வணக்கம் வைகுண்டராஜன்!


பத்தில்லாத வேலைகள் உண்டா?
‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின.

தனி உலகத்துக்கு நல்வரவு
இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும். நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த இந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.

ஞாபகம் இருக்கிறதா?

ஓராண்டுக்கு முன் இதே நாட்களில் தமிழகம் எதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா? தமிழகக் கடற்கரை சூறையாடப்பட்டு, ஏறத்தாழ ரூ. 1,00,000,00,00,000 வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்று பேசப்பட்டதே... கனிம மணல் கொள்ளை... அதன் மையச் சரடைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரதேசங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், சென்ற இடமெல்லாம் கடலோடிச் சமூகமும் கடற்கரையையொட்டி வாழும் மக்களும் கனிம மணல் பிரச்சினையை வலியுறுத்தினர். கனிம மணல் பிரச்சினையை நாம் வெளியிலிருந்து பார்ப்பதற்கும் உள்ளிருந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. முக்கியமாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்: 1. இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் அல்ல. 2. இந்த விவகாரம் ஏதோ ஓராண்டுக்கு முன், சில மாதங்களுக்கு முன் தோன்றியதும் அல்ல.

சூழல் கேடும் உயிர்க் கேடும்

பாரம்பரியக் கடலோடி சமூக மக்களைப் பொறுத்த அளவில் எப்போதுமே பணம் அவர்களுக்குப் பெரிய விஷயம் அல்ல. யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு அரசாங்கத்துக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுடைய முதல் அக்கறை கடலுக்கும் சூழலுக்கும் ஏற்படும் சேதாரம். கனிம மணல் ஆலைகளைப் பொறுத்த அளவில், அவை கடலையும் கடற்கரையையும் சூறையாடப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கூடவே, முறைகேடாகக் கடலிலும் நடத்தப்படும் மண் அகழ்வு, அவர்களின் கரைகளை அரித்து, கடலை ஊருக்குள் கொண்டுவரும்போது செய்வதறியாது நிற்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமும் கழிவுகளும் நோய்களை நோக்கித் தள்ளும்போது துடித்துப்போகிறார்கள்.

கால் நூற்றாண்டுப் போராட்டம்
“அறிவியல் எங்களுக்குத் தெரியாம இல்ல. மண்ணுக்குச் சேதத்தைத் தராமலா கால்வாயையும் குளங்குட்டைகளையும் வெட்டுனாங்க அந்தக் காலத்துல? அது அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா? ஆனா, சூழலை நாசம் பண்ணாமச் சாதிக்க முடிஞ்சுதுல்ல? இன்னைக்கு அது இல்லையே?  கனிம மணலுங்கிறது இயற்கையிலேயே கதிரியக்கம் கொண்டது. அதைப் பிரிச்சு வேலை செய்யும்போது கதிரியக்கம் இன்னும் அதிகமாவுது. போதாக்குறைக்கு விதிகளை மீறி ராட்சச எந்திரங்களை வெச்சிக்கிட்டு, வெறித்தனமா மண்ணை எடுத்து சுத்திகரிச்சு, கழிவுத் தண்ணிய கடல்ல விட்டா என்னாகும்?

நிலத்தடி தண்ணி கெட்டுப்போச்சு. கடல் வளம் கெட்டுப்போச்சு. தொழில் அழிஞ்சுக்கிட்டிருக்கு. கதிரியக்கத்தால ஏராளமான நோய்ங்க. எங்க பார்த்தாலும் புத்துநோய், சிறுநீரக நோய். கடல்ல மண்ணை எடுக்க எடுக்க… கரையை அரிச்சுக்கிட்டுக் கடல் ஊருக்குள்ள வருது. எவ்வளவு சகிச்சுக்க முடியும்? இருபத்தஞ்சு வருசமா போராடிக்கிட்டிருக்கம். யாரு எதிர்த்துப் பேசுறாங்களோ அவங்களை ஒண்ணு, பணத்தை வெச்சு அடிக்கிறது. இல்ல, பேசாம செஞ்சிடுறது. ஊர் எதிர்த்தா, சாதி மதத்தை வெச்சு ஊரை ரெண்டாக்குறது. அரசாங்க அதிகாரிங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு எதிர்க்குறவங்களையே அமுக்கிப்போடுறது. 1996 டிசம்பர் 16-ம் தேதியை நாங்க இன்னும் மறக்கல. போராடுன மக்கள் மேல போலீஸை வெச்சு நடத்துன தடியடியில கூட்டப்புளி சேசு செத்துப்போன நாள். இன்னைக்கும் நாங்க போராட்டத்தை விடல. எப்பிடி விட முடியும்? கடல் வெறும் கடலா?” என்று கேட்கும் ம. புஷ்பராயன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர். அப்போதைய உவரி தேவாலய உதவிப் பங்குத்தந்தை. அன்றைக்கு நடந்த காவல் துறை தடியடியில், கைகள் முறிபட்டு, மூட்டு உடைபட்டவர்.

அப்படி என்ன நடக்கிறது அங்கே?

உண்மைதான். வெறும் உரிமங்களையும் இயந்திரங்களையும் ஆட்களையும் கொண்டு நடக்கும் தொழில் அல்ல இது. சாதி, மத, அதிகார, அரசியல், ரௌடியிஸ கரங்கள் யாவும் இரண்டறக் கலந்து கிடக்கும் தொழில். கனிம மணல் ஆலைகள் நடக்கும் பகுதிகளில், கடற்கரை மட்டும் அல்ல; கடலும் ஊரும்கூட அவர்கள் கைகளுக்குள் இருக்கின்றன.

“அரசாங்கம் கனிம மணல் முறைகேடு சம்பந்தமா விசாரிக்க அமைச்ச ஆய்வுக் குழுவோட தலைவரான ககன்தீப் சிங் பேடி ஆய்வுக்குப் போனப்போ, அவர்கூட போன பத்திரிகையாளருங்களையே மறிச்சிட்டாங்க. படம் எடுக்கப்போனவங்களை அடிக்கப்போயிட்டாங்க. எல்லா ஊரையும் பிரிச்சு, கையாளு வெச்சிருக்காங்க. நீங்க தனியா போறது நல்லதில்லீங்க. தயவுசெஞ்சு நாங்க சொல்லுறது கேளுங்க...”

எந்த மக்கள் அழைத்தார்களோ, அவர்களே எச்சரிக்கிறார்கள்...

கார் புறப்படுகிறது, உலகின் கனிமச் செழிப்பான கடற்கரைப் பகுதியை நோக்கி. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரையிலான சுமார் 150 கி.மீ. நீளக் கடற்கரையும் அதை ஒட்டியுள்ள கிராமங்களையும் தொடும் பயணம் இது.  பொதுவாக, இப்படிச் செல்லும்போது பகலில், வரிசையாக ஒவ்வொரு ஊராகச் சென்றுவிட்டு இரவில் திரும்பிவிடுவது வழக்கம். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் பயணம் தொடங்கும். இந்தப் பயணத்தைப் பொறுத்த அளவில் வேறு மாதிரி திட்டமிட வேண்டியிருந்தது. முதல் நாள் அனுபவங்கள் அப்படி.

ஏ... யாருப்பா நீயீ?

ஊரில் உள்ளவர்கள்தான் கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்து உள்ளே அழைத்துச் செல்ல அஞ்சுகிறார்கள். "நீங்க எப்படியாச்சும் வீட்டுக்கு வந்துடுங்க... அங்கென எல்லாரையும் கூட்டி வெச்சிருக்கோம்."
பகலில் ஊருக்குள் நுழைவது அத்தனை எளிதாக இல்லை.
"அண்ணாச்சி, கார் கண்ணாடியை ஏத்திவிட்டு, தலையைக் கொஞ்சம் குனிஞ்சுக்குங்க. அங்கம் மரத்தடியில வண்டியை வெச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்குப் பாருங்க... அந்த ஆள் கண்ணுல பட்டோம்... தகவல் போயிடும்... அஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு ஆள்னு இப்பிடி நிக்கும். ஊருக்குள்ளேயும் சலூன் கடையில, டீக்கடையிலேன்னு பேசிக்கிட்டு இருக்கற மாதிரி உட்கார்ந்திருக்கும். குனிஞ்சிக்கிடுங்க, குனிஞ்சுக்கிடுங்க..."


இப்படியெல்லாம் குனிந்து, மறைந்து சென்றும் பகல் பயணம் வேலைக்கு ஆகவில்லை. "ஐயா, எங்க ஊருல எந்தப் பிரச்சினையும் இல்ல; நீ ஒம் சோலியைப் பாத்துக்கிட்டுப் போய்யா... வெத்து மண்ணை எடுத்து வித்து, பொழப்பு கொடுக்குற மவராசனைப் போட்டுக்கொடுக்க வந்துட்டியளா?"

கூப்பிட்டுச் சென்றவர்கள் கும்பிட்டு, மீனவர்கள் வாழ்க்கைபற்றி எழுத வந்திருப்பதாகவும் மணல் விவகாரத் துக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி, அங்கிருந்து திரும்ப அழைத்து வருகிறார்கள். "அண்ணாச்சி, இங்கெ எல்லாம் ஒண்ணோட மண்ணா கெடக்கு பாத்துக்கிங்க. அரசு அதிகாரிங்கள்ல ஆரம்பிச்சி ஊருல கொஞ்சம் வாயுள்ளவன் வரைக்கும் எல்லாத்துக்கும் காசு, காசு, காசு... அட, கரண்டு லைனுல எதாச்சும் பிரச்சனைன்னா கூட்டியார்ற லைன்மேனுக்கு கார் சவாரி, பிரியாணி, ஆயிரம் ரூவா ரொக்கம்னா பார்த்துக்குங்க. வாங்குற காசுக்குக் கொஞ்சமாச்சும் கூவணுமில்லா? அதாம் நடக்கி. இப்பிடி வரிச்சிக்கிட்டு வர்றவங்களைப் பார்த்துதான் ஊரே பயந்து கெடக்கு. போலீஸு கீலீஸு எல்லாம் ஒண்ணும் செல்லாது பார்த்துக்குங்க. மக்க பாவம் என்ன செய்யிம்? நமக்கு எதுக்குடா பொல்லாப்புனு நடுங்கிக் கெடக்கு."

ஆக, இப்போது பயணத் திட்டங்கள் வகுப்பது ஊர் மக்களின் பொறுப்பானது. "அண்ணாச்சி, இருட்டத் தொடங்கையில இங்கெருந்து கார்ல புறப்படுவோம். அங்கன போற வழியில ஒரு எடம் கெடக்கு. அங்கன எறங்கி, காரைத் திருப்பிவுட்டுட்டு, பாலத்தை ஒட்டி ரெண்டு மைல் நடந்தோம்னா, கிராமத்தைப் பின்னால போய்ச் சேர்ந்துடலாம். ‘......’ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம்னா, அங்கன ஊர்ல உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க. பொறவு பொறப்பட்டோம்னா கடக்கரையோட நடக்கலாம்."

இது இந்தியாதானா?
கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."

கொஞ்ச தூரம் நடந்து கடக்க, எனக்கு சத்தீஸ்கர் பயண ஞாபகம் வந்தது. ‘இந்தியாவின் வண்ணங்கள்' தொடருக்காகச் சென்றிருந்தபோது அங்கே இதே போன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருபுறம் சுரங்கங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்கள் சூறையாடிக் கொண்டிருக்கும் பகுதியில், நாம் கால் வைக்கவே முடியாது.

இன்னொருபுறம் மாவோயிஸ்ட்டுகள் பகுதியிலும் வெளியாட்கள் சாமானியமாக நுழைய முடியாது. இங்கெல் லாம் காவல் துறை, நிர்வாகம் எல்லாம் ஒரு பெயருக்குத்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

தனி சாம்ராஜ்ஜியம்
நம் சமூகம் எந்த அளவுக்குக் கனிம மணல் விவகாரத் தையும் இந்தப் பகுதிகளில் நிலவும் சூழலையும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. உள்ளபடி இது ஒரு தனி சாம்ராஜ்ஜியம். ஒரு தனிமனிதன் உருவாக்கியிருக்கும் சாம்ராஜ்ஜியம். இன்றைக்குத் தென் தமிழகக் கடற்கரை முழுக்க அந்த மனிதரின் பெயரைத்தான் உச்சரிக்கிறது: வைகுண்டராஜன்.

ஒரு பெயரின் சக்தி
தமிழகக் கடற்கரையில் வைகுண்ட ராஜன் என்கிற பெயருக்கும் அவர் பிடியின் கீழ் இருக்கும் பகுதிக்கும் சர்வதேச அளவில் இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? அவருடைய ‘விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல் லும் தகவல்கள் இவை:

"உலகில் அதிகமான கனிமப் பொருட்களும் மணலும் இந்தியாவில் கிடைக்கின்றன. உலகமெங்கும் கிடைக்கும் 46 கோடி டன் வள ஆதாரங் களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத் தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கொடை
இந்தியாவிலேயே, 15 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியைக் கொண்டு அமைந்த ஒரே நிறுவனமான வி.வி.மினரல்ஸ், 40 ஆண்டுகள் சுரங்கக் குத்தகையின் கீழ் செயல்படுகிறது. மன்னார் வளைகுடாவின் நிலவியல் பண்புகள், தொடர்ந்து வீசும் அலை கள் மற்றும் கடற்கரை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கார்னெட், இல்மனைட், ருடைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்கும் பகுதியாக இது உள்ளது.

குறி: உலகின் முதலிடம்
இந்தியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம், கார்னைட் மற்றும் இல்மனைட் கனிமங்களின் உற்பத்தி, ஏற்றுமதியிலும் முன்னணி நிறுவனம். உலக அளவில், இரண்டாம் இடத்தில் உள்ள எங்கள் நிறுவனம் மேலும் உயர்ந்த இடத்துக்குச் செல்வதில் முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் இல்மனைட் ஏற்றுமதி செய்யும் முதல் தனியார் நிறுவனம் வி.வி.எம். மேலும், நாட்டிலேயே, இல்மனைட் சுரங்கப் பணிகள் மற்றும் ஏற்றுமதிக்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற முதல் தனியார் நிறுவனமும் இதுதான்.

ராட்சத பலம்
வி.வி.எம். நிறுவனத்தில், வெட்டியெடுக்கப்பட்ட தாதுக் களைத் தரப்படுத்த, சுரங்கப் பகுதிகளுக்கு அருகிலேயே ஐந்து ஈர ஆலைகளும் ஆறு உலர் ஆலைகளும் அமைக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் எரீஸ், ரோடெக்ஸ் ஸ்க்ரீன்ஸ், ஆஸ்திரேலியாவின் லினெடெக்ஸ், கோரோனா ஸ்டாட், ஜெர்மனியின் மினாக்ஸ் நிறுவனங்களிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரச் சாதனங்கள், மாதம் ஒன்றுக்கு 14,000 மெட்ரிக் டன் கார்னெட், 20,000 மெட்ரிக் டன் இல்மனைட், 1000 மெட்ரிக் டன் ஜிக்ரான், 500 மெட்ரிக் டன் ருடைல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப வெவ்வேறு வகையான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரக்குகள், டிப்பர்கள், புல்டோசர்கள் மற்றும் ட்ரெய்லர் வண்டிகள் யாவும் சொந்தமாக உள்ளன. இவை, கச்சாப் பொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் குறித்த நேரத்தில் கொண்டுசெல்கின்றன.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக் குள், கனிமப் பொருட்களை மிகப் பெரிய அளவில் சேமித்துவைக்கும் மூன்று பெரிய சேமிப்புக் கிடங்குகளையும் வி.வி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 3,00,000 முதல் 4,50,000 மெட்ரிக் டன் வரை கனரக கனிமப் பொருட்களை இந்தக் கிடங்குகளில் வைத்திருக்க முடியும்.

இலக்குகள்
ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முதலாக ஒரேநாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்த நிறுவனம் வி.வி.எம். முந்தைய சாதனையை விட 60% அதிகம் இது. எதிர்காலத்தில், இதுபோன்ற சாதனைகளை இன்னும் அதிவேகத்தில் வி.வி.எம். நிறுவனம் இரட்டிப்பாக்கும்!"

இணையதளத்திலுள்ள இந்த ஒவ்வொரு வார்த்தைகளைப் படிக்கும்போதும் இருளில் கடலும், ராட்சச இயந்திரங்களின் ‘மடார் மடார்' சத்தமும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

பிரிவினை வெடிகுண்டு
ஒவ்வொரு கிராமமாகக் கடக்கிறேன். இரவுகள் கொடூர இரவுகளாக நகர்கின்றன. எங்கும் குதறிக் கிடக்கின்றன கடலும் கரையும். மக்களோ சிதறிக்கிடக்கிறார்கள்.

‘‘என்னிக்கு இந்தத் தொழிலு வந்துச்சோ, அன்னிக்கே ஊரு நாலாயிடுச்சு. கம்பு, கத்தி காலமெல்லாம் போயி வெடிகுண்டு காலம் வந்துடுச்சு. சாதியை வெச்சு வாயடைக்கணுமா, சாதியை வெச்சு அட. மதத்தை வெச்சு வாயடைக்கணுமா, மதத்தை வெச்சு அட. ரெண்டுக்கும் மூடாத வாயைக் காசை வெச்சு அட. அதுக்கும் அடங்காதவனை மூட்டிவிட்டு அட. இதாம் கணக்கு. எத்தினி பேரை ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சிருக்காங்க தெரியுமா?’’

பேசிக்கொண்டே வரும்  '..........' அந்த இருட்டிலும் இடையே குறுக்கிடும் குழாய்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். ‘‘பார்த்து நடங்க. நெடுவ, நீங்க கடக்கரையைத் தோண்டிப் பாத்தீங்கன்னா கட வாயில பல எடங்கள்ல இப்பிடிக் குழாய்க தென்படும். மண்ணை அள்ளுறதோட இல்ல, கழிவையும் இப்பிடி நேரே கடலுக்குள்ள அனுப்பியூடுறங்க. எல்லாம் ரசாயனக் கழிவையும் கதிரியக்கத்தையும் சொமந்துக்கிட்டு வர்ற தண்ணீ. நாம பார்த்துப்புட்டு ஊரைக் கூட்டியாந்து ‘ஏ... யய்யா இது நியாயமா?'னு கேட்க போனா, என்னாவும் தெரியுமா? இந்த எடத்துல இந்தக் குழாய் தென்படாது. அது மேல ஒரு வண்டி மண்ணைக் கொட்டி மறைச்சுட்டு, இன்னொரு எடத்துல குழாயைப் பதிச்சுடுறது. பெறவு, கேள்வி கேட்க போறவனை பைத்தியக்காரனாக்கி கேள்வி கேக்குறது. நம்ம வாயை மூடலாம். கடலுக்குள்ள போற தண்ணீ வாய மூட முடுயுமா? அது திரும்ப நம்ம வாய்க்கே வந்து ஒலை வைக்குது.

கர எதுக்கு இருக்கு? ஒவ்வொண்ணுக்கும் காரண காரியம் இருக்கு. கரைதான் ஊருக்கும் கடலுக்கும் எடையில இருக்குற தடுப்பணை. அமாவாசையோ, பௌர்ணமையோ, அஷ்டமி, நவமியோ கட அலை மேல ஏறி எறங்கி வரும். ஒரு எடத்துல ஏறுனா, இன்னொரு எடத்துல எறங்கும். அத அனுசரிக்கத்தாம் கர.

இப்பம் கரைய நோண்டிப்புட்டோம். கடல்லேயும் கைய வெச்சாச்சு. கடலு சும்மா வுடுமா? இங்கன நீங்க கைய வெச்சா, கொஞ்சம் தள்ளி அது கைய வைக்கும். வெச்சிடுச்சு. பல ஊர்கள்ல கர உடைஞ்சி கடல் ஊருக்குள்ள வந்தாச்சி. கட அரிக்க அரிக்க ஓடுறம். எவ்வளவுக்கு ஓட?’’

பெரியவர் அயர்ந்து நிற்கிறார்.

கொள்ளும் கடல்

கனிம மணல் அகழ்வால் விளையும் பெரும் துயரங்களில் கடல் அரிப்பு முக்கியமானது. தமிழகத்தின் கடலோரக் கிராமங்கள் பல கடலின் வாய் நுனியில், அபாயத்தின் நுனியில் நிற்கின்றன. கரையில் வள்ளங்களை நிறுத்த முடியாது என்பதோடு, பல இடங்களில் குடியிருப்புகள் அடியோடு அரித்த நிலையில் நிற்கின்றன. கடல் அரிப்புக்குக் காரணமான கடல் கொள்ளையைத் தடுக்க முடியாதவர்கள் அலைகளின் சீற்றத்தை எதிர்கொள்ள ஊருக்கு ஊர் தூண்டில் வளைவு கேட்டு அரசுக்கு மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை எவ்வளவு தீவிரமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்குக் கடியப்பட்டி ஓர் உதாரணம். கடியப்பட்டியில், எந்த வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், ஊர்க்காரர்கள் தூண்டில் வளைவுக்கு நன்கொடை அளிக்க வேண்டும். ‘‘தூண்டி வளைவு செலவுல அரசாங்கத்தோட செலவை நாங்களும்கூடப் பகிர்ந்துக்க தயாரா இருக்கோம்’’ என்று நிதி சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். வீடு, பிழைப்பு, உயிர் என அனைத்து உயிராதாரங்களையும் நோக்கிப் பாயும் கடலைப் பார்த்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உணரப்படாத விபரீதம்
‘‘பெரிய நாசத்தை உண்டாக்கக் கூடிய விபரீதம் கடலோட விளையாடுறது. ஆனா, கடக்கரைக்கு வெளியிலேர்ந்து பார்க்குறவங்களுக்கு இந்தப் பிரச்சினையோட வீரியம் புரியலை. கடலைச் சூறையாடுறதும் கடல்ல கதிரியக்கக் கழிவுகளைக் கொண்டுசேர்க்குறதும் பெரிய சூழலியல் ஆபத்து.

உலகத்துல ஏதோ ஒரு மூலையில கடல்ல தவறிடுற வெள்ளைக்காரங்க பிணம் இங்கே சின்னவிளையில வந்து ஒதுங்கும். நீவாடு அப்பிடி. ராமேஸ்வரத்துல பெய்யுற மழைக்கும் அந்தமான் தீவுல இருக்குற காட்டுக்கும் சம்பந்தம் உண்டு. காத்துவாக்கு அப்பிடி. இங்கே ஆபத்து கண்ணுக்கு நேரே தெரியுது. தெரியாத ஆபத்தை நகரத்து மக்கள் அனுபவிக்கிறாங்க. அவ்வளவுதான்.

ஏதோ, இந்த மாதிரி திட்டங்களால அரசாங்கத்துக்குப் பெரிய வருமானம்னு வேற மக்கள்கிட்ட ஒரு மாயையை உருவாக்கிடறாங்க. உண்மை என்ன தெரியுமா? சர்வதேச அளவுல, ஒரு டன் கனிம மணலோட மதிப்பு ஒரு லட்ச ரூபா. இவங்க ஒரு ஏக்கருக்கு அரசாங்கத்துக்குக் கொடுக்குற ஒரு வருஷ குத்தகைத்தொகை அதிகபட்சமே முந்நூத்தி எண்பத்தி ரெண்டு ரூவாதான். வளர்ச்சித் திட்டம்னு சொல்லப்படுற பல திட்டங்களோட கதை இதுதான். இதுக்கு எத்தனை பேர் உயிரைப் பணயம் வெப்பீங்க?’’ என்கிறார் முகிலன். தமிழகத்தில் கனிம மணல் கொள்ளையின் கோர முகத்தை விரிவாகச் சொல்லும் ‘தாது மணல் கொள்ளை' நூலின் ஆசிரியர்.

கொள்கையர்களை என்ன செய்வது?
கனிம மணல் கொள்ளையைப் பெரிய அளவில் அம்பலப்படுத்தியவர்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளரும் உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சே. வாஞ்சிநாதனும் முக்கியமானவர். இவர் தலைமையில் சென்ற வழக்கறிஞர்கள் குழு சுமார் 10 நாட்கள் நேரடி ஆய்வில் வெளியிட்ட ‘தாது மணல் கொள்ளை - உண்மை அறியும் குழு அறிக்கை' சிறு நூலும் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்தது.

‘‘இந்தப் படத்துல இருக்குறது யார் தெரியுதா?’’

கணினியில், வாஞ்சிநாதன் சுட்டிக்காட்டும் படத்தில், வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு விருது அளிக்கிறார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அடுத்தடுத்த படங்களில் பிரணாப் முகர்ஜி, கமல்நாத் ஆகியோர். எல்லாம் வி.வி.மினரல் நிறுவனத்துக்கு விருதுகளை அளிக்கும் படங்கள்.

‘‘ஆஷீஷ் குமாரோட அறிக்கையை வெச்சிக்கிட்டு, எல்லாரும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தின இழப்பை மட்டும் வெச்சு, இதை ஒரு முறைகேடுன்னும் வைகுண்டராஜன் மேல மட்டும்தான் தப்பு இருக்குன்னும் பேசுறாங்க. அவங்க கணக்கை சரியா காட்டிட்டதாவே வெச்சுக்குவோம். இது சரியாயிடுமா?

அடிப்படையில, இது ஒரு ஆள் பிரச்சினை மட்டும் இல்ல. நம்ம அரசாங்கம் வகுக்குற கொள்கைகளுக்கும் ஆளுற வர்க்கத்துக்கும் இதுல பங்கு இருக்கு. வைகுண்டராஜன் வளர்ந்த காலகட்டம் ஒரு வகையில, இந்திய அரசியல் பொருளாதார வரலாற்றுலேயும் முக்கியமானது. இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறின காலகட்டம் அது. 1990 வரைக்கும் இந்திய அரசோட தொழில் கொள்கையில, கனிம வளங்களைக் கையாள்றதுல தனியாருக்கு நிறையக் கட்டுப்பாடு இருந்துச்சு. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறினப்போ, அதையெல்லாம் அடிச்சி நொறுக்கி, தனியாரையும் முழுசா கனிமத் தொழில்ல உள்ளே விட்டாங்க. சரியான வார்த்தைகள்ல சொல்லணும்னா 1990-க்கு முன்னாடி சட்ட விரோதமா இருந்த நெறைய விஷயங்கள் 1991-ல் சட்டபூர்வமா ஆயிடுச்சு. விளைவுகளை இப்போ அனுபவிக்கிறோம்.

நெனைக்கவே கஷ்டமாயிருக்கு. பல்லாயிரம் வருஷமா அவங்க பாதுகாத்துப் புழங்குன கடக்கரையில கால் வைக்க அனுமதி வாங்கணும்கிற சூழலை. பாரம்பரிய உரிமைகள்னெல்லாம் வாய் கிழியப் பேசுறோமே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இந்த நாட்டுல இருக்கு? எந்தக் கடக்கரைக் கிராமத்துல நொழைஞ்சாலும், புத்துநோய், சிறுநீரகக் கோளாறு, தைராய்டுன்னு தெருக்குத் தெரு சீக்கு. நேத்துக்கூட ஒரு சின்ன புள்ள, எலும்புப் புத்துநோய், வலி தாங்க முடியாம துடிக்குது. என்ன மாரி நாட்டை நாம அடுத்தத் தலைமுறைக்கு விட்டுட்டுப் போவப்போறோம்? பணம் பணம்னு ஓடுறோமே, அப்படி எதைக் கொண்டுக்கிட்டு போவப்போறோம்?

ஒட்டுமொத்தமா இந்தத் தொழில்ல தனியார் ஈடுபடுறதையே தடை விதிக்கணும். மக்களையும் இயற்கையையும் பாதிக்காம எல்லாத் தொழில்களையும் அரசாங்கம் கையில எடுக்கணும். அதுக்கான முதல் படியா இந்த விவகாரம் மாறணும்…’’

வாஞ்சிநாதன் பேசிக்கொண்டிருக்கிறார். நான் விருது படத்தில் சிரிக்கும் சிதம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செல்பேசி அழைக்கிறது. ‘‘யண்ணா… கடலூருக்கு எப்போண்ணா வருவீங்க?’’

‘‘நாளைக்கு வர்றேன்ப்பா!’’

ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’

61 கருத்துகள்:

 1. The Hindu (English) exposed garnet mining in Tuticorin district in 1996 !!!!!! No need to be afraid since it is not an exposure.

  பதிலளிநீக்கு
 2. விபச்சாரமாகிவரும் பத்திரிகை நாகரீகம் ? நடுநிலையாளர்களின் கூற்று

  இன்றைய நாகரீக உலகில் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தனி நபர் மீதான தாக்குதல்கள் அதிகமாகி கொண்டே இருகின்றன இன்றைய பிரபல நாளிதழ்களின் தரம் பக்க சார்பாக இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது . நுற்றாண்டு பலம் கொண்ட நாளிதழ் எல்லாம் இன்று விபசார ஊடகமாக மாறிவருகிறது என்பது மிகவும் வேதனையாக இருப்பதாக நடு நிலையாளர்கள் கூறுகின்றனர்

  பிரபல தமிழ் நாளிதழ்களில் தலையங்கமாக வரும் பலவற்றில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள் . தனது தொழிலை பெருக்க மற்றொரு தொழிலை அழிக்க துடிக்கிறார்கள் . பத்திரிகை சுதந்திரத்தை வைத்து இவர்களால் லட்சம் மக்களின் வேலைவாய்ப்பை இலக்கவைக்க முடியும் . ஒரு சில மக்களுக்கு கூட வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியாத திராணி யற்றவர்கள் . தரம் தாழ்ந்து தரம் கெட்டு விபச்சார ஊடகமாக மாறிவருகிறது .

  பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர்களை எல்லாம் புகைப்படம் எடுத்து அதனை பிரபல சில தனியார் நிறுவனத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டு நுற்றாண்டு பலம்வாய்ந்த தமிழ் பத்திரிக்கைகள் தரம் தாழ்ந்து எழுத்துகின்றன . நடுநிலையாக செயல்படவேண்டிய நாளிதழ்கள் இன்று பணந்திற்காக தனது மானத்தினை விற்கவும் துணிந்து விட்டது .

  ஒருவர் குறித்து எழுதும்போது அவர் தரப்பு கருத்து கேட்டறியாமல் தனிமனித தாக்குதலில் ஈடு படுவதுதான் பத்திரிகை சுதந்திரமா ? பத்திர்க்கை தர்மமா ?

