இந்தியாவின் வண்ணங்கள்



ரு மாபெரும் தேசத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
பிராயணம்தான் சிறந்த வழி என்கிறார் காந்தி. பிராயணங்கள் மூலமாகத்தான் சுதந்திர இந்தியாவின் வரைபடத்தை அவர் உருவாக்கினார்.

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்கு இன்னொரு முறை தயாராகிக்கொண்டிருக்கிறது தேசம்.  அதைப் புரிந்துகொள்ளும் ஒரு பயணத்துக்கு இதைவிடவும் பொருத்தமான தருணம் இருக்க முடியுமா?

ஏறத்தாழ 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள். 29 மாநிலங்கள். 7 ஒன்றியப் பிரதேசப் பகுதிகள்.  2000-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள். 700-க்கும் மேற்பட்ட மொழிகள். 12 மாநகரங்கள். 680 மாவட்டங்கள். 1600-க்கும் மேற்பட்ட  நகரங்கள்.  638,000 சொச்ச கிராமங்கள். 121 கோடி சொச்ச மக்கள்… இவ்வளவையும் எது கோர்த்திருக்கிறதோ அதை நோக்கி ஒரு பயணம். இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நீர், நிலம், வான் வழியாக – வெவ்வேறு இனங்களை,  கலாச்சாரங்களை, அரசியல் வழிகளை, வாழ்க்கை முறைகளைக் கொண்ட சுவாரஸ்யமான மனிதர்கள் வழியாக – உரையாடல்கள் வழியாக - ஒரு நீண்ட, அதிவேகச் சுற்றுப்பயணம்.

இந்தியா எங்கு முடிகிறதோ அங்கிருந்தே தொடங்குகிறது இந்தப் பயணம். இமயத்திலிருந்து இறங்கும் தேசத்தை முப்புறமும் சூழ்ந்திருக்கும் வங்கக்கடலும் அரபிக்கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலிருந்து.
இந்தியாவைப் புரிந்துகொள்வோம்…

ஏப். 2014  'தி இந்து'




1 கருத்து:

  1. கடும் பயணம் . உங்களுக்கு எஸ்.ராவின் எனது இந்தியாவும் ,தேசாந்திரியும் பயன்படும் என்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு