நாட்குறிப்பேட்டிலிருந்து... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்குறிப்பேட்டிலிருந்து... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாமா என் நண்பன்!




நட்பு, காதல். பெயர்  வெவ்வேறாக இருந்தலும் உறவுக்கான அடிப்படை ஒன்றுதான்… பிடித்துப்போவது. உலகத்தில் ஒருவரை வெறுக்க எப்படிக் காரணம் தேவை இல்லையோ அதேபோல, பிடிக்கவும் காரணங்கள் தேவை இல்லை. இப்படித்தான்  என்னுடைய பெரிய மாமா திரு. ராஜப்பா எனக்குப் பிடித்துப்போனார்.

ஆளுக்கொரு செய்தி... ஜமாய்!

         
             புது தில்லி மீது எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும்  விஷயங்கள் நிறைய உண்டு. அங்கு நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் உடனடியாக ஊதிப் பெருக்கிவிடும் ஊடகவியலாளர்களின் சாமர்த்தியமும் அதில் ஒன்று. ஆனால், சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை - முக்கியமான செய்தியை - இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக அவமானகரமான நிகழ்வும் செய்தியும்கூட  அது -  தில்லியில்தான் நடந்தது -  ஊடகவியலாளர்கள் மூடி மறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பெரும்பான்மையான ஊடகங்கள் இருட்டடிப்பில் ஈடுபட்டன. இத்தனைக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு அது. ஏன் ஊடகங்கள் மூடி மறைத்தன? என்ன நிகழ்வு அது?