  நான் எப்படியும் எழுதுவேன் என்ன யாரும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் தனிமனித தாக்குதல்கள் நடத்தும் பத்திரிக்கைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டேய் பேரில்லாத நடு நிலை நக்கி....யாருடா அந்த நடு நிலையாளர் வைகுண்ட ராஜனா ?? டிபன் பாக்ஸ் தலையா செவுல்ல விட்டேன் அந்து போய்டும் படவா.......

   நீக்கு
 3. இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா ?

  http://www.coastalenvironment.org/blog/objection-to-hindu-tamil-news-paper/

  www.beachminerals.org/objection-news-published-hindu-19-8-14-21-08-14/

  http://www.southernmines.org/blog/objection-for-false-news-published-in-hindu-tamil-dated-20-08-2014/

  பதிலளிநீக்கு
 4. Mr.Samas i heard a news that you are asking bribe for Rs.50,00,000 for spreading this fake news.For this stupid work you can beg in the streets

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாசம் அஞ்சாயிரம் குடுத்தா ஊருகாரனையே போட்டு குடுக்குற/ போட்டு தள்ளுற மொன்ன நாயி பணத்த பத்தி பேசுது , உண்மைய சொல்லு அஞ்சாயிரதுக்கு எத்தன சைபர்னு தெரியாம தான இவளோ போட்ட..... சாணில முக்கி அடிப்பேன் செருப்ப .

   நீக்கு
 5. Mr.Samas சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள் வெட்கம் கேடவர்கள்.

  பதிலளிநீக்கு
 6. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள் வெட்கம் கேட்டவர்கள்

  பதிலளிநீக்கு
 7. இந்த பொய்யான செய்தியை வெளியிட யார் யாரிடம் எவ்வளவு பணத்தை லஞ்சமாக வாங்கினாய்.... ஒரு பத்திரிக்கையாளன் என்பவன் உண்மையான செய்தியை மட்டுமே மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.. இதை போன்ற அவதூறு செய்திகளை பிரசூரித்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்

  பதிலளிநீக்கு
 8. கதை அருமை. இப்படி பதிவு செய்ய யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள் ?????

  பதிலளிநீக்கு
 9. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போய் எடு நானா வேனாங்குறேன்.... நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல டா....

   நீக்கு
 10. எத்தனை பேர் குடியை கெடுக்க மன்னார் குடியில் இருந்து வந்தீர்கள் ?

  பதிலளிநீக்கு
 11. நீ இதுல சொன்ன எந்த விசயத்துக்கும் ஆதாரமே இல்லையே... பின்ன எப்டி இது உண்மைனு நம்பறது... நீங்க சொன்ன மாதிரி "வாங்குற காசுக்குக் கொஞ்சமாச்சும் கூவணுமில்லா? " ரொம்ப நல்லவே கூவிருக்கீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதாரம் இல்லிங்குற்றதுகாக ங்கோ...... சந்தேகப்பட்டுடாதடா பாடு...

   நீக்கு
 12. இதே பொழப்பாதான் திறியுறீயா சமஸ்

  பதிலளிநீக்கு
 13. சமோசா அவர்களே ,நீங்கள் எழுதியத்தில் இருந்து நன்றாக தெரிகிறது நீங்கள் ஒரு வேலைவெட்டி இல்லாத நாடிற்கு தேவை இல்லாத உதவாக்கரை என்று ,வாழ்கையில் கொஞ்சமாவது வேலைக்கு சென்று உழைத்து உண்டால் கஷ்டம் என்பது தெரியும் ,கஷ்டம் என்பது தெரிந்து இருந்தால் பலஆய்ரதுகும் மேலான மக்கழுக்கு வேலை வாய்ப்பு தந்து வாழ்வழிக்கும் ஒரு நிறுவனத்தை பற்றி இவ்வாறு கூறி இருக்கமடீர்கள் ,ஊர்ல எவளவோ ஊழல் மற்றும் பல சகிசிக முடியாத குற்றங்கள் நடக்குது அத எல்லாம் தட்டி கேக்க வாக்கு இல்ல பெருசா வந்துடாரு ,நீங்க காசு பாக்கணும்ன எனனாலும் பேசுவீங்களா .

  பதிலளிநீக்கு
 14. நீங்க publicity ஆகனும்ன ஏன்டா அடுத்தவங்கள கேடுகுரீங்க .

  பதிலளிநீக்கு
 15. எல சமோசா நீ மனுசனா கோமாளிபயல எவ்ளோ ரூபா லஞ்சம் வாங்கினே

  பதிலளிநீக்கு
 16. சமொசாக்கு வேற வேலை இல்ல போலுகுது எங்கப்பா காசு வாங்கின .

  பதிலளிநீக்கு
 17. நீ மனமுள்ளவனா? சோறு தின்கிறைய வேற எதாவது தின்கிரயா

  பதிலளிநீக்கு
 18. பொய்யான வதந்தியை பரப்பாதீர் சமாச் பத்திரிகை சுதந்திரத்தை வைத்து பல மக்களின் வேலைவாய்ப்பை இழக்கவைக்க முடியும் அனால் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை கூட வாங்கி தர துப்பில்லாதவர்கள் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 19. பொய்யான வதந்தியை பரப்பாதீர் சமாச் பத்திரிகை சுதந்திரத்தை வைத்து பல மக்களின் வேலைவாய்ப்பை இழக்கவைக்க முடியும் அனால் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை கூட வாங்கி தர துப்பில்லாதவர்கள் நீங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியாக சொன்னீர்கள் ..

   நீக்கு
  2. வேலை வாய்ப்பை கூட வாங்கி தர துப்பில்லாதவர்கள் நீங்கள்.ஆனால் அண்ணாச்சியோ கேன்சர் போன்ற நோயை கூட இலவசமாக வாங்கித்தருவார் உங்களால் முடியுமா "சமாச்"

   நீக்கு
 20. நாட்டை குட்டிச்சுவராக்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது, அதை முதலில் துப்பறிந்து சரி செய்யுங்கள் நல்லவரே. ஆயிரகணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் முறையான தொழில் மீது என் இந்த காழ்புணர்ச்சி. திருந்துங்கப்பா

  பதிலளிநீக்கு
 21. ஏல நாதரிப்பயல உனக்கு வேற வேல இல்லையா ?

