நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது!


ன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் ‘தேசத்தின் மீதான போர்’ என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த ஒரு நகரமாகத்தான் இருந்தது.

முதல் குண்டு வெடித்தது மும்பைப் பங்குச்சந்தையில், அடுத்து கதா பஜார், சேனா பவன், செஞ்சுரி பஜார், மாஹீம், ஏர் இந்தியா வளாகம், சவேரி பஜார், ஹோட்டல் சீராக், பிளாஸா திரையரங்கம், ஜுஹு செந்தூர் ஹோட்டல், விமான நிலையம்… 127 நிமிடங்களில் அடுத்தடுத்து 12 இடங்களில் வெடித்தன குண்டுகள். சர்வதேச அளவில் முதல் முறையாக பயங்கரவாதக் குழுக்களால் ‘ஆர்டிஎக்ஸ்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகப் போருக்குப் பின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதும் இந்தச் சம்பவத்தில்தான். எங்கும் ரத்தச் சகதியும் மரண ஓலமும். 257 பேர் செத்துப்போனார்கள். 713 பேர் படுகாயமுற்றார்கள்.எல்லா மதத்தினரும்தான் அதில் அடங்கியிருந்தார்கள்.

குழந்தைகளின் ராஷ்டிரபதி!
லகுக்கு உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், குழந்தைகளிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும் என்றார் காந்தி. குழந்தைகளின் உலகோடு எப்போதுமே நெருக்கமாகத் தன்னை வைத்துக்கொண்டவர் அவர். நாட்டின் முதல் பிரதமரும் தொலைநோக்காளருமான நேருவிடமும் அந்தப் பண்பு இருந்தது. குழந்தைகள் மீது அவர் காட்டிய அளப்பரிய நேசம், அவர்களுடைய எதிர்காலம் மீதான அவருடைய கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், நாடு முழுவதும் திறக்கப்பட்ட பொதுப் பள்ளிகளில் தொடங்கி எய்ம்ஸ், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். வரை நீண்டது. உண்மையில், சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள் நமக்கு அற்புதமான ஒரு முன்னுதாரணத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கித் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின் அந்த மரபு எங்கே அறுபட்டுப்போனது?

பிரதமர், முதல்வர்கள் இருக்கட்டும்; இன்றைக்கெல்லாம் எத்தனை அமைச்சர்களை மக்களால் நேரடியாக அணுக முடியும்! மூத்தவர்களுக்கே இதுதான் கதி என்றால், சாமானியர்களின் குழந்தைகளையும் பொருட்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்ன? முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமகால இந்திய அரசியல் வர்க்கம் ஏதேனும் கற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், அந்த வரிசையில் முதலாவது இது: குழந்தைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்.

நாங்கள் எங்கே போவது நியாயமாரே?


ட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப்படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள்! - 1957-ல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை.

இந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள் என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறிபார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய அளவுகோல் முன் நிறுத்துவது எந்த அளவுக்குச் சரியானது என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். பெரியார் காலத்துக்கு 42 ஆண்டுகளுக்குப் பின் இதற்கான பதில் நீதி அமைப்புகளிடமிருந்தே வந்திருக்கிறது.

தற்கொலைகளைக் குறைக்க ஒரு அதிரடி வழி: மோடி மந்திரம்!

ரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத்தின் பங்களிப்பு 1.1%. ஆகச் சரிந்த ஒரு காலகட்டத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் பருவநிலையும் ஒருசேர வாட்டிவதைக்கும் காலகட்டத்தில், விவசாயிகளின் தற்கொலைகளை அதிரடியாக, பாதியாகக் குறைப்பது எப்படி? மோடி மந்திரம் உலகுக்கே வழிகாட்டக்கூடும்!

இந்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகளைத் தனித்து வெளியிடுகிறது. இதன்படி, அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை: 1995-ல் 10,720; 1996-ல் 13,729; 1997-ல் 13,622; 1998-ல் 16,015; 1999-ல் 16,082; 2000-ல் 16,603; 2001-ல் 16,415; 2002-ல் 17,971; 2003-ல் 17,164, 2004-ல் 18,241; 2005-ல் 17,131; 2006-ல் 17,060; 2007-ல் 16,632; 2008-ல் 16,196; 2009-ல் 17,368; 2010-ல் 15,964; 2011-ல் 14,027; 2012-ல் 13,754; 2013-ல் 11,772; மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ல் 5,650. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் 52% குறைவு. எப்படி?

காலனியாதிக்கத்தின் புதிய முகங்கள்!


கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏதென்ஸில் கூடியிருந்தவர்களின் கைகளில் ஏராளமான பதாகைகள். ஏராளமான வாசகங்கள். ஒரு வயதான கிரேக்கர் தன் கைகளில் பிடித்திருந்த பதாகை வரலாற்றுக்கும் சமகால பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது: “நாங்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொடுத்தோம். இன்றைக்கு நாங்கள் வீழ்ந்துவிடாமல் நிற்க கேவலம் இந்தக் கடன் விஷயத்தில் ஐரோப்பா கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?”

சத்தியமான வார்த்தைகள்! ஆனால், காசே எல்லாமுமான இன்றைய உலகத்தில் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் மதிப்பிருக்கிறதா? அதேசமயம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் தன்னுடையதாக சுவிகரித்துக்கொள்ளக் கூடியது. கிரேக்கத்தைத் தங்களுடைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியவைத்த பிறகு, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே அந்த கிரேக்க முதியவரின் வார்த்தைகளைத் தனதாக்கிக்கொண்டார்: “ஐரோப்பிய நாகரிகத்தின் இதயமாகவும் நம் கலாச்சாரத்தின் பகுதியாகவும் வாழ்க்கைமுறையின் அம்சமாகவும் இருக்கும் கிரேக்கத்தை எங்கே நாம் இழந்துவிடுவோமோ என்று நான் பயந்தேன்.”

கிரேக்கம் பண்டைய காலத்தில் ஐரோப்பாவுக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவையும் தாண்டியும் அது கற்றுக்கொடுக்கும் பெரிய பாடம் அதன் சமகால அனுபவம். குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளுக்கு. நம் இந்தியாவுக்கு!

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!

கவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?

அந்தப் படுகொலை இனி நடக்காது: கருணாநிதி

கருணாநிதியுடன் சமஸ்.

ந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை – வசனம், இடையிடையே வந்து செல்லும் கட்சிக்காரர்களுடனான சந்திப்புகள்… இவ்வளவுக்கு நடுவிலும் வாசிக்கிறார். “இது இல்லாமல் முடியாது” என்கிறார் சிரித்துக்கொண்டே. மேஜையில் இருக்கும் ஜெயமோகனின் ‘அறம்’, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ இரு புத்தகங்களும் வாசிப்பில் இருப்பதை உணர்த்துகின்றன. கருணாநிதியின் 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கு அவர் அளித்த மிகப் பெறுமதியான பங்களிப்புகளில் ஒன்று நெருக்கடிநிலையின்போது அவர் நடத்திய எதிர் அரசியல். நெருக்கடிநிலையின் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா தன் கருப்புப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கும் தருணத்தில், தன்னுடைய ஞாபக அடுக்குகளிலிருந்து அந்த வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகிறார் கருணாநிதி.