மனசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். ''ஒருமாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக,வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை.
இந்தியாவில் ஏன் கலவரங்கள் தொடர்கின்றன?

சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா? - ஷகிலா
சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த
ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர்
நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத
அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின்
புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் இரு சிறுமிகளை “அண்ணன் பொண்ணுங்க” என்று
அறிமுகப்படுத்துபவர், அவர்களை உள்ளே
அனுப்பிவிட்டு, “இப்போ பேசலாம்ணா” என்கிறார்.
இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!
இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.
ஆருடமா, செயல்திட்டமா?
தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப் பொதுமேடைகளில் முன்வைக்க ஆரம்பித்த சோ, உச்சகட்டமாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் மோடி, அத்வானி இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே “மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் பேட்டிக்காக சோவைச் சந்தித்தபோது, மோடி அல்லது ஜெயலலிதா என்கிற தன்னுடைய குரலுக்கான அடிப்படைபற்றிச் சொன்னார்: “நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைச் சொல்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!”
அன்றைக்கு சோ சொன்னது அரசியல் ஆருடம் அல்ல. எளிமையான
வார்த்தைகளில், “இது ஒரு வாக்காளனின் முன்மொழிவு” என்று அதை அவர் வர்ணித்தாலும், அது ஒரு
செயல்திட்டம். கச்சிதமான செயல்திட்டம்.
தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்
ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச்
சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை
ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில்
சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த
செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில்
ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்.
யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?
வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர்தான் அந்த ஏழு மண்டேலாக்கள். இவர்கள் எப்படி, எப்போது மண்டேலா ஆனார்கள் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. எனினும், மனித மேரி மாதாக்கள், வாழும் வள்ளுவர்கள், சமகால சே குவேராக்கள் வரிசையில் ஏழு மண்டேலாக்களையும் சேர்க்க முடியுமா?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)