அல்வா!
இந்தப் பெயரைக் கேட்டாலே, திருநெல்வேலி நினைவு வருவது
தவிர்க்க முடியாதது. ஆனால்,
உலகம்
முழுக்க திருநெல்வேலி அல்வா
கொடி
பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னோர் ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது
– மன்னார்குடி!
நாள்தோறும் வீதியோரம் அல்வாக் கடை
வாசல்களில் நின்று, ஒரு
கடமையைச் செய்வதுபோல துண்டு
இலைகளில் அல்வாவை வைத்து
ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த
ஊரிலேனும் காண
முடியுமா?! போகட்டும். பால்
சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி
எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்!

