உளவுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்!

              எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழக்க நேர்ந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி,  துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு... யார் இந்த சரப்ஜித் சிங்?

உளவுத் துறைச் சீர்திருத்தங்கள்

     புதுதில்லிக்கு அதிக அச்சுறுத்தல் தந்த ஆண்டு என்று 1997ஆம் ஆண்டைக் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில், அந்த ஓராண்டில் மட்டும் 9 குண்டுவெடிப்புச் சம்பவங்களை தில்லிவாசிகள் சந்தித்தனர். சில நாள்களுக்கு முன் குண்டுவெடிப்பை எதிர்கொண்ட கரோல்பாக்கும்கூட அப்போது குண்டுவெடிப்பை எதிர்கொண்டது. எனினும், பதினோரு ஆண்டுகளுக்கு முன் கரோல்பாக் எதிர்கொண்ட குண்டுவெடிப்பையும் இப்போதைய குண்டுவெடிப்பையுயும் நாம் ஒன்றாகப் பார்க்க முடியாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள், அவர்களுடைய நுணுக்கங்கள், அவர்களிடமுள்ள நவீன சாதனங்கள், கையாளும் தொழில்நுட்பம் என எல்லாமும் மாறிவிட்டன. மாறாதவையும் உண்டென்றால் அது பயங்கரவாதிகளின் நோக்கமும் நம் உளவுத் துறையின் கட்டமைப்பும்தான்.