  பதிலளிநீக்கு
 22. ஏல நாதரிப்பயல உனக்கு வேற வேல இல்லையா ?

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சரசு சாரி சமசு நாம இந்துல வேலை பார்க்கிறோம் எவனும் கேள்வி கேக்கமாட்டன்னு நினைக்கிறியா நீ இந்துல வேலை பார்த்தாலும் சரி பொந்துல வேலை பார்த்தாலும் சரி நீ பணம் வாங்குன மேட்டரு ஊரெல்லாம் சீக்கிரத்தில் நார போகுது நீ பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு ஏன்டா இந்த தொழிலுக்கு வந்த இதுக்கு நீ நாலு பேர் கிட்ட ............. பிழைக்கலாம் சரசு நீ வாங்குன காசு மேட்டரு யாருக்கும் தெரியாதுன்னு நினைக்காத தம்பி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேர நீ படிக்கிற லட்சனதுலையே தெரியுது நீ இப்போ பிட்டு சைட்ட பக்கத்துக்கு டேப்ல தொறந்து வச்சுருக்கறது.... மூடிட்டு போடா.

   நீக்கு
 24. Samas why r you making the poor cry you mind your work remove this blog

  பதிலளிநீக்கு
 25. நாட்டில் எவ்ளவோ பிரச்சனை இருக்கு உங்கள்கு ஏன் இது மேலே இவளவு அக்கறை , உகல் கடம் உறஞ்சிகு அளவே இல்லையே உடமெல்லாம் புல்லரிக்குது 15000 குடும்ப்களில் சாப்பாட்டுக்கு அப்பு வக்ரிக்ஹா

  பதிலளிநீக்கு
 26. பேசி தம்பி சரியாய் சொனிங்க

  பதிலளிநீக்கு
 27. யாருவே நீங்கெல்லாம் வைகுண்ட ராஜன பத்தி பேசுனா உங்களுக்கு ஏம்வே பொத்துகிட்டு வருது? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கூட இவ்ளோ ரசிகர்கள் இருக்க மாட்டங்க போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீர் யாருவே சமொசகு எடுபிடிய ,சமோசாவ சொன்ன உமக்கு எதற்கு வே பொத்துகிட்டு வருது ,

   நீக்கு
  2. தோழர் நவநீ இவர் சமாச்கு கூட்டணி மாதரி தெரிது இவரும் ருபாய் 50,00,000 லச்சம் பண்காதாளர் இருக்குமோ

   நீக்கு
 28. நாடுல நடக்குற எத்தனயோ கேவேலமான அரசியல் ஊழல்கழ் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இருக்கு அத எல்லாம் விடுத்தது கிட்டு வந்துட்டானுக பெருசா பேசுறதுக்கு ,

  பதிலளிநீக்கு
 29. இலங்கை இந்தியா இடையே இந்து பத்திரிகையின் என்.ராம் செய்து வரும் தரகு வேலைகளும் இலங்கை இனவெறி பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இங்கே அவர் செய்து வரும் எத்து வேலைகள் பற்றி எழுத வேண்டியது தானே சமஸ்

  பதிலளிநீக்கு
 30. தாது மணல் கொள்ளையன்22 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:01

  நன்றாக கவனியுங்கள் நீங்கள் பிரதமரை விமர்சித்தால் கூட இவ்வளவு பின்னூட்டம் எதிர்த்து வராது , வைகுண்டராஜன் மோடிய விட பெரிய்ய ஆளு......

  பதிலளிநீக்கு
 31. வைகுடராஜன்கிட்ட பொறுக்கி திங்குறவன் அத்தன பேரும் இங்க தாண்டே இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 32. நாந்தான் டா உங்க அப்பன்22 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:10

  வைகுண்ட ராஜன் அண்ணே சரியாக சொன்னீர்கள்..... (எங்களுக்கும் தெரியும் டா சிப்சு....)கமெண்ட்டு போடுறதுக்கு எவ்வ்ளோட காசு தாரன் அந்த அம்மவாத்த மூஞ்சி.... மண்ண வித்து பொழப்பு நடத்த பேசாம நக்கி பொழைக்க சொல்லுங்க டே உங்க நோன்னாச்சிய......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்றத பாத்தா,,,,,அப்போ இவன் /இவனுங்கல்லாம் வைகுண்ட ராஜனுக்கு பொறந்தவனுங்க இல்லையா ??

   நீக்கு
 33. வைக்காதஒல்லிபிச்சகாரன்22 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:39

  டேய் அப்ப்றசண்டுகளா இந்த நீயூச போடுறதுக்கு யாரு பணம் குடுப்பான்னு நீங்களே சொல்லீடுங்க டே....

  பதிலளிநீக்கு
 34. Dear Mr.Samas, Hard to see all these comments. Handling people behind the screen is very hard and be cautious. Fighting against opponent is little bit easy, but fighting for the cause of public & nation against our brothers (can be called Traitors) is real hard. We don't know how to deal them. May god be with you. I am reading all your articles and I can sense your effort to make sure you try to make some change - at least to a small group. Wish you good luck and we will be with you.

  பதிலளிநீக்கு
 35. துணிச்சலான உங்கள் கட்டுரைக்கு வாழ்த்துக்கள். ஆச்சி முத்து சங்கர் இதுபற்றி பல செய்திகளை பகிர்ந்துள்ளார். அந்த வரிசையில் உங்களது கட்டுரை வெகுஜன ஊடகத்தில் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

  கனிம சுருட்டல் நடப்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  உங்களது எழுத்துப் பணியை தொடருங்கள். தேவைப்பட்டால் பின்னூட்டங்களை தடை செய்யுங்கள், பின்னூட்டங்களை தடைசெய்தால் ஓர்மையுடன் கட்டுரைகள் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."
   ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   இயந்திரங்களின் ஓசை மடேர் , மடேர் என்று கேட்டது என்கிறார். எங்காவது மணலை அள்ளும்போது மடேர் மடேர் என்று சத்தம் வருமா? இவர் சத்திஸ்கரில் இருக்கும் இரும்பு தாது மணலை வெட்டி எடுப்பதை இங்கே கூறி இருக்கிறார் என்றே கருதிக்றேன். அதை விட தமாஷ் குறுக்க மறுக்க நடங்க இல்லேனா கால்தடம் காட்டி கொடுத்துவிடும் என்று கூறி இருபது. இப்படி எந்த ஒரு முட்டாளும் ஐடியா கொடுக்க மாட்டார்கள். கடற்கரை காற்றில் காலடித்தடம் 5 நிமிடம் கூட இருக்காது என்பது எல்லோர்க்கும் தெரிந்ந்த ஒரு விஷயம். சரி அப்படி குறுக்கும் நெடுக்கும் நடந்தால் சென்ற இடம் எங்கே என்று கண்டு பிடிக்க முடியாதா?. மேலும் அவர் சொல்லி இருக்கிறார் மண்ணில் கால் வைத்தால் போதக் போதக் என்று உள்வாங்குகிறது என்கிறார். எங்காவது கடற்கரையில் இப்படி நடக்குமா? இப்படி நீங்கள் கட்டுரைகள் எழுதி கொண்டு இருந்தால் குற்றச்சாட்டுகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போதக் போதக் என்று போய் விடும்.

   நீக்கு
 36. சமசின் சுரண்டலை பற்றி ஆனந்தவிகடன் வேல்சை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்

  பதிலளிநீக்கு
 37. ingu eludhappattavai poi endraal En thamilaga arasu kanimangalai alla thadai vidhithulladhu, en oru sr. IAS enquiry panni report velila varaama irukku. athuku padhil solla mudiyaadhavan ellam

  பதிலளிநீக்கு
 38. Your 100% correct
  Samas.. hats off.. This is first priority issue in this nation. Eventhough vv minerals get shut down no people going to beg for their livelyhood. So stand firm Mr.Samas

  பதிலளிநீக்கு
 39. Your 100% correct
  Samas.. hats off.. This is first priority issue in this nation. Eventhough vv minerals get shut down no people going to beg for their livelyhood. So stand firm Mr.Samas

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயந்திரங்களின் ஓசை மடேர் , மடேர் என்று கேட்டது என்கிறார். எங்காவது மணலை அள்ளும்போது மடேர் மடேர் என்று சத்தம் வருமா? இவர் சத்திஸ்கரில் இருக்கும் இரும்பு தாது மணலை வெட்டி எடுப்பதை இங்கே கூறி இருக்கிறார் என்றே கருதிக்றேன். அதை விட தமாஷ் குறுக்க மறுக்க நடங்க இல்லேனா கால்தடம் காட்டி கொடுத்துவிடும் என்று கூறி இருபது. இப்படி எந்த ஒரு முட்டாளும் ஐடியா கொடுக்க மாட்டார்கள். கடற்கரை காற்றில் காலடித்தடம் 5 நிமிடம் கூட இருக்காது என்பது எல்லோர்க்கும் தெரிந்ந்த ஒரு விஷயம். சரி அப்படி குறுக்கும் நெடுக்கும் நடந்தால் சென்ற இடம் எங்கே என்று கண்டு பிடிக்க முடியாதா?. மேலும் அவர் சொல்லி இருக்கிறார் மண்ணில் கால் வைத்தால் போதக் போதக் என்று உள்வாங்குகிறது என்கிறார். எங்காவது கடற்கரையில் இப்படி நடக்குமா? இப்படி நீங்கள் கட்டுரைகள் எழுதி கொண்டு இருந்தால் குற்றச்சாட்டுகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போதக் போதக் என்று போய் விடும்.

   நீக்கு
 40. கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."
  ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  இயந்திரங்களின் ஓசை மடேர் , மடேர் என்று கேட்டது என்கிறார். எங்காவது மணலை அள்ளும்போது மடேர் மடேர் என்று சத்தம் வருமா? இவர் சத்திஸ்கரில் இருக்கும் இரும்பு தாது மணலை வெட்டி எடுப்பதை இங்கே கூறி இருக்கிறார் என்றே கருதிக்றேன். அதை விட தமாஷ் குறுக்க மறுக்க நடங்க இல்லேனா கால்தடம் காட்டி கொடுத்துவிடும் என்று கூறி இருபது. இப்படி எந்த ஒரு முட்டாளும் ஐடியா கொடுக்க மாட்டார்கள். கடற்கரை காற்றில் காலடித்தடம் 5 நிமிடம் கூட இருக்காது என்பது எல்லோர்க்கும் தெரிந்ந்த ஒரு விஷயம். சரி அப்படி குறுக்கும் நெடுக்கும் நடந்தால் சென்ற இடம் எங்கே என்று கண்டு பிடிக்க முடியாதா?. மேலும் அவர் சொல்லி இருக்கிறார் மண்ணில் கால் வைத்தால் போதக் போதக் என்று உள்வாங்குகிறது என்கிறார். எங்காவது கடற்கரையில் இப்படி நடக்குமா? இப்படி நீங்கள் கட்டுரைகள் எழுதி கொண்டு இருந்தால் குற்றச்சாட்டுகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போதக் போதக் என்று போய் விடும்.

  பதிலளிநீக்கு
 41. பாலிமர் தொலைக்காட்சி வைகுண்ட ராஜனுடையதா?!!! எவரேனும் சந்தேகம் தீர்த்து வையுங்களேன். நீங்கள் எழுதியிருக்கும் தகவல்களில் எவ்வளவு உண்மைத் தன்மை இருக்கிறதென்பதாலாம் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், வளர்ச்சி என்ற பெயரில் வளங்களை சுரண்டவது தனியார்கள் மட்டுமே அல்ல, அரசாங்கம்தான். ஏனெனில் அரசாங்கத்தை உருவாக்குபவர்களே பெரு முதலாளில்கள்தானே. இயற்கை பேணலும் கிடையாது ஒரு புடலங்காயும் கிடையாது. இயற்கையோடு அனுதினமும் உறவுகொள்ளும் (மீனவர்கள், விவசாயிகள்) மக்களின் வயிற்றில் அடிப்பது நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக்கொள்வதாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. News7 தான் நொண்ணாச்சியோடது.
   பாலிமர் சேனல் சேலம் பகுதில இருந்து சிறிய ரக கேபிள் சேனலா தொடங்கி இப்பே இந்தளவுக்கு வளர்ந்திருக்கு

   நீக்கு
 42. சரி சரி. தகவலுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு