முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன அமெரிக்க நிதி நிறுவனங்கள். 1929, 1984-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியைவிடவும் இந்தச் சூழல் மோசமானது என்கின்றனர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள். அடுத்தடுத்து நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் திவாலாவதும் நெருக்கடியில் சிக்கித் திணறுவதும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
ஆட்டம் காணும் அடித்தளம்
தமிழக தொடக்கக் கல்வியில் ஒரு பிரளயமே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அரசோ முக்கியமான ஒரு பிரச்னையை மிக அலட்சியமாகக் கையாண்டுக்கொண்டிருக்கிறது. நிகழாண்டில் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. மாறாக, தனியார் பள்ளிகளிலோ சேர்க்கை நிரம்பி வழிகிறது என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அரசுப் பள்ளிகளில் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்வழிக்கற்றல் முறையே இதற்குக் காரணம் என்று கூறும் ஆசிரியர் சங்கங்கள் சமச்சீர் கல்விமுறையை அமலாக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
தீர்க்க முடியாததல்ல மின் பிரச்னை
தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை மேலும் நிலைமையை மோசமானதாக்குகிறது. அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது. இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை. பிரச்னையை நேர்மையாகக் கையாளும் மனமிருந்தால் அடுத்த கோடைக்குள் நிலைமையை ஓரளவு சீரமைக்கலாம். சில தீர்வுகள்.
இயந்திரமயமாதல்
எல்லாவற்றையும் இயந்திரமயமாக்கி வருகிறோம். இப்போதோ நமது பார்வையே இயந்திரமயமாகிவிட்டது. சக மனிதர்களையும் மனித வாழ்வையும் இயந்திரமயத்திலிருந்துப் பிரித்துப் பார்க்க அதற்குத் தெரியவில்லை. என்ன செய்வது? எல்லாக் கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியதுதான்!
இருண்ட காலம்
கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரபூர்வ மின்வெட்டுடன் முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்திவருகிறது மின் வாரியம். பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் எப்போது மின்சார விநியோகம் இருக்கும் எப்போது நிறுத்தப்படும் என்பது யாருக்குமே புரியாத ஒன்றாக மாறிவிட்டது.பாகிஸ்தான் சொல்லும் சேதி என்ன?
"தேசம் தற்கொலை செய்துகொள்வதுபோல் இருக்கிறது''-முஷாரப் சொன்னது. யாரிடமிருந்து எப்படியொரு வாக்கியம்! வரலாற்று முரண் என்பது இதுதான் போலும். ஆனால், பாகிஸ்தானின் இன்றைய நிலையை அப்படியே சொல்லிவிட இந்த வாக்கியத்தைவிடவும் பொருத்தமான வாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.
இழக்கப்போகும் இறையாண்மை
ஒரு நாட்டுக்கு அணுசக்தி தேவையா இல்லையா என்பதில் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் விஷயங்களில் ஒரு நல்ல குடிமகனுக்கு எதிர்ப்பைத் தவிர வேறு கருத்துகள் இருக்கும் என்று தோன்றவில்லை.
எது மேம்பாடு?
தஞ்சாவூரின் கௌரவமான அடையாளங்களில் ஒன்று ரயில் நிலையம். இங்குள்ள தனித்தன்மை மிக்க கட்டடங்களுல் இந்த ரயில் நிலையமும் ஒன்று. ஆனால், இப்போது அதற்கு ஓர் ஆபத்து நேர்ந்திருக்கிறது.
மேம்பாட்டுப் பணி என்ற பெயரில் ரயில் நிலைய வளாகத்திலுள்ள பழமையான கட்டடங்களை இடித்துத் தள்ளியிருப்பதுடன் புதிய கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல அபத்தங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். நடைமேடையில் மழைநீரை உள்வாங்கிக்கொள்ளும் அமைப்பைத் தகர்த்துவிட்டு வழுக்கும் தன்மைகொண்ட 'மார்பிள்' கற்களைப் பதிக்கிறார்கள். கடினமான சரக்குகளைக் கையாளும் கருங்கல் பதித்த தளத்தை, எளிதில்ப் பதில், அதைவிட மெல்லிய இரும்புக் கூரை; கழிப்பறைகளுக்கு முட்டை ஓடு போன்ற 'பிளாஸ்டிக்' கதவுகள்; மேற்கூரையே இல்லாத இடங்களில் மின்னணு அறிவிப்புப் பலகைகள் என்று இந்த அபத்தங்களுக்கு எல்லையே இல்லை. தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் இன்று இந்த ஆபத்தைச் சந்தித்திருக்கின்றன; சகித்துக்கொள்ள முடியவில்லை.
சேவையின் பெயரால் ஒரு பயங்கரவாதம்
உலகில் எந்த மருத்துவர்களுக்கும் இல்லாத சிறப்பு இந்திய மருத்துவர்களுக்கு உண்டு. இங்குதான் கடவுளுக்கு அடுத்த நிலையில் மருத்துவர்கள் நம்பப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். அதனாலேயே விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் அப்பாற்பட்ட அமைப்பாக பெரும்பாலும் மருத்துவச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் காலவதியாதியாகும் காலம் இது.
குழந்தைகளைக் கடத்துவோரிடம் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளின் உறுப்புகளைத் துண்டித்து அவர்களை முடமாக்குவது, உடல் உறுப்புகளைத் திருடுவது, இறந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பது... இன்னும் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் செய்து பார்த்துவிட்டார்கள் இந்திய மருத்துவர்கள். இவையெல்லாம் எங்கோ, யாருக்கோ, எப்போதோ நடக்கக் கூடியவை எனப் பெரும்பாலனோர் கருதலாம். ஆனால், தன்னிடம் முழுழுமையாக சரணாகதி அடையும் நோயாளிகளுக்கு, நம் மருத்துவர்களில் 80 சதவீதத்தினர் தேவையே இல்லாத மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால்
அரசியல்வாதிகள் எதை நினைக்கிறார்களோ எப்போதும் அதை நிறைவேற்றிவிடுகிறார்கள். நாம் எதைப் பேசுவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதைப்பற்றி நம்மை பேச வைத்துவிடுகிறார்கள். நாம் எதையெல்லாம் பேச மறந்துவிடுவோம் என அவர்கள் கணிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுகிறோம் வழக்கம்போல!
நாடு அடுத்த 20 ஆண்டுகளில் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால்களில் பொது சுகாதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகளவில் பொது சுகாதாரம் சார்ந்து மோசமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இதுகுறித்த எந்தப் பிரக்ஞையும் தமக்கு இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது அரசு.
சேது: அபாயத்தின் மறுபக்கம்
இந்தியர்களாகிய நமக்கு எப்போதுமே உண்மையைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகள் மீதே நம்பிக்கை அதிகம். தமிழர்களின் நூற்றாண்டு கால கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்படும் சேது சமுத்திரத் திட்டமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள்குறித்த அச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபம் எடுத்துவரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.
தேவை துணை நகரமல்ல
காலங்காலமாகவே ஆட்சியாளர்களுக்கு மாற்றுத் தலைநகரம், துணை நகரங்களைத் திட்டமிடுவதில் ஓர் அலாதியான ஆர்வம் இருந்திருக்கிறது. நவீன காலத்தின் மக்களாட்சி மன்னர்களை மட்டும் இதற்கு விதிவிலக்காகப் பார்க்க முடியுமா என்ன?
மாயாஜால வித்தை அப்போது தீயசக்திகளிடம் இருந்தது: லால்
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.''
37, தோப்புத் தெரு
37, தோப்புத் தெரு.
ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான 'வேள்வித்தீ'யின் கரு உருவான இடமும் 'தேனீ' இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!
ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான 'வேள்வித்தீ'யின் கரு உருவான இடமும் 'தேனீ' இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!
இந்தக் கல்விமுறை மிகப் பெரிய குற்றம்
உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் உன்னதமானவற்றையே அளிப்பவராக உங்களை நீங்கள் கருதினால் இந்தப் பேட்டியை தயவுசெய்து நீங்கள் தவிர்க்கலாம். ஏனெனில், இத்தகையவர்களேகுழந்தைகளின் உண்மையான சந்தோஷங்களில் எவ்வித முனைப்பும் காட்டாதவர்கள் என்கிறார் ழாக் வெர்ஃபைலே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













