தொடங்கியது மோடி vs மோடி ஆட்டம்


டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது.

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட டெல்லி தேர்தல் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மன்மோகன் சிங் மௌனம் காக்க, ப.சிதம்பரம் உதிர்க்கும் அதே வார்த்தைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மறுஒலிபரப்பாகின்றன. அரசின் வியூகவாதியும் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, “டெல்லி தேர்தல் முடிவுகள் அரசின் ‘பொருளாதாரச் சீர்திருத்த’ வேகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது” என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, அரசு பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது அவர் சொல்லும் செய்தி. வெளியே இப்படி வீறாப்பாகப் பேசிக்கொள்வதில் சிக்கல் இல்லை. உள்ளுக்குள்ளும் அப்படியொரு நினைப்பிருந்தால் அது பெரும் ஆபத்து. டெல்லி முடிவு அரசுக்குத் தெளிவாக சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.

அர்விந்த் வெற்றியை எது முக்கியமானதாக்குகிறது?டகங்களுக்குக் எதாவது கிறுக்குப் பிடித்துவிட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.

ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது கிடக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சின்ன பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி மாநில அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”

கேள்வி என்னவென்றால், இவ்வளவு சாதாரணமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றியின் முக்கியத்துவம் இருக்கிறது.

எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கௌதம்!


லகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது.

தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.”

மோடியின் தையல்காரர்!


விபின் சௌஹானும் ஜிதேந்திர சௌஹானும் தம்பி அண்ணன்கள். தங்களுடைய தையல் கடைக்கு ‘ஜேட் ப்ளூ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஹமதாபாத் ஆட்டோக்காரர்களிடம் கேட்டால், ‘மோடியின் தையல் கடை’ என்று சொல்லி வழிகாட்டுவார்கள் அல்லது கொண்டுபோய்விடுவார்கள். அஹமதாபாதில் மட்டும் அல்ல. குஜராத்துக்கு வெளியே நாக்பூர், உதய்பூர், ஜெய்பூர், புணே, ஹைதராபாத் என்று எங்கெல்லாம் ‘ஜேட் ப்ளூ’ கடைகள் இருக்கின்றனவோ எல்லாமே ‘மோடியின் தையல் கடைகள்’தாம். ‘ஜேட் ப்ளூ’ கடைக்காரர்களே அப்படிச் சொல்லித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானியும் ‘ஜேட் ப்ளூ’வின் வாடிக்கையாளர்தான்.