துன்பம் வரும்போது சிரியுங்கள்!

ந்தச் செய்திகளைக் கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.
‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’
‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’
- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.

இந்தியா இதை யோசிக்கலாம்!


                           ‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது?’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.

தங்கமே தங்கம்!

இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்த கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.

ஒபாமாவுக்கு பஸ்! மன்மோகனுக்கு?

பராக் ஒபாமா இப்போது பஸ் பயணங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு சாமானியர்களுடனான இத்தகைய பயணங்கள் அவருக்கு உதவும் என்று கூறுகிறார்கள் அவருடைய கட்சியினர். அமெரிக்கர்கள் இதைச் சட்டை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராகிக்கொண்டு இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்த நிலைக்குப் பின் பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்க எதிர்க்கட்சியினருடன் நடத்திய பனிப்போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல் முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை ‘ஏஏஏ’ _ மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து அடுத்த நிலையான ‘ஏஏ+’-க்குத் தரம் இறக்கிய பின் ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத்தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.
ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்?

சென்னை யாருடைய நகரம்?


                                சென்னையின் பூர்வக்குடிகள் சோழ மண்டலக் கடற்கரையோரச் செம்படவர்கள். சென்னையின் சில பகுதிகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு இணையான தொன்மை வாய்ந்தவை. இந்த வரலாறு இன்றைக்கு எடுபடாது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிந்தைய, ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட 1640-க்குப் பிந்தைய வரலாறே சென்னையின் இன்றைய வரலாறு. சென்னையின் பூர்வக்குடிகளுக்கு இன்றைய பிரமாண்டமான நவீன சென்னையில் எந்தப் பங்கும் கிடையாது. புதிய வரலாற்றின் அடிப்படையில், சென்னையின் 372-வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளான இன்றைய சென்னைத் தமிழர்கள். வரலாற்றைத் திருப்புவதில் எப்போதுமே வந்தேறிகள் முக்கியமானவர்கள். சென்னையின் வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது வந்தேறிகளால். ஒரே வரியில் சொல்வது என்றால், தொழில் - வேலைவாய்ப்புகள் ரீதியாக தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!

வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா?

இந்தியர்கள் கவனிக்க வேண்டிய ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். ‘பி.பி.சி’-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அடுத்த ஆண்டோடு அவர் அரசியலில் இருந்து விலகப்போவதாக சொல்லி இருக்கிறார். 

சந்தி சிரிக்கும் இந்திய மானம்

சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள்: இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது!

அஞ்சல் அபாயம்!


உலகின் மிகப் பெரிய அஞ்சல் நிறுவனமான இந்திய அஞ்சல் துறையின் 247 வருட கால வரலாற்றில் மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், படிப்படியாக அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அஞ்சல் துறையை மூடும் பாதையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறது மத்திய அரசு.