கைப்பிள்ளை இந்தியா!


ண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

நான் சொன்னேன், “இந்திய ஊடகங்களை ஆங்கில ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர, பொதுவாக நம்முடைய ஊடகங்கள் காப்பி ஊடகங்கள். நம்முடைய ஆங்கில ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களை காப்பியடிக்கின்றன; பிராந்திய ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களை காப்பியடிக்கின்றன.

மேலோட்டமாக இது சாதாரணமான விஷய மாகத் தெரியலாம். அப்படி அல்ல. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற - மேற்கத்திய மன்னராட்சிக் கால - ராபர்ட் கார்லைல் சிந்தனையேகூட மேலோட்டமானதுதான். என்னைக் கேட்டால், ஊடகங்கள்தான் நவீன சமூகத்தின் எதிர்காலத்தைக் கல்வித் துறையோடு சேர்ந்து கட்டியமைக்கும் கொத்தனார்கள் என்று சொல்வேன்.

எங்கிருந்து வருகிறது பார்வை?

இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பார்வை இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மோடியைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மம்தாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். சன்னி லியோனைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்துகளைத் தாண்டி பொதுவில் - நம் அனைவர் மத்தியிலும் - ஒரு கருத்து இருக்கிறது. மன்மோகன் சிங் எதையும் வேகமாகச் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்; மோடி ஒரு காரியக்காரர் என்று நினைக்கிறோம்; மம்தாவைக் கோபக்காரராகவும் சன்னி லியோனை எதற்கும் துணிந்தவராகவும் பார்க்கிறோம். நம்மிடம் இந்தப் பொதுவான பார்வையை உருவாக்கியது யார்? யோசித்துப்பாருங்கள். மன்மோகன் சிங்கையோ சன்னி லியோனையோ நம்மில் எத்தனை பேருக்கு நேரடியாகத் தெரியும்? எந்த அடிப்படையில் நாம் அவர்களைத் தீர்மானிக்கிறோம்? இந்தத் தீர்மானங்கள் மன்மோகன் சிங்கின் எதிர்காலத்தையோ, மோடியின் எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றால், இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்?

சந்தேகமே வேண்டாம். ஜனநாயகத்தில் ஊடகங்கள் அவ்வளவு சக்தி பெற்றிருக்கின்றன. கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் போக்கையே தீர்மானிக்கின்றன. ஆனால், ஒரு சமூகத்தின் பார்வையை உருவாக்கும் ஊடகங்கள் ஒரு நாட்டில், காலனிய இரவல் சிந்தனையோடும் பார்வையோடும்தான் காலம் தள்ளுகின்றன என்றால், அந்தச் சமூகத்தின் - நாட்டின் பார்வையும் சிந்தனையும் எப்படி இருக்கும்?

பங்காளிகள் என்ன சொல்கிறார்கள்?


மீப காலமாக உச்ச நீதிமன்றம், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்தியப் புலனாய்வு அமைப்பு உபயத்தில் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரவி மற்றும் அன்ஷுமன் ருயா, நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், சஞ்சய் சந்திரா, குமார்மங்கலம் பிர்லா என்று பெருநிறுவன முதலாளிகளின் பட்டாளமே ஊழல் - முறைகேடு விசாரணைகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

மக்களாகிய நமக்கு இது களிப்பையும் உவப்பையும் அளிக்கலாம். சரி, நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்?

உள்ளது உள்ளபடி:

இந்தியா ஔரங்கசீப்பின் ஆட்சியில் இல்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவுக்குச் சென்று முதலீடுசெய்ய முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். அங்குதான் பெரும் பணக்காரர்கள் சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். ரஷ்யாவைப் போல இந்தியா மாறிவிடாமல் இருப்பதை நீதித் துறையும் புலனாய்வு அமைப்புகளும் உறுதிசெய்ய வேண்டும்” - அமைச்சர் வீரப்ப மொய்லி.

ஒரு மகத்தான தொழிலதிபர் மீது எப்படி வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது என்பதை யோசித்துப்பார்க்கவே முடியவில்லை. முதலில் தகவல் தொழில்நுட்பத் துறை, அடுத்து எரிசக்தித் துறை, இப்போது நிலக்கரித் துறை என்று வரிசையாகக் கொலை நடக்கிறது... பெருநிறுவன அதிபர்களை அரசு மதிக்கிறது. அவர்களின் நேர்மை குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது” - ஆனந்த ஷர்மா.

சர்வாதிகாரம் X பயங்கரவாதம்
ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சிஎன்பார். நவீன உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.

சுஸ்தர் ஹோல்ச்சருக்கு 16 வயது. அதிகாலையில் 25 கி.மீ. ஓடுகிறார். தோள்பட்டையில் துப்பாக்கி. கடந்த மாதம் வரை சுஸ்தர் மாணவி. இப்போது சிரியாவின் குர்து இனக் குழுக்களில் ஒன்றான குர்திஷ் இஸ்லாமிய விடுதலை முன்னணியின் வீராங்கனை. லட்சியம் சிரிய குர்திஸ்தான். பொது எதிரி பஷார் அல் அஸாத்.

கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் அபு. இப்போது 'இராக் - சிரிய இஸ்லாமிய தேசம்' அமைப்பின் ஜிகாதி. லட்சியம் இராக்-சிரிய இஸ்லாமிய தேசம். பொது எதிரி பஷார் அல் அஸாத்.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் - வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, முரண்பாடான இலக்குகளைக் கொண்டவை, அவற்றில் பல தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்பவை - ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராகக் காட்டுத்தனமாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால்?சிரியாவில் கடந்த 31 மாதங்களில் ஐ.நா. சபையின் கணக்குப்படி 1.2 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சமகாலத்தின் கொடூர வரலாறாகி இருக்கிறது சிரிய உள்நாட்டுப் போர். சிரியத் தாக்குதல்களில் மனித உயிர்களே பிரதான இலக்குகள்.

போதுமே நாடகங்கள்!

             பெரிதும் மதிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டேன்: எனக்குத் தெரிந்து காமன்வெல்த் அமைப்பு உருப்படியாக எதையும் செய்ததில்லை. உங்கள் அனுபவத்தில் அப்படி ஏதும் ஞாபகத்தில் இருக்கிறதா?”

அவர் சொன்னார்: இங்கிலாந்து ராணியிடமே இந்தக் கேள்வியைக் கேட்டாலும், அவரும் இல்லைஎன்றுதான் சொல்வார்.

உண்மை.

இங்கிலாந்து பேரரசின் முன்னாள் காலனி நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அரசுத் தொடர்புகள் நீடிக்க முக்கியமாக, இங்கிலாந்தின் வியாபார நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த். காலனிய ஆதிக்க அடிமைத்தனத்தின் நீட்சியான இந்த அமைப்பில் இப்போது 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இந்த நாடுகள் எந்தச் சட்டத்தாலும் இணைக்கப்படவில்லை. முழுக்க சுயவிருப்பத்தின் அடிப்படையிலான இணைப்பு. உலகப் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே உள்ள இந்த நாடுகளில்தான் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறது. 9.767 டிரில்லியன் டாலர்கள் உற்பத்தி மதிப்பைக் கொண்ட இந்தச் சந்தைதான் காமன்வெல்த்தைப் பிணைத்திருக்கும் ஆதார சுருதி. கலாசாரம், மனித உரிமைகள் என்றெல்லாம் வெளியே கூவினாலும், தடையற்ற வர்த்தக மண்டலம், விசா தேவைப்படாத சுற்றுலா அனுமதி, பொதுவான வெளியுறவுக் கொள்கை போன்ற பொருளாதார நலன்களும் சர்வதேச அரசியல் அபிலாஷைகளுமே காமன்வெல்த்தின் இருப்பைத் தீர்மானிக்கின்றன.

தன்னுடைய உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் சம உரிமையையும் அந்தஸ்தையும் காமன்வெல்த் வழங்குகிறது. எந்த நாட்டையும் இதிலிருந்து யாரும் வெளியேற்ற முடியாது. கொடும் குற்றங்களில் உறுப்பு நாடுகள் ஈடுபட்டாலும்கூட, குறிப்பிட்ட காலகட்டதுக்கு இடைநீக்கம் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை உறுப்பு நாடுகள் தாங்களாக விரும்பினால் தாராளமாக விலகிக்கொள்ளலாம்.

- இப்போது யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் அமைப்பின் மாநாட்டை இலங்கை நடத்தக் கூடாது என்பதிலோ, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதிலோ, இலங்கையை இந்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதிலோ - இலங்கைத் தமிழர்கள் நலன் சார்ந்து - ஏதாவது பைசா பிரயோஜனம் இருக்கிறதா?

பா.ஜ.க. ஆதரவோடு ஜெ. பிரதமரானால் சந்தோஷம் - தா.பாண்டியன்ன்றைக்கும் கட்சித் தொண்டர்களோ, பொதுமக்களோ வீட்டுக்குள் சாதாரணமாக நுழையும் பாங்கோடு இருப்பது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கே உரிய அடையாளம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியனின் வீடும் விதிவிலக்கல்ல. இக்கட்டான காலகட்டத்தில் கட்சி இருக்கும் நிலையில், தனிப்பட்ட வகையிலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார் தா.பாண்டியன். வீட்டில் கட்சித் தோழர்களுடன் சாதாரணராகப் பேசிக்கொண்டிருந்தவர், பேட்டி என்றதும் உற்சாகமாகத் தயாரானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழிவுக் காலச் செயலாளர் என்று உங்களைக் குறிப்பிடலாமா?
மனித குலத்துக்கும் உண்மைக்கும் எவ்வளவு ஆயுளோ அதே ஆயுள் கம்யூனிஸ இயக்கத்துக்கும் உண்டு.

ஒருகாலத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பலமாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வீழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா?
இந்தியாவில் இதுவரை மூன்று முறை ஆளுகிறவர்களால் தடை செய்யப் பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற காலங்களிலும் பெரும்பாலும் வேட்டையாடப் படுகிறவர்களாகத்தான் எங்கள் கட்சியினர் இருந்திருக்கிறோம். அடக்குமுறைக் கால கட்டங்களிலேயேகூட கம்யூனிஸ்ட் கட்சி சேதப்பட்டது உண்டு; செத்துப்போனதில்லை. இப்போதைய பின்னடைவை நாங்கள் உணராமல் இல்லை. மீளக் கட்டியமைக்கும் வேலைகளில்தான் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்டவர்கள் - முக்கியமாக தலித்துகள் - சாதி அடிப்படையில் திரள கம்யூனிஸ இயக்கங்களின் தோல்விதானே காரணம்?
இல்லை... சில தலைவர்களின் பதவி ஆசைதான் காரணம். தலித் இயக்கங்களையே எடுத்துக்கொள் வோம். பிளவுச் சக்திகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். ஒரு தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்போது, அங்கே சென்று சாதியைச் சொல்லிப் பிரிப்பவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்? ஒரு தொழிலாளி பார்ப்பனராக இருந்தாலும் தொழிலாளிதான்; தலித்தாக இருந்தாலும் தொழிலாளிதான், வன்னியராக இருந்தாலும் தொழிலாளிதான் இல்லையா?

மக்கள் போராடினால் எல்லாம் சரியா?


தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோதம். அரசியல் அப்படிக் கட்டமைத்திருக்கிறது. அதனாலேயே எழுதாமல் இருக்க முடியாது.

மக்கள் போராட்டங்கள் சரியா என்று கேட்டால், எல்லாக் காலகட்டங்களிலும் சரி என்ற பதிலே வரலாற்றிலிருந்து கிடைக்கிறது; அதே சமயம், இந்தப் போராட்டங்களினூடே அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா என்று கேட்டால், சரி - தவறு என்கிற பதில்களுக்குமே வரலாற்றில் இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், சரியான தீர்வுகள் மக்களிடமிருந்து வரவில்லை; தொலைநோக்குள்ள தலைவர்களிடமிருந்தே வந்திருக்கின்றன - அப்படிப்பட்ட தீர்வுகளும் வெகுஜன எதிர்பார்ப்புக்கு முரணாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன என்னும் பதிவுகளே அதிகம்.

விஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும்!
வீதியில் விரும்புபவர்கள் எடுத்துச் செல்லவும் தேவைப்பட்ட விட்டுச்செல்லவும் பிரான்ஸ் சைக்கிள் நிறுத்தங்களை அமைக்கலாம்; மெக்கினாக் தீவில் சைக்கிளில் செல்வதற்கென்றே ‘எம்.185’ வீதியை அமெரிக்கா ஒதுக்கலாம்; நாம் இருப்பது இந்தியாவில் அல்லவா? இங்கு எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்.

கொல்கத்தா நகரின் 174 வீதிகளில் சைக்கிள்களை ஓட்டவே கூடாது என்று தடை விதித்திருக்கிறது மம்தாவின்  காவல் துறை.  இவற்றில்  38 வீதிகள் பெரியவை. முட்டுச்சந்துகளும் சந்துபொந்துகளும் நிரம்பிய கொல்கத்தாவில், இந்த வீதிகளைத் தொடாமல், நகரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியாது. ஆக, மறைமுகமாக ஒட்டுமொத்த சைக்கிளோட்டிகளின் காற்றையும் பிடுங்கிவிட்டிருக்கிறார் மம்தா.

“என்னது... சிவாஜி செத்துட்டாரா?”


முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று.
"அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?!