ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சி” என்பார். நவீன
உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.
சுஸ்தர் ஹோல்ச்சருக்கு 16 வயது. அதிகாலையில்
25 கி.மீ.
ஓடுகிறார். தோள்பட்டையில் துப்பாக்கி. கடந்த மாதம் வரை சுஸ்தர் மாணவி. இப்போது சிரியாவின்
குர்து இனக் குழுக்களில் ஒன்றான குர்திஷ் இஸ்லாமிய விடுதலை முன்னணியின் வீராங்கனை.
லட்சியம் சிரிய குர்திஸ்தான். பொது எதிரி பஷார் அல் அஸாத்.
கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் அபு. இப்போது 'இராக் - சிரிய
இஸ்லாமிய தேசம்' அமைப்பின்
ஜிகாதி. லட்சியம் இராக்-சிரிய இஸ்லாமிய தேசம். பொது எதிரி பஷார் அல் அஸாத்.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் - வெவ்வேறு இனங்களைச்
சேர்ந்தவை, முரண்பாடான
இலக்குகளைக் கொண்டவை,
அவற்றில்
பல தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்பவை - ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராகக் காட்டுத்தனமாக
ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால்?சிரியாவில் கடந்த 31 மாதங்களில் ஐ.நா. சபையின் கணக்குப்படி 1.2 லட்சம்
பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சமகாலத்தின் கொடூர வரலாறாகி
இருக்கிறது சிரிய உள்நாட்டுப் போர். சிரியத் தாக்குதல்களில் மனித உயிர்களே பிரதான இலக்குகள்.

