ஸ்ரீலஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் தன்னுடைய மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய ஸ்வாமிகளைச் சட்டபூர்வமாக நியமித்தது ஒருநாள் நகைச்சுவையாக மாறிப்போனதை நம் சமூகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வ வல்லமை மிக்க முதல்வரையோ, பிரதமரையோகூட உங்களால் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஆதீனகர்த்தாக்களையோ, மடாதிபதிகளையோ ஒன்றுமே செய்ய முடியாது. இதற்கு எப்படிச் சிரிப்பது?
நான் லாபி செய்கிறேனா?: ஸ்ரீனிவாசன்
இது ஸ்ரீனிவாசனின் பொற்காலம்! ஒருபக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது. இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை அவருடைய 'இந்தியா சிமெண்ட்ஸ்' அலுவலகத்தில் சந்தித்தேன்.
ஓர் இந்திய நூற்றாண்டின் சாட்சியம்
திருச்சியின் பழைமையான நத்ஹர்சா பள்ளிவாசலின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் குல்சும் பீபி. வயது 116. நாட்டிலேயே அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்படும் இவர், சுதந்திரப் போராட்டக் களத்தின் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றவர் அல்லர். காந்தி, நேரு, சுபாஷ் என தேசத்தின் எந்த முன்னோடிகளையும் பார்த்தவரும் அல்லர். ஆனால், இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டின் அத்தனை மாற்றங்களிலும் மௌன சாட்சியாக - சக பயணியாக பங்கேற்ற அனுபவம் அவருக்குள் உறைந்துக் கிடக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் சுதந்திரம் என்ற சொல் ஏற்படுத்திய கனவுகள், தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட உருவகங்கள், பின்னர் நிகழ்ந்த தடுமாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்களை அப்படியே பிரதிபலிப்பதால் குல்சும் பீபியுடனான இந்த நேர்காணல் முக்கியமானதாகிறது.
கூன் விழுந்த சரீரம், பார்வையிலும் தடுமாற்றம், மிகவும் சிரமப்பட்டே
பேசுகிறார்; வார்த்தைகளால் தன் கடந்த காலத்துக்குள் நுழையும் அவர், பல
தருணங்களில் தாங்க முடியாதத் துயரத்தில் அழுதுவிடுகிறார். அவருடனான
உரையாடலிலிருந்து...
மாயாஜால வித்தை அப்போது தீயசக்திகளிடம் இருந்தது: லால்
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.''
பூமி சற்று அதிர்ந்த ஒரு நாளில்...
அச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத்தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. அடி ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. உலகிலேயே அதிகமாக, கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரைப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் அச்சேவில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?
அறியாமைதான் இந்திய விவசாயிகளின் மிகப் பெரிய எதிரி: பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்
பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ‘‘பத்ம விருது வாங்கின முதல் விவசாயியின் ஊர்ங்கிறதைத் தாண்டி எங்களுக்கு இதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு; எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ‘பத்மஸ்ரீ’ வெங்கடபதி ரெட்டியார் பூரிப்பில் இருக்கிறார். ‘‘தோட்டத்துக்குப் போலாமா?’’ என்று ‘ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். ‘‘அம்பாஸிடரும் கிடக்கு. ஆனா, இந்தக் காலத்துக்கு இதுதான் சொகம். என்ன சொல்றீங்க?’’ என்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் மகள் ஸ்ரீலஷ்மியைப் பார்த்து ‘‘ஏம்மா, படம் எல்லாம் மெயில் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிச்சிட்டியா?’’ என்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரகக் கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பி வழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்கு காய்த்து தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், வாயைத் திறந்தால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசாம்கள், மரபிணி மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.
மருந்தியல் யுத்தம்
நீங்கள் இருப்பது தெரிய வேண்டும் என்றால், நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியக் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டியும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த ‘பேயர்’ மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி, உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது!
உண்மையைப் பேசுவோம்!
போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
ஆமாம். ராஜபக்ஷ பொய் சொல்லவில்லை. இந்தப் போரில் இந்தியா பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும் தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!
தமிழ்நாட்டின் தாலிபன்களா நாங்கள்?: அன்புமணி ராமதாஸ்
பா.ம.க இப்போது வேறு அரசியலுக்குள் நுழைகிறது. ‘புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்னும் முழக்கத்துடன் கட்சியை முன்னெடுக்கும் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய பேச்சுகள் அவர்கள் செல்லவிருக்கும் திசையைத் தெளிவாக்குகிறது. எடுத்த எடுப்பிலேயே, ‘‘திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவரும் தமிழரே இல்லை. தமிழர்த் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்’’ என்று ஆரம்பித்த அன்புமணியை சென்னையிலுள்ள அவருடைய ஆடம்பரமான இல்லத்தில் சந்தித்தேன். கார்பரேட் கலாசார உபசரிப்போடு தொடங்கியது உரையாடல்.
‘‘தமிழர் என்ற சொல்லுக்குப் பா.ம.க. புதிய வரையறை வகுக்கிறதா?’’
‘‘ஆமாம். தமிழ்ப் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், ... தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம்... இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சியில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர்கள் இல்லை என்பதுதான்.’’
என்கவுன்டர் தொழில் அல்ல - திரிபாதி ஐ.பி.எஸ்.
![]() |
| திரிபாதி ஐ.பி.எஸ். |
இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர், நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த என்கவுன்டர்களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து...
இந்த என்கவுன்டர் எதற்காக?
காவல் துறையினரால் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று கொண்டாடப்பட்ட அதிகாரி அவர். ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கேட்டேன்... ‘‘என்கவுன்டர்களை முடித்துவிட்டு வரும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’’
கண்களில் குதூகலம் பொங்க அந்த அதிகாரி சொன்னார்... ‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஒரு பெரிய காரியத்தை முடிச்சுட்ட திருப்தி இருக்கும். அப்படியே ஒரு நல்ல குளியல் போட்டுட்டு வண்டியில் ஜாலியாகச் சுத்தலாம்போல் இருக்கும்!’’
கண்களில் குதூகலம் பொங்க அந்த அதிகாரி சொன்னார்... ‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஒரு பெரிய காரியத்தை முடிச்சுட்ட திருப்தி இருக்கும். அப்படியே ஒரு நல்ல குளியல் போட்டுட்டு வண்டியில் ஜாலியாகச் சுத்தலாம்போல் இருக்கும்!’’
இருண்ட காலம் - 2
‘‘இந்தியாவின் மின் தேவை 2017-ல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலக்கரியைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் அனல் மின் திட்டங்களே இந்தத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும். அந்த முக்கியமான தருணத்துக்கேற்ப நாங்கள் இப்போதே திட்டமிடுகிறோம்!’’
- இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது. ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன!
- இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது. ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன!
கைவிடப்பட்டவர்கள்!
‘‘எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில் ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!’’
- உமா மகேஸ்வரி கொலையாளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
- உமா மகேஸ்வரி கொலையாளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
போய் வாருங்கள் கங்குலி!
‘‘லட்சுமண ரேகை என்பது அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. லட்சுமண ரேகையை சீதை கடந்திருக்காவிட்டால், ராவண வதம் நடந்து இருக்காது!’’
- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ‘‘உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!’’ என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி இது!
- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ‘‘உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!’’ என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி இது!
இஸ்ரோ புஸ்...!
இந்திய விஞ்ஞானிகளின் ரகசிய உலகத்தை நாட்டுக்கு லேசாகத் திறந்துகாட்டி இருக்கிறார் மாதவன் நாயர்!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக 2003 முதல் 2009 வரை இருந்தவர் மாதவன் நாயர். ‘இஸ்ரோ’வின் 25 செயல்திட்டங்களை வெற்றிகரமாக முன்னின்று வழிநடத்தியவர். ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர்.
கடந்த 2005 -ல் ‘இஸ்ரோ’வின் வணிகப் பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’, ஏலம் ஏதும் நடத்தாமல் ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ‘எஸ் பேண்ட்’ அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது. ‘இஸ்ரோ’வில் அறிவியல் பிரிவுச் செயலராகப் பணியாற்றிய டாக்டர் எம்.ஜி.சந்திரசேகரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘தேவாஸ் மல்ட்டி -மீடியா’. இந்த ஒதுக்கீட்டுக்காக ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ என்ற இரு செயற்கைக்கோள்களை ‘இஸ்ரோ’ விண்ணில் ஏவுவது என்றும் இவற்றின் மூலம் பெறப்படும் அலைவரிசையின் (70 மெகா ஹெர்ட்ஸ்) 90 சதவிகிதத்தை ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ 12 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கட்டணமாக ரூ. 1,000 கோடி ‘இஸ்ரோ’வுக்குச் செலுத்துவது என்றும் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம்செய்துகொண்டன.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக 2003 முதல் 2009 வரை இருந்தவர் மாதவன் நாயர். ‘இஸ்ரோ’வின் 25 செயல்திட்டங்களை வெற்றிகரமாக முன்னின்று வழிநடத்தியவர். ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர்.
கடந்த 2005 -ல் ‘இஸ்ரோ’வின் வணிகப் பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’, ஏலம் ஏதும் நடத்தாமல் ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ‘எஸ் பேண்ட்’ அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது. ‘இஸ்ரோ’வில் அறிவியல் பிரிவுச் செயலராகப் பணியாற்றிய டாக்டர் எம்.ஜி.சந்திரசேகரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘தேவாஸ் மல்ட்டி -மீடியா’. இந்த ஒதுக்கீட்டுக்காக ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ என்ற இரு செயற்கைக்கோள்களை ‘இஸ்ரோ’ விண்ணில் ஏவுவது என்றும் இவற்றின் மூலம் பெறப்படும் அலைவரிசையின் (70 மெகா ஹெர்ட்ஸ்) 90 சதவிகிதத்தை ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ 12 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கட்டணமாக ரூ. 1,000 கோடி ‘இஸ்ரோ’வுக்குச் செலுத்துவது என்றும் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம்செய்துகொண்டன.
ஆமாம்... நான் தரகு வேலைதான் பார்க்கிறேன்: சோ
சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?
நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்). நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!
இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?
குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.
குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான மாயா கோட்னானி குற்றவாளி என்று கூறி 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இருக்கிறது நீதிமன்றம். குஜராத் வெறியாட்டங்களில் பாஜகவின் கரங்கள் இருந்ததை இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா?
மாயா கோட்னானி கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றுதானே தீர்ப்பு வந்திருக்கிறது? இதை எப்படி பாஜகவுடன் தொடர்புபடுத்துவீர்கள்? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இருக்கிறார். ஏதோ ஒரு கட்சியை அவர் சார்ந்து இருக்கிறார். அவர் ஏதோ ஒரு குற்றம் செய்கிறார். அது எப்படி அந்தக் கட்சியின் குற்றம் ஆகும்?
அப்படி என்றால், இப்போதும் பிரதமர் பதவிக்கு மோடியைத் தூக்கிப் பிடிப்பதில் இருந்து நீங்கள் மாறவில்லை? ஏன் மாற வேண்டும்? மாறுவதற்கு இடையில் எதுவும் நடந்துவிடவில்லையே?
மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பதுபோல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!
அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்எஸ்எஸ் விடுத்த மறைமுகச் செய்தியா?
ஆர்எஸ்எஸ் அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வ ளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பாஜகவை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகம் மாறியிருப்பதன் மூலம் பாஜகவின் முகம் முழுக்க அம்பலமாகிவிட்டது. இனியும்கூட பாஜகவைத் தாங்கிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
பாஜகவில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பாஜகதானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பாஜகவின் பெரும்பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார்களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கிரஸில் அப்படிச் சொல்ல முடியாது.
சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?
இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப்பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச் சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஜெயலலிதா ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.
ஒரு வருடம் முடிந்துவிட்டதே...
அது ஒரு பெரிய காலகட்டம் இல்லை என்கிறேன்.
தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரிகள் மாற்றக் குளறுபடிகள்... எல்லாவற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர்களா?
ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத்தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை. கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, திமுக ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!
நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது; அமைச்சர்கள் செயல்படவே இல்லை...
காவல் துறை சீரமைக்கப்பட்டு இருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கிறார்கள். ஒரு பெரிய ஊழல் - கிரானைட் ஊழல் வெளிக்கொண்டுவரப்பட்டு இருக்கிறது. பலரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கல்வித் துறைக்குப் பெரிய கவனம் கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் செயல்படாமல் இவை எல்லாம் எப்படி நடக்கும்? சரியான திசையில்தான் இந்த அரசு போய்க்கொண்டு இருக்கிறது!
ஊழல் மீதான அரசின் நடவடிக்கைபற்றிக் குறிப்பிட்டீர்கள். அரசு உறுதியாகச் செயல்படுகிறது என்றால், கிரானைட் ஊழல் சம்பந்தப்பட்ட அத்தனை துறை அலுவலர்களையும் கூண்டோடு தூக்கியிருக்க வேண்டும்... இல்லையா?
இப்போதுதானே நடவடிக்கைகள் ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்திருந்து பாருங்கள்.
சரி, இவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதாக நீங்கள் சொல்லும் அரசில் உங்கள் பார்வையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று தமிழக அமைச்சர்களைக் கூறுங்களேன் பார்ப்போம்?
பொதுவாக எந்த அமைச்சரவையைப் பற்றியும் அந்த மாதிரி குறிப்பிட்டு நான் பேசுவது இல்லை!
ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?
அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.
சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?
எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதாவையோ, அதிமுகவையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக்கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கையாக இது இருக்கலாம்.
ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பிராமண லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் சொல்வதுபோல வைத்துக்கொண்டால், நான் அதிமுகவைக் கைப்பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவனாகிவிடுவேன். அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங்கள்... அவ்வளவு பெரிய மடையனா நான்? ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை. மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்டிஆர், எம்ஜிஆர், வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா என்ன? அப்போது எல்லாம் இந்தப் பிராமண லாபி குற்றச்சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?
சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதை வைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!
ஒரு பத்திரிகையாளராகச் சொல்லுங்கள்... முதல்வருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அரசின் மீது சிறு விமர்சனம் என்றால்கூட வழக்குகள் பாய்கின்றன. ஜனநாயக விரோத அணுகுமுறை இல்லையா இது?
முதல்வரின் வேலை என்ன... எப்போதும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதா? முதல்வர் ஒன்றும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லையே, பத்திரிகையாளர்களைத் தினமும் சந்திக்க. அப்புறம், நான் பத்திரிகையாளன் என்றால், நான் எழுதுவதற்கேற்ற பலன்களை நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நானே 'துக்ளக்’குக் காக எவ்வளவோ வழக்குகளைச் சந்தித்து இருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள், அதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அல்லது ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அலுவலர்போல...
அதிமுகவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்றோ, ஜெயலலிதாவின் புகழும் வெற்றிகளும் பாதிக்கப்பட வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அப்படியிருக்க இந்த மாதிரி பதவிகளுக்கு நான் ஏன் ஆசைப்படப்போகிறேன்?
வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?
எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!
ஆனந்த விகடன் 2012
கேரளத்தில் உருவாகும் கும்பல் ஆவேசம்: பால் சக்கரியா
பால் சக்கரியா. மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேல் தமிழகம், தமிழர்கள்பால் மிகுந்த நேசம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.
இந்தியா உடைந்தால்...
‘‘எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - கோயபல்ஸ்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற அந்தச் சின்ன செய்தி வெளியானது 1962-ல். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது ‘மலையாள மனோரமா’ பத்திரிகை மூலம். பி.ஜி. குரியகோஸ் எழுதிய அந்தச் செய்தி அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்றுவரை அந்தப் பொய்யே ஆள்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற அந்தச் சின்ன செய்தி வெளியானது 1962-ல். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது ‘மலையாள மனோரமா’ பத்திரிகை மூலம். பி.ஜி. குரியகோஸ் எழுதிய அந்தச் செய்தி அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்றுவரை அந்தப் பொய்யே ஆள்கிறது.
சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?
இந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!
''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய ஊடகங்களின் தலைபோகும் கவலை.
விலைவாசி உயர்வின் விலை!
சென்னை. மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் மாநகரப் பேருந்து.
''ஏப்பா... கோயம்பேடு போவணும், தி.நகராண்ட எறக்கிவிடுறியா?"
''பெரிசு இன்னும் நாலு ரூவா குடு."
"ஏப்பா தி.நகருக்கு ஒம்பது ரூவாயா?"
அதிர்ச்சியில் உறையும் அந்தப் பெரியவர் தனக்குள் முனக ஆரம்பிக்கிறார்.
"நாலு எட்டுல இருக்குற எடத்துக்கு ஒம்போது ரூவா. அப்ப டீ எட்டு ரூவா ஆயிடுமா? ஈபிக்காரன் யூனிட்டு ஒரு ரூவா போட்டப்பவே அஞ்சு ரூவா வாங்குனான் வீட்டுக்காரன். இப்பம் பத்து ரூவா கேட்பான்!"
-விலைவாசி உயர்வை அரசாங்கம் பைசாக்களில் கணக்கிடுகிறது. மக்களோ அதை வலியால் கணக்கி்டுகிறார்கள்.
''ஏப்பா... கோயம்பேடு போவணும், தி.நகராண்ட எறக்கிவிடுறியா?"
''பெரிசு இன்னும் நாலு ரூவா குடு."
"ஏப்பா தி.நகருக்கு ஒம்பது ரூவாயா?"
அதிர்ச்சியில் உறையும் அந்தப் பெரியவர் தனக்குள் முனக ஆரம்பிக்கிறார்.
"நாலு எட்டுல இருக்குற எடத்துக்கு ஒம்போது ரூவா. அப்ப டீ எட்டு ரூவா ஆயிடுமா? ஈபிக்காரன் யூனிட்டு ஒரு ரூவா போட்டப்பவே அஞ்சு ரூவா வாங்குனான் வீட்டுக்காரன். இப்பம் பத்து ரூவா கேட்பான்!"
-விலைவாசி உயர்வை அரசாங்கம் பைசாக்களில் கணக்கிடுகிறது. மக்களோ அதை வலியால் கணக்கி்டுகிறார்கள்.
தற்கொலை இந்தியா!
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்! தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் இந்தக் கணக்கின்படி பார்த்தால், நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 15 பேர்!
இந்தக் கணக்கில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தற்கொலை செய்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நாட்டில் பொருளா தார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவாகி இருக்கும் முதல் இரு இடங்கள் நாட்டின் மென்பொருள் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை. இதேபோல, நாட்டின் ஆயத்தஆடைக் கேந்திரமான திருப்பூரிலும் தற்கொலைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழிலில் இருந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், மாணவர்கள் தற்கொலை விகிதம் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 26 சதவிகிதம்!
இது அரசு சொல்லும் கணக்கு. அரசு ஏற்க மறுக்கும் இன்னொரு கணக்கும் உண்டு. இந்தியாவில் அரை மணி நேரத் துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் வரலாற்றிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவான இடமாக உருவெடுத்திருக்கிறது மகாராஷ்டிரத்தின் விதர்பா. இங்கு தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகள்.
பெங்களூரு பொறியாளர்கள், திருப்பூர் தொழிலாளிகள், விதர்பா விவசாயிகள், டெல்லி மாணவர்கள்... இந்தத் தற்கொலைகள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியுமா? அடுத்த வேளைக்கே வழி தெரியாத விதர்பா விவசாயத் தொழிலாளி யின் தற்கொலையும் உச்சபட்ச ஊதிய விகிதத்தை அனுபவிக்கும் பெங்களூரு பொறியாளனின் தற்கொலையும் உணர்த்தும் செய்தி என்ன?
இந்தியா இருள்கிறது!
மன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று தில்லியில் அரசு ஆதரவு உளடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடி கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதேநாளில்தான் இந்திய அணுசக்தித் துறை மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நியச் சக்திகள் இருக்கலாம் என்றும் ரூ. 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு.
கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று தில்லியில் அரசு ஆதரவு உளடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடி கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதேநாளில்தான் இந்திய அணுசக்தித் துறை மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நியச் சக்திகள் இருக்கலாம் என்றும் ரூ. 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு.
‘‘ஒரே தீர்வு: புரட்சி!’’
அமெரிக்கா நீண்ட காலமாக தன் நாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்காவை மறைத்துவைத்து இருந்தது. அந்த இன்னொரு அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலையற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டனிலும் சியாட்டிலிலும் சாக்ரோமண்டோவிலும் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் அமெரிக்கர்கள் நிறைந்த அமெரிக்கா அது!
வாச்சாத்தி ஒரு தொடக்கப்புள்ளி ஆகட்டும்!
வாச்சாத்தியில் அந்த பயங்கரம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடையாள அணிவகுப்பு அது. வாச்சாத்தி வன்முறையில் ஈடுபட்ட 269 பேருடன் மேலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்திவைக்கப்பட்டு ஐம்பது ஐம்பது பேராக அந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட வேண்டும். வாச்சாத்தி பெண்கள் சரியாக அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் துல்லியமாக அடையாளம் காட்டினர். அப்போது நீதிபதி அசோக்குமாரிடம் ஒரு பெண் சொன்னார்: ‘‘இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையையே சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?’’
இதுதான் வேறுபாடு. வாச்சாத்தி பயங்கரம் நமக்கு ஒரு சம்பவம். அவர்களுக்கோ அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பகுதி!
இதுதான் வேறுபாடு. வாச்சாத்தி பயங்கரம் நமக்கு ஒரு சம்பவம். அவர்களுக்கோ அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பகுதி!
துன்பம் வரும்போது சிரியுங்கள்!
இந்தச் செய்திகளைக் கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.
‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’
‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’
- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.
‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’
‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’
- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.
இந்தியா இதை யோசிக்கலாம்!
‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது?’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.
தங்கமே தங்கம்!
இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்த கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.
ஒபாமாவுக்கு பஸ்! மன்மோகனுக்கு?
பராக் ஒபாமா இப்போது பஸ் பயணங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு சாமானியர்களுடனான இத்தகைய பயணங்கள் அவருக்கு உதவும் என்று கூறுகிறார்கள் அவருடைய கட்சியினர். அமெரிக்கர்கள் இதைச் சட்டை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராகிக்கொண்டு இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்த நிலைக்குப் பின் பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்க எதிர்க்கட்சியினருடன் நடத்திய பனிப்போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல் முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை ‘ஏஏஏ’ _ மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து அடுத்த நிலையான ‘ஏஏ+’-க்குத் தரம் இறக்கிய பின் ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத்தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.
ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்?
ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்?
சென்னை யாருடைய நகரம்?
சென்னையின் பூர்வக்குடிகள் சோழ மண்டலக் கடற்கரையோரச் செம்படவர்கள். சென்னையின் சில பகுதிகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு இணையான தொன்மை வாய்ந்தவை. இந்த வரலாறு இன்றைக்கு எடுபடாது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிந்தைய, ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட 1640-க்குப் பிந்தைய வரலாறே சென்னையின் இன்றைய வரலாறு. சென்னையின் பூர்வக்குடிகளுக்கு இன்றைய பிரமாண்டமான நவீன சென்னையில் எந்தப் பங்கும் கிடையாது. புதிய வரலாற்றின் அடிப்படையில், சென்னையின் 372-வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளான இன்றைய சென்னைத் தமிழர்கள். வரலாற்றைத் திருப்புவதில் எப்போதுமே வந்தேறிகள் முக்கியமானவர்கள். சென்னையின் வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது வந்தேறிகளால். ஒரே வரியில் சொல்வது என்றால், தொழில் - வேலைவாய்ப்புகள் ரீதியாக தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!
இலவசங்களின் விலை!
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவருடைய திட்டங்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் இப்போது தன்னுடைய ஆட்சியின் பயணத்தைத் தொடங்கி இருப்பது கருணாநிதியின் பாதையில்தான்! முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்த அரசு பயணிக்கப் போகும் பாதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இலவச அரசியலில் எந்த வகையிலும் நாங்கள் தி.மு.க-வுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லாமல் சொல்கின்றன ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள்!
இது மன்மோகன்களின் காலம்!
மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் யாவும் ஆதரவு தெரிவித்துவிட்டன. சீனாவும் ஆதரிக்கிறது; இந்தியாவும் ஆதரிக்கிறது. வடகொரியாவும் ஆதரிக்கிறது; இலங்கையும் ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகின் வெளியுறவுக் கொள்கையும் எப்படி ஒன்றானது?
சமச்சீர்க் கல்வி எனும் பெருங்கனவு
அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, நம்முடைய அரசியல்வாதிகளால் மிகப் பெரிய விஷயங்களில்கூட எவ்வளவு சர்வ சாதாரணமாகவும் வேகமாகவும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதைப் பார்க்கும்போது!
புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் அது. சில மணி நேரங்கள் மட்டுமே கூட்டம் நடக்கிறது. விவாதங்கள் ஏதும் இல்லை. கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடு குடியரசான காலம் தொட்டு முதல் முறையாக மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுவது என்பது முதல், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது வரை!தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!
கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்ட பின் வெள்ளை மாளிகை தனது மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். வரும் செப். 11 வரை கொண்டாட்டங்கள் தொடரலாம்!
ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடனின் ஒரே சாதனை என்ன? ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன!ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதைத்தான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’யாக நான் நினைக்கிறேன்!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?
ஆனந்த விகடன் 2011
உலகின் மனசாட்சியை உலுக்கட்டும் - விசுவநாதன் உருத்திரகுமாரன்
விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறார் உருத்திரகுமாரன். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களால் தப்பிக்கிறார். நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
மனிதகொல்லிகள்!

எண்டோசல்ஃபான்.
1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டிகாவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன. மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!
தேவைதானா கருப்புச் சட்டம்?
‘‘இந்தியக் குடிமக்களின் சுதந்திர உணர்வைத் தடுக்கக் கூடிய சட்டங்களிலேயே முதன்மையானது இந்தச் சட்டம்தான். அரசாங்கம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்களாலோ, தண்டனைகளாலோ அரசாங்கத்தின் மீது நேசத்தை உருவாக்கிவிட முடியாது.’’
- 1922-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்தில் வாதாடியபோது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ‘124ஏ’ மீது முன்வைத்த விமர்சனம் இது!
- 1922-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்தில் வாதாடியபோது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ‘124ஏ’ மீது முன்வைத்த விமர்சனம் இது!
வரலாற்றில் நம்முடைய இடம் எது?
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும் என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும்.
வரலாறு என்பது எப்போதுமே இப்படிதான். அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?
புலி அரசியல்!
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.
‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’
இந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை!
- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.
‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’
இந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை!
இன்னொரு பனிப்போர் உருவாக்கப்படுகிறதா?
புது தில்லி இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,64,415 கோடி என அறிவித்த அடுத்த சில நாட்களில் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4,57,500 கோடி என்று அறிவித்திருக்கிறது பெய்ஜிங். ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா 11.6 சதம் அதிகரித்திருக்கிறது; சீனா 12.7 சதம்!
தினமணியிலிருந்து ஆனந்த விகடனுக்கு..!
(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!
இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?
அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?
இல்லை.
ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?
கிடையாது.
அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?
ம்.. ஹூம்.
இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.
அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?
வெற்றிகரமான பதிப்பாளராவது எப்படி?
சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு வாரம் அலைந்தால் தமிழ்ப் பதிப்புத் துறையின் அவ்வளவு தொழில் சூட்சுமங்களையும் தெரிந்துகொண்டு விடலாம் போலிருக்கிறது.
தமிழ்ப் பதிப்புத் துறையை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குக் காணக் கிடைக்கும் பிம்பங்கள் மிகக் கௌரவமானவை. ஆனால், உள்ளே தெரியும் பிம்பங்களோ மிக மோசமானவை. அதேசமயம், பரிதாபத்தை ஏற்படுத்துபவையும்கூட. தமிழகத்தில் அறிவுசார் தளத்தைக் கட்டமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும் பதிப்புத் துறையில் இன்றைக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? (எந்த எழுத்தாளரும் எழுதி, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்க வாய்ப்பில்லை என்பதால், பதிப்புத் துறைக்குப் புதிதாக வரும் அப்பாவிகளின் நலன் கருதி இந்த 10 ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.)
விடுவிக்கப்படுவாரா பெரியார்?
![]() |
| திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றி கிடப்பில்
போடப்பட்டிருக்கும் பெரியார் பயன்படுத்திய வேன். (வலது) பெரியார் கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்'. |
திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.
அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973-ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு. குப்பையாகக் கிடக்கிறது. அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிகம் கல்லா கட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.
இந்த நாடு யாருடையது?
இந்தியர்களுக்கு ஊழல் அந்நியமல்ல. உண்மையை ஒத்துக்கொள்வதில் நமக்குச் சங்கடம் இல்லை என்றால், அது இந்திய வாழ்வின் ஓர் அங்கம். இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், முதன்மைச் செயலர்களில் தொடங்கி ஊராட்சி மன்ற உறுப்பினர், உதவியாளர்கள் வரை எவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊழலை எதிர்கொள்கிறோம். நம் வீட்டுக்கு மிக அருகிலும் அல்லது வீட்டுக்குள்ளேயும்கூட ஊழலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை எதிர்ப்பதில்லை. தேவைப்படும் தருணங்களில் அவர்களுடன் கலப்பதிலும்கூட நமக்குச் சங்கடம் இருப்பதில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












































