வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன?


நக்ஸல் இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைந்திருக்கிறது. 1967-ல் வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில், நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளின் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு பகுதியினரை ஆயுதப் புரட்சி நோக்கித் திருப்பி அரை நூற்றாண்டு ஆகிறது. இந்திய கம்யூனிஸத்தில் மார்க்ஸிய - லெனினிஸம், மாவோயிஸம் என்று பல போக்குகளுக்கு வழிவகுத்த நக்ஸல் இயக்கம், அடிப்படையில் இன்று நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து, ‘ஆயுதப் பாதை ஒன்றே புரட்சிப் பாதை’ என்று நம்பித் தொடங்கப்பட்டது. ஆயுதப் புரட்சி என்பது வெளிப்பூச்சுக்கான ஒரு கவர்ச்சிகரமான சொல்; எதிர்த் தரப்பை அழித்தொழிப்பதே அவர்களுடைய வழிமுறை.

இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலமும் தீப்பற்றத் தயாராக இருக்கிறது என்று சொன்ன நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர். ஆனால், இயக்கம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அது கடும் பின்னடைவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட சாரு மஜும்தார் இறந்தார். இயக்கம் பலவாக உடைந்தது. சிதறிய அமைப்புகளில் பல அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தன. சில தேர்தல் பாதைக்குத் திரும்பின. சில பழைய பாதையையே வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்தன. ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் வர்ணிக்கப்பட்ட ‘மாவோயிஸ்ட் இயக்கம்’ நக்ஸல் இயக்கத்தின் நீட்சி. நேரடியாக ஆயுத வழியில் அல்லாமல், ஜனநாயக அமைப்புகளின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் நக்ஸல் ஆதரவு மனநிலை கொண்ட இயக்கங்கள் ஏராளம் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் ‘மகஇக’, ‘மக்கள் அதிகாரம்’ போன்ற பெயர்களில் செயல்படும் அமைப்புகளை நக்ஸல் இயக்க வழிமுறையில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் என்று சொல்லலாம்.

பொதுவாக, மிகத் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள் என்றாலும், எண்ணிக்கை அளவில் நாடு முழுவதிலுமே லட்சங்களில் அடக்கிவிடக் கூடிய மிகச் சிறுபான்மை அரசியல் தரப்பு இவர்கள். ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று நக்ஸல் இயக்கத்தையும் நக்ஸல் ஆதரவு இயக்கங்களையும் இந்தப் போக்குகளையும் மதிப்பிடுகையில், அது பெரிய தோல்வி அடைந்திருப்பதாகப் பலரும் எழுதுகிறார்கள். தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூடவே தங்களுக்கு வெளியே இருக்கும், இடதுசாரிசார் ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்; மறைமுகமாக வலதுசாரிகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது என்னுடைய துணிபு.

இந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்பவர்கள் இதுகுறித்தும் ஆய்வுசெய்தால் நன்றாக இருக்கும்: ‘இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியில் நக்ஸல்களின் பங்கு!’

கம்யூனிஸ்ட்டுகள் தொடர்பில் காந்தி வெவ்வேறு தருணங்களில் சொன்ன சில வார்த்தைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன: “தன்னலமற்ற, தியாக உணர்வு கொண்ட நமது சோஷலிஸ நண்பர்கள் மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு. அவர்களது முறைக்கும் எனது முறைக்கும் இருக்கும் முக்கிய வேறுபாட்டை நான் ஒருபோதும் மறைத்ததில்லை. அவர்கள் வெளிப்படையாகவே வன்முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது அடிப்படையிலேயே அது இருக்கிறது… ரஷ்யாவில் இருப்பது போன்ற கம்யூனிஸம், அதாவது மக்கள் மீது திணிக்கப்படும் கம்யூனிஸம் இந்தியாவுக்கு ஒவ்வாது. வன்முறை தவிர்த்த கம்யூனிஸத்தில் எனக்கு நன்மதிப்பு உண்டு!”

இது கம்யூனிஸ்ட்டுகள் மீதான காந்தியின் மதிப்பீடு மட்டும் அல்ல; மறைமுகமாக அவர்களுக்குச் சொன்ன வெற்றிகரமான யோசனை என்றும்கூடச் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பாதையை நோக்கியே திரும்பியது. நாடாளுமன்றத் தேர்தல் முறையை அங்கீகரித்துப் போட்டியிட்டு வென்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் என்ற பெருமையோடு, கேரளத்தில் 1957-ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் அது அமைத்த ஆட்சி ஒரு சர்வதேச வரலாற்று நிகழ்வு. இந்த மண்ணுக்கேற்றத் தன்மையுடன் இன்னும் நெகிழ்வுப்பாதையில் நாடு முழுக்க அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திருந்தால், இன்று அவர்கள் எங்கோ சென்றிருக்க முடியும். அவர்களுக்கே உரித்தான ஏராளமான தடைகளினூடே அடுத்த பத்தாண்டுகளில் முளைத்த இன்னொரு பெரும் தடை நக்ஸல் இயக்கம். ஆயுத பாணியைக் கைவிட்டவர்களிலும் சரி, ஆயுத பாணியைத் தொடர்பவர்களிலும் சரி; நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களின் அடிமனதிலிருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்றபாடில்லை. இதற்கான சாட்சியம் அவர்களுடைய மொழி. ஒருவகையில் மனதில் கொப்பளிக்கும் வன்முறையை ஆயுதங்கள் வழி கொட்ட முடியாத ஆதங்கத்தையே வார்த்தைகளின் வழி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்கூடச் சொல்ல முடியும்.

இந்த வெறுப்பைக் கக்கும் சொல்லாடலை, ‘நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மதவாத, சாதிய சக்தி’களுக்கு எதிரானதாக மட்டும் அவர்கள் கையாளவில்லை; பொதுத்தளத்தில் தங்களிடமிருந்து வேறுபட்டு, இதே எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அவர்கள் இதே சொல்லாடலின் வழியாகவே எதிர்கொண்டார்கள். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர்கள் ‘கண்ணியப் படுகொலை’ செய்தனர். வெகுஜன நோக்கில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்த ஒவ்வொரு முடிவையும் தூய்மைவாதப் பார்வையில் கேள்விக்குள்ளாக்கி, அவர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தினர். எதிரிகளும் சொல்லக் கூசும் மொழியில் ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’ என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வசை பாடினர். நக்ஸல் கலாச்சார மொழியில் சங்கரய்யாவும் நல்லகண்ணுவும்கூட ‘போலி கம்யூனிஸ்ட்டுகள்’தான்!

இந்த விமர்சனங்கள் பொதுவெளியில் இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான மதிப்பையும் தொடர்ந்து பாதித்துவந்ததோடு, அந்தக் கட்சிகளுக்குள் நெகிழ்வுத்தன்மைக்கு எதிர்ப் போக்கு உருவாகவும் வழிவகுத்தன. விளைவாக, சமரசம் எனும் சொல் தொடர்ந்து இழிவானதாகவே பார்க்கப்பட்டது. நெகிழ்வுத்தன்மை எதிர்மறையாக அணுகப்பட்டு, ‘புரட்சிகரமான’ எனும் சொல் ‘மேலும் தூய்மையான, மேலும் கறாரான, மேலும் இறுக்கமான’ என்று அணுகப்பட்டது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அரசியல் எதிரிகளின் போக்கு, அதற்கு எதிரான வியூகங்கள் தொடர்பாக விவாதித்தற்கு இணையாக தங்கள் இடையிலான உள்முரண்களை விவாதித்தே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் காலம் கழிந்திருப்பதை உணர முடியும்.

இந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான், இந்துத்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அமைப்புரீதியாகப் பெருகத் தொடங்கினார்கள். நூறாண்டுகள் நெருங்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் எங்கும் பெரிதாக உடையவில்லை; நோக்கங்கள் சார்ந்து பார்வை மாறினாலும் மைய நோக்கம் சிதறாமல் அதன் அமைப்புகள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் காலமெல்லாம் பிரிந்தும் உடைந்துமே சிதறியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, உள்மோதல்கள், குரூரத் தாக்குதல்கள். வலதுசாரிகளாவது எதிர்த்தரப்பின் மீது முத்திரை குத்துகிறார்கள். மாற்றுப் பார்வையோடு உள்ள சொந்தத் தரப்பின் மீதே முத்திரை குத்தும் கலாச்சாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எங்கிருந்து வருகிறது? இதற்கு மிக அடிப்படையான காரணம் என்ன? அதற்கும் சகிப்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதற்கும் தூய்மைவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

வன்முறையை அடிப்படையாகக்கொண்ட ஆயுத பாணி அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் சதிக் கோட்பாடு. எல்லாவற்றையுமே சதியாகப் பார்ப்பது. அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணங்கள் மீது நன்னம்பிக்கை வைக்கத் தவறுவது. உள்ளுக்குள்ளும் வெளியிலுமாக வதந்திகளையும் சதிகளையும் சதிகாரகளையும் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டே இருப்பது. ஆயுததாரி இயக்கங்களின் வரலாற்றைப் படித்தால், ஒவ்வொரு இயக்கமும் தமக்குள் கருத்து முரண்பட்ட எத்தனை பேரை திரிபுவாதிகள், துரோகிகள், எதிர்ப் புரட்சிக்காரர்கள், சதிகாரர்கள் என்று முத்திரை குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். தம் சொந்த சகோதரர்கள் மீதே தாக்குதல் தொடுக்கும் இந்த மோசமான முத்திரைக் கலாச்சாரம் எப்படியோ கம்யூனிஸ இயக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு வியாதியாக உறைந்துவிட்டது. இந்தியாவில் அந்த வியாதிக்கு இன்று அல்லும் பகலும் அயராது ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்கள் நக்ஸல் ஆதரவாளர்கள்.

இவர்கள் மறைமுகமாக கம்யூனிஸ்ட்டுகள் மீது செலுத்தும் தாக்கம் அவர்கள் வழி ஏனைய தாராளவாதக் கட்சிகளையும் பீடிக்கிறது. ஆக, வலதுசாரிகளுக்கு இணையான வெறுப்பை உமிழ இடதுசாரிகளிலும் ஆட்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தெருவில் அன்றாடம் இரவானதும் இரு மூர்க்கர்கள் நின்று கத்திக்கொண்டே இருந்தால், அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் எப்படி வெகுவிரைவில் அந்தத் தெருவிலுள்ள எல்லோரையும் தொற்றுமோ அப்படி இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த வெறிச் சொல்லாடல்கள் பொதுச் சமூகத்தையும் ஊடகங்களையும்கூட ஆக்கிரமிக்கின்றன.

நெடுவாசல் போராட்டம் நடந்த சமயம் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று வெளியிட்ட அட்டையைக் காட்டி, மகஇக பத்திரிகையான ‘புதிய ஜனநாயகம்’ அட்டையின் சாயல் அதில் வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் நண்பர். ஆச்சரியப்பட ஏதுமில்லை. பல ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் மொழிநடையில் ‘புதிய ஜனநாயகம் மொழி’ புகுந்து நெடுங்காலம் ஆகிறது!

இன்றைக்கு இடதுசாரி என்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் பல இளைஞர்கள், சமூக வலைதளத்தில் கையாளத் தேர்ந்தெடுக்கும் மொழி இந்த மொழிதான். எடுத்த எடுப்பில் ஒட்டுமொத்த அமைப்பையும் சதிகாரர்களாக முத்திரை குத்தும் மொழி.  தன் பாணியில் பேசாத எவரையும் எதிரிகள் என்று முத்திரை குத்தும் புஷ்ஷிஸ சகிப்பின்மை மொழி. தம்முடைய கருத்துக்கு முரண்படக்கூடிய எவரையும் இழிப் பிரச்சாரத்தின் வழி ‘கண்ணியப் படுகொலை’ செய்வது. வார்த்தைக்கு வார்த்தை வெறுப்பு.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை ஒரு நாயாகப் புகைப்படமாக்கி ‘புதிய ஜனநாயகம்’ அட்டையில் ஒருமுறை வெளியிட்டிருந்தது. அண்ணாவின் நூற்றாண்டைத் தமிழகம் கொண்டாடிய தருணத்தில் அவர்கள் வெளியிட்ட சிறப்புக் கட்டுரையின் தலைப்பு: அண்ணா - பிழைப்புவாதத்தின் பிதாமகன்! இதை எழுதும், இதை ரசிக்கும் ஒரு கூட்டம் சகிப்பின்மையைப் பற்றி எப்படித் தார்மிகரீதியாகப் பேச, எழுத முடியும்? வார்த்தைகள் வேறு வேறு என்றாலும் அடிப்படையில் ‘தேச விரோதி’எனும் முத்திரைக்கும் ‘முதலாளித்துவ அல்லது சங்கப்பரிவார அல்லது பார்ப்பனக் கைக்கூலி’ எனும் முத்திரைகளுக்கும் அவற்றின் அடித்தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ பொருத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மைதானே?

வெறுப்பைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. நம் காலத்தின் பெரும் சவால் அதுதான். வெறுப்பு. அதன் பின்னுள்ள சகிப்பின்மை. அதன் பின்னுள்ள தூய்மைவாதம். இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பெரிய வியாதி தூய்மைவாதம். அங்கிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. தூய்மைவாதத்தை அடிப்படைவாதத்தோடு ஒப்பிடலாமா? ஒப்பிடலாம். இந்துத்வத்தோடு ஒப்பிடலாம். வஹாபியத்தோடு ஒப்பிடலாம். தீவிரவுச்சநிலையோடு ஒப்பிடலாம். சாதியத்தோடு ஒப்பிடலாம். தீண்டாமையோடு ஒப்பிடலாம். பிராமணியத்தோடு ஒப்பிடலாம். ஹெட்கேவாருடன் ஒப்பிடலாம். சாரு மஜும்தாருடனும் ஒப்பிடலாம்!

ஐம்பதாண்டு நக்ஸல் இயக்கம் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று பரந்த பார்வையில் பார்த்தால், அவர்கள் உருவாக்கத்தில் தொடங்கி இன்று வரை முன்வைக்கும் பிரச்சினைகள், விமர்சனங்கள் பலவற்றுக்கும் ஒரு வரலாற்று நியாயம் இருக்கிறது. பெரிய அரசியல் இயக்கங்கள் முற்றிலுமாகப் புறக்கணித்த பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் மீதான அமைப்புரீதியிலான ஒடுக்குமுறைகளையும் அவர்களுடைய துயரங்களையும் நோக்கிப் பொதுச் சமூகத்தின் பார்வையையும் கரிசனத்தையும் அவர்கள் திருப்பியிருக்கிறார்கள். இது அவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை. கனிம வளச் சுரண்டல்கள், தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்கள், சாதியக் கொடுமைகள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் இன்றும் சளைக்காத பங்களிப்பை அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக அக்கறையும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க ஒரு இளைஞர் கூட்டத்தை எல்லாக் காலங்களிலும் இந்தியா உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த இயக்கங்களில் உள்ள தனிமனிதர்களின் தியாக வாழ்வும் அர்ப்பணிப்பும் நமக்கு தொடர்ந்து நிரூபித்துவருகிறது. அதே வேளையில், இந்த மண்ணில் ஒருநாளும் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் எடுபடாது, அவர்கள் தேர்தெடுத்த வழி தவறானது என்பதையும் அழுத்தந்திருத்தமாக நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்கிறது வரலாறு. அவர்களிடமுள்ள வன்முறை வெறுப்பு அரசியலால் இறுதி பலன், அதிக பலன் அடைபவர்கள் எதிர்த் தரப்பாகவே இருப்பார்கள் என்பதையும் அது அடித்துச் சொல்கிறது.

ரொம்பவும் சிக்கலான பிரச்சினை நக்ஸல்களின் அரசியல் புரிதலும் அவர்களுடைய சகிப்பின்மைக் கலாச்சாரமும். சுஜாதாவைப் படித்ததால் தன்னைத் திரிபுவாதியாக்கிவிட்டார்கள் என்று சொன்னார் ஒரு நண்பர். நான் தி.ஜானகிராமனை விதந்தோதி எழுதியதால் எதிர்ப் புரட்சிக்காரன் என்று சாடி ஒருமுறை கடிதம் வந்திருந்தது. அம்பேத்கர் பிறந்த நாளன்று ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி’ என்று அவரைப் பற்றி ஒரு மணி நேரம் புகழ்ந்து பேசிய ஒருவர் மறுநாள் “இந்தியாவின் அரசியல் அமைப்பே பார்ப்பன பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது; அது முற்று முதலாக உடைத்து நொறுக்கப்பட வேண்டியது” என்றும் இன்னொரு இடத்தில் பேசிக்கொண்டிருந்ததை ஒரு நண்பர் சொன்னார். நக்ஸல்களால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்று ஒன்று தொகுக்கப்பட்டால், அவர்கள் எந்தத் தரப்புக்காகப் பரிந்து பேசுவதாகச் சொல்கிறார்களோ அதே தரப்பு மக்கள்தான் அவர்களால் அதிகம் கொல்லப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். தண்டகாரண்யத்தில் இன்று மத்தியக் காவல் படை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் யார்? கான்ஸ்டபிள்கள் உடையில் நிற்கும் பழங்குடிகள்தானே?

வலதுசாரிகளை எதிர்த்து ஜனநாயகக் களத்தில் நிற்பவர்களிடம் நக்ஸல் ஆதரவாளர்களின் அரசியல் நேரடியாக மூன்று விதங்களில் பின்னடைவை உருவாக்கியிருக்கிறது. 1.நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் ஓட்டுப்பொறுக்கிகள் - அத்தனை அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று தேர்தல் அரசியலிலுள்ள எல்லோரையும் இழிவுபடுத்துவதன் மூலம், அரசியல் சாக்கடை எனும் கோட்பாட்டையே வேறு மொழியில் பொதுப்புத்தியில் இது கட்டமைக்கிறது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் மோசம், எதிரே நிற்பவர் மட்டும் அல்லாமல், பக்கத்தில் நிற்பவர்களும் மோசம் என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் எங்கும் புரட்சி உண்டாவதில்லை; மாறாக சாமானியர்களையும் எளிய மக்களையும் அது மேலும் மேலும் அரசியலையும் அதிகாரத்தையும் விட்டு விலக்குகிறது. 2. தம்மைத் தவிர எல்லாத் தரப்புகளையும் சாடுவது, புதிதாக அரசியல் நோக்கி வரும் இளைய தலைமுறையிடம் கருப்பு - வெள்ளை புஷ்ஷிஸ கோட்பாட்டை உருவாக்குகிறது. களத்தில் உள்ள எல்லோரையும் பொதுமைப்படுத்தும் அது “காங்கிரஸும் பாஜகவும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயிலே மண்ணு!” - வலதுசாரிகளை எதிர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒருவகையில் களத்தில் வலதுசாரிகளுக்கு எதிராக வலுவான போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக்கொள்வதுமாகிறது - “கோட்ஸேவைப் பற்றி மட்டும் அல்ல; காந்தியையும் திட்டி எழுது. ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடியைப் பற்றி மட்டும் அல்ல; காந்தி, நேரு, அண்ணா, ராகுலை இழிவுபடுத்தியும் கட்டுரைகள் போடு!” 3. நோக்கங்கள் வேறு என்றாலும், சூழலைச் சகிப்பின்மையை நோக்கித் தள்ளி, வெறுப்பின் களமாக்குவதில் சங்கப் பரிவாரங்களைப் போலவே செயல்படுவதன் வாயிலாகக் களத்தை வெறுப்புக் களமாக்கிவிடுவதால், களத்தை எதிரியின் வசமாக்கிவிடுவது. வெறுப்புதான் இரு தரப்பினருக்குமே ஆயுதம் என்றாகிவிட்டால், அதில் வலியவர் எவரோ அவரே வெல்ல முடியும் - அதுவே இன்று நடக்கிறது!

மே, 2017, ‘தி இந்து’

37 கருத்துகள்:

 1. வெறுப்புதான் இரு தரப்பினருக்குமே ஆயுதம் என்றாகிவிட்டால், அதில் வலியவர் எவரோ அவரே வெல்ல முடியும் - அதுவே இன்று நடக்கிறது!


  சரியான புரிதல்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான். ஆனால் பலமற்றவர் எந்த சூழ்நிலையிலும் ஆயுதமெடுக்க மாட்டார் அமைதியாக எதிர்வாதம் செய்து கொண்டே இருப்பார் என்றால் அவருக்கு தோல்வி மட்டுமல்ல விரைவான அழிவும் வரும்.ஒரு சமூகத்தில் அதிக அதிகாரமும் அதிக ஆதிகக்கமும் கொண்டவர்களின் பிரதிநிதிகளுக்கும்.அதிக அடக்கு முறைகளுக்கும் பாதிப்புகளுக்கம் ஆளாவோரின் பிரதி நிதிகளுக்கும் இடையிலான விவாதங்களில்/முரண் பாடுகளில் வெறப்பும் ஆயுதமும் தவிர்க்க முடியாதவை.இதில் பலவற்றவர்களின் சிறிய அளவிலான நடவடிக்கைகள் பெரிது படுத்தப் படும்.பலமானவர்களின் நடவடிக்கைகள் பெருமளவுக்கு மறைக்கப் படும். அதனாலேயே பலமானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனை மக்கள் உணரும் போது பலங்கள் மாறும், வெற்றியும் மாறும்.

   நீக்கு
  2. சரிதான். ஆனால் பலமற்றவர் எந்த சூழ்நிலையிலும் ஆயுதமெடுக்க மாட்டார் அமைதியாக எதிர்வாதம் செய்து கொண்டே இருப்பார் என்றால் அவருக்கு தோல்வி மட்டுமல்ல விரைவான அழிவும் வரும்.ஒரு சமூகத்தில் அதிக அதிகாரமும் அதிக ஆதிகக்கமும் கொண்டவர்களின் பிரதிநிதிகளுக்கும்.அதிக அடக்கு முறைகளுக்கும் பாதிப்புகளுக்கம் ஆளாவோரின் பிரதி நிதிகளுக்கும் இடையிலான விவாதங்களில்/முரண் பாடுகளில் வெறப்பும் ஆயுதமும் தவிர்க்க முடியாதவை.இதில் பலவற்றவர்களின் சிறிய அளவிலான நடவடிக்கைகள் பெரிது படுத்தப் படும்.பலமானவர்களின் நடவடிக்கைகள் பெருமளவுக்கு மறைக்கப் படும். அதனாலேயே பலமானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனை மக்கள் உணரும் போது பலங்கள் மாறும், வெற்றியும் மாறும்.

   நீக்கு
  3. சரிதான். ஆனால் பலமற்றவர் எந்த சூழ்நிலையிலும் ஆயுதமெடுக்க மாட்டார் அமைதியாக எதிர்வாதம் செய்து கொண்டே இருப்பார் என்றால் அவருக்கு தோல்வி மட்டுமல்ல விரைவான அழிவும் வரும்.ஒரு சமூகத்தில் அதிக அதிகாரமும் அதிக ஆதிகக்கமும் கொண்டவர்களின் பிரதிநிதிகளுக்கும்.அதிக அடக்கு முறைகளுக்கும் பாதிப்புகளுக்கம் ஆளாவோரின் பிரதி நிதிகளுக்கும் இடையிலான விவாதங்களில்/முரண் பாடுகளில் வெறப்பும் ஆயுதமும் தவிர்க்க முடியாதவை.இதில் பலவற்றவர்களின் சிறிய அளவிலான நடவடிக்கைகள் பெரிது படுத்தப் படும்.பலமானவர்களின் நடவடிக்கைகள் பெருமளவுக்கு மறைக்கப் படும். அதனாலேயே பலமானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனை மக்கள் உணரும் போது பலங்கள் மாறும், வெற்றியும் மாறும்.

   நீக்கு
  4. சரிதான். ஆனால் பலமற்றவர் எந்த சூழ்நிலையிலும் ஆயுதமெடுக்க மாட்டார் அமைதியாக எதிர்வாதம் செய்து கொண்டே இருப்பார் என்றால் அவருக்கு தோல்வி மட்டுமல்ல விரைவான அழிவும் வரும்.ஒரு சமூகத்தில் அதிக அதிகாரமும் அதிக ஆதிகக்கமும் கொண்டவர்களின் பிரதிநிதிகளுக்கும்.அதிக அடக்கு முறைகளுக்கும் பாதிப்புகளுக்கம் ஆளாவோரின் பிரதி நிதிகளுக்கும் இடையிலான விவாதங்களில்/முரண் பாடுகளில் வெறப்பும் ஆயுதமும் தவிர்க்க முடியாதவை.இதில் பலவற்றவர்களின் சிறிய அளவிலான நடவடிக்கைகள் பெரிது படுத்தப் படும்.பலமானவர்களின் நடவடிக்கைகள் பெருமளவுக்கு மறைக்கப் படும். அதனாலேயே பலமானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனை மக்கள் உணரும் போது பலங்கள் மாறும், வெற்றியும் மாறும்.

   நீக்கு
  5. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.

   அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன.

   ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்
   .
   கடந்த அரை நூற்றாண்டு காலமாக, அனைத்து பெருநிறுவனங்களுக்கும் தேவையான நீண்டகால மூலதனம், பங்கு (SHARES) நிதியாக்கம், கடன் பத்திரங்களின் (BOND) விற்பனை, கடன் நிதியாக்கம், மற்றும் நீண்டகால வங்கிக்கடன் ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்றது. குறைந்தகால நிதியாதாரம் அல்லது செயல்பாட்டு மூலதனம் வங்கிக்கடன் மூலம் பெறப்படுகின்றது.
   தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.

   வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.

   நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.

   உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்

   நீக்கு
 2. நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர்.

  ஆதாரம் இருக்கிறதா ஐயா?

  பதிலளிநீக்கு
 3. வார்த்தைகள் வேறு வேறு என்றாலும் அடிப்படையில் ‘தேச விரோதி’எனும் முத்திரைக்கும் ‘முதலாளித்துவ அல்லது சங்கப்பரிவார அல்லது பார்ப்பனக் கைக்கூலி’ எனும் முத்திரைகளுக்கும் அவற்றின் அடித்தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ பொருத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மைதானே? Super. this is true

  பதிலளிநீக்கு
 4. "1971-ல் ஆயுதப்போராட்டம் ஒருங்கிணைந்து 1975-ல் புரட்சி நடந்துவிடும் என்று முழங்கியவர் சாரு மஜூம்தார்" என்று ஒரு அறிவு நேர்மை இல்லாத பொய்யுடனே தொடங்குகிறது அந்தக் கட்டுரை. சாரு மஜூம்தார் எப்போது எவ்விடத்தில் அவ்வாறு குறிப்பிட்டார் என்பது சமஸ் அவர்களுக்கே வெளிச்சம். வன்முறை பயன்தாராது என்று காந்தி வழிநின்று நிறுவ முயலும் நபர்கள், காந்தியின் அகிம்சை தத்துவமே போலி என்றும், அவர் உருவாக்கிய கோட்பாட்டுக்கு அவரே நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்பது நிறுவப்பட்ட ஒன்று என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுவோம். இன்று வன்முறைக்கு மூல ஊற்றாக இருப்பதே காந்தி வழிவந்தவர்கள் உருவாக்கி நிலைப்படுத்திய இந்திய அரசுப் பொறியமைவு தான் என்பதை நினைவுபடுத்துவோம்.
  புதிய ஜனநாயகம் போன்ற நக்ஸல் ஆதரவு இதழ்களின் சொற்ப் பயன்பாடுகள் மற்ற வெகுஜன இதழ்களையும் பற்றிக் கொள்கிறது என்று கவலை கொள்ளும் இந்து நடுப்பக்க ஆசிரியரின் கண்களுக்கு சக பத்திரிக்கையான தினமலரோ, இந்து இதழின் ஏனைய பக்கங்களோ அள்ளித்தெளிக்கும் வார்த்தை விஷம் ஏனோ தெரிவதில்லை.
  அண்ணாவை பிழைப்புவாதத்தின் பிதாமகன் என்று குறிப்பிட்ட கூட்டத்துக்கு சகிப்பின்மையைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று நயமான வார்த்தைகளால் கேள்வி எழுப்புகிறார். இருக்கட்டும். சகிப்பின்மை என்பது தனக்கு பாதகமான கருத்துக்களை, உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பது. அண்ணா பிழைப்புவாதத்தின் பிதாமகன் என்பது அக்கட்டுரையில் தரவுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கே தேசதுரோகிப் பட்டமளிப்பு செய்பவனும் பு.ஜ-வும் ஒன்று, இவரது சகிப்பின்மை அளவுகோளின் படி. சகிப்பின்மை குறித்து தெளித்தல் பெற்று ஊருக்கு உபதேசம் செய்தல் நலம். போலி கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை புரட்சியை பின்னகர்த்திச் சென்றுவிட்டதாம். புரட்சி ஒன்றே இலக்கு என்று பேசுபவன் தூய்மைவாதியாம், 'ஜார்ஜ் புஷ்' கொள்கையாளனாம். தத்துவத்துக்குள் நின்று விவாதிக்க அது குறித்த தெளித்தல் வேண்டும். நடைமுறை அரசியல் குறித்து விவாதிக்கக் குறைந்தபட்சமாக சார்புத்தன்மை அற்ற சனநாயகப் பண்பு வேண்டும். இரண்டும் அற்ற Psuedo-Intellectuals தான் இன்றைய தேதியில் இதழியல் உலகின் நட்சத்திரங்கள்.
  சமஸ் தமது மார்க்சிய, கம்யூனிச அரசியல் மீதான வெறுப்புக்கு CPI, CPM கட்சியினரை இரண்டு வகையில் பயன்படுத்திக் கொள்வார். இன்றைய கட்டுரையில் நக்ஸல் அமைப்புகளின் மீது சேற்றை வாரி இறைக்க இவர்களை கம்யூனிச அரசியலுக்குள் ஜனநாயகத்தை புகுத்த வந்த தேவதூதர்கள் நிலைக்கு உயர்த்திச் சித்தரித்துள்ள சமஸ் அவர்களே கடந்த காலங்களில் மேற்குவங்க, கேரள இடதுசாரிகள் மற்ற கட்சிகள் மீது வன்முறையை பிரையோக்கிப்பதைக் கைவிட வேண்டும் ஞானோபதேசம் அளித்தவர் தான். இதைப் புரிந்து கொள்ளாமல் 'சமஸ் ஒரு இடதுசாரி, அவரை நம்பக்கம் ஈர்த்து புரட்சியாளர் ஆக்கி விடலாம்' என்ற சில தோழர்களின் மனவோட்டத்தை எண்ணும் போது எனக்கென்னவோ நேரு நினைவில் வந்து தொலைக்கிறார்.

  முகநூல் பதிவு: இராகேஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலரை புரட்சியாளர்கள் என்பதாலோ போலி கம்யூனிஸ்ட்கள் என்பதாலோ புரட்சி முன்னுக்கோ பின்னுக்கோ போய் விடாது.போலிக் கம்யூனிஸ்ட்கள் என்பதன் தாக்கததை இடதுசாரிகளின் பின்னடைவுக்கு கடைசி காரணமாக கூறிக் கொள்ளலாம்.
   சீர்திருத்த காலகட்டத்தில் எத்தனை நேருக்களும் நம்பூதிரி பாடுகளும் ஜோதிபாசுக்களும் நேருக்களும் சமஸ்களும் சாருமஜும்தார்களும் அமல்ராஜ்களும் வந்தாலும் புரட்சியும் ஒழுங்கான சோசலிசமும் வராது.
   இதனை புரிந்துக் கொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அரசியல் பொருளாதாரங்களின் அடிப்படைகளை மார்க்சீயத்தின் அடிப்படையில் புரிந்துக் கொண்டு புதிய சித்தாந்தங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி புதிய பாதைகளிவ் நடைபோட வேண்டும்.
   புதிய நிலமைகளுக்கேற்ப ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் போன்று பிற்போக்கானதாக இல்லாமல் முற்போக்கான மக்கள் அமைப்புகளை அடித்தளங்களில் படிப்படியாக உருவாக்கி வளர்க்க வேண்டும்.இதற்கு சனநாயக சக்திகளும் முற்போக்காளர்களும் புரட்சியாளர்களும் தனியாகவும் இணைந்தும் செயல்பட வேண்டும். இந்த சக்திகளின் படிப்படியான வளர்ச்சியும் இவர்களின் போராட்டங்களும் சீர்திருத்தங்களை இன்னும் விரைவாக்கும்.
   எதிர்பாராமல் புரட்சிகர சூழ்நிலை ஏற்படுமானால் மக்கள் முந்திக் கொண்டு அமைப்பு பலம் கொண்ட உண்மையான புரட்சியாளர்கள் பின் திரள்வார்கள்.
   இதனை புரிந்துக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈஈடு படாமல் சமஸ்களை விமர்சனம் செய்து கொண்டு புரட்சிக்காக காத்திருப்பது இப்போதைக்கு சுய ருப்தியளிக்கலாம்.இறுதியில் இலவு காத்த கிளி நிலை ஏற்படும்.இழப்பு சமசுக்களுக்கு அல்ல.

   நீக்கு
  2. சிலரை புரட்சியாளர்கள் என்பதாலோ போலி கம்யூனிஸ்ட்கள் என்பதாலோ புரட்சி முன்னுக்கோ பின்னுக்கோ போய் விடாது.போலிக் கம்யூனிஸ்ட்கள் என்பதன் தாக்கததை இடதுசாரிகளின் பின்னடைவுக்கு கடைசி காரணமாக கூறிக் கொள்ளலாம்.
   சீர்திருத்த காலகட்டத்தில் எத்தனை நேருக்களும் நம்பூதிரி பாடுகளும் ஜோதிபாசுக்களும் நேருக்களும் சமஸ்களும் சாருமஜும்தார்களும் அமல்ராஜ்களும் வந்தாலும் புரட்சியும் ஒழுங்கான சோசலிசமும் வராது.
   இதனை புரிந்துக் கொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அரசியல் பொருளாதாரங்களின் அடிப்படைகளை மார்க்சீயத்தின் அடிப்படையில் புரிந்துக் கொண்டு புதிய சித்தாந்தங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி புதிய பாதைகளிவ் நடைபோட வேண்டும்.
   புதிய நிலமைகளுக்கேற்ப ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் போன்று பிற்போக்கானதாக இல்லாமல் முற்போக்கான மக்கள் அமைப்புகளை அடித்தளங்களில் படிப்படியாக உருவாக்கி வளர்க்க வேண்டும்.இதற்கு சனநாயக சக்திகளும் முற்போக்காளர்களும் புரட்சியாளர்களும் தனியாகவும் இணைந்தும் செயல்பட வேண்டும். இந்த சக்திகளின் படிப்படியான வளர்ச்சியும் இவர்களின் போராட்டங்களும் சீர்திருத்தங்களை இன்னும் விரைவாக்கும்.
   எதிர்பாராமல் புரட்சிகர சூழ்நிலை ஏற்படுமானால் மக்கள் முந்திக் கொண்டு அமைப்பு பலம் கொண்ட உண்மையான புரட்சியாளர்கள் பின் திரள்வார்கள்.
   இதனை புரிந்துக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈஈடு படாமல் சமஸ்களை விமர்சனம் செய்து கொண்டு புரட்சிக்காக காத்திருப்பது இப்போதைக்கு சுய ருப்தியளிக்கலாம்.இறுதியில் இலவு காத்த கிளி நிலை ஏற்படும்.இழப்பு சமசுக்களுக்கு அல்ல.

   நீக்கு
 5. ஜனநாயக அரசியலில் மக்கள் கவனத்தை ஈர்க்க எதிர்தரப்பை முத்திரை குத்தும் அரசியல் உலகமெங்கும் உள்ளதே. உ-ம் அமெரிக்க, ஃப்ரான்சு அதிபர் தேர்தல்கள். அதையும், ஜனநாயகத்தையே ஒழிக்க ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த நக்சல்களையும் எவ்வாறு ஓரே தளத்தில் பார்க்கமுடியும்? ஜனநாயகக் கோட்பாடுகளை ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு இயக்கம் பின்பற்றி இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

  இரண்டாவதாக வெறுப்பரசியல், முத்திரை குத்துதல் இந்தியாவில், தமிழகத்தில், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இல்லையா என்ன? இதில் 70 களில் உருவான நக்சல்களை இழுப்பதற்கு என்ன அவசியம்?

  மூன்றாவதாக, முத்திரை குத்துதல் என்பது படிமங்களை உருவாக்கி தங்கள் கருத்துகளை மக்களின் மனதில் பதியவைக்கும் ஒரு யுக்தி. அரசியல் முழக்கங்களைப் போல. ஜனநாயகம் என்பது கொள்கைகளின் போராட்டம் மட்டுமல்ல, அவற்றிற்கு மக்களின் ஆதரவைத் திரட்டவேண்டிய அவசியமும் கூட. அதற்கு இவை தேவை. ஆனால் அனைத்து தரப்பின்ருக்கும் இந்த உரிமை உள்ளதே ஜனநாயகத்தின் மாண்பு.

  பா ராஜேந்திரன்

  பதிலளிநீக்கு
 6. //ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடியைப் பற்றி மட்டும் அல்ல; காந்தி, நேரு, அண்ணா, ராகுலை இழிவுபடுத்தியும் கட்டுரைகள் போடு//

  ஆனால் 'ஹெட்கேவார், சாவர்க்கர், அத்வானி, மோடி' இவர்களை கேவலமாக திட்டி எழுதினால் அது மட்டும் ஜனநாயகம் ஆகிவிடுமா? நக்சல்வாதிகள் எப்படி பேசுகிறார்களோ அப்படியே நீங்களும் பேசுவது வருத்தத்திற்கு உரியது. நீங்கள் இந்த கமெண்ட்டை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அதிகமாக பேச விரும்பவில்லை...எங்கே, சகிப்புதன்மை இல்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது...

  தத்துவக்கோட்பாட்டில் மேம்போக்காக சுண்ணாம்பு தடவ ஆசிரியருக்கு இவ்வளவு வார்த்தைகள் அவசியம் தேவைப்பட்டிருக்க வேண்டாமே..

  தேசவிரோதி என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் இடத்திற்கும்,முதலாளித்துவம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் இடத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை முதலில் விளங்கிகொள்வது சிறந்தது.

  ஆதாரமற்ற பழிசொல்லலுக்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் அர்த்தம் யாரால் எப்படி உள்வாங்கப்படுகிறது என்பது முக்கியம்...

  விமர்சனம் என்பது அனைவரின் மீதும் எழுப்பப்படுவது...பெரும் தலைவர் என்பதால் மட்டும் ஒருவரை நம்ப வேண்டிய அவசியம் என்ன?

  நீங்கள் தலைகளைப் பார்க்காமல் அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையான கொள்கை தத்துவங்களை நோக்கலாமே...

  காந்தியின் மீதும் விமர்சனம் வரும்...வரக்கூடதென்றால் இங்கே என்ன அரசியல் நெறியாழுகை பார்வை உள்ளது?

  நீங்களே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ...இடதுசாரி-சமஷ் இடையேயான கருத்து ஆட்டம் உங்களையும் ஒரு வெறுப்பு பார்வைக்குள் தான் தள்ளியுள்ளது...

  வலதுசாரியும் இடதுசாரியும் ஒன்றல்ல...காந்தியின் அகிம்சை மட்டும் தான் சுதந்திரத்திற்கு காரணம் என்பது எவ்வளவு அபத்தமோ...அதைப் போன்றது...இடதுசாரியின் மீதான இந்த கட்டுரையின் விளக்கம்...


  பதிலளிநீக்கு
 8. இன்று சமஸ் அற்புதமாக தமிழ் இந்துவில் கட்டுரையாக வடித்திருக்கிறார் இதற்க்கும் எதிர்வினை மிக பயங்கரமாக தான் இருக்க போகிறது. கம்யூனிசம் இன்று! வெறுப்பரசியலில் நக்சல்களில் பங்கு என்ன? ஏன் கம்யுனிஸ்டுகள் மட்டும் உடைகிறார்கள்? போன்றவற்றின் ஊடே பலத்த கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ஜூன் மாதம் புதிய ஜனநாயத்தையும் இம்மாத வினவு தளத்தையும் ஆவலோடு எதிர் நோக்கி உள்ளேன்

  பதிலளிநீக்கு
 9. தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்... இவர்கள் எக்காலத்தையும் உணராதவர்கள்

  பதிலளிநீக்கு
 10. தற்போது ஒரே ஓரு கேள்வி மட்டும் எழுகிறது?
  சகிப்புதன்மை என்பது எது? எதை படிக்க வேண்டும், உண்ண வேண்டும், ஏன் யாரை திருமணம் செய்ய வேண்டும், திருமணம் செய்ததவனோடு இப்படி தான் வாழ வேண்டும் என சொல்லுவதற்கு என்ன பெயர்? சகிப்புதன்மையா?

  பதிலளிநீக்கு
 11. தற்போது ஒரே ஓரு கேள்வி மட்டும் எழுகிறது?
  சகிப்புதன்மை என்பது எது? எதை படிக்க வேண்டும், உண்ண வேண்டும், ஏன் யாரை திருமணம் செய்ய வேண்டும், திருமணம் செய்ததவனோடு இப்படி தான் வாழ வேண்டும் என சொல்லுவதற்கு என்ன பெயர்? சகிப்புதன்மையா?

  பதிலளிநீக்கு

 12. சமஸ் சொல்லும் “வெறுப்பு அரசியல்” என்பதை எப்படி புரிந்து கொள்வது. இந்த அரசின் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவும் இன்னொரு பிரிவின் மீதும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இன்னொரு பிரிவின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை நக்சால்பாரி அரசியலை முன்னிறுத்துபவர்கள் (மகஇக, புதிய ஜனநாயகம், மக்கள் அதிகாரம்) தொகுத்துச் சொல்கிறார்கள். இரண்டாவதாக, இந்த நாட்டின் ஏழை உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் போது இந்த ஆட்சியாளர்கள் மீது அவர்கள் உமிழும் கோபத்தை (வெறுப்பை) தொகுத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியெல்லாம், நடப்பதற்கு காரணம், இந்த அரசுக் கட்டமைப்பு ஆளத் தகுதியிழந்துவிட்டது என்பதையும், 1947 முதல் இந்த அரசுக் கட்டமைப்பு சொல்லிவந்த ‘நடுநிலை’யை இனியும் சொல்லிக்கொள்ள தயாராக இல்லையும் சிறு மக்கள் சேவை கூட செய்வதற்கு இது தகுதியிழந்துவிட்டது என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

  தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, பொதுத்துறைகள் தனியார்மயம், நீர்நிலைகளை அழிப்பது (குளத்தை மூடிதான் பஸ்ஸ்டாண்ட் கட்டுவது என்பது இந்தியா முழுவதும் உள்ள பொதுவிதி), இயற்கையை அழிப்பது, சுற்றுச்சூழலை அழிப்பது, வேலையின்மையை உருவாக்குவது, காண்ட்ராக்ட் முறையை எல்லா இடங்களிலும் திணிப்பது போன்றவை சட்டபூர்வமாகவே கொண்டுவரப்படுகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே பல முக்கியமான (ஆதார் போன்றவை உட்பட) தீர்மானங்கள் பண மசோதாக்களாகக் (தமிழக அரசு 110 விதியின் கீழ் நிறைவேற்றுவது போல) கொண்டு நிறைவேற்றப்படுகின்றன; நாடாளுமன்ற விவாதங்களிலேயே பிரதமர் பெரும்பாலும் பங்கேற்கபதில்லை போன்றவை எல்லாம் இந்த நாடாளுமன்றமுறையே காலாவதியாகிவிட்டதன் தெளிவான வெளிப்படு என்பதை மக்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

  ஊழலை ஒழிக்கும் பா.ஜ.கவின் திட்டமெல்லாம் தனது எதிர்க்கட்சிகளை அடக்குவதும், அவற்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் தான் என்பதை எல்லா நடுநிலையாளர்களும் சொல்கிறார்கள். ஊழலை ஒழிக்க இவை பயன்படாது என்பதையும் சொல்கிறார்கள். இதனை நக்சல்பாரிகள் சொல்லும் போது அது சமசுக்கு
  “வெறுப்பு அரசியலாக” தெரிகிறது. சமஸ் அவர்களின் வெறுப்பு எதன் மீது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

  இனியும் இந்த அரசுக் கட்டமைப்புக்குள் தீர்வு தேடமுடியாது என்று ம.க.இ.க.வும் மக்கள் அதிகாரமும் சொல்கிறார்கள். ஆமாம், மன்மோகன் அரசும், மோடி அரசும் பழங்குடியினரை மாவோயிஸ்டுகள் என்று சொல்கின்றன. அநீதியை எதிர்த்துக் கேட்பவர்களை நீ என்ன நக்சலைட்டா (அப்பா திரைப்படத்தில் வருவது போல) என்று கேட்கின்றனர் சுரண்டலாளர்கள். சமஸ் போன்றவர்களுக்கு மக.இ.க. பேசுவது வெறுப்பு அரசியலாக தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 13. **
  சமஸின் கட்டுரையில் ஒரு கேள்வி கேட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். உடையாமல் வளர்ந்து வந்துள்ளது. நக்சல்பாரி அரசியலை முன்னிறுத்துபவர்கள் பல குழுக்களாக உடைந்து வருகிறார்கள் என்று. இது முற்றிலும் பொய்யான கூற்று. கம்யூனிசக் கொள்கையை உறுதியாக பின்பற்றுபவர்கள் தொடர்ந்து வளர்ந்துதான் வருகின்றனர். அவர் தமிழகத்தில் குறிப்பிட்டு கூறியுள்ள ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் அதிகாரம் மக்கள் நம்பிக்கையை பெற்று வந்துள்ளன. இதுதான் மாற்று அரசியல் என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். உண்மையான மாற்று அரசியலைப் பார்க்கும் போது சமஸுக்கு வெறுப்பு அரசியலாக தெரிவிதலில் வியப்பில்லை.

  பதிலளிநீக்கு
 14. இ.எம்.எஸ் போன்றவர்கள் முன்வைத்த தேர்தல் அரசியல் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று சமஸ் குறிப்பிட்டுள்ளார். நன்றி! வசிஸ்டரின் வாயால் விசுவாமித்திரர் பட்டம் பெற்றவர்கள் மகிழட்டும். மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று எங்கே கரைந்து நிற்கிறது என்று கேரள அரசியலை சற்று நினைவில் வைத்திருப்பவர்களுக்கு தெரியும். முல்லைபெரியாறு, சிறுவாணி நீரை தமிழகத்திற்கு மறுப்பது, முண்ணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு போராட்டத்திற்கு துரோகமிழைத்தது, ஊழலில் எல்லா அமைச்சர்களும் மூழ்கியிருப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, பாலியல் குற்றச்சாட்டுகள், சக தோழமை இயக்கத்தினரைக் காண்ட்ராக்ட், கமிசனுக்காக வெட்டி வீழ்த்துவது, அதனையே பெருமையாக மேடையில் முழங்குவது.... மேற்குவங்கத்தில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் மண்ணைக் கவ்வி விட்டதால் சமஸ் அந்த மாநிலத்தை உதாரணமாகக் காட்டவில்லை. இருப்பினும் சிங்கூர், நந்திகிராம், மிதினாபூர் போன்ற இடங்களில் நடந்தவையும் தொடர்ந்து மண்ணுக்கேற்ற மார்க்சிஸ்டுகள் பாசிஸ்ட் மம்தாவிடமே வீழ்ந்ததும், தொடர்ந்து வீழ்ந்து வருவதும் தான் வரலாறு.

  ஆகையால் தேர்தல் அரசியலை முன்னெடுத்துச் செல்வதால் அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சிஸ்டுகள் ஆகவில்லை. மார்க்சியம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைக் கெடுத்துள்ளனர். ரொம்ப தூரம் போக வேண்டாம் சமஸ் அவர்களே, கீழத்தஞ்சை மாவட்டத்தில் உங்களுடைய இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிஸ்டுகள்தான் மக்களின் எதிரிகளாக வளம் வருகின்றனர்.


  வன்முறை பற்றி சமஸ் அவர்கள் கூறுகிறார். டாஸ்மாக் எதிராக நேரடியாக களத்தில் இறங்கி போராடும் பெண்களிடம் போய் சமஸ் சொல்லப்போவதில்லை, அவர்கள் யாரும் சமஸ் கட்டுரையைப் படிக்கப்போவதுமில்லை. இனி என்ன தைரியமாக எது வன்முறை என்று சமஸ் எழுதிக் கொண்டே இருக்கலாம்.

  நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்களின் அடிமனதில் இருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்ற பாடில்லை என்று சமஸ் கூறியுள்ளார். இரண்டு வன்முறைகள் இருப்பதை அவர் மறந்துவிடுகிறார். கம்யூனிஸ்டுகள் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை, அவருக்குப் பிடித்தமான மண்ணுக்கேற்ற மார்க்சிஸ்டுகளின் திரைப்படங்களில் சொல்லக் கேட்டிருக்க மாட்டாரா என்ன? இருப்பினும் இவ்வாறு சமஸ் பேசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

  ஆம், வன்முறை மகஇகவினரிடம் மட்டுமல்ல, நீட் தேர்வு எழுத சென்ற ஒவ்வொரு மாணவிகளின் பெற்றோர் மனதிலும் வன்முறை எழுந்துவிட்டது, அது எதிர் வன்முறை. சமஸ் எதிர் வன்முறையை வன்முறை என்று சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது

  பதிலளிநீக்கு
 15. நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களின் அடிமனதிலிருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்றபாடில்லை. இதற்கான சாட்சியம் அவர்களுடைய மொழி. ஒருவகையில் மனதில் கொப்பளிக்கும் வன்முறையை ஆயுதங்கள் வழி கொட்ட முடியாத ஆதங்கத்தையே வார்த்தைகளின் வழி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்கூடச் சொல்ல முடியும்.

  இந்த வெறுப்பைக் கக்கும் சொல்லாடலை, ‘நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மதவாத, சாதிய சக்தி’களுக்கு எதிரானதாக மட்டும் அவர்கள் கையாளவில்லை; பொதுத்தளத்தில் தங்களிடமிருந்து வேறுபட்டு, இதே எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அவர்கள் இதே சொல்லாடலின் வழியாகவே எதிர்கொண்டார்கள்
  #திருவாளர்_சமஸ்....../////
  ////////
  ///////

  எங்கேயோ ஒரு ம.க.இ.க தோழர்ட்ட வகைதொகையா வாங்கி கட்டி இருக்கார் சமஸ்.
  அது கட்டுரை முழுக்க எதிரொலிக்கிறது

  பதிலளிநீக்கு
 16. நக்ஸல் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களின் அடிமனதிலிருந்து இன்னும் வன்முறை மட்டும் அகன்றபாடில்லை. இதற்கான சாட்சியம் அவர்களுடைய மொழி. ஒருவகையில் மனதில் கொப்பளிக்கும் வன்முறையை ஆயுதங்கள் வழி கொட்ட முடியாத ஆதங்கத்தையே வார்த்தைகளின் வழி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்கூடச் சொல்ல முடியும்.

  இந்த வெறுப்பைக் கக்கும் சொல்லாடலை, ‘நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, மதவாத, சாதிய சக்தி’களுக்கு எதிரானதாக மட்டும் அவர்கள் கையாளவில்லை; பொதுத்தளத்தில் தங்களிடமிருந்து வேறுபட்டு, இதே எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அவர்கள் இதே சொல்லாடலின் வழியாகவே எதிர்கொண்டார்கள்
  #திருவாளர்_சமஸ்....../////
  ////////
  ///////

  எங்கேயோ ஒரு ம.க.இ.க தோழர்ட்ட வகைதொகையா வாங்கி கட்டி இருக்கார் சமஸ்.
  அது கட்டுரை முழுக்க எதிரொலிக்கிறது

  பதிலளிநீக்கு
 17. வெறுப்பரசியல் என்பது மக்களிடையே விதைக்கப்படுவதே.... அதற்கு காவிகளிடமும்
  சாதி ஆதிக்கவாதிகளுடனும் மல்லுக்கட்டனும் சமஸ்ஜீ...

  ஆளும் வர்க்கங்களுக்கும் ஆளும்வர்க்க கட்சிகளுக்கும் எதிராக வெறுப்பு உமிழப் படுகிறதென்றால் அது வர்க்க வெறுப்பு
  அதுதான் அரசியல்


  பதிலளிநீக்கு
 18. காவிரி பிரச்சனை: சமஸ் சாப்பிடுவது சோறா? கழிவா? என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம். , வினவு வெளியிட்ட கட்டுரைக்கு நேர்மையாக பரிசீலிக்க துப்பில்லாத சமஸ் தான் சகிப்பின்மையை பற்றி பாடம் எடுக்கிறார். - AganeeS

  பதிலளிநீக்கு
 19. நாடு முழுவதும் காவி பயங்கரவாதிகள் நடத்தி வரும் கொலைவெறியாட்டம் சமஸின் கண்ணுக்கு தெரியவில்லை என்றில்லை. தெரிந்து தான் மறைத்தார். இந்து என்ற பெயரில் ஏராளமான அப்பாவி இந்துக்களை கொன்ற காவிகளின் புழுதி சமஸின் கண்ணை மறைத்துவிட்டதேனோ?ஆனால் நக்சல்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்களைத் தான் கொன்றார்களாம். காவி பாசம் நக்சல்பாரிகளுக்கு எதிராக திரும்புகிறது. _ AganeeS

  பதிலளிநீக்கு
 20. நாடு முழுவதும் காவி பயங்கரவாதிகள் நடத்தி வரும் கொலைவெறியாட்டம் சமஸின் கண்ணுக்கு தெரியவில்லை என்றில்லை. தெரிந்து தான் மறைத்தார். இந்து என்ற பெயரில் ஏராளமான அப்பாவி இந்துக்களை கொன்ற காவிகளின் புழுதி சமஸின் கண்ணை மறைத்துவிட்டதேனோ?ஆனால் நக்சல்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்களைத் தான் கொன்றார்களாம். காவி பாசம் நக்சல்பாரிகளுக்கு எதிராக திரும்புகிறது. _ AganeeS

  பதிலளிநீக்கு
 21. நாடு முழுவதும் காவி பயங்கரவாதிகள் நடத்தி வரும் கொலைவெறியாட்டம் சமஸின் கண்ணுக்கு தெரியவில்லை என்றில்லை. தெரிந்து தான் மறைத்தார். இந்து என்ற பெயரில் ஏராளமான அப்பாவி இந்துக்களை கொன்ற காவிகளின் புழுதி சமஸின் கண்ணை மறைத்துவிட்டதேனோ?ஆனால் நக்சல்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்களைத் தான் கொன்றார்களாம். காவி பாசம் நக்சல்பாரிகளுக்கு எதிராக திரும்புகிறது. _ AganeeS

  பதிலளிநீக்கு
 22. நாடு முழுவதும் காவி பயங்கரவாதிகள் நடத்தி வரும் கொலைவெறியாட்டம் சமஸின் கண்ணுக்கு தெரியவில்லை என்றில்லை. தெரிந்து தான் மறைத்தார். இந்து என்ற பெயரில் ஏராளமான அப்பாவி இந்துக்களை கொன்ற காவிகளின் புழுதி சமஸின் கண்ணை மறைத்துவிட்டதேனோ?ஆனால் நக்சல்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்களைத் தான் கொன்றார்களாம். காவி பாசம் நக்சல்பாரிகளுக்கு எதிராக திரும்புகிறது. _ AganeeS

  பதிலளிநீக்கு
 23. சமஸ் என்ற அறிவு ஜீவி எந்த வர்கத்தின் வளர்ப்பு பிரயாணியோ அந்த வர்கத்து ஏற்றார் போல் ஊழையிடுவதில் தவறில்லையே? எஜமான விசுவாசத்தை குறை கூறுவது தவறன்றோ? ஆளும் வர்கத்தின் கால் நக்க ஏதுவான விசுவாசம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் சார் நீங்க ஒண்ணாம் கிளாஸ் புள்ளைக்கு கல்லூரி பாடத்தை கொடுத்தால் என்ன செய்வீங்க:).

   நீக்கு
 24. கல்கத்தா வீதிகளில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த 1000க்கணக்கான நக்சல்பாரி வழி நின்ற இளங்கம்யூனிஸ்டுகளின் இரத்தக் கறை படிந்த CPIM ன் வரலாற்றுப் பக்கங்களின் தொடர்ச்சியாக நந்திகிராமின் விவசாயிகளின் இரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள் படித்துப் பார்த்து அதன் மொழி புரிந்தால் சொல்லுங்கள் சமஸ்ஜீ... திருத்தல்வாதமா புரட்சிகர கம்யூனிஸமா ?

  பதிலளிநீக்கு
 25. நக்சல்பாரிகளின் வெறுப்பு அரசியலுக்கு சகிப்பின்மைதான் காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தி இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்க கட்டுரையாளர், திரு.சமஸ்.

  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
  சகிப்புதன்மை இல்லாத காரணத்தால் போராடிய கோடிஸ்வரர் வ.உ.சிதம்பரம் கடைசி காலத்தில் சோத்துக்கு வழியில்லாமல் இறந்தார்.

  ஜாலியன்வாலாபாக் படுகொலையை சகித்துக் கொள்ள முடியாத பகத்சிங் தூக்கில் தொங்கவிடப்பட்டார்.

  சகிப்புத்தன்மையுடன் இருந்ததால் தேசத்தந்தை காந்தியார் பிர்லா மாளிகையில் எளிமையாக வாழ்ந்தார்.

  காந்தியவாதியான நீங்க சொல்லுங்க சகிப்புடன் வாழத் தெரியாத வ.உ.சி, பகத்சிங் இறந்து போனார்களா?... சமஸ்

  இந்திய ஜனநாயத்தின், சட்டத்தின் 70 ஆண்டு கால ஆட்சியில் அற்பக்கூலி மட்டும் வாங்கிக் கொண்டு அம்பானி, அதானியை உலக பணக்காரர்களாக உயர்த்தியுள்ளது, சகிப்புத்தன்மை இல்லையா?...சமஸ்.

  நெடு வாசலில் போராடும் மக்களை தேசதுரோகிகள் என்று BJP - H. ராஜா பேசுவதற்கும்

  போராடும் விவசாயிகளிடம் பேச மறுக்கும் RSS மோடியை புதிய ஜனநாயகம் தேசதுரோகி என்று எழுதியதற்கும் வித்தியாசம் புரியவில்லையா?...சமஸ்

  நாட்டின் அதிகாரத்தை கைபற்ற RSS இந்துத்துவாதிகள் கையாளும் கொலை, சாதி - மதக்கலவரம், வதந்தி... இந்த தந்திரங்களுக்கும்

  மக்களின் உரிமைகளுக்காக இரவு, பகல் பாராமல் போராடும் நக்சல் வாதிகளுக்கும் வித்தியாசம் உணர முடியவில்லையா?...சமஸ்

  RSS - இந்துத்துவாவினர் வளர்ந்து விட்டார்கள் என்கிறீர்களே?...சமஸ்.

  ஆட்சி பீடத்தில் நுழைந்து இரண்டாண்டுகளில் RSS மோடி அமர்ந்து 11 லட்சம் கோடிக்கு கார்ப்பரேட் சலுகை காட்டியுள்ளாரே ... சமஸ்

  உலகமயத்தால் பன்னாட்டு கிறிஸ்தவ முதலாளிகளும் இந்து ராஷ்டிரத்தை கொள்ளையடிப்பதற்கு பாதுகாப்பு தானே தருகிறார்கள்... சமஸ்

  அதிகாரத்தை கைபற்ற
  பாபர் மசூதியை இடித்தார்கள்,
  கோத்தாராவில் இரண்டாயிரம் முஸ்லீம்கள் கொலை - ஐந்தாயிரம் பெண்கள் கற்பழிப்பு செய்தார்கள்.

  ராமர் கோவில் -பசு மாடு , முஸ்லிம் எதிர்ப்பு - தலித் எதிர்ப்பு இப்படி கார்ப்பரேட் சுரண்டலை மறைக்க அரசியல் செய்தால் கார்ப்பரேட்கள் வளர்த்து விட மாட்டார்களா? ... சமஸ்.

  அதிகாரத்தை கைபற்றியவுடன் கல்வியில், வரலாற்றில் கலப்படம் செய்வது வெறுப்பு அரசியல் இல்லையா?...சமஸ்.

  வரலாறு நெடுகிலும் பிராமண எதிர்ப்பு பேசும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மண் மீதும் ஆத்திரம் கொண்டு இந்தி திணிப்பு , நீட் தேர்வு திணிப்பது, கீழடி ஆய்வை மண் போட்டு மூடுவது வெறுப்பு அரசியல் இல்லையா?...சமஸ்.

  ஆட்டோமொபைல்ஸ், டெக்டெயில் ஸ், அக்ரிகல்சர், இயற்வளங்கள் அனைத்தும் கார்ப்பரேட் கையில்...

  ஓட்டுரிமையும் வறுமையும் நாட்டின் பெரும் மக்களின் கையில்...

  இந்த நாட்டை விற்றது, பாகிஸ்தான் அல்ல... சமஸ்
  சங்கரய்யா, நல்லக்கண்ணு பங்கேற்கும் இந்த நாடாளுமன்ற - ஓட்டு சீட்டு அரசியல் பாதை தானே?... சமஸ்

  இந்த நாடாளுமன்றத்திற்கு எதிராக போராடுவெறுப்பு அரசியலா?...சமஸ்

  தொழில் இழந்து, வேலை கிடைக்காமல் நாடோடியாக சுற்றித் திரியும் இளைஞர்களிடம் பேசுங்கள் ... சமஸ்.

  டாஸ்மாக்கினால் தாலி அறுத்த பெண்ணிடம் பேசுங்கள்... சமஸ்

  புராணக் கதை -சினிமா-டிவி ஆபாசத்தால் பெண்கள் பாதுகாப்பற்ற இந்த நாட்டின் பெண்களிடம் பேசுங்கள்... சமஸ்.

  அதன் பிறகு மக்கள் மொழி என்ன
  மகஇக,புதிய ஜனநாயத்தின் மொழி என்ன என்பதை தெரிந்து கொண்டு எழுதுங்கள்,பேசுங்கள்... சமஸ். – தோழர் பரசுராமன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக அருமையான பதிவு தோழரே. ஆனால் நம்மிடம் உள்ள ஒரு குறை என்ன என்பதையும் நன் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் யாருக்காக எதற்காக போராடுகிறோம், குரல் கொடுக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும். புரிய வேண்டும். நாம் யாருக்காக போராடுகிறோமோ அவர்களே நம்மை ஒருவித பயத்துடன் நோக்கினால், நாம் எங்கோ தவறிழைக்கிறோம் என்று தானே அர்த்தம். நாம் தோற்ற இடம் அதுதான். நம்மை அந்த நிலைக்கு கொண்டு சென்றது வெறுப்பரசியல். நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம்.

   நீக்கு
 26. samas ஓர் பன்முகப்பட்ட பார்வை கொண்ட எழுத்தாளர். அவர் கொள்கை பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. ஓர் விடயத்தை பார்க்கும் அவரது கோணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விமர்சனங்கள் மூலம் அவருக்கு நிறைய முத்திரைகள் வரலாம். அதுவும் விமர்சனங்களை வைப்பவர்களின் பார்வையாகவே நான் பார்க்கிறேன். அதில் தப்பு கூற முடியாது. ஆனால் ஓர் பன்முகப்பட்ட பார்வையாளனால் எல்லோருடனும் பொருந்திப் போக முடியாது. அந்த நேரத்தில் அவரின் பார்வை எப்படி தோன்றுகிறதோ அதையே அவர் பிரதிபலிப்பார். தனியே ஓர் குறிக்கோள் தனியே ஓர் கொள்கை என வாதிடும் சில மனிதர்களுக்கு அவர் தப்பானவராக தோன்றலாம். ஆனால் அவரை நான் வேறு கோணத்திலேயே பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்,
  என் பெயர் மரியன் சேவிக்,
   இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
   நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
  நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
  ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
  ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
   .
   பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
  உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
   உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
  தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு