குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!


யார் இந்த ஹர்திக் படேல்?

ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

யார் இந்த ஹர்திக் படேல்?

சின்னச் சின்ன ஊர்களில்கூட அவர் கூட்டிய கூட்டங்களுக்கு 5,000 பேருக்குக் குறையாமல் கூடுகிறார்கள். வடோதராவில் 50,000 பேர், சூரத்தில் 2 லட்சம் பேர், அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் என அவர் கூட்டும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் திரளும் மக்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அவருடைய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய ஒரு நாள் முழு அடைப்பு அன்று அகமதாபாத்தில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத்தும் ஸ்தம்பித்திருக்கிறது.

யார் இந்த ஹர்திக் படேல்?

ஹர்திக் படேலின் கதையை எழுத ஒரு பெரும் ஊடகக் கூட்டம் அலைகிறது. அவரது சொந்தப் பகுதியான விரம்கம்மில் உள்ள தெரு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவருடன் ஓடி விளையாடிய நண்பர்கள், படித்த கல்லூரி என்று தொடங்கி இரு மாதங்களுக்கு முன் அவர் தொடங்கிய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’யின் விஸ்வரூபத்தின் பின்னுள்ள அரசியல்வாதிகள் யார் என்பது வரை அந்தக் கூட்டம் தேடியலைகிறது. ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவைப்படலாம். ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவையில்லை. வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டினால் போதும்.

கூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு?


சிங்கப்பூர் தனி தேசமாக உருவானதன் பொன்விழா ஆண்டு இது. “உலக நாடுகள் நகரக் கட்டமைப்புருவாக்கம் சார்ந்து சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் நண்பர் மு.ராமநாதன். ஹாங்காங்கில் வசிக்கும் பொறியாளரும் எழுத்தாளருமான ராமநாதனுக்கு நகர நிர்மாணம் தொடர்பாக ஆழ்ந்த பார்வை உண்டு. பேச்சு இயல்பாக ஹாங்காங் பக்கம் திரும்பியபோது, ஹாங்காங் கூண்டு வீடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஹாங்காங்கின் கூண்டு வீடுகளும் அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழலும் இன்றைக்கு நகர்மயமாக்கல் ஆய்வாளர்கள் மத்தியில் உலகப் பிரசித்தம்.

சென்னை ஏன் புழுங்குகிறது?

படம்: பாலாஜி மஹேஷ்வர்

ன்னார்குடியில் ‘மதராஸ் ஓட்டல்’என்று ஓர் உணவகம் உண்டு. அந்நாட்களில் அரசு இயக்கிய ‘திருவள்ளுவர்’ விரைவுப் பேருந்துகள் ‘சென்னை’ பெயரைச் சுமந்திருக்கும். மதராஸ், சென்னை எனும் வார்த்தைகள் அறிமுகமானது இப்படித்தான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது, “தமிழ்ல சென்னை; அதைத்தான் இங்கிலீஷ்ல மெட்ராஸ்னு சொல்வாங்க” என்றார் சுருக்கமாக. பின்னாளில், சென்னை வரலாற்றைத் தமிழில் எழுதிய ஆய்வாளரான நரசய்யாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், “சென்னப்பட்டினம் வேறு; மதராசப்பட்டினம் வேறு. இரண்டுமே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கே இருந்த கிராமங்கள். இந்தச் சோழ மண்டலக் கடற்கரையின் பல கிராமங்கள் குறைந்தது சில ஆயிரம் வருஷங்கள் பழமையானவை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்த ஊரே உருவானதுபோல ஒரு தோற்றத்தை வந்தேறிகள் உருவாக்கிவிட்டார்கள்.”

தமிழ் இதழியல்: மீண்டு வரும் நாட்கள்!


மிழ் இதழியல் வரலாற்றைப் பற்றிப் பேசச் சொன்னால், பாரதியில் தொடங்கி சோவில் முடித்துவிடுபவர்கள் அனேகம். ஆனால், இந்திய இதழியலின் வரலாறு 1780-ல் ‘பெங்கால் கெஜட்’டிலிருந்து தொடங்குகிறது என்றால், தமிழ்நாட்டு இதழியலின் வரலாறும் 1782-ல் ‘மெட்ராஸ் கூரிய’ரிலிருந்து தொடங்கிவிடுகிறது. தமிழ் இதழியலின் வரலாறு 1840-ல் ‘தினவர்த்தமானி’யிலிருந்து தொடங்கிவிடுகிறது. அங்கிருந்து தொடங்கினால், இது தமிழ் இதழியலுக்கு 175-வது வருஷம். இந்த ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாற்றைப் பேச நம்மிடம் எத்தனை ஆவணங்கள் இருக்கின்றன?

ஆ.இரா.வேங்கடாசலபதி வரலாற்றின் இருள் மூடிய இடுக்குகளிலிருந்து எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் ஆளுமையை மீட்டெடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துகளின் ஒரு சிறு பகுதியைச் சேகரித்து,  ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். கூடவே அவரைப் பற்றிச் சேகரித்த தகவல்கள் மூலம் அவர் வரலாற்றை எழுதியிருக்கிறார். ஒரு சின்ன புத்தகம். வெறும் 142 பக்கங்கள். ‘சென்று போன நாட்கள்’. 1886-ல் பிறந்து 1935-ல் மறைந்துவிட்ட எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் பத்திரிகையாளனின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் சுமந்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழ் இதழியல் வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

இழிவுக்குரியதா இடஒதுக்கீடு?
ரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மாநாடு ஒன்று மதுரையில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல; இந்தியச் சமூக நீதி வரலாற்றிலும்கூடக் குறிப்பிடத் தக்க நிகழ்வுகளில் ஒன்றாக அது இருக்கலாம். 1800-களில் ஜோதிராவ் புலே கூட்டிய கூட்டங்களுக்கு ஒருவகையில் இன்றைக்கும் முக்கியத்துவம் உண்டு என்றால், தங்கராஜ் இன்றைக்குக் கூட்டிய கூட்டத்துக்கும் பின்னாளில் வேறு ஒருவகையில்  முக்கியத்துவம் இருக்கும்.
யார் இந்த தங்கராஜ்?
அவருடைய பேச்சுகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் ஏகோபித்த பிரதிநிதி / தலைவரைப் போல அவரைக் காட்டுகின்றன. இன்னும் அறிமுகம் வேண்டும் என்றால், நாடறிந்த எழுத்தாளர் - தணிக்கையாளர் - ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக முகம் - குருமூர்த்தியின் ஆசான்.
யார் அப்படிச் சொன்னது?
குருமூர்த்தியே சொல்கிறார்.
சரி, இந்த மாநாட்டின் நோக்கம் என்ன?
தேவேந்திரகுல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; இனி இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வேண்டாம்.
என்னது, இடஒதுக்கீடு வேண்டாமா?
ஆமாம். வேண்டாம்.
ஏன் வேண்டாம்?
அது அவமானம் தருகிறது. அதனால் வேண்டாம்.
யார் சொல்வது?
தங்கராஜே சொல்லிவிட்டார். அப்புறம் இதற்கு குருமூர்த்தியின் ஆசி இருக்கிறது, அப்புறம் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் ஆசி இருக்கிறது, அமித் ஷா சொல்லியிருக்கிறார், 'பிரதமர் மோடியிடம் பேசுகிறேன்' என்று. ஆக, மோடியின் ஆசியும் கிடைக்கலாம்!

மது அரசியலும் மக்கள் அரசியலும்!

வரைப் பற்றிய முதல் அறிமுகமே, “கிறுக்கு, பைத்தியம்” என்ற வசைகளோடுதான் தொடங்கியது. அது சரி, எந்தச் சட்டை போட்டாலும், அந்தச் சட்டையில், ‘மது அருந்தாதீர்கள்; புகை பிடிக்காதீர்கள்; வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற எழுத்துகளோடு நிற்கும் ஒரு மனுஷனை, அரசாங்கமே மது விற்கும் இந்த ஊரில் எப்படிச் சொல்வார்கள்?

டாக்டர் ஃபிராங்ளின் ஆசாத் காந்தியைப் பற்றி சேலத்தில் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாக இருந்தது. “அவரு பேரு பாலகிருஷ்ணன். அவங்கப்பா கிருஷ்ணன் ஒரு காந்தியவாதி. காந்தி பைத்தியம் சின்ன வயசிலேயே இவரையும் புடிச்சிக்கிட்டு. மருத்துவம் படிச்சார். வைத்தியம் செஞ்சார். எம்மதமும் சம்மதம்னு சொல்லிக்கிட்டு, தன் பேரை ஃபிராங்ளின் ஆசாத் காந்தின்னு மாத்திக்கிட்டார். கிட்டத்தட்ட 30 வருஷமா இப்படித்தான். மதுக் கடை வாசல்ல போய் நிப்பார். ‘அய்யா, மது குடிக்காதீங்க, ஒரு வைத்தியனா சொல்றேன். உடம்பு நாசமாயிடும்; குடும்பம் சிதைஞ்சுடும். நாட்டுக்கும் கேடு. தயவுசெஞ்சு விட்டுடுங்க’ன்னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு, ஒவ்வொருத்தர் கால்லயா விழுவார். சில பேர் மாறியிருக்காங்க. பல பேர் திட்டிக்கிட்டே போவாங்க. ‘கிறுக்கா… பைத்தியக்காரா’ன்னு சொல்லி அடிக்கப்போனவங்களும் உண்டு. அவரு இதையெல்லாம் பத்திக் கவலைப்படுற ஆள் இல்லை. வயசு எண்பதைத் தாண்டும். ‘காந்தி குடில்’னு ஒரு ஆசிரமம்கூட உண்டு அவருக்கு.”

யாகூபைப் பின்தொடர்ந்த குரல்களை நாம் தவிர்க்க முடியுமா?


யிரக்கணக்கானோர் கூடிய யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தைப் பத்தோடு ஒன்று பதினொன்று; அத்தோடு சேர்த்து இது ஒன்று என்று விட்டுவிட முடியுமா? இந்தியா அப்படி விட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது.