புது தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த மறு வாரம். மும்பை, ஜெய்பூர், பெங்களூர், ஆமதாபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும் முஸ்லிம்கள் கைதும் ஒரு சேர நடந்த நேரம். முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விவாதங்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எவ்வித மதப் பேதமுமற்ற சாதாரண இந்துக்களிடமும்கூட கசப்பான வார்த்தைகளையும் முணுமுணுப்புகளையும் கேட்க முடிந்தது. பயங்கரவாதத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருந்தனர். "தேச விரோத நடவடிக்கைகளுக்கான பொறுப்பு தங்கள் மீதே சுமத்தப்படுவது ஏன் என முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள். மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் ஒரு சமூகத்தின் மீதான பார்வையையே மாற்றிக்கொண்டிருப்பதையும் சந்தேகம், விரோதம், புறக்கணிப்பு, அவமதிப்பால் முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ஏறத்தாழ செப். 29-ல் மலேகானில் குண்டுகள் வெடிக்கும் வரை இந்த விவாதங்கள் தொடர்ந்தன. மலேகான் சம்பவத்துக்கும்கூட 'முஸ்லிம் தீவிரவாதி'களே காரணம் என்று உள்ளூர் போலீஸ்காரர்கள் முதலில் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், வழக்கு மஹாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை விசாரணைக்கு வந்ததும் எல்லாமும் மாறியது. விவாதங்கள் நின்றுவிட்டன. சிறப்புச் செய்திகள், கட்டுரைகள் நின்றுவிட்டன. மறு பரிசீலனை அறிவுரைகள் நின்றுவிட்டன. ஓர் அசாத்தியமான அமைதி மட்டுமே நிலவுகிறது. ஏன்?
காவி பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யார் அந்த நீதிமான்?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)