திமுக மாவட்டச் செயலாளர் போர்த் தளபதி மாதிரி தயாராக இருக்க வேண்டும்: பொன்முடி


திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி அரசியல் அறிவியல் பட்டதாரி. கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். திமுகவின் உயர்நிலைக் குழுவிலும் கருணாநிதியின் அணுக்க வட்டத்திலும் இடம்பெற்றிருக்கும் பொன்முடி, இன்றும் விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகவும் நீடிப்பவர். கட்சியின் மேல்மட்டம் தொடங்கி வேர்மட்டம் வரை முழு அமைப்போடும் நேரடித் தொடர்பில் இருப்பவர், திமுக அமைப்புரீதியாக எப்படிச் செயல்படுகிறது என்பதை விவரித்தார்.

திமுகவின் கட்டுக்கோப்புக்கு ஜனநாயகமே காரணம்- துரைமுருகன்


திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த வரிசைத் தலைவர்களில் முக்கியமானவர் என்பதோடு, அவருடைய அன்றாட ஜமாவிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் துரைமுருகன். 1971-ல் சட்ட மன்றத்தில் நுழைந்த துரைமுருகனிடம்தான் கருணாநிதி தன் பொறுப்பில் வைத்திருந்த பொதுப்பணித் துறையைக் கையளித்தார். தமிழக நீர்நிலைகளை முற்றுமுதலாக உணர்ந்தவர் என்று கருணாநிதியிடம் பெயரும் வாங்கினார். ஒரு அரசியல் தலைவராக, கட்சியையும் ஆட்சியையும் எப்படி கருணாநிதி கையாண்டார் என்பதை துரைமுருகன் பகிர்ந்துகொண்டார்.

கருணாநிதியின் ஜமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் நீடிக்கிறீர்கள்... என்னவெல்லாம் பேசுவீர்கள்?
அவருக்கும் எனக்கும் 15 வயது வித்தியாசம். அடுத்தடுத்த தலைமுறையினர் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் பெரிய ஆர்வம் அவருக்கு உண்டு. அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவனாக நான் அவர் வீட்டுக்குள் போனேன். கட்சிக்குள் அடுத்தடுத்த மட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, தேசிய அரசியல் எப்படிப் போகிறது, புதிதாக என்ன நாவல் வந்திருக்கிறது, புதிதாக வந்த சினிமாவில் எது நன்றாக இருக்கிறது - இப்படி எதுபற்றியும் பேசுவோம். வரையறை எல்லாம் கிடையாது. அவர் அதிகமாக எதைப் பேசுவார் என்றால், இயக்கம் கடந்துவந்த பாதையைப் பேசுவார். வெளியூர்ப் பயணங்கள் என்றால், வண்டி ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போது அந்தந்த ஊர் முன்னோடிகள், அவர்களுடைய தியாகங்களைச் சொல்வார். அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கட்சி வரலாற்றைக் கடத்திவிட வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருப்பார்.

லண்டன்: மிட்டாய்க்குள் கிராமம்குளிர் அப்பிக்கொண்டது. கைகளை இறுகக் கட்டிக்கொண்டேன். இந்தியாவில் எவ்வளவோ சுற்றியிருக்கிறேன் என்றாலும், இந்தக் குளிர் அந்நியமாக இருந்தது. விரல்கள் ஐஸ் வில்லைகள் மாதிரி இருந்தன. ஹெலன் கை குலுக்கினார். “ஒரு காபியோடு நாம் இங்கிருந்து புறப்படலாம். குளிருக்கு ஈடு கொடுக்கும்!” என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயண வழிகாட்டலுக்கு அனுப்பப்பட்டிருந்தவர் இவர். பார்க்க கல்லூரி மாணவிபோல இருந்தார். பிரிட்டன் வரலாறு, பிரிட்டிஷ் சமூகவியலைச் சொல்வதில் மிகுந்த தேர்ச்சியுடன் இருந்தவர் பகுதிநேரப் பணியாக பயண வழிகாட்டியாகப் பணியாற்றுவதாகச் சொன்னார். குறுகிய நாட்களில் பிரிட்டிஷ் வாழ்க்கையைக் கொஞ்சம் ஊடுருவிப் புரிந்துகொள்வதற்கு ஹெலனுடனான சம்பாஷனைகள் பெரிய அளவில் உதவின.

அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள பிணைப்பைக் குறுக்குவெட்டாகப் பார்க்க உதவுகிறது. அகலமான சாலையின் இருபுறங்களி
லும் நீளும் வயற்காட்டின் பெரும் பகுதி தரிசாகக் கிடக்கிறது. பிரதான சாலையிலிருந்து பிரிபடும் கிராமத்துச் சாலைகளின் நுழைவாயிலை ஒட்டி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மரங்கள், பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சமூகச் சூழலைச் சொல்கின்றன. சிறுத்தைகள், சிங்கங்கள் படங்களும் பொம்மைகளும் மாறி மாறி கடக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான மக்கள் வறண்ட கண்களுடனேயே நிற்கிறார்கள். வழிநெடுகிலும் தென்படும் மாடுகள் விவசாயிகளை மேய்ச்சல் எப்படி காத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கின்றன. ராமதாஸ் வீட்டு எல்லையின் தொடக்கத்தில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் மூவரின் சிலைகளும் நிற்கின்றன. மதில்கள் உயர்ந்த, மரங்கள் அடர்ந்த வீட்டில் வரவேற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு


விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.

என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.