கோடிக்கு மேல் சிந்தியுங்கள்!

 
              வ்வோர் ஆண்டும் இந்தியாவின் நிதிநிலை அறிக்கை மட்டும் அல்ல; இந்திய அரசியல்வாதிகளின் ஊழலின் மதிப்பும் உயர்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு 1763790000000; நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு 1800000000000 என்று நம் அரசியல்வாதிகளின் வேகம்  விஸ்வரூபம் எடுக்கும் சூழலில், கோடி என்கிற வார்த்தையின் போதாமை வெளிப்படுகிறது.

                உலகுக்கு பூஜ்ஜியத்தைத் தந்த நாடு கோடிக்குள் முடங்கிவிடக் கூடாது; பில்லியன், ட்ரில்லியன்களைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். பழந்தமிழ் இதற்கு உதவுகிறது. கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிடும் வார்த்தைகள் இவை.

1,00,00,000 - கோடி
10,00,00,000 - அற்புதம்
1,00,00,00,000 - நிகற்புதம்

10,00,00,00,000 - கும்பம்
1,00,00,00,00,000 - கனம்
10,00,00,00,00,000 - கற்பம்
1,00,00,00,00,00,000 - நிகற்பம்
10,00,00,00,00,00,000 - பதுமம்
1,00,00,00,00,00,00,000 - சங்கம்
10,00,00,00,00,00,00,000 - வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000 - அன்னியம்
10,00,00,00,00,00,00,00,000 - மத்தியம்
1,00,00,00,00,00,00,00,00,000 - பிராத்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 - பிரம்மகற்பம்.
ஆனந்த விகடன் 2012

2 கருத்துகள்:

  1. பெயரில்லா3 மே, 2013 அன்று AM 2:12

    கோடி,அற்புதம்,வெள்ளம் இவை தவிர்த்த அத்தனை சொற்களும் தமிழ் அல்ல நண்பரே.:)

    பதிலளிநீக்கு