ஆறேழு ஆண்டுகள் இருக்கும், திருச்சியில் இருந்தபோது நடந்தது. வெளியூரிலிருந்து நண்பர் வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு அவருக்கு வண்டி. வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முன்கூட்டியே இரண்டரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டோம். வீதி இருண்டு கிடந்தது. செல்பேசி விளக்கின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நூறடி நகர்ந்திருக்காது. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்தது அலறல். சட்டென இன்னதென்று யூகிக்க முடியவில்லை. அமைதி. திரும்பவும் அலறல். கூடவே நாய்களின் உறுமல். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது, கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன கொட்டைகையின் முன்நடுக்கத்தோடு ஒடுங்கி நின்றுகொண்டிருந்தார் ஒரு பெரியவர். மூன்று நாய்கள் அவர் அருகே. உறுமிக்கொண்டு பாய்ந்துவிடத் தயாராக நின்றன. கையில் வைத்திருக்கும் காலி துணிப்பைகளை வைத்துக்கொண்டு “ச்சூ… ச்சூ…போ” என்றார் பெரியவர். நண்பர் கற்களை அள்ளி வீசினார். நாய்கள் சிதறி ஓடின. அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் பெரியவருக்குப் பதற்றமும் பதைபதைப்பும் நீங்கவில்லை. பேச முடியவில்லை. நாங்கள் புறப்பட்டோம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்பும்போது, மணி ஏழரை இருக்கும். அப்போதுதான் கவனித்தேன். ஒரு ரேஷன் கடையின் முன்பகுதி அந்தக் கொட்டகை. அந்தப் பெரியவர் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்குப் பின் இருபது முப்பது பேர். கிட்ட நெருங்கிப் பார்த்தால், பெரியவரின் கண்கள் மூடியிருந்தன. தூக்கத்தில் இருப்பதுபோல இருந்தது. முன்னும் பின்னும் வரிசையில் மனிதர்களோடு பைகள், கற்களும் கலந்திருந்தன. “எல்லாம் பருப்புக்காக” என்றார்கள் நின்றவர்கள்.
நடிகர் சங்கத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காண்டாமிருகங்கள் ஆகிறோம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)