இலவசங்களின் விலை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவருடைய திட்டங்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் இப்போது தன்னுடைய ஆட்சியின் பயணத்தைத் தொடங்கி இருப்பது கருணாநிதியின் பாதையில்தான்! முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்த அரசு பயணிக்கப் போகும் பாதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இலவச அரசியலில் எந்த வகையிலும் நாங்கள் தி.மு.க-வுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லாமல் சொல்கின்றன ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள்!

இது மன்மோகன்களின் காலம்!

மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் யாவும் ஆதரவு தெரிவித்துவிட்டன. சீனாவும் ஆதரிக்கிறது; இந்தியாவும் ஆதரிக்கிறது. வடகொரியாவும் ஆதரிக்கிறது; இலங்கையும் ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகின் வெளியுறவுக் கொள்கையும் எப்படி ஒன்றானது?

சமச்சீர்க் கல்வி எனும் பெருங்கனவு

அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, நம்முடைய அரசியல்வாதிகளால் மிகப் பெரிய விஷயங்களில்கூட எவ்வளவு சர்வ சாதாரணமாகவும் வேகமாகவும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதைப் பார்க்கும்போது!
புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் அது. சில மணி நேரங்கள் மட்டுமே கூட்டம் நடக்கிறது. விவாதங்கள் ஏதும் இல்லை. கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடு குடியரசான காலம் தொட்டு முதல் முறையாக மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுவது என்பது முதல், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது வரை!

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்ட பின் வெள்ளை மாளிகை தனது மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். வரும் செப். 11 வரை  கொண்டாட்டங்கள் தொடரலாம்!
ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடனின் ஒரே சாதனை என்ன? ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன!
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின்  நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதைத்தான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’யாக நான் நினைக்கிறேன்!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை  ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று  நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?
ஆனந்த விகடன் 2011 

உலகின் மனசாட்சியை உலுக்கட்டும் - விசுவநாதன் உருத்திரகுமாரன்


                        விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்  உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறார் உருத்திரகுமாரன். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களால் தப்பிக்கிறார். நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

மனிதகொல்லிகள்!


ண்டோசல்ஃபான்.
 1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டிகாவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன. மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!

தேவைதானா கருப்புச் சட்டம்?


‘‘இந்தியக் குடிமக்களின் சுதந்திர உணர்வைத் தடுக்கக் கூடிய சட்டங்களிலேயே முதன்மையானது இந்தச் சட்டம்தான். அரசாங்கம் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்களாலோ, தண்டனைகளாலோ அரசாங்கத்தின் மீது நேசத்தை உருவாக்கிவிட முடியாது.’’
- 1922-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்தில் வாதாடியபோது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ‘124ஏ’ மீது முன்வைத்த விமர்சனம் இது!