மாஸ்கோவின் மல்லிகை?


மாஸ்கோவில் பிரதமர் விளாடிமிர் புதினை எதிர்த்துப் பொதுமக்கள் நடத்திய பேரணியின் தொடர்ச்சியாக, உலகின் கவனத்தைத் திசைதிருப்பி இருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

இந்தியா உடைந்தால்...

‘‘எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - கோயபல்ஸ்

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற அந்தச் சின்ன செய்தி வெளியானது 1962-ல். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது ‘மலையாள மனோரமா’ பத்திரிகை மூலம். பி.ஜி. குரியகோஸ் எழுதிய அந்தச் செய்தி அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்றுவரை அந்தப் பொய்யே ஆள்கிறது.

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?


                                            இந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!
 ''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய  ஊடகங்களின் தலைபோகும் கவலை.

விலைவாசி உயர்வின் விலை!

சென்னை. மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் மாநகரப் பேருந்து.
 ''ஏப்பா... கோயம்பேடு போவணும், தி.நகராண்ட எறக்கிவிடுறியா?"
''பெரிசு இன்னும் நாலு ரூவா குடு."
"ஏப்பா தி.நகருக்கு ஒம்பது ரூவாயா?"
அதிர்ச்சியில் உறையும் அந்தப் பெரியவர்  தனக்குள் முனக ஆரம்பிக்கிறார்.
"நாலு எட்டுல இருக்குற எடத்துக்கு ஒம்போது ரூவா. அப்ப டீ எட்டு ரூவா ஆயிடுமா? ஈபிக்காரன் யூனிட்டு ஒரு ரூவா போட்டப்பவே அஞ்சு ரூவா வாங்குனான் வீட்டுக்காரன். இப்பம் பத்து ரூவா கேட்பான்!"
-விலைவாசி உயர்வை அரசாங்கம் பைசாக்களில் கணக்கிடுகிறது. மக்களோ  அதை வலியால் கணக்கி்டுகிறார்கள்.

இதற்குத்தானா ஜெயித்தீர்கள் ஜெயலலிதா?

 
ஓவியம்: ஹாசிஃப் கான்‘‘வீடுகளை அழி, அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும்
பள்ளிக்கூடங்களை அழி, அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும்
நூலகங்களை அழி, அவன் வரலாறே இல்லாமல் போகட்டும்!’’

தற்கொலை இந்தியா!

                
                       அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்! தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் இந்தக் கணக்கின்படி பார்த்தால், நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 15 பேர்!

               இந்தக் கணக்கில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தற்கொலை செய்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நாட்டில் பொருளா தார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவாகி இருக்கும் முதல் இரு இடங்கள் நாட்டின் மென்பொருள் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை. இதேபோல, நாட்டின் ஆயத்தஆடைக் கேந்திரமான திருப்பூரிலும் தற்கொலைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழிலில் இருந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், மாணவர்கள் தற்கொலை விகிதம் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 26 சதவிகிதம்!

               இது அரசு சொல்லும் கணக்கு. அரசு ஏற்க மறுக்கும் இன்னொரு கணக்கும் உண்டு. இந்தியாவில் அரை மணி நேரத் துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் வரலாற்றிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவான இடமாக உருவெடுத்திருக்கிறது மகாராஷ்டிரத்தின் விதர்பா. இங்கு தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகள்.

               பெங்களூரு பொறியாளர்கள், திருப்பூர் தொழிலாளிகள், விதர்பா விவசாயிகள், டெல்லி மாணவர்கள்... இந்தத் தற்கொலைகள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியுமா? அடுத்த வேளைக்கே வழி தெரியாத விதர்பா விவசாயத் தொழிலாளி யின் தற்கொலையும் உச்சபட்ச ஊதிய விகிதத்தை அனுபவிக்கும் பெங்களூரு பொறியாளனின் தற்கொலையும் உணர்த்தும் செய்தி என்ன?

இந்தியா இருள்கிறது!

மன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று தில்லியில் அரசு ஆதரவு உளடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடி கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதேநாளில்தான் இந்திய அணுசக்தித் துறை மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நியச் சக்திகள் இருக்கலாம் என்றும் ரூ. 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு.

‘‘ஒரே தீர்வு: புரட்சி!’’

அமெரிக்கா நீண்ட காலமாக தன் நாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்காவை மறைத்துவைத்து இருந்தது. அந்த இன்னொரு அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலையற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டனிலும் சியாட்டிலிலும் சாக்ரோமண்டோவிலும் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் அமெரிக்கர்கள் நிறைந்த அமெரிக்கா அது!

வாச்சாத்தி ஒரு தொடக்கப்புள்ளி ஆகட்டும்!

வாச்சாத்தியில் அந்த பயங்கரம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடையாள அணிவகுப்பு அது. வாச்சாத்தி வன்முறையில் ஈடுபட்ட 269 பேருடன் மேலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து நிறுத்திவைக்கப்பட்டு ஐம்பது ஐம்பது பேராக அந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பாலியல் குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட வேண்டும். வாச்சாத்தி பெண்கள் சரியாக அடையாளம் காட்டினார்கள். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் துல்லியமாக அடையாளம் காட்டினர். அப்போது நீதிபதி அசோக்குமாரிடம் ஒரு பெண் சொன்னார்: ‘‘இப்ப இல்லீங்கய்யா... எப்ப கேட்டீங்கன்னாலும் அடையாளம் காட்டுவோம். வாழ்க்கையையே சீரழிச்சவங்களை எப்படிங்கய்யா மறக்க முடியும்?’’
இதுதான் வேறுபாடு. வாச்சாத்தி பயங்கரம் நமக்கு ஒரு சம்பவம். அவர்களுக்கோ அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பகுதி!