நண்பர்களுக்கு... ஒரு தகவலுக்காக...
நான் 'ஆனந்த விகடன்’ பணியில் இருந்து விலகிவிட்டேன். 'புதிய தலைமுறை' நிறுவனம் புதிதாகத் தொடங்க உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து இருக்கிறேன்.
பன்னிரெண்டு ஆண்டு ஊடக அனுபவத்தில் இது மூன்றாவது தாவல். முதல் பணி 'தினமல'ரில். அடுத்து 'தினமணி'. அதற்கடுத்து 'ஆனந்த விகடன்'. இப்போது 'புதிய தலைமுறை.' முதல் தாவல் நான் மகிழ்ச்சியோடு உருவாக்கிக்கொண்டது. மற்ற அனைத்துமே காலம் உருவாக்கியது. அது கிடக்கிறது... ஒவ்வோர் இடத்திலும் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன்; இழந்தும் இருக்கிறேன். தினமலரில் திரு. சேகர் சார், தினமணியில் திரு. வைத்தியநாதன் சார், திரு. சிவக்குமார் சார்... எங்கும்விட நான் நிறையக் கற்றுக்கொண்டதும் நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதித்ததும் விகடனில்தான். திரு. பாண்டியன் சார், திரு. மானா சார், திரு. சிவசு சார், திரு. கதிரேசன் சார், நண்பர்கள் கார்த்தி, கலீல், சுகுணா, சஞ்சீவ், பாரதி தம்பி, சரண், கவின், ஆதி, ராஜன், முத்துக்குமார், அண்ணன் ராஜசேகரன், தம்பிகள் ராஜீவ், நாகப்பன்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். முக்கியமாக... நன்றி கண்ணன் சார்!

பின்குறிப்பு: என்னுடைய செல்பேசி எண் மாறி இருக்கிறது. நண்பர்கள் தொடர்புக்கு: writersamas@gmail.com கட்டுரைகள் வழக்கம்போல இந்தத் தளத்தில் வாராவாரம் காணக் கிடைக்கும்!