் அஸாத்.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் - வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, முரண்பாடான இலக்குகளைக் கொண்டவை, அவற்றில் பல தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்பவை - ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராகக் காட்டுத்தனமாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால்?சிரியாவில் கடந்த 31 மாதங்களில் ஐ.நா. சபையின் கணக்குப்படி 1.2 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சமகாலத்தின் கொடூர வரலாறாகி இருக்கிறது சிரிய உள்நாட்டுப் போர். சிரியத் தாக்குதல்களில் மனித உயிர்களே பிரதான இலக்குகள்.

போதுமே நாடகங்கள்!





             பெரிதும் மதிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டேன்: எனக்குத் தெரிந்து காமன்வெல்த் அமைப்பு உருப்படியாக எதையும் செய்ததில்லை. உங்கள் அனுபவத்தில் அப்படி ஏதும் ஞாபகத்தில் இருக்கிறதா?”

அவர் சொன்னார்: இங்கிலாந்து ராணியிடமே இந்தக் கேள்வியைக் கேட்டாலும், அவரும் இல்லைஎன்றுதான் சொல்வார்.

உண்மை.

இங்கிலாந்து பேரரசின் முன்னாள் காலனி நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அரசுத் தொடர்புகள் நீடிக்க முக்கியமாக, இங்கிலாந்தின் வியாபார நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த். காலனிய ஆதிக்க அடிமைத்தனத்தின் நீட்சியான இந்த அமைப்பில் இப்போது 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இந்த நாடுகள் எந்தச் சட்டத்தாலும் இணைக்கப்படவில்லை. முழுக்க சுயவிருப்பத்தின் அடிப்படையிலான இணைப்பு. உலகப் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே உள்ள இந்த நாடுகளில்தான் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறது. 9.767 டிரில்லியன் டாலர்கள் உற்பத்தி மதிப்பைக் கொண்ட இந்தச் சந்தைதான் காமன்வெல்த்தைப் பிணைத்திருக்கும் ஆதார சுருதி. கலாசாரம், மனித உரிமைகள் என்றெல்லாம் வெளியே கூவினாலும், தடையற்ற வர்த்தக மண்டலம், விசா தேவைப்படாத சுற்றுலா அனுமதி, பொதுவான வெளியுறவுக் கொள்கை போன்ற பொருளாதார நலன்களும் சர்வதேச அரசியல் அபிலாஷைகளுமே காமன்வெல்த்தின் இருப்பைத் தீர்மானிக்கின்றன.

தன்னுடைய உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் சம உரிமையையும் அந்தஸ்தையும் காமன்வெல்த் வழங்குகிறது. எந்த நாட்டையும் இதிலிருந்து யாரும் வெளியேற்ற முடியாது. கொடும் குற்றங்களில் உறுப்பு நாடுகள் ஈடுபட்டாலும்கூட, குறிப்பிட்ட காலகட்டதுக்கு இடைநீக்கம் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை உறுப்பு நாடுகள் தாங்களாக விரும்பினால் தாராளமாக விலகிக்கொள்ளலாம்.

- இப்போது யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் அமைப்பின் மாநாட்டை இலங்கை நடத்தக் கூடாது என்பதிலோ, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதிலோ, இலங்கையை இந்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதிலோ - இலங்கைத் தமிழர்கள் நலன் சார்ந்து - ஏதாவது பைசா பிரயோஜனம் இருக்கிறதா?

பா.ஜ.க. ஆதரவோடு ஜெ. பிரதமரானால் சந்தோஷம் - தா.பாண்டியன்



ன்றைக்கும் கட்சித் தொண்டர்களோ, பொதுமக்களோ வீட்டுக்குள் சாதாரணமாக நுழையும் பாங்கோடு இருப்பது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கே உரிய அடையாளம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியனின் வீடும் விதிவிலக்கல்ல. இக்கட்டான காலகட்டத்தில் கட்சி இருக்கும் நிலையில், தனிப்பட்ட வகையிலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார் தா.பாண்டியன். வீட்டில் கட்சித் தோழர்களுடன் சாதாரணராகப் பேசிக்கொண்டிருந்தவர், பேட்டி என்றதும் உற்சாகமாகத் தயாரானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழிவுக் காலச் செயலாளர் என்று உங்களைக் குறிப்பிடலாமா?
மனித குலத்துக்கும் உண்மைக்கும் எவ்வளவு ஆயுளோ அதே ஆயுள் கம்யூனிஸ இயக்கத்துக்கும் உண்டு.

ஒருகாலத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பலமாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வீழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா?
இந்தியாவில் இதுவரை மூன்று முறை ஆளுகிறவர்களால் தடை செய்யப் பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற காலங்களிலும் பெரும்பாலும் வேட்டையாடப் படுகிறவர்களாகத்தான் எங்கள் கட்சியினர் இருந்திருக்கிறோம். அடக்குமுறைக் கால கட்டங்களிலேயேகூட கம்யூனிஸ்ட் கட்சி சேதப்பட்டது உண்டு; செத்துப்போனதில்லை. இப்போதைய பின்னடைவை நாங்கள் உணராமல் இல்லை. மீளக் கட்டியமைக்கும் வேலைகளில்தான் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்டவர்கள் - முக்கியமாக தலித்துகள் - சாதி அடிப்படையில் திரள கம்யூனிஸ இயக்கங்களின் தோல்விதானே காரணம்?
இல்லை... சில தலைவர்களின் பதவி ஆசைதான் காரணம். தலித் இயக்கங்களையே எடுத்துக்கொள் வோம். பிளவுச் சக்திகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். ஒரு தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்போது, அங்கே சென்று சாதியைச் சொல்லிப் பிரிப்பவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்? ஒரு தொழிலாளி பார்ப்பனராக இருந்தாலும் தொழிலாளிதான்; தலித்தாக இருந்தாலும் தொழிலாளிதான், வன்னியராக இருந்தாலும் தொழிலாளிதான் இல்லையா?

மக்கள் போராடினால் எல்லாம் சரியா?


தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோதம். அரசியல் அப்படிக் கட்டமைத்திருக்கிறது. அதனாலேயே எழுதாமல் இருக்க முடியாது.

மக்கள் போராட்டங்கள் சரியா என்று கேட்டால், எல்லாக் காலகட்டங்களிலும் சரி என்ற பதிலே வரலாற்றிலிருந்து கிடைக்கிறது; அதே சமயம், இந்தப் போராட்டங்களினூடே அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா என்று கேட்டால், சரி - தவறு என்கிற பதில்களுக்குமே வரலாற்றில் இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், சரியான தீர்வுகள் மக்களிடமிருந்து வரவில்லை; தொலைநோக்குள்ள தலைவர்களிடமிருந்தே வந்திருக்கின்றன - அப்படிப்பட்ட தீர்வுகளும் வெகுஜன எதிர்பார்ப்புக்கு முரணாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன என்னும் பதிவுகளே அதிகம்.

விஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும்!




வீதியில் விரும்புபவர்கள் எடுத்துச் செல்லவும் தேவைப்பட்ட விட்டுச்செல்லவும் பிரான்ஸ் சைக்கிள் நிறுத்தங்களை அமைக்கலாம்; மெக்கினாக் தீவில் சைக்கிளில் செல்வதற்கென்றே ‘எம்.185’ வீதியை அமெரிக்கா ஒதுக்கலாம்; நாம் இருப்பது இந்தியாவில் அல்லவா? இங்கு எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்.

கொல்கத்தா நகரின் 174 வீதிகளில் சைக்கிள்களை ஓட்டவே கூடாது என்று தடை விதித்திருக்கிறது மம்தாவின்  காவல் துறை.  இவற்றில்  38 வீதிகள் பெரியவை. முட்டுச்சந்துகளும் சந்துபொந்துகளும் நிரம்பிய கொல்கத்தாவில், இந்த வீதிகளைத் தொடாமல், நகரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியாது. ஆக, மறைமுகமாக ஒட்டுமொத்த சைக்கிளோட்டிகளின் காற்றையும் பிடுங்கிவிட்டிருக்கிறார் மம்தா.

“என்னது... சிவாஜி செத்துட்டாரா?”


முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று.
"அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?!