வாராணசியில், “இந்தியப் பிரதமர்களில் அரிதானவர்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தால் புகழப்பட்ட நாளில், மேடை பின்னணியில் படமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் ஆன்மா என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களைச் சுவீகரித்துக்கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக அரசின் செயல்திட்டத்தின் சமீபத்திய இலக்கு சாஸ்திரி. மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கையில் இப்படி 72 பெயர்களைக் கொண்ட பட்டியல் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் முன்னோடிகளான வீர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாய, ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களைக் காட்டிலும் இந்துத்துவப் பரிவாரங்களோடு சம்பந்தமில்லாதவர்கள்/ காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். காங்கிரஸ் - பாஜக இரு முகாம்களுக்கும் அப்பாற்பட்ட அரவிந்தர், விவேகானந்தர், பாரதியார், தாகூர், அம்பேத்கர், பகத் சிங், தெரசா ஆகியோரின் பெயர்களும்கூடப் பட்டியலில் உண்டு. பிரதான நோக்கம், இந்திய மக்களிடம் காங்கிரஸுக்கு இன்றைக்கும் இருக்கும் அதன் ஆதார பலம் எதுவோ- அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை- நொறுக்கித்தள்ளுவது. நுட்பமான அரசியலின்படி, இனி தேசப்பிதா காந்தியும் இந்துத்துவ சித்தாந்தங்களின் பிதாமகனான வீர சாவர்க்கரும் சரிசமமான இருக்கைகளில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும், இந்துத்துவ ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய அபுல் கலாம் ஆசாத் இனி நினைவுகூரப்படுவார், அவருடைய கல்விச் சேவைக்காக மட்டும். நேரடியான உதாரணம், வழக்கமாக இந்தியப் பிரதமர்கள் எப்போதும் அக்டோபர் 30 அன்று இந்திரா காந்தியை நினைவுகூர்வார்கள். இந்த முறை மோடி, அன்றைய தினத்தன்று படேலின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். காங்கிரஸின் கை விரலையே எடுத்து, அதன் கண்ணையே குத்திக் குருடாக்கும் உத்தி இது.
சாஸ்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மோடிகள், பாகவத்துகள், கார்த்திகள் யுகத்தில் சாஸ்திரிகள்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)