தனக்கென தனிப்
பாரம்பரியம் கொண்ட
ஊர்
கூத்தாநல்லூர். நகரம் என்று
அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒரு
வித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி
வளைகுடா’ என்று
ஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில் இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும்
ஒரு
வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று
அனுபவங்கள் முக்கியமானவை. நீண்ட
வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும் வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும் நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் - தம்ரூட்.
கூத்தாநல்லூர் தம்ரூட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூத்தாநல்லூர் தம்ரூட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
