அவரைப் பற்றிய முதல் அறிமுகமே, “கிறுக்கு, பைத்தியம்” என்ற வசைகளோடுதான் தொடங்கியது. அது சரி, எந்தச் சட்டை போட்டாலும், அந்தச் சட்டையில், ‘மது அருந்தாதீர்கள்; புகை பிடிக்காதீர்கள்; வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற எழுத்துகளோடு நிற்கும் ஒரு மனுஷனை, அரசாங்கமே மது விற்கும் இந்த ஊரில் எப்படிச் சொல்வார்கள்?
டாக்டர் ஃபிராங்ளின் ஆசாத் காந்தியைப் பற்றி சேலத்தில் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாக இருந்தது. “அவரு பேரு பாலகிருஷ்ணன். அவங்கப்பா கிருஷ்ணன் ஒரு காந்தியவாதி. காந்தி பைத்தியம் சின்ன வயசிலேயே இவரையும் புடிச்சிக்கிட்டு. மருத்துவம் படிச்சார். வைத்தியம் செஞ்சார். எம்மதமும் சம்மதம்னு சொல்லிக்கிட்டு, தன் பேரை ஃபிராங்ளின் ஆசாத் காந்தின்னு மாத்திக்கிட்டார். கிட்டத்தட்ட 30 வருஷமா இப்படித்தான். மதுக் கடை வாசல்ல போய் நிப்பார். ‘அய்யா, மது குடிக்காதீங்க, ஒரு வைத்தியனா சொல்றேன். உடம்பு நாசமாயிடும்; குடும்பம் சிதைஞ்சுடும். நாட்டுக்கும் கேடு. தயவுசெஞ்சு விட்டுடுங்க’ன்னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு, ஒவ்வொருத்தர் கால்லயா விழுவார். சில பேர் மாறியிருக்காங்க. பல பேர் திட்டிக்கிட்டே போவாங்க. ‘கிறுக்கா… பைத்தியக்காரா’ன்னு சொல்லி அடிக்கப்போனவங்களும் உண்டு. அவரு இதையெல்லாம் பத்திக் கவலைப்படுற ஆள் இல்லை. வயசு எண்பதைத் தாண்டும். ‘காந்தி குடில்’னு ஒரு ஆசிரமம்கூட உண்டு அவருக்கு.”