விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!

எனது அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்களுக்கு, வணக்கம்!

இந்த வாரத்தோடு ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 2013 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ குழுமத்தில் தொடங்கிய என்னுடைய பணி, 2021 ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்திருக்கிறது. நெகிழ்வான மனதுடனேயே வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறேன். 

ன்னார்குடி போன்ற ஒரு சிறு நகரப் பின்னணியில், ‘அன்றாடம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழைப் படி’ என்ற தன்னுடைய தாத்தாவின் கிடுக்குப்பிடியிலிருந்தும், ஆங்கிலத்தின் அவஸ்தையிலிருந்தும் தப்பிக்க, “ஐயா, நீங்கள் ஏன் தமிழில் உங்கள் நாளிதழைக் கொண்டுவரக் கூடாது?” என்று கேட்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய ஒரு  பள்ளிக்கூடச் சிறுவனுக்குப் பின்னாளில் அதே பத்திரிகையின் அலுவலகத்திலிருந்து, “தமிழில் நாங்கள் ஒரு பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். எங்கள் சிஇஓ உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். ஹோட்டல் ட்ரைடென்ட்டில் சந்திக்கலாமா?” என்று செல்பேசி அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்? விதிபோலவே இருந்தது அது!

அப்போது இதழியலில் 135 வருடங்களைக் கடந்திருந்த ‘தி இந்து’ குழுமமானது ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய தமிழ் நாளிதழை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது. அப்போது என் வயது 33. ஆசிரியர்அசோகன், நண்பர்கள் அரவிந்தன், கோலாகல சீனிவாசன், கவிதா முரளிதரன் நால்வரை ஒப்பிட, வயது, படிப்பு, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவன்.   

இந்த உருவாக்க அணியை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு நாளிதழில் எவ்வளவு உயரிய பதவிக்கும் சென்று பணியாற்றுவதும்,  ஒரு நாளிதழை உருவாக்குவதும் ஒன்றல்ல. நூறாண்டுகளுக்கு மேல் இதழியலில் ஒரு பெரிய அனுபவத்தையும், சர்வதேசப் பார்வையையும் கொண்டிருந்தாலும் ‘தி இந்து’ குடும்பத்தினர் தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டு எங்களிடம் இந்த உருவாக்கப் பணியை ஒப்படைத்தனர். முழு சுதந்திரத்தையும் அளித்தனர். ஆள் தேர்வு உட்பட எதிலும் அவர்கள் தலையீடு இல்லை. 1878 செப்டம்பரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி அறிந்த ஒருவருக்கு, 2013 செப்டம்பரில் ‘தி இந்து’ தமிழ்  நாளிதழைத் தொடங்க ஐந்து பேரைத் அவர்கள் தேர்ந்தெடுத்து, பணியை ஒப்படைத்ததன் ஒப்புமை புரியவரும்.

வெறும் இரு மாதக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நேர்கண்டு, நூற்றுச் சொச்சம் பேரைத் தேர்ந்தெடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அணைத்துக்கொண்டு இந்தப் பத்திரிகைக்கு ஓர் உருவத்தைக் கொடுத்தோம். குறைகள், நிறைகள் நிறைந்ததாயினும் 2013 செப்டம்பர் 16-ல் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்  வெளியானபோது அது தனித்துவமானதாக இருந்தது. 

இதன் பின்னர் என் கவனத்தை நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட நடுப்பக்கங்களில் செலுத்தலானேன். பத்திரிகையில் பத்தோடு ஒரு பக்கமாக அல்லாமல் நடுப்பக்கங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின்  தனித்துவமான அடையாளமாக மிளிர அபாரமான ஒரு சுயாட்சித்தன்மை எனக்கும் என்னுடைய அணியினருக்கும் கிடைத்தது. நாங்கள் உருவாக்கிய பக்கங்கள், நூல்களோடு மட்டுமல்லாமல், முன்னெடுத்த நிகழ்ச்சிகள், விருதுகள் என்று எல்லா முயற்சிகளிலும் அந்த சுதந்திரம் தொடர்ந்தது. தமிழில் வேறு எந்தப் பத்திரிகையிலும் இதுவரை நிகழ்ந்திராதது இது. இப்படியொரு ஜனநாயக வெளி இங்கு உருவாக ‘தி இந்து’ நிறுவனத்துக்கும், அதன் இயக்குநர்களுக்கும், அந்த ஜனநாயக வெளியைக் கண்ணியத்தோடு பாதுகாத்த ஆசிரியர்  அசோகனுக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மிகச் சிறந்த நண்பர்கள் - அவர்களில் பலர் தனித்துவம் மிக்க ஆளுமைகள்; என்னைக் காட்டிலும் பல்வேறு சிறப்புத் திறன்களைப் பெற்றிருப்பவர்கள் -  வ.ரங்காசாரி, எஸ்.சிவசுப்பிரமணியன், தே.ஆசைத்தம்பி, செல்வ புவியரசன், த.ராஜன், எஸ்.சண்முகம் ஆகியோர் எனக்கு அணியினராக வாய்த்தார்கள். அதேபோல, அணிக்கு வெவ்வேறு காலங்களில் பங்களித்தவர்களான  வெ.சந்திரமோகன், நீதிராஜன், ம.சுசித்ரா, கே.கே.மகேஷ்; வடிவமைப்பாளர்கள் ஏழுமலை, ரீகன் இவர்கள் எப்போதும் உடன் இருந்தார்கள். அணிக்கு வெளியிலும், அரவிந்தன் தொடங்கி  ஷங்கர்ராமசுப்ரமணியன் வரை ஒரு நீளமான நண்பர்களின் பட்டியல் இருந்தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் என்றாலோ, நடுப்பக்கம் என்றாலோ என்னுடைய பெயர் தெரிய இவர்கள் அத்தனை பேருடைய அபாரமான உழைப்பும், அர்ப்பணிப்பு மிக்க அணிச் செயல்பாடுமே முக்கியமான காரணங்கள். 

மிகத் தெளிவாக, தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பண்பாட்டு வெளியில் ஒரு பெரிய குறுக்கீட்டை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்கள் நிகழ்த்தின. காந்தி அதன் ஆன்ம வழிகாட்டலாக இருந்தார்.பொதுவாக, நடுப்பக்கங்கள் என்றாலே பண்பாட்டு மேட்டுக்குடிகளும், வெறும் தரவுகள் அடங்கிய கட்டுரைகளும் புழங்கும் இடம் அது என்பதை உடைத்தெறிந்தோம். எவர் வேண்டுமானாலும் இங்கு எழுத முடியும் என்ற சூழலை உருவாக்கினோம். களத்துக்குச் சென்று, மக்களுடைய குரலைப் பதிவுசெய்து அதை அந்தந்த மக்களின் வட்டார மொழியிலேயே எழுதுவது என்பதில் தொடங்கி, வார்த்தைகளின் அரசியல் வரை கவனம் அளித்தோம். எல்லாக் கட்சியினரும் வாசித்து, விவாதிக்கும் களம் ஆக்கினோம்.

தமிழ்நாட்டில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இன்றைக்குப் பேச்சாகியிருக்கிறது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நடுப்பக்கங்கள்தான்; சில ஆண்டுகளாகவே ‘ஒன்றிய அரசு’ எனும் வார்த்தையைப் பயன்படுத்திவந்ததை வாசகர்கள் அறிவார்கள். கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் என்று பேசும்போது, அதைப் பேசுவோரின் சிந்தனை, உள்ளடக்கம், மொழியில் முதலில் கூட்டாட்சியுணர்வு வர வேண்டும் என்று எண்ணினோம்.


தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் விவாத அரங்கின் மையத்துக்குக் கூட்டாட்சி வந்ததில் நடுப்பக்கங்கள் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் உரிமைகளை நடுப்பக்கங்கள் உரக்கப் பேசின. இந்த 8 ஆண்டுகளில் அதிகாரப்பரவலாக்கல் -  கூட்டாட்சியம் தொடர்பில் ‘இந்து தமிழ்’ வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தலையங்கங்களைத் தொகுத்து ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அதன் பக்கத்திலேயே வர முடியாது என்பது  புரியவரும். 

மனித குலத்தையும், இந்த நாட்டையும் தாங்கி நிற்கக்கூடிய அடிப்படை விழுமியமான பன்மைவியத்தைப் பேணுவதில் உறுதியாக நின்றோம். சமத்துவம், சமூகநீதிக்கு எங்களால் இயன்றவரை குரல் கொடுத்தோம். வெறுப்பு அலையில் மூழ்கிவிடாமல் தாக்குப்பிடித்தோம். முக்கியமாக, குமரியிலிருந்து சென்னை வரை ஒரு சாமானியரின் குரல் எங்களை வந்தடைந்தால் அவருடைய நியாயம் மேடை ஏறும் எனும் சூழலை உருவாக்கினோம். தமிழில் ஆகிவந்த இதழியல் வரையறைகளை எங்களால் இயன்றவரை விஸ்தரித்தோம்.

நான் முதல் முறையாக சிஇஓ அருண் ஆனந்திடம் பேசுகையில் சொன்னேன், “தமிழில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை; ஆனால், அறிவுலகுக்கும் ஊடகவுலகுக்கும் இடையே பெரிய பாலைவனம் விரிந்து கிடக்கிறது. முக்கியமான ஒரு விவகாரத்தில் ஒரு சின்ன அறிக்கையைப் பொதுவெளியின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை என்று புழுங்கினார் சுந்தர ராமசாமி. நோபல் விருதாளர்களை விஞ்சும் பல எழுத்தாளர்கள் நம்மிடம் உண்டு. ஆனால், அவர்கள் இறந்தால்கூட ஒரு பத்தி செய்திக்கு மேல் இங்குள்ள தினசரிகளுக்கு அவர்கள் பொருட்டு அல்ல. இந்த நிலையை மாற்ற வேண்டும்!”

வாய்ப்புக் கிடைத்தபோது மாற்றினோம். 

ஒரு சமூகத்தின் மிகுந்த மதிப்புக்குரியவர் எழுத்தாளர் என்பதை அவர்களுக்கு அளித்த முதல் மரியாதையின் வழி திரும்பத் திரும்பச் சமூகத்துக்குச் சொன்னோம். ஜெயகாந்தன், அசோகமித்திரன் முதல் ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன் வரை பல ஆளுமைகளுக்கான இறுதி  அஞ்சலி இரு முழுப் பக்கங்களுக்கு நிறைந்தது. 

புத்தக வாசிப்பைத் தொடர் இயக்கம் ஆக்கினோம். ‘தினமணி’யின் சென்னைப் பதிப்பு நீங்கலாக, ஏனைய பத்திரிகைகளில் தொடக்க நாள்,  நிறைவு நாள் செய்திகள், வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் இரு புகைப்படங்கள் என்பதாக முடிக்கப்பட்ட சென்னை புத்தகக்காட்சி அனைத்து ஊர்களுக்கும் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடுப்பக்கத்தில் வெளியானபோது ஏனைய பத்திரிகைகளும் கண் விழித்தன. இன்று செய்தித் தொலைக்காட்சிகள் நேரலைக்குப் புத்தகக்காட்சித் திடல் நோக்கி வருகின்றன. மூன்று தசாப்தங்கள் சென்னையை மையமிட்டிருந்த பபாசி, தமிழ்நாட்டின் சிறுநகரங்கள் நோக்கிப் புத்தகக்காட்சிகளை முன்னெடுத்துச் செல்லலானது. 

உள்ளூர் செய்திகளையே ‘முந்நூறு சொற்களுக்கு மிகாமல் எழுதுங்கள், இது ட்விட்டர் காலம்’ என்று பத்திரிகைகள் வலியுறுத்தலான  காலகட்டத்தில் முழுப் பக்கக் கட்டுரைகள், பேட்டிகள் என்று எதிர்ப்பாதையில் தனி வாசகர் கூட்டத்தை உருவாக்கினோம். ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘கார்டியன்’, ‘டான்’ என்று ஒரு புதிய அலை மொழிபெயர்ப்புகளை உள்ளே கொண்டுவந்தோம். அறிவியல் கட்டுரைகளுக்கும் பேட்டிகளுக்கும் தொடர்ந்து இடம் அளித்தோம். விளையனூர் ராமச்சந்திரனின் முழுப் பக்கப் பேட்டி; ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நீண்ட திருமாவளவனின் பேட்டி எல்லாம் வெகுஜன  ஆங்கில தினசரிகளில்கூட இன்று சாத்தியம் இல்லை என்பதே உண்மை. 

விருதுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்றாலே குழு அரசியல் சர்ச்சைகளில் பிறப்பிடங்கள் என்றாகிவிட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நாங்கள் முன்னெடுத்த இலக்கியத் திருவிழாக்களும், ‘தமிழ் திரு’ விருதுகளும் தமிழுக்காக வெவ்வேறு வகைகளில் உழைக்கும் எல்லோரையும் உள்ளடக்கும் பார்வையைக் கொண்டிருந்தன. இந்த விருதுகளில்  ஐராவதன் மகாதேவனும் இருந்தார், கி.ராஜநாராயணனும் இருந்தார்; கீரனூர் ஜாகீர் ராஜாவும் இருந்தார், சீனிவாச ராமாநுஜமும் இருந்தார்; கோவை ஞானியும் இருந்தார்,  பா.வெங்கடேசனும் இருந்தார். 

பதிப்புத் துறையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழானது, ‘தமிழ்த் திசை பதிப்பக’த்தின் வழி கால் வைத்தபோது நடுப்பக்க அணி ஆண்டுக்கு ஒரு அரசியல் ஆளுமையின் வரலாற்று நூலைக் கொண்டுவரும் திட்டத்தைக் கையில் எடுத்தது. அப்படி அது தொகுத்த தமிழ்நாட்டின் நெடுநாள் முதல்வர் மு.கருணாநிதி, இன்றைய இரு திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பிதாமகர் அண்ணா இருவரது வரலாற்றையும் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்களும் 60,000 பிரதிகளை இன்று கடந்திருக்கின்றன; அரசியலில் அந்நூல்கள் இன்று உண்டாக்கியிருக்கும் தாக்கம் வெளியிலுள்ளோரால் பேசப்பட வேண்டியது.

இளையோர் எப்போதும் எங்கள் மையக் கவனத்தில் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய நிர்வாகப் பணிக்குச் செல்லும் மாணவர்களின் கருத்தறிந்து அவர்களுக்கான களமாகவும் இடையில்  நடுப்பக்கங்களை மாற்றியபோது போட்டித் தேர்வுகளுக்கு உத்வேகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எங்களை நோக்கி வந்தன. ஆண்டுக்குக் குறைந்தது இருபத்தைந்தாயிரம் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை இந்நிகழ்ச்சிகள் உருவாக்கின; அவர்களிடத்தில் வாசிப்பியக்கத்தைக் கொண்டுசென்றோம். இதேபோல வாசகர்களுடன் தொடர் உரையாடல்களை முன்னெடுத்தோம்; அவர்கள் சொன்ன கருத்துகளுக்கு மதிப்பளித்து அவ்வபோது பக்கங்களைப் புதுப்பித்துக்கொண்டேயிருந்தோம்.

குற்றம் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டோம்; இயன்றவரை தவறுகளைத் திருத்திக்கொண்டோம். விமர்சனத்தின் அடிப்படையில் தனிநபர்களிடம் வெறுப்பு பாராட்டியதும் இல்லை; பகையாக முரண்பாடுகளை நீட்டித்துக்கொண்டதும் இல்லை.

ஆண்டுகள் வளரும்போது எந்தப் பணியிலும் தேக்கங்கள் உண்டாவது இயல்பு. அதை உடைத்துச் சிதறடிக்கவில்லை என்றால், மனதையும் பிற்பாடு உடலையும் மெல்ல பனிமூட்டம்போல சோர்வு ஆக்கிரமித்து, அழுத்தி, புதைத்துவிடும். டிஜிட்டல் ஊடகங்களின் பாய்ச்சல்,  ஜனநாயகத்தின் பின்னடைவு, கொடுந்தொற்றின் பரவல் இந்தப் பின்னணியில் இந்திய ஊடகச் சூழல்  நிலைக்குலைவுக்குள்ளான காலகட்டத்தில் அப்படியொரு தேக்கத்தை நான் உணரலானேன்; உளச்சோர்வு மெல்லச் சூழ்ந்து உடலையும் சோர்வு நோக்கித் தள்ளலானது.   

ஆக, சில மாதங்களாகவே இந்த முடிவில் இருந்தேன். நிறைய எழுத வேண்டும்; முக்கியமான தமிழ் ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டும்; ஊடகத் துறையில்  அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் துரத்தியபடி இருந்தன. இனி அதில் கவனம் செலுத்த உத்தேசித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்த அளவில் எட்டாண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டம். என்னுடைய கடந்த கால வாழ்வை அறிந்தவர்களுக்கு இந்த முடிவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘விகடன்’, ‘புதிய தலைமுறை’ என்று நான் கடந்துவந்திருக்கும் பாதையில் இதுவே அதிகபட்ச பணி வாழ்க்கை. இதுவரையிலான எல்லா நிறுவனங்களிலுமே ஆசிரியர்களின் மதிப்புக்குரியவனாக, விசேஷ இடம் அளிக்கப்பட்டவனாகவே இருந்திருக்கிறேன். மரியாதைக்குரிய சேகர், வைத்தியநாதன், கண்ணன், கைலாசம், அசோகன் யாவருமே எனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைத் தந்திருந்தார்கள். ஒரு நிறுவனத்தில் பிரகாசமான நிலையில் இருக்கும்போதே அடுத்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறேன். ஆயினும், பணம் அல்லது பணி அந்தஸ்து இதில் முக்கியப் பங்கு வகித்தது இல்லை. நிச்சயமாக, கருத்து வேறுபாடுகளும் விலகலுக்கான காரணங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாலும், அது மட்டுமே எங்கும் காரணமாக இருந்தது இல்லை. 

பெரும்பாலும் பணி வாழ்க்கை ஒரு தேக்க நிலையை அடையும்போது, மனம் சோம்பும்போது, அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி  ஒன்றுக்கு என்னுடைய எழுத்து துடிக்கும்போது வெளியேறுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில், இப்போது ‘இந்து தமிழ்’ அனுபவமும் அமைகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு அனுபவங்கள், பல்வேறு படிப்பினைகள். இவற்றில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் இந்த எட்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அளப்பரியன. அது எனக்குக் கொடுத்த மேடைகளும், கொண்டுசென்ற உயரங்களும் மறக்க முடியாதவை. ஒரு பத்திரிகையில் ஒரு தனிநபருக்கு கிடைத்த இடம் என்று இதைச் சுருக்கிட முடியாது. தமிழ் ஊடகச் சூழலில் நிகழ்ந்த அரிய சாத்தியங்களில் ஒன்றும் அது. 

இதுவரை எத்தனையோ நிறுவனங்கள் நான் பணியாற்றியிருந்தாலும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நாட்களை அந்த வரிசையில் இணை வைத்துவிட முடியாது. நாங்கள் கூடி உருவாக்கிய குழந்தை அது; ஒரு பெரும் கனவு; அந்தக் கனவில் நானும் இருந்தேன்; என்னுடைய கடமைகளை நெறிப்படி முடித்தேன்; என்னால் இயன்றவரை, என்னுடைய எல்லைக்குட்பட்டு என்னுடைய மதிப்பீடுகளை இழக்காமல் காப்பாற்றினேன் என்ற மகிழ்ச்சி என் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கும். ‘இந்து தமிழ்’ நாளிதழ் எல்லா வகைகளிலும் செழித்திடவும், மேன்மேலும் வளர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கான அதன் நற்பங்களிப்புகளைத் தொடர்ந்திடவும் உளமாரப் பிரார்த்திக்கிறேன்.

ర  

ரி, அடுத்தது என்ன?

சில ஆண்டுகளாக, நிர்வாக நிமித்தமான பணிகள் நிறைய என்னைச் சூழ்ந்துகொண்டிருந்த இடத்திலிருந்து விடுபட்டு, தீவிரமாக எழுதுவது என்ற இடம் நோக்கி நகர்கிறேன். நெடுநாட்களாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்த சில புத்தகங்கள் முன்னுரிமையில் முன்வரிசையில் நிற்கின்றன. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்நாட்களில் எந்த நிறுவனத்துக்கும் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும், என்னுடைய எழுத்தியக்கத்துக்குத் தடை நிற்காத வகையில் சுயாதீனமான ஒரு சிறு டிஜிட்டல் ஊடகத்தை உருவாக்கவும் விழைகிறேன். “நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறாய்; பள்ளி செல்லும் குழந்தைகள் முக்கியமான பருவத்தில் இருக்கிறார்கள்; இதுபோன்ற பலப்பரீட்சை தேவைதானா?” என்று நிறைய நண்பர்கள் கேட்கின்றனர்.  காந்தி சொன்னதையே பதிலாகச் சொல்லிக்கொள்கிறேன்:  ‘மகிழ்ச்சி என்பது எதுவென்றால்,  உங்களுடைய சிந்தனை, உங்களுடைய பேச்சு, உங்களுடைய செயல் யாவும் ஒத்திசையும் தருணம்!’

தமிழில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய  இருக்கின்றன. தமிழ் ஊடகச் சூழல் அடுத்தடுத்த பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறது. என்னாலான சிறு முயற்சிகளை மேற்கொள்வேன். காந்தியிடமிருந்து  எளிமையான வாழ்க்கை முறையை மட்டுமல்ல; தீர்க்கமான இலக்கை நோக்கிய பயணத்துக்கான உறுதிப்பாட்டையும் கற்றிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் சமூகத்தையும் மக்களையும் நம்புவன் நான். தமிழ் மக்கள் எனக்குத்  துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த சமயத்தில் வாசகர்களாகிய உங்களுடைய அன்பை ஒருபோதும் நான் மறந்திட முடியாது. ஏனென்றால், வாசகர்களிடம் நான் பெற்றிந்த அன்புதான் எந்தப் பத்திரிகையிலும் எனக்கு இருந்த செல்வாக்குக்கான அடியுரமாக இருந்தது. வாசக நண்பர்கள் தரும் உற்சாகமும் உத்வேகமும்தான் அடுத்தடுத்த எல்லைகளை நோக்கி சிந்திக்கவும் வைக்கிறது. ஆகையால், இந்தத் தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுகிறேன்!

ஜூன், 2021

பின்குறிப்பு: நிறைய நண்பர்களிடமிருந்து செல்பேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அடுத்த முயற்சியை எப்படி அறிந்துகொள்வது; எழுத்துகளைத் தொடர்ந்து எப்படி வாசிப்பது என்று கேட்கின்றனர். ஒரே பதில்: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய பெயர், அஞ்சல் முகவரி, செல்பேசி எண், உங்கள் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள். என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும் தெரியப்படுத்துகிறேன். அனைவருக்கும் என் அன்பு.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி: writersamas@gmail.com 

163 கருத்துகள்:

 1. உங்கள் எழுத்துக்கு என்று தனிச்சிறப்பு இருக்கிறது உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிக்க கூடியவன் நான் முதுகலைத் தமிழாசிரியராக இருக்கக்கூடிய நாம் திஇந்து தமிழ் நாளிதழை வாங்குவதே நடுப்பக்கத்தில் தான் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்காகத்தான் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள் தமிழ் சமூகத்திற்கு உங்கள் கடமையை ஆற்றுங்கள் என்றும் உங்களுடன் தமிழினி ராமகிருஷ்ணன் முதுகலை தமிழாசிரியர் அரியலூர் மாவட்டம் 8667409324

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் இந்துவில் உங்கள் கட்டுரைகளை கல்லூரி நாட்களில் தேடி படித்திருக்கிறேன்.

   நீக்கு
 2. வாழ்த்துக்கள் ஐயா , தங்கள் அடுத்த இலக்கும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤️

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பணியினை ஆற்றி இருக்கிறீர்கள்.. அடுத்த கட்ட நகர்வது என்பது காலத்தின் கட்டாயம். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. வருத்தமாகத்தான் இருக்கிறது..எனினும் பறத்தலுக்கான வானம் இன்னும் பெரிதுதானே..வாழ்த்தும் அன்பும்!

  பதிலளிநீக்கு
 5. எதிலும் சமரசமில்லா ஈடுபாடு. நன்னடை.சமூக தொலைநோக்கு.அதை நோக்கிய பயணம் வென்றிட வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. 2014 இல் இருந்து உங்கள் கட்டுரையை வாசிக்கிறேன் உங்கள் கட்டுரையை பார்த்த தருணம் உங்களுடன் உரையாடுவது போன்ற உணர்வு.21 வயதில் ஒன்றும் அறியாத என்னை 28 வயதில் ஓரளவு தெளிவான சிந்தனையை நோக்கி மடை திருப்பியதில் தி இந்துவின் பங்கும் உங்கள் பங்கும் முக்கியமானது. நீங்கள் விட்டு சென்ற விதைகள் முளைக்க துவங்கி இருக்கிறது சமஸ்.ஆவலுடன் உங்கள் கட்டுரைக்காக காத்திருப்பேன் இனி உங்கள் புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. பள்ளிப் பருவம் வரை புத்தகவாசிப்பை அறியாதவன்.கல்லூரி வரும்போது இரண்டாம்ஆண்டில் ஆசிரியர் இ.சூசை மூலம் வாசிப்பு என் காதில் வந்தடைந்தன.அவர் பேச்சு என்னை ஈர்த்தன.வாசிப்பை நோக்கி நகர்ந்தேன்.அப்போது தி இந்து தமிழ்(இந்து தமிழ் திசை) கண்ணில்பட்டன.ஒரு மாதமாக தொடர்ந்து பார்வையிட்டு சிறிது சிறிதாக வாசிக்கப் பழகுனேன்.இந்த நாளிதழ் மட்டுமே என் மனதைப் பிடித்தன.நாளிதழ் கிடைக்காத நாள் தவித்ததுண்டு.உங்களின் கட்டுரை தனித்துவமானவை.நன்றிங்க.அடுத்த இலக்கை நோக்கி போறிங்க உங்களுக்கு மனதார அன்புடன் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் எழுத்துகளை தொடர்ந்து வாசிப்பவன் அல்லன் நான். ஆனால் உங்கள் நடுபக்க கட்டுரை தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்தவன். கட்டுரை அனைத்தும் ஜனநாயகத்தை வேரறுக்க முனையும் பாசிசத்தின் நெற்றிப்பொட்டை குறி வைத்து சுடப்படும் தோட்டாக்கள்.

  நீங்கள் எந்த வடிவில் எழுதினாலும் அதன் அடிநாதம் ஜனநாயகமாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு இருக்கும் வரை உங்களுக்கு தேய்பிறை இல்லை.

  முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. நன்று. தங்கள் எழுத்துக்களால் தமிழ் சமூகம் பயனடைய காத்துக் கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. உங்களுடைய அடுத்தகட்ட பணிகள் தமிழ் சமூகத்தைச் செழுமை மிக்கதாக மாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்.
  வரும் காலங்களில் உண்மை வெளிவர காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. இங்கே கருத்து எழுதும் நண்பர்கள் தங்கள் செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை அவசியம் பதிவிடுங்கள். அடுத்தகட்ட முயற்சியைத் தொடங்குகையில் அழைக்கிறேன். சமஸ். writersamas@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களது அடுத்த முயற்சிகளுக்கு வாசகன் என்ற முறையில் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

   அசோகமித்திரன்.த
   சென்னை. ashok.anbu2004@gmail.com

   நீக்கு
  2. சதீஸ்குமார் 9025258486
   satheeshias.official@gmail.com

   நீக்கு
  3. த.முத்துகிருஷ்ணன், 9047837497
   rtmuthukrishnan1979@gmail.com

   நீக்கு
  4. நிச்சயமாக அடுத்த ஒரு முயற்சி மேலுமொரு மைல் கல் தொட வாழ்த்துகள்
   ramginbox@gmail.com

   நீக்கு
 13. அய்யா வணக்கம். நான் இரா. முத்துக்குமரன், அற்புதபுரம், தஞ்சை. உங்கள் கட்டுரைகள் என்றாலே படிக்கவும்.. சிந்திக்கவும் தூண்டும். இங்கே தாங்கள் குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் உங்கள் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள முடிந்தது. கடந்த8 8 வருடங்களாக இந்துதமிழ் திசையை சரியான திசையை நோக்கி பயணிக்க வைத்த நண்பர்கள் வரிசையில் நீங்கள் முதன்மையானவர் என்பது பெருமை. ஒருங்கிணைந்த தஞ்சை மவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் உங்கள் எழுத்து பணி தொடர்ந்து வரும். எப்போதும் உற்ற துணையாக கூடவே வருவேன். நிச்சயம் உங்கள் எழுத்து நடை என்னை பல நேரங்களில் மெருகேற்றி இருக்கிறது. புதிய வார்த்தைகள் கையாளும் திறமை மெச்ச தக்கது.ஒரு எழுத்தாலானது பயணம் ஓய்வதில்லை. தொடரும்.சில நேரம் வலி இருந்தால் பொறுத்தருள்க!வாழ்த்துக்கள் சார்..நட்புடன்.. இரா. முத்துக்குமரன்,7305687596

  பதிலளிநீக்கு
 14. தமிழ் வளர்ச்சிக்கான நாளிதழ் தங்கள் பங்கின் மூலம் கிடைத்தது என்பது பெருமையே!! இது தொடரும் என்ற நம்பிக்கையடன்.

  பதிலளிநீக்கு
 15. வருத்தமாக இருக்கிறது சார். தங்களின் கைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுக்கவும்

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான பங்களிப்பை இந்து தமிழ் திசையில் இருந்து வழங்கி வந்தீர்கள். திடீர் அறிவிப்பு சற்றும் எதிர்பார்க்காததுதான். இருப்பினும் கால ஓட்டம்,தேடல், படிநிலை மாற்றம், பணிச் சூழல், முதிர்சசி ஆகியவை வேறு குவியங்களுக்கு கடத்துவது இயல்பு. முயற்சி வெல்க! நன்றி.

  பா.சக்திவேல், கோயம்புத்தூர்

  பதிலளிநீக்கு
 17. உங்களின் நல்நகர்வுக்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான பங்களிப்பை இந்து தமிழ் திசையில் இருந்து வழங்கி வந்தீர்கள். திடீர் அறிவிப்பு சற்றும் எதிர்பார்க்காததுதான். இருப்பினும் கால ஓட்டம்,தேடல், படிநிலை மாற்றம், பணிச் சூழல், முதிர்சசி ஆகியவை வேறு குவியங்களுக்கு கடத்துவது இயல்பு. முயற்சி வெல்க! நன்றி.

  பா.சக்திவேல், கோயம்புத்தூர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ தெரியல.. மனசு கணக்கிறது சார்.

   நீக்கு
  2. வருத்தமளிக்கிறது..விடை பெறுவதற்க்கு தங்களுக்கு காரணங்கள் பல இருக்கலாம்..இனி இநதுவில் எங்கே உங்களை தேடுவது..தங்கள் அடுத்த நகர்வுகள் ஒளிமயமானதாக ஆகட்டும்.வாழ்த்துக்கள்.எங்கிருந்தாலும் வாழ்க..வாழ இருக்கும் இடமும் விரைவில் தெரிய ஆசை

   நீக்கு
 19. தங்கள் எண்ணம் ஈடேற உங்கள்
  உழைப்பு உறுதுணையாக
  இருக்கும்.
  துணிவே துணை.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள்....🤝🤝
  அடுத்த இலக்கை நோக்கி உங்கள் பயணம் வெற்றி பெற...🙌

  பதிலளிநீக்கு
 21. இந்து தமிழ் திசை பத்திரிகையை நான் தொடர்ந்து வாசிக்க உங்கள் நடுப்பகுதி கட்டுரை என்னை கட்டிபோட்டது. என்னை மேலும் படிக்க தூண்டும். உங்கள் பணி எங்கு சென்றாலும் சிறக்க என் வாழ்துக்கல் அய்யா.

  பதிலளிநீக்கு
 22. அய்யா வணக்கம்.
  நான் இரா. முத்துக்குமரன், அற்புதபுரம், தஞ்சை. உங்கள் கட்டுரைகள் என்றாலே எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படிக்கவும்.. சிந்திக்கவும் தூண்டும் விதமாகவே அமையும். இங்கே தாங்கள் குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் உங்கள் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள முடிந்தது. கடந்த 8 வருடங்களாக இந்து தமிழ் திசையை சரியான திசையை நோக்கி பயணிக்க வைத்த நண்பர்கள் வரிசையில் நீங்கள் முதன்மையானவர் என்பதே பெருமை. ஒருங்கிணைந்த தஞ்சை மவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் உங்கள் எழுத்து பணி தொடர்ந்து வரும்.அதற்கு தடை இல்லை.எப்போதும் உற்ற துணையாக கூடவே வருவேன்.வருவோம். நிச்சயம் உங்கள் எழுத்து நடை என்னை பல நேரங்களில் மெருகேற்றி இருக்கிறது. புதிய வார்த்தைகள் கையாளும் திறமை மெச்ச தக்கது.ஒரு எழுத்தாளனது பயணம் ஓய்வதில்லை. அது தொடரும்.சில நேரம் வலி இருந்தால் பொறுத்தருள்க!வாழ்த்துக்கள் சார்..நட்புடன்..
  இரா. முத்துக்குமரன்,7305687596
  muthukumaranmr1972@gmail.com

  பதிலளிநீக்கு
 23. உங்கள் நல்முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 24. தொடரும் எண்ணங்கள் உங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லும். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. கல்லூரி காலத்தில் தான் நீங்கள் தொடராக எழுதி வந்த நீர் நிலம் காற்று கட்டுரையை படித்தேன் அன்றைய காலம் வரையில் எனக்கு ஒரு சம்பவத்தை அப்படியே செய்தியாக வெளியிடுகிறார்கள் என மற்ற பத்திரிக்கைகள் மீது என்னுடைய எண்ணம்.ஏனெனில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு சமூக கடமை இருக்கிறது ஒரு பிரச்சனையை மற்றவர்களுக்கு செய்தியாக சொல்லுவதோடு நின்றுவிட கூடாது என்பது தான் அந்த எண்ணத்திற்கான காரணம்.தி இந்து தமிழ் திசையில் வெளிவந்த நடுபக்ககட்டுரைகள் அனைத்தும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.கிட்டதட்ட இந்நாள் வரையிலும் தீவிர வாசகனாக இருந்து வருகிறேன்.நடுப்பக்க கட்டுரைகள் நான் படித்தது வரையில் ஜனநாயக தன்மையோடு தான் இந்நாள் வரையில் உள்ளது.உங்களுடைய விலகல் எங்களுக்கும் இழப்புதான்.இருந்தாலும் வேறு ஒரு வழியில் வேறு ஒரு வகையில் உங்களுடைய பணி என்றும் தொடர வேண்டும் இதே ஜனநாயக தன்மையோடு இன்னும் வீரியமாய்...

  பதிலளிநீக்கு
 26. சகோதரர் சமஸ் அவர்களுக்கு, மன்னை தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த "யாருடைய எலிகள் நாம்?" புத்தக வெளியீட்டின் போது, அன்று வரை உங்களின் பள்ளி நாட்களில் இருந்து நீங்கள் கடந்து வந்த பாதையையும், சில இயக்கங்களில் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும், அரசியல் பயணத்தையும் குறிப்பிட்டு, இறுதியாக காந்திய வழியே இந்தியாவை உயர்த்தும் என்று கூறி, அந்த வழியிலேயே பயணிப்பதாகக் கூறினீர்கள். அன்று கூறிய வேறு சில செய்திகளை இங்கு நான் தவிர்த்திருக்கிறேன்.
  இறுதி வரை இந்திய ஜனநாயகம் காக்க, காந்திய வழியில் நீங்கள் செயல்பட தங்களுக்கு தூய சிந்தனையையும் ஆரோக்கியமான நீடித்த ஆயுளையும் தர வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
  "யாருடைய எலிகள் நாம்?" என்ற புத்தக வரிசையில் தங்களின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. துவக்கத்தில் தங்களின் எழுத்துகளை விரும்பி படிப்பேன், இடையில் சில முரண்பாடுகள், சிலவற்றை தவிர்த்துவிட்டு சிலவற்றை பேசினீர்கள்,
  முற்போக்கு இயக்கங்களை ஆக்கபூர்வமாக விமர்சித்து இருக்கிறீர்கள். முற்போக்கு இயக்கம் திராவிட இயக்கத்தின் மீதும் தங்களது பார்வை சிறப்பானதாக இருந்திருக்கவில்லை. இதில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். பாசித்தின் பிடியில் இருக்கிறோம் இதை உடைத்தெறிய தங்களின் முயற்சியை சமூகத்திற்கு அளியுங்கள்.

  வாழ்த்துகள்.

  இளந்தமிழ்.

  பதிலளிநீக்கு
 28. உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. இந்து நாளிதழ் கலாச்சாரத்திற்கு முரணான கருத்துகளை கூட அதன் தளத்திலேயே எழுதி பலரை படிக்க வைத்தீர்கள். பலரும் தொடாத இடங்களை தொட்டீர்கள். புதிய தளத்திலும் அவ்வாறு புதிய உயரம் தொட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்துக்கள் 💐 தமிழகம்,தமிழர்கள்,தமிழ் துனண நிற்கும்.👍

  பதிலளிநீக்கு
 31. உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் cell no.7904865427

  பதிலளிநீக்கு
 32. தி இந்து நடுபக்கமும், இரங்கல் கட்டுரைகளும் வாழும் தலைமுறைக்கு நம்பிக்கையையும் சுயகௌரவத்தையும் அளித்திருக்கிறது.ஆனந்த விகடன் இதழில் பணியாற்றிய காலத்தை விடவும் தி இந்து காலம், பொற்காலமே! ஏன் இந்த விலகல் முடிவு? எழுத்து பயணமும், அதன் மீதான தாகமும் ஆழ பாயட்டும்
  அண்டனூர் சுரா

  பதிலளிநீக்கு
 33. காந்தியத்தை ஏற்ற மனது கருங்காலங்களை கண்டு காணாமல் போக ஏலாதுதான். எழுத்தியக்கம் தொடர்க..
  வெல்க

  பதிலளிநீக்கு
 34. சற்று வருத்தமே. எனினும் அடுத்த கட்ட நகர்வு நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து எங்கள் ஆதரவு உண்டு சமஸ்

  பதிலளிநீக்கு
 35. தமிழ் இதழியல் துறைக்கு தங்களின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

  தங்களது எழுத்துக்கள் எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தை கட்டமைக்கும் ஆயுதமாக எப்போதும் இருக்கும்.

  தங்களின் புதிய முன்னெடுப்புகள் வெற்றி பெற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி,
  மணப்பாறை.

  9443645497.

  பதிலளிநீக்கு
 36. இனிமேல் தி இந்து தமிழ் நாளிதழ் சமஸ் அவர்களின் நடுப்பக்க கட்டுரைகள் இல்லாத வெறுமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று தேக்கநிலையால் ஏற்படும் மனச்சோர்வுக்கு மருந்து எண்ணியதை எண்ணிய படி செய்வதே.. வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு
 37. உங்கள் நடுப்பக்கக் கட்டுரைகள் என்னை ஈர்த்ததில்லை!

  பதிலளிநீக்கு
 38. மீண்டும் நாம் எதன் வாயிலாக எப்படி சந்திப்பது ?

  பதிலளிநீக்கு
 39. நடுப்பக்கத்தில் கலக்கிய நீங்கள் வேறு பரிமாணத்தில் மெருகேற வாழ்த்துகள் வாழ்க வளமுடன் asokan0510@gmail.com

  பதிலளிநீக்கு
 40. கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் இந்து இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்து செய்த பங்களிப்பை இங்கே நினைவு கூர்கிறேன். மகத்தான அந்த மாற்றங்கள் உங்களைப் போன்றோர் இருந்ததால் சாத்தியமானது. தினசரி பத்திரிகைகள் ஏற்கனவே பக்கங்களைக் குறைத்துக்கொண்ட நிலையில், இப்போது உங்களைப் போன்ற தகுதியானவர்களையும் இழந்து விடுவதால், அடுத்து என்னாகும் என்ற துறை சார்ந்த ஒரு ஏமாற்றம் உண்டாகிறது. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு போல, நீங்கள் எந்த வகையில் செயல்பட்டாலும் உங்களை இச்சமூகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறேன். தமிழ் இந்துவிலிருந்து விடைபெறும் இந்தக் கட்டுரையில்கூட, உங்கள் கட்டுரைகளுக்கே உரிய அடர்த்தியான கருத்துகளையும், கற்றுக்கொள்வதற்கான வழிகளையும் காண முடிகிறது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 41. தங்களுடைய எழுத்துக்கள் கல்லூரி மாணவனாக இருந்த எனக்கு ஒரு புதிய சிந்தனையை சமூகத்தைப் பார்க்கின்ற அதுகுறித்தான புரிதலை ஏற்படுத்தியது. தங்களின் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகளும் அன்பும் ஆதரவும்
  - நா.சபரிநாதன் , ஈரோடு

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் தோழரே,
  தங்களை புதுக்கோட்டை புத்தக கண்காட்சியில் தான் தங்களின் மேடை பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து உங்களின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.
  தி இந்து பத்திரிக்கை மீது முரண்கள் இருந்தாலும் ஜனநாயமான சமஸின் எழுத்துக்களை வாசிப்பதை குறைத்ததே இல்லை.
  புத்தக கண்காட்சியில் உங்களின் பேச்சு தான் எதை வாசிக்க வேண்டும் என்ற முடிவை சொன்னது. முற்போக்கு நிறைந்த, சமூகநீதி தலைவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருந்தும் வடஇந்திய பத்திரிக்கைகள் ஒருவர் கூட இந்த தலைவர்கள் பற்றி ஒருவரி கூட எழுதவில்லை என்று கூறினீர்கள், தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக என்பது பற்றி விரிவாக கூறினீர்கள். அண்ணா, கருணாநிதி பற்றி வாசிக்க தொடங்கிய இடம் அதுவே, நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
  நன்றி.........விரைவில் உங்களின் எழுத்தை எதிர்நோக்கி
  க. விசுவநாதன் (தொ.எண்: 9677300723) Visuilango@gmail.com

  பதிலளிநீக்கு
 43. வணக்கம்! மனம் இதை சற்றே ஏற்க மறுக்கிறது. தமிழ் இந்துவின் தனித்துவத்திற்கு தங்களுடைய பங்கும், தாங்கள் அமைத்த அணியினரின் பங்கும் தான் காரணம். குறிப்பாக, தங்கள் கட்டுரைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். எவ்வளவு பெரிய கொள்கை முடிவுகளையும், சிக்கல்களையும், அரசியல் நிலைப்பாடுகளையும் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் ஓர் எளிய பாமரனின் பார்வையில் தாங்கள் எழுதும் அக்கட்டுரைகள் மனம் கவர்ந்தவை. இனி, இந்து தமிழ்த்திசையின் வீச்சு எப்படி மாறப்போகிறது எனத் தெரியவில்லை. நீங்கள் எடுத்திருக்கும் இந்நிலைப்பாட்டை மனத்திண்மை உள்ள ஒருவரால் மட்டுமே எடுக்க முடியும். எழுத்துப்பணியில் தீவிரம் காட்டி நீங்கள் ஆர்வம் காட்டினாலும், பலதரப்பட்ட மக்களைச் சேரும் வகையில் ஒரு ஊடகவெளியை நிறுவுங்கள். அதுவே, வாசகர்களாகிய எங்களுக்குச் செய்யும் நீதி!
  -அ.செ.மணிமார்பன், திருச்சி
  கைப்பேசி: 7502524242
  மின்னஞ்சல்: asmanimarban@gmail.com

  பதிலளிநீக்கு
 44. உங்கள் எழுத்தின் மூலம் எனக்கு இருந்த அரசியல் பார்வை விசாலமானது.
  ஆனந்த விகடனில் உங்கள் கட்டுரையை விரும்பி படிப்பேன்.
  தமிழ் இந்து பத்திரிக்கையில் வரும் நடுபக்க கட்டுரைக்காகவும் நடுநிலை செய்திக்காகவும் வாசகனாக இருக்கிறேன்.
  உங்கள் வழித்தடம் யாவும் எனை போன்றோருக் விசாலமான பார்வை தருகிறது. நன்றி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 45. முதல் நாள் தி இந்து தமிழை பெட்டி கடையில் வாங்கினேன். அடுத்த மாதம் முதல் அதுவரை வாங்கிவந்த தினமலரை ஒதுக்கிவிட்டு தி இந்துவுக்கு மாறிவிட்டோம். இன்றும் எங்கள் வீட்டின் தினசரி தமிழ் திசை தான்.இந்தியா முழுதும் நீங்கள் பயணித்து எழுதிய பயண கட்டுரையே என்னை மிகவும் ஈர்த்தது. கல்கத்தாவை பற்றி நீங்கள் எழுதியது எனக்கு கல்கத்தா சென்று வர ஆசையை தூண்டியது நிச்சயம் செல்வேன்.நன்றி.புத்தகம் வழியாகவும் பேசுவோம்.

  பதிலளிநீக்கு
 46. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்திருக்கிறது..... இந்த சிந்தனை மாறாமல் இருக்கும் வரை உங்கள் படைப்புகள் மதிப்பு பெறும்.
  இந்திய ஜனநாயகத்தில் ஒளியைக் காண நடைமுறையில் பயனளிக்கும் கருத்துக்கள் தேவை. எதிர்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 47. அரசியல் மற்றும் பத்திரிகை உலகில் 'ஜனநாயகத்தின் பின்னடைவு'. இந்த வார்த்தைகளின் வலி மற்றும் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் அடுத்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 48. நடுப்பக்க கட்டுரைகள் எளிமையாக சுருக்கமாக எழுதினீர்கள்,நெல்லையில் நடைபெற்ற வாசகர் கூட்டத்தில் பேசிய எழுத்தச்ளர் இவ்வாறு கூறினார் "கட்டுரைகளை 400 வார்த்தைகளுக்குள் எழுதினால்தான் படிக்கின்றனர்" என.அதனை அதற்கு முன்பே ஆரம்பித்து வைத்தீர்கள்.தினமணி யின் பொடி எழுத்து களில் வரும் நீண்ட கட்டுரைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. இப்போது இந்து வை கோவிட் 19 ஆல் மிஸ் செய்தேன்.இனி உங்களையும். வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 49. நிச்சயமாக சந்திக்கலாம்.
  என் மின்னஞ்சல் முகவரி:
  writersamas@gmail.com
  உங்கள் அஞ்சல் முகவரி, செல்பேசி எண் இரண்டையும் மேற்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிடுங்கள். புதிய முயற்சியைத் தொடங்குகையில் நானே தொடர்புகொண்டு தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 50. நடுப்பக்க கட்டுரைகள் எளிமையாக சுருக்கமாக எழுதினீர்கள்,நெல்லையில் நடைபெற்ற வாசகர் கூட்டத்தில் பேசிய எழுத்தச்ளர் இவ்வாறு கூறினார் "கட்டுரைகளை 400 வார்த்தைகளுக்குள் எழுதினால்தான் படிக்கின்றனர்" என.அதனை அதற்கு முன்பே ஆரம்பித்து வைத்தீர்கள்.தினமணி யின் பொடி எழுத்து களில் வரும் நீண்ட கட்டுரைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. இப்போது இந்து வை கோவிட் 19 ஆல் மிஸ் செய்தேன்.இனி உங்களையும். வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 51. 'உங்களை விட வயதில் மிக இளையவன். என்னை நீங்கள் சார் என்று அழைப்பது அனிசையாக இருக்கிறது. என்னை சமஸ் என்றே அழையுங்கள். அல்லது தம்பி என்று சொல்லுங்கள்' என கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். "பணியிடத்தில் நீங்கள் Superior; நான் சாதாரண நிருபர். எனவே நான் உங்களை அப்படி அழைப்பது முறையல்ல, மரபுமல்ல. இப்போதைக்கு இப்படியே சார் என்றே அழைக்கிறேனே' என்று திரும்பப் பேசியிருக்கிறேன்.'சமஸ்' 'தம்பி' சார்' என வரும் வார்த்களில் என்ன இருக்கு. அதையும் தாண்டி உங்களிடம் நிறைந்திருக்கும் அன்பு, பாசம், சிந்தனை, அறிவாற்றல், எவரையும் இகழாமை, யாரையும் குறைத்து மதிப்பிடாமை என சகலத்தையும் நான் உணர்வேன். அந்த உணர்வில் இரண்டற கலந்து வாழ்த்துகிறேன். "சமஸ் சார், நீங்கள் நீடு வாழ்வீர்"

  பதிலளிநீக்கு
 52. தங்களது புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...
  ajai4671@gmail.com

  பதிலளிநீக்கு
 53. வாழ்த்துகள் சார்...

  பூபதி
  mboopathibsc@gmail.com
  9025328809

  பதிலளிநீக்கு
 54. மீண்டும் தமிழ் மொழியின் வெளிப்பாடுகளில் ஏதேனும் ஒன்றில் சந்திப்போம்...🤝👍💐 9566576294
  ssoundar@live.com

  பதிலளிநீக்கு
 55. ஊடக அறத்திலும் அதன் புலப்பாட்டிலும் ஒரு தேக்கம் நிலவுகிறது. இந்தத் தேக்கநிலையில் தேங்கிக் கிடக்காமல் புதிய திக்குகளில் பயணிக்கும் போதுதான் புதியதான படிப்பினைகள் கிடைக்கக்கூடும். புதியதான ஊடகப்பணியும் எழுத்துப்பணியும் தமிழ் அறத்தை வளப்படுத்தட்டும். வாழ்த்துகள்.
  maharasan1978@gmail.com

  பதிலளிநீக்கு
 56. நண்பர் சமஸ்,
  அனல் தெறித்து பல கட்டுரைகள். முதல்முதலாண்டு நிறைவு வாசகர் சந்திப்பில் அன்று உங்களுடன் அளவளாவியதும்,தங்களின் கட்டுரையினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை, ஊறுகளை தங்களிடம் பகிர்ந்த போது நீங்கள் வெளிக்காட்டிய எதற்கும் அஞ்சாத போக்கினை கண்டு, சிறிது கவலையுடனே ,இருந்தேன்.எட்டு ஆண்டுகளில், யாரும் எட்டாத நிலையை அடைந்து ,தங்களின் அர்ப்பணிப்பை, அயராத முயற்சியை அளப்பரிய வகையில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்து உயர்ந்துள்ளீர்கள்.
  தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ,இன்னும் ஒரு பெரும் பாய்ச்சலாகத்தான் அமையும்.மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 57. வானம் வசப்படும் வாழ்த்துக்கள் ...Sir ....

  பதிலளிநீக்கு
 58. இதயபூர்வமான வாழ்த்துக்கள்... ஹிந்து தமிழ் நாளிதழில் தங்களின் பங்கு மதிப்பு மிக்கது... எதிர்காலத்தில் தங்களது இலக்குகள் அடைந்திட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 59. உங்களின் முன்முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். ஆனாலும் தங்களின் முன்னெடுப்பு எந்தச் சொந்தப் பொருளாதாரக் குறைபாடு, சிக்கல்கள் ஏதும் இல்லாமல் அமைய வேண்டும் என்ற அச்சம் உங்களை விட எனக்கு அதிகமாக இருக்கிறது.
  திறமை, முயற்சி, உழைப்பு எப்போதும் துணை நிற்கும். வாழ்த்துக்கள்!
  மதியழகன், நெய்வேலி. mathimani.madhu@gmail.com

  பதிலளிநீக்கு
 60. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்நாட்களில் this is one of the reason

  பதிலளிநீக்கு
 61. இந்து தமிழ் நாளிதழின் முகம் நீங்கள்...அதன் உருவாக்கத்தில் உங்கள் பங்கு அளப்பரியது..உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் எங்கு சென்றாலும் உங்களை உயர்த்தும்.. உங்கள் வருங்கால முயற்சிகள் யாவும் சிறக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 62. புதிய எழுத்துத்திசையில் உயர இனிய வாழ்த்துகள்
  மாயன் மெய்யறிவன்
  writermayan@gmail.com

  பதிலளிநீக்கு
 63. ஆம். என் சிந்தனைகளை மாற்றி வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததில் உங்கள் பங்கு உண்டு. மறவேன் . நன்றியும் அன்பும். மேலும் வளர்க்க ! வெல்க ! பாக்கியராஜ் கோதை. 9940646948.

  பதிலளிநீக்கு
 64. மாற்றம்....உயர்வினை கொண்டுவர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 65. ஆம். என் சிந்தனைகளை மாற்றி வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததில் உங்கள் பங்கு உண்டு. மறவேன் . நன்றியும் அன்பும். மேலும் வளர்க்க ! வெல்க ! பாக்கியராஜ் கோதை. 9940646948.pakkiyarajaa@gmail.com

  பதிலளிநீக்கு
 66. உங்களது கட்டுரைகளை விரும்பி படிப்பேன். எழுத்தை ஒரு தவமாக கொண்டவர் என்பதில் ஐயமில்லை. உங்களது சாப்பாட்டு புராணம் தஞ்சாவூர் கவிராயர் என்னிடம் அளித்தார். அதுவே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது.

  தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம் - சிவ. தினகரன் (எ) சென்னைத்தமிழன் aforamma@gmail.com

  பதிலளிநீக்கு
 67. உங்களது கட்டுரைகளை விரும்பி படிப்பேன். எழுத்தை ஒரு தவமாக கொண்டவர் என்பதில் ஐயமில்லை. உங்களது சாப்பாட்டு புராணம் தஞ்சாவூர் கவிராயர் என்னிடம் அளித்தார். அதுவே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது.

  தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம் - சிவ. தினகரன் (எ) சென்னைத்தமிழன் aforamma@gmail.com

  பதிலளிநீக்கு
 68. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 69. உங்கள் எழுத்துக்கு என்று தனிச்சிறப்பு இருக்கிறது உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிக்க கூடியவன் நான் தங்கள் எழுத்துக்களால் தமிழ் சமூகம் பயனடைய காத்துக் கொண்டு இருக்கிறது. பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு சமூக கடமை இருக்கிறது. ஒரு பிரச்சனையை மற்றவர்களுக்கு செய்தியாக சொல்லுவதோடு நின்றுவிட கூடாது என்பது தான் அந்த எண்ணத்திற்கான காரணம். உங்களுடைய அடுத்தகட்ட பணிகள் தமிழ் சமூகத்தைச் செழுமை மிக்கதாக மாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். அரசியல் மற்றும் பத்திரிகை உலகில் ஜனநாயகத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் தாங்கள் விடை பெறுவது வருத்தமளிக்கிறது
  உங்களது அடுத்த முயற்சிகளுக்கு வாசகன் என்ற முறையில் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
  Email: anandanj16@gmail.com

  பதிலளிநீக்கு
 70. இந்து தமிழ் திசைக்கு இழப்புதான் தொடர்ச்சியாக வாசகர்களாகிய எங்களுக்கும்.

  இருப்பினும் பத்திரிக்கை கட்டுரைகளைத் தாண்டி தனி நூல்களாக நீங்கள் எழுதவேண்டியது அல்லது நீங்கள் எழுதுவதற்காகவே காத்திருக்கும் விஷயங்கள் நிறைய இருப்பதாகவே உணர்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். எப்போதும் பின் தொடர்வோம். நன்றி

  பதிலளிநீக்கு
 71. இந்து தமிழ் திசைக்கு இழப்புதான் தொடர்ச்சியாக வாசகர்களாகிய எங்களுக்கும்.

  இருப்பினும் பத்திரிக்கை கட்டுரைகளைத் தாண்டி தனி நூல்களாக நீங்கள் எழுதவேண்டியது அல்லது நீங்கள் எழுதுவதற்காகவே காத்திருக்கும் விஷயங்கள் நிறைய இருப்பதாகவே உணர்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். எப்போதும் பின் தொடர்வோம். நன்றி

  பதிலளிநீக்கு
 72. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 73. புதிய கதவுகள் திறக்கின்றன. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 74. "முதலிடம் நோக்கி..."
  தலைப்புச் செய்தி படத்தின் மூலம் பல செய்திகளை சொல்ல வருவதாக தெரிகிறது..

  நன்றி.

  உங்கள் சிந்தனை சிறகுகள் காந்திய வழியில் இன்னும் விரிய வாழ்த்துக்கள்.
  meerankashifi@gmail.com

  பதிலளிநீக்கு
 75. வாழ்த்துக்கள் சார் சமரசமில்லாத உங்கள் எழுத்தை மீண்டும் தொடருங்கள் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 76. மாற்றம் ஒன்றே நிரந்தரம் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 77. பலமான கருத்து வேறுபாடுகள் உங்களோடு எனக்குண்டு என்றாலும் உங்களோடு உடன் நிற்கும் மனமே இப்போது முந்தி நிற்கிறது தோழர் சமஸ்.வாழ்த்துக்கள்.ச.தமிழ்ச்செல்வன் 9443695553 tamizh53@gmail.com

  பதிலளிநீக்கு
 78. சார் வணக்கம்
  என் பெயர் சு.புஷ்பநாதன்(கணியன்) புதுச்சேரி மாநிலம் பண்டசோழநல்லூர் கிராமம், பொறியியல் படித்து முடித்து ஊடகத்துறையின் மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னையில் உள்ள தந்தி டிவியில் ஒருவருட காலம் வேலை செய்தேன் , வீட்டுச் சூழல் மீண்டும் என்னை கிராமத்துக்கே இழுத்து விட்டது, சென்னையில் பணி செய்த காலம் இந்து நடுப்பகுதியை வாசித்தேன, என் கிராமத்திற்கு வந்து பிறகும் கூட நடுப் பக்கத்திற்காகவே இந்து நாளிதழை வாங்கி வாசித்து வருகிறேன்.பத்திரிகை துறையில் உங்களது பணி அளப்பரியது.இப்பேது நீங்கள் தீவிரமாக புத்தகம் எழுதப்போவதாக சொன்னதற்கும் என் வாழ்த்துகள் காரணம் உங்களிடமிருந்து நிறைய புத்தகங்கள் வர வேண்டும். ஒரு எழுத்தாளராகவும் நீங்கள் அளப்பரிய களப்பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.வணக்கம்.
  8220573202
  Pushpanathanseenu@gmail.com

  பதிலளிநீக்கு
 79. சாம்பாரண் சத்தியாகிரகம்..
  ஒரு பிடி மண்..
  நீர் நிலம் வனம் - கடல்..
  இன்னொரு இந்தியா..
  மோடியின் காலத்தை உணர்தல்..
  என்ன பேச வேண்டும் என் பிரதமர் ?
  இன்னொரு இந்தியா..
  லண்டனிலிருந்து சமஸ்..

  கட்டுரைத்தொடர்களின் தவறாது சேகரித்த செய்தித்தாள் தொகுப்புகளில்..

  ஆழ்ந்த அகன்ற பேட்டிகளின் சேகரிப்பில், ​சமகால அரசியல் கட்டுரைகளில்,
  ​இந்திய கூட்டாட்சியின் விழுமியங்கள் பேசும் தொடர் கட்டுரைகளில்..

  என்வாழ்வின் சிந்தனை தளத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டியெழுப்பிய..
  பேராசான் சமஸ்

  கடல் கட்டுரை வெளிவந்து கொண்டிருந்த காலம்,
  சகபயணியாக, மாணவனாக, உங்களோடு பயணத்தில் இணைந்திட ஓடி வந்து விட வேண்டும் என்று பள்ளி கால சிறுவனாய் பேராசை கொண்ட காலம்..

  எட்டாண்டுகால பெரும்பயணத்தின் மீள் வாசிப்புகளோடு,
  புதிய பயணத்திற்கான காத்திருப்போடு...
  புதிய பயணத்தில் பங்காற்றிட, உடனிருந்து கற்றிட பேர் அவா கொள்ளும்,
  கல்லூரி கால இளைஞன்..

  வாசகன் எனும் மாணவன்
  க.ரா.சுபதர்மன்
  9626329559
  krsdharman@gmail.com

  பதிலளிநீக்கு
 80. சாம்பாரண் சத்தியாகிரகம்..
  ஒரு பிடி மண்..
  நீர் நிலம் வனம் - கடல்..
  இன்னொரு இந்தியா..
  மோடியின் காலத்தை உணர்தல்..
  என்ன பேச வேண்டும் என் பிரதமர் ?
  இன்னொரு இந்தியா..
  லண்டனிலிருந்து சமஸ்..

  கட்டுரைத்தொடர்களின் தவறாது சேகரித்த செய்தித்தாள் தொகுப்புகளில்..

  ஆழ்ந்த அகன்ற பேட்டிகளின் சேகரிப்பில், ​சமகால அரசியல் கட்டுரைகளில்,
  ​இந்திய கூட்டாட்சியின் விழுமியங்கள் பேசும் தொடர் கட்டுரைகளில்..

  என்வாழ்வின் சிந்தனை தளத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டியெழுப்பிய..
  பேராசான் சமஸ்

  கடல் கட்டுரை வெளிவந்து கொண்டிருந்த காலம்,
  சகபயணியாக, மாணவனாக, உங்களோடு பயணத்தில் இணைந்திட ஓடி வந்து விட வேண்டும் என்று பள்ளி கால சிறுவனாய் பேராசை கொண்ட காலம்..

  எட்டாண்டுகால பெரும்பயணத்தின் மீள் வாசிப்புகளோடு,
  புதிய பயணத்திற்கான காத்திருப்போடு...
  புதிய பயணத்தில் பங்காற்றிட, உடனிருந்து கற்றிட பேர் அவா கொள்ளும்,
  கல்லூரி கால இளைஞன்..

  வாசகன் எனும் மாணவன்
  க.ரா.சுபதர்மன்
  9626329559
  krsdharman@gmail.com

  பதிலளிநீக்கு
 81. தி இந்து.எனக்கும் பாரம்பரிய விவசாயத்துக்கும் உள்ளது தொடர்பினை புதுச்சேரியில் இருந்து வெளிக்கொண்டு வந்தது.எனது பாரம்பரிய 1000 விதைகள் கண்காட்சியை சிறப்பாக வெளி உலகதத்திற்கு கொண்டு வந்ததை நினைவு கூறுகிறேன்.நன்றி தங்கள் உழைப்பிற்கு.!

  பதிலளிநீக்கு
 82. தோழர் சமஸ் அவர்களின் கட்டுரைகளின் தாக்கம் இந்நாள் வரை என் சித்தாந்தங்கள் சார்ந்த புரிதல்களுக்கு புது வடிவம் கொடுத்துள்ளது. இனி எங்கு என்பதை அறிய ஆவலாயுள்ளேன். வாய்ப்பிருந்தால் இணைந்து பணியாற்ற பேரவா கொண்டுள்ளேன்.

  நன்றி
  அரவிந்தன்
  aravindan.muruganantham@gmail.com

  பதிலளிநீக்கு
 83. புதிய பணியிலும் சிறப்பாக செயல்படுவிர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 84. சமஸ் என்ன செய்ய போகிறா, என எதிர்பார்ப்புடன்.

  பதிலளிநீக்கு
 85. வாசிக்க ஆரம்பித்தவுடன் எனக்குத் தோன்றியது: டிஜிட்டல் ஊடக அரங்கில் தமிழில் யாரும் எழுதுவதில்லையே; இவர் அதில் இறங்கினால் நன்றாக இருக்குமே" என்பதுதான். நீங்கள் அதையே செய்யப் போவதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் ஆதரவு உண்டு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 86. கருத்தமைந்த நடுப்பக்கக் கட்டுரைகள் என்போன்ற வாசகர்களை ஒத்திசைவாகவோ அல்லது எதிர்வினையாகவோ எங்கள் கருத்துகளை வாசகர் கடிதங்களில் பதிப்பித்து எழுதத் தூண்டியவர்கள் நீங்கள். உங்களின் மனத்தேக்க நிலை என்பது்ஒருவகையான ஏக்க நிலை. உங்களின் அடுத்த முயற்சி உங்களை விடுவிக்கும். அடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
  விளதை சிவா, சென்னை.

  பதிலளிநீக்கு
 87. கனவு மெய்ப்பட வேண்டும்.
  அன்பு வாழ்த்துகள்.
  nandhtm@gmail.com

  பதிலளிநீக்கு
 88. வாழ்த்துக்கள். எழுத்தாளர்கள் என்றும் எதற்காகவும் சமரசம் செய்வதில்லை

  பதிலளிநீக்கு
 89. கடந்த எட்டாண்டுகளில் இந்து தமிழ் மட்டும் வாசகர்களிடம் வரவேற்பை பெறவில்லை "சமஸ்" என்ற எழுத்தாளரும் தான் பெரும் வரவேற்பை பெற்றார் .தமிழ்கூறும் நல்லுலகிற்கு வராது வந்த மாமணி போல் பல் துறைகளையும் அதன் ஆளுமைகளையும் மகத்தான தெற்கிலிருந்து ஒரு சூரியனையும் மாபெரும் தமிழ்க் கனவையும் மீண்டும் உதித்தெழ கண்டோம் .நீவிர் பொறுப்புணர்ந்து தக்க காலமதில் நற்செயல் ஆற்றினீர்கள் .எம் மக்கள் மேலும் பல விழுமியங்களை மீக்கொள தாங்கள் மாற்றத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஊடகவியலுக்கு தக்கவாறு செயலாற்றும் உறுதி கண்டு பெருமிதம் கொண்டேன் .எம் சக தமிழர் சார்பாக தாங்களாற்றிய இதழியல் சேவைக்கு நன்றியும் ஆற்றப் போகும் ஊடகவியல் களமாடலுக்கு பெருமிதம் மிக்க வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எய்துகிறேன் . வாழ்க சமஸ் மென்மேலும் வளர்க உம் ஊடகவியல் அறம்

  பதிலளிநீக்கு
 90. கடந்த எட்டாண்டுகளில் இந்து தமிழ் மட்டும் வாசகர்களிடம் வரவேற்பை பெறவில்லை "சமஸ்" என்ற எழுத்தாளரும் தான் பெரும் வரவேற்பை பெற்றார் .தமிழ்கூறும் நல்லுலகிற்கு வராது வந்த மாமணி போல் பல் துறைகளையும் அதன் ஆளுமைகளையும் மகத்தான தெற்கிலிருந்து ஒரு சூரியனையும் மாபெரும் தமிழ்க் கனவையும் மீண்டும் உதித்தெழ கண்டோம் .நீவிர் பொறுப்புணர்ந்து தக்க காலமதில் நற்செயல் ஆற்றினீர்கள் .எம் மக்கள் மேலும் பல விழுமியங்களை மீக்கொள தாங்கள் மாற்றத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஊடகவியலுக்கு தக்கவாறு செயலாற்றும் உறுதி கண்டு பெருமிதம் கொண்டேன் .எம் சக தமிழர் சார்பாக தாங்களாற்றிய இதழியல் சேவைக்கு நன்றியும் ஆற்றப் போகும் ஊடகவியல் களமாடலுக்கு பெருமிதம் மிக்க வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எய்துகிறேன் . வாழ்க சமஸ் மென்மேலும் வளர்க உம் ஊடகவியல் அறம்

  பதிலளிநீக்கு
 91. தங்கள் எழுத்து பணி என்றும் சிறக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஊடகத்துறையில் இன்னும் பல சாதனைகள் பெற எம் நல்வாழ்த்துக்கள் 🌺🌺  பதிலளிநீக்கு
 92. உங்கள் இலக்கின் அடுத்த கட்டம் செழுமையுடன் வாழ்த்துக்கள் தோழர்

  பதிலளிநீக்கு
 93. இணைந்து பணியாற்றிய காலங்களை மீண்டுமொருமுறை எனக்குள் நானே நினைவுபடுத்திக்கொள்கிறேன்; அவை மதிப்பிற்குரிய காலங்கள்தாம்.

  மறக்க முடியாதவை.

  தங்களின் மனம் சொல்லும் வழி என்னவோ அதன்வழி செல்லுங்கள்.

  நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 94. இந்து தமிழ் போன்ற பாரம்பரிய நிறுவனம், மிகப் பெரிய வாசகர்கள் வட்டம் இவற்றிலிருந்து வெளியே வந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  உங்கள் எழுத்தின் வலிமையை அது பரவலான கவனத்திற்கு கொண்டு சென்றது. அதிகார வர்க்கம் அதனால் மறைமுகமாகச் செயல்பட வேண்டிய அவசியம் உருவானது.

  எனினும் நீண்ட பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த முடிவை எடுத்திருப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  94872 01794.
  sjsp_tvl@yahoo.com

  பதிலளிநீக்கு
 95. அன்புள்ள திரு சமஸ் அவர்களுக்கு,வணக்கம். ஊடகத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உங்களுக்கு என்றும் உண்டு என்பதை நாங்கள் அறிவோம். உங்களின் அடர்த்தியான எழுத்துகள், செறிவான கருத்துகள், வாசகர் மனதில் ஆழமாகச் சென்று சேரும் வகையில் அமையும் சொற்றொடர்கள், நண்பர்களையும், மாற்றுக்கருத்துள்ளோரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, பரந்துபட்ட வாசிப்பு, அதனைத் தெளிவாகப் பகிர்தல், சமூகப் பிரக்ஞை என்ற ஒவ்வொரு நிலையிலும் என்னைக் கவர்ந்தவர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர் நீங்கள். உங்கள் அடுத்த இலக்கில் நீங்கள் இன்னும் உயரச் செல்வீர்கள். உங்களுடைய திட்டமிடலும், நிதானமும் கண்டு நான் எப்போதும் வியந்துள்ளேன். உங்களுக்கான தேடல் என்பதானது எல்லையற்றது. நிறைவே செய்ய முடியாத ஒன்று. அடுத்தடுத்த இலக்குகள், அடுத்தடுத்த சாதனைகள் என்று உங்களின் சிந்தனையின் பரப்பில் நீங்கள் சாதிக்க வேண்டியவை இன்னும் அதிகமாக இருக்கின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளீர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உங்களுக்கும் பொருந்தும்.
  இந்து நாளிதழின் நடுப்பக்கத்தை சமஸ் பக்கம் என்று கூறுமளவு உயர்த்தியதோடு, பிற இதழ்களுக்கு ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்கள் குழுவினரோடு இணைந்து நீங்கள் சாதித்தாலும், உங்களின் தனிப்பட்ட தாக்கத்தை அதில் நாங்கள் உணர்ந்தோம். சாமான்யனையும் சென்றடையும் வகையில் நீங்கள் பொருண்மைகளை எடுத்துக் கையாண்ட விதமானது பாராட்டத்தக்கதாகும்.
  உங்களுடைய அடுத்த முயற்சி சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் எழுத்துகளையும்,ஊடக அனுபவங்களையும் நீங்கள் நூலாக வெளியிடலாம். உங்கள் குடும்பத்தாருக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தார் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகள். முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சாவூர் (9487355314) (drbjambulingam@gmail.com)

  பதிலளிநீக்கு
 96. எட்டாண்டுகள் மிகச் சிறந்த பணி ஆற்றியுள்ளீர்கள். இந்துவின் நடுப்பக்கம் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. எல்லா தரப்பு வாதங்களுக்கும் அதில் இடம் உண்டு. பெரும்பான்மையான மக்கள் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் எத்தனை எத்தனை கட்டுரைகள்! எத்தனை எத்தனை தலையங்கங்கள்! ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் எத்தனை எத்தனை முன்னெடுப்புகள்! உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் திறமை மீதும், அர்ப்பணிப்பு மீதும் அபாரமான நம்பிக்கை உண்டு. உங்கள் எதிர்கால பணி சிறக்க சிறப்பான வாழ்த்துக்கள்.- உங்கள் தோழன் சி பி கிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 97. உங்கள் முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்...நண்பரே ...

  தமிழரசு, திருவண்ணாமலை
  9943489412.. Email - tamil333@gmail.com

  பதிலளிநீக்கு
 98. பார்வையிலிருந்து ஒரு மதிப்புமிக்க குரலாக எழுத்தில் படித்தீர்கள்
  சாமானியனையும் எழேத வைத்தீர்கள பல செய்தி இதழ்களிலிருந்து மாறுபட்ட செயல்பாட்டிற்கு எனது பாராட்டுக்கள். தங்களின் புதிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகளுடன் மன்னையிலிருந்து ப.இராசரத்தினம்

  பதிலளிநீக்கு
 99. வாழ்த்துக்கள் சமஸ்.
  உங்கள் நடுப்பக்கத்துக்காகவே தமிழ் ஹிந்து வாங்கியவன் நான்

  பதிலளிநீக்கு
 100. வருத்தத்தை அளிக்கிறது. அடுத்து என்ன எப்போது உங்கள் தமிழ் நாங்கள் படிப்பதற்கு

  பதிலளிநீக்கு
 101. இலக்கு நோக்கி பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 👍 இராமநாதன் தூத்துக்குடி

  பதிலளிநீக்கு
 102. தெளிவான கருத்தோட்டம் உள்ள வகையில் தமிழ் வாசகர் பயன் பெறும் விதத்தில் எழுதுப்பணி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 103. தெளிவான கருத்தோட்டம் உள்ள வகையில் தமிழ் வாசகர் பயன் பெறும் விதத்தில் எழுதுப்பணி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 104. வாழ்த்துக்கள் தோழர்,

  தொடரட்டும் உங்கள் முயற்சிகள்

  lsaravanakumarsk@gmail.com
  9524102569
  9524102569  பதிலளிநீக்கு
 105. தனுஷ்கோடி சென்று வந்த சில நாட்களில் தனுஷ்கோடி பற்றிய உங்களது முதல் கட்டுரையை படித்தேன். உங்களது முதல் கட்டுரையை படித்ததிலிருந்து உங்கள் எழுத்துக்களை மிகவும் பிடித்துவிட்டது. உங்களது நடுப்பக்க கட்டுரையை அன்றைக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் வாசித்து விடுவேன். அதைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பேன். எந்த விசயமாக இருந்தாலும் அதன் நிறை குறை பற்றி சரியாக மதிப்பிடுவது உங்கள் எழுத்தின் சிறப்பு. எளிமையான எழுத்து நடை. நீங்கள் எழுதி வந்த மோடி பற்றிய கட்டுரை தொடர் பாதியிலேயே நின்றுவிட்டது. சிறுவயது முதல் தினமணியை வாசித்து வந்தேன் அதன் போக்கு மாறியதால் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டேன். தமிழ் இந்துவை அது வந்த நாள் முதல் வாசித்து வருகிறேன் ஆனால் சமீபகாலமாக தமிழ் இந்துவில் உங்கள் கட்டுரை வருவது குறைந்து இருப்பதாலும், உண்மையான செய்திகள் மறைக்கப்படுவதும் தமிழ் இந்துவின் மீதான ஆர்வமே மிகவும் குறைந்து விட்டது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நம் தமிழ் போல் என்றென்றும் சிறந்து வளர்வோமாக.
  செள.ஸ்டாலின்பாரதி, பொறியாளர், திருப்பூர்.

  பதிலளிநீக்கு
 106. 15.06.2013லிருந்து டிசம்பர் 2020 வரை தொடர்ந்த வாசகன். தஞ்சையில் வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவன். ஆங்கிலப் பத்திரிகைகளில் வாசித்த செய்திக் கட்டுரைகள்போல் தமிழில் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் தங்களின் எழுத்துக்கள் வந்தன.
  "புதிதாய் ஏதோ ஒன்று" என்பதை
  "தி தமிழ் இந்துவின் நடுப்பக்க ஆசிரியர்" என்ற சொற்பிரயோகமே உணர்த்தியது. அதில் வந்தவை எல்லாம் எனக்கு ஏற்புடையவை அல்ல.ஆனால் எனது எண்ணத்திற்கு மாறுபட்ட விஷயங்கள் பற்றி அதுவரை அறிந்திராத வேறு கோணங்களில் அணுகிய தருணங்கள் பலப்பல.காந்தியின் மீது மயக்கம் கொண்ட எனக்கு தீராத மயக்கத்தை ஏற்படுத்தியது சமஸின் எழுத்துக்கள் என்பதை எப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். இந்திய அரசியலில் நேர்ந்த ஒரு விபத்தின் காரணமாக சுதந்திர இந்தியாவின் சிற்பி நேருவைப்பற்றி தலைகீழ் சித்திரங்கள் வரையப்படும் இத்தருணத்தில் அவருக்கு கேடயமாய் இருந்த பல எழுத்துக்கள் என்றும் என் மனதில் நிற்கும். அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பற்றிய படைப்புகளும் அங்ஙனமே. நன்றி சமஸ்! தங்களுடைய அடுத்த முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்!
  (எனது முகவரி முதலான விவரங்கள் இ.மெயிலில்)

  பதிலளிநீக்கு
 107. தங்களது அடுத்தக்கட்ட நகர்வு சிறக்கும், வெல்லும்
  வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
 108. எப்போதும்போல எந்த நேரத்திலும் என்னைக் கூப்பிடலாம்..,
  சிறப்புற வாழ்த்துகள்.
  பசு.கவுதமன்.

  பதிலளிநீக்கு
 109. உங்களுடைய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.கருத்தில் வாதமும்,வாதத்தில் தெளிவும் இருந்தன.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 110. உங்கள் நடுப்பக்கக் கட்டுரைகள், மேற்கொண்ட பேட்டிகள் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டின் கட்சி அரசியலையும் அதேசமயத்தில் அதன் அடிப்படையான ஜனநாயக அரசியலையும் ஒன்றை ஒன்று புறந்தள்ளாமல் ஒன்றை ஒன்று இட்டுநிரப்பும் வகையிலானவை அவை. மாநில சுயாட்சி, தமிழ்நாட்டு அரசியலின் சிறப்பியல்புகள், அதில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு இவைகளை காந்திய, பன்மைத்தன்மை அரசியலில் நம்பிக்கை கொண்ட ஒருவரது பார்வையில், அலசலில் ஊடகவெளியில் கொண்டுவருவது எத்தனை நம்பிக்கை அளிப்பதாக, உள விரிவு கொண்டதாக இருந்தது!

  உங்களுடைய முயற்சியொல் வெளிவந்த மாபெரும் தமிழ்க்கனவு, இந்துத்துவமும் வலதுசாரி தமிழ்த்தேசியமும் வெறுப்பின் விதைகளை, ஒற்றைப்படவாதத்தை படோடமாக விதந்தோதும் தருணத்தில் ஒரு சீரிய, நேர்மையான முயற்சி.

  உங்களது பங்களிப்புகள், கருத்துருவாக்கங்களுக்கு தமிழ்நாட்டின் ஊடகவெளி இடமளித்ததில் பெருமகிழ்வும், நன்றியும் கொள்ளும். நன்றி. நினைப்பது முடியும்.

  பதிலளிநீக்கு
 111. இருபது வயதில் இருந்து ஒரே துறையில் தொடர்ந்து சுயசிந்தனை மற்றும் தொடர் உழைப்புடன் செயல்படும் ஒருவருக்கு,நாற்பதுகளின் தொடக்கத்தில் செய்யும் புது முயற்சி மிகப்பெரிய வெற்றியைத் தரும்.
  துணிந்து இயங்குங்கள். இலக்குகளை அடைவது என்பது ஒரு தற்காலிகமானதுதான். நமக்கு பிடித்த வாழ்க்கையை தெளிவுடன் வரையறுத்து தொடர்ந்து உற்சாகமாக செயல்படுவதே வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம். நீங்கள் வெல்வீர்கள் சமஸ். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 112. இந்து தமிழ் திசை நாளிதழ் தினமும் காலையில் வாங்கி நடுப் பக்கத்தை படித்த பிறகே மற்ற செய்திகளை வாசித்தேன்.செய்திகள் இப்போது விரல் நுனியில் கிடைத்து விடுகின்றன. தமிழ் இந்து போல் தரமான நடுப்க்கங்களை தந்தங்கள் நன்றி. எனது வாசிப்புத் திறனை மெருகெற்றியதற்கு நன்றி.ஓர் அரசுப் பள்ளி ஆசிரியராய் மாணவர்கள் முன் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கு நான் வாசித்த கட்டுரைகளின் ஆழமும்
  செறிவும் மிக்க பயனுள்ளதாக இருந்தது.புதியதாக வேறு தளத்தில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆவலோடு.....

  பதிலளிநீக்கு
 113. இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்கம் உணரும் வெறுமையை உணர்ந்து மனசு கனக்கிறது. வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 114. உங்களின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 115. எட்டாண்டுகளாக 'தமிழ் இந்து' சந்தாதாரராக, இருந்து வந்திருக்கிறேன்.மாபெரும் 'தமிழ்க் கனவு','தெற்கில் உதித்த சூரியன்' என் அலமாரியை அலங்கரிக்கின்றன.உங்கள் படைப்புக்களைத் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 116. உங்களுக்கு ஏதோ நெருக்கடி என்று நினைக்கிறேன். உங்கள கருத்துக்களை தெளிவாக சுயமாக எழுதி வந்தீர்கள்.இப்போது அதற்கு ஒரு முட்டுக் கட்டை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். உதாரணமாக தேர்தல் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக கொடுத்த நான்கு பக்க விளம்பரங்கள் கை கூசாமால் நடுநிலை தவறி பணத்துக்காக மட்டும் அதை வெளியிட்டார்கள். திரு ராம் அவர்களும் அந்த நிலைப்பாட்டை சரி காணவில்லை. அது ஒரு திடீர் மனமாற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது . இந்து நாளிதளா இப்படி என்று நடுநிலையாளர்கள் தடுமாறிப் போனார்கள் அதற்கு உங்கள் அபிப்பிராயம் என்ன என்ற செய்தி இன்றுவரை வெளியாகவில்லை. அதுவும் உங்கள் விலகலுக்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 117. எதிர்பார்க்கவில்லை, வாழ்த்துக்கள், புதிய முயற்சி வெற்றிபெற

  பதிலளிநீக்கு
 118. நான் 'தமிழ் இந்து திசை'யின் நிரந்தர வாசகனல்ல. எப்போதாவது அதை வாங்கும்போது உங்களின் நடுப்பக்கக் கட்டுரைகளை விரும்பி வாசித்ததுண்டு. நீங்கள் போற்றத்தக்க எழுத்தாளர் என்பதே என் எண்ணம்.

  ஏதேனும் ஓர் ஊடகத்தின் சார்பின்றி[மாத ஊதியம் பெறாமல் அல்லது வேறு வழியிலான வருவாய் இல்லாமல்] எழுதி மட்டுமே வாழ்வதும், பயனுள்ள எழுத்துப் பணியைத் தொடர்வதும் மிகக் கடினமான சோதனை முயற்சியாகும். அது தேவையற்றதும்கூட. மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் எழுத்தாளனைப் பெரும்பாலும் இந்த மக்கள் கண்டுகொள்வதில்லை; கவலைப்படுவதும் இல்லை என்பது காலம் கற்றுத் தந்த படிப்பினை. இதை நீங்களும் அறிவீர்கள்.

  உங்களின் எழுத்தாற்றலை நன்கு புரிந்துகொண்டுள்ள நாளிதழிலோ, காட்சி ஊடகத்திலோ வேலை தேடிக்கொள்ளுங்கள். வேலை பார்த்துக்கொண்டே தனிப்பட்ட முறையிலும் உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள்.

  தங்களின் மனம் நோகும் வகையில் ஏதும் சொல்லியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

  தங்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 119. உங்கள் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். அதே சமயம் உங்கள் குடும்பத்துக்காக இன்னுமோர் ஊடக நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியபடியே உங்கள் முயற்சிகளையும் தொடங்குங்கள். அம்முயற்சிகள் வெற்றியடைந்தால் பின்னர் தனியாக இயங்குங்கள்.

  பதிலளிநீக்கு
 120. இன்று நான் இட்ட கருத்துரையை ஏன் நீக்கினீர்கள்? காரணத்தையாவது சொல்வீர்களா?

  இதையும் நீக்கிவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை; இழப்பும் இல்லை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புக்குரிய நண்பரே,
   உங்கள் கருத்து எதுவும் நீக்கப்படவில்லை; நான் எவருடைய கருத்தையுமே நீக்கியதும் இல்லை.

   நீக்கு
 121. ஒரு முறை உங்கள் கட்டுரை பற்றி என் குறிப்பு ஒன்றை அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அதுவே பெரிய ஆச்சரியமாக இருந்தது. நடுப்பக்கம் = சமஸ் என்றிருந்தது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  புதிய முயற்சிக்குள் காலடி எடுத்து வைக்கிறீர்ஜ்கள். உங்கள் கட்டுரை போலவே உங்கள் முடிவுகளும் தீர்க்கமானவைகளாக இருக்கும். அதற்கான என் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  வளர்க.

  என் மெயில் முகவரியும், எண்ணும் உங்களுக்கு ஏற்கெனவே அனுப்பியுள்ளேன். மீண்டும்: dharumi2@gmail.com; 8610964451

  பதிலளிநீக்கு
 122. தங்களுடைய எழுத்தை தொடர்ந்து வாசிப்பவன்...அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்துக்கள் தோழர் !
  அன்புடன்
  பிரேம்குமார் .சு கோவை
  9865998602
  mecprem@gmail.com

  பதிலளிநீக்கு
 123. உங்களுடைய எல்லாக் கட்டுரையிலும் மேற்க்கோள் காட்டிக்கொள்ள எனக்கு நிச்சயம் ஒரு வரியை அல்லது ஒரு விசயத்தை நீங்கள் கொடுப்பீர்கள். இம்முறையும் நீங்கள் தவறவில்லை, நானும் தவற விடவில்லை.

  இங்கே கி(கொ)ட்டிய மேலினும் மேலான காந்தியின் வரிகள்.

  ‘மகிழ்ச்சி என்பது எதுவென்றால்,  உங்களுடைய சிந்தனை, உங்களுடைய பேச்சு, உங்களுடைய செயல் யாவும் ஒத்திசையும் தருணம்!’

  நன்றி.
  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 124. அனைத்து நண்பர்களின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சமஸ்.

  பதிலளிநீக்கு
 125. ‘இந்து தமிழ்’ எனும் ஒற்றை ஆற்றலின் மூலம் எவ்வளவு சாதித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க மலைப்பாக இருக்கிறது!

  ஈழ விவகாரத்தில் எப்பொழுதும் தமிழருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இதழ் என்பதால் ‘தி இந்து’ எனக்குப் பிடிக்காது. எனவே ‘தி இந்து தமிழ்’ தொடங்கியபொழுது 2009 இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் எழுந்த தமிழ்ப்பற்று அலையை வணிகமாக்கத் துடிக்கும் ஒரு முயற்சியாகவே அதை நான் கருதினேன். பின்னாட்களில் எங்கு பார்த்தாலும் இந்து தமிழ், இந்து தமிழ் எனப் புகழ்பாடலைக் கண்டும் நம்பகமான நண்பர்கள் பலரும் இதன் தரம் சொல்லக் கேட்டும் படித்துப் பார்க்க மனம் விழைந்ததென்னவோ உண்மை. ஆனால் செய்தித்தாள் படிக்க நேரமில்லாத வாழ்க்கை முறை காரணமாக ஓரிரு முறைகளுக்கு மேல் வாங்கவில்லை.

  இப்பொழுதுதான் புரிகிறது. தமிழ் இதழுலகில் நடந்த ஒரு படிமலர்ச்சியையே தவற விட்டிருக்கிறேன் என்பது. ஒருவேளை இதன் ஆதார வடிவமைப்பாளர்களில் நீங்களும் ஒருவர் என்பது தெரிந்திருந்தால் ஒருவேளை தொடர்ந்து படித்திருப்பேனோ என்னவோ!

  இவ்வளவு பெரிய புரட்சிகளை நிகழ்த்தி விட்டு வெகு இயல்பாக அடுத்த கட்டம் நோக்கிச் செல்லும் உங்கள் எளிமை கண்டு வியக்கிறேன்!

  இந்த அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 126. தங்களது எழுத்துக்களை வாசிக்கவும் நேசிக்கவும் தயாராக உள்ளோம் தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 127. தங்களது எழுத்துக்களை வாசிக்கவும் நேசிக்கவும் தயாராக உள்ளோம் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிற்கு பங்களிப்பு செலுத்துங்கள்

  பதிலளிநீக்கு
 128. உங்கள் அறிவிக்கையை மிகச்சிறப்பாக செதுக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக காந்தியிடமிருந்து எளிமையாகவும் இலக்கிற்கான லட்சியத்தையும் கற்றறிந்ததாக கூறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. திறமையானவர்கள் அடுத்த இலக்கை குறிவைக்க வேண்டியது அவசியம். மேலும் வளர்க வாழ்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 129. வாழ்த்துக்கள் நண்பரே! தேங்கி நிற்க நீங்கள் குளத்து நீர் அல்ல, காட்டாறு ஓடிக் கொண்டே இருங்கள் ...

  ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் இந்து என்பது பிராமண நாளிதழ் என்பதை மாற்றி அதன் நடுப்பக்கம் திராவிடத்தையும் ...பெரியாரிசத்தையும் கம்யூனிசத்தையும் உரத்துப் பேசியது உங்களால் தான் என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி ...

  உண்மையைச் சொல்லப்போனால் நாங்களெல்லாம் தமிழ் இந்துவை வாங்குவதே அதன் நடுப்பக்கத்தை வாசிக்கத்தான் அதன் வீச்சுக்காகத்தான்..

  வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
 130. நான் மட்டும் ஏன் இனி இந்து தமிழ் திசைக்கு வாசகனாக இருக்க வேண்டும் விரைவில் எனது பிஸினஸ் லைன்,தி இந்து, இந்து தமிழ் திசை ஆகிய மூன்று அச்சுக்காப்பி,இணைய வழிக் காப்பி ஆகியவற்றை நிறுத்துகிறேன்.நான் உங்கள் பின்னால் பக்க பலமாக உங்கள் வளர்ப்பு மகன் