![]() |
| சத்யா நாதெள்ள |
உலகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. ‘பெப்சிகோ’ நிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கி’யின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோ’ நிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்’ நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்ஷைர் ஹாத்வே’ நிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா
போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான
பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
சத்யா கொண்டாடப்பட
வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன்
இந்தியாவுக்குப் பயன்படவில்லை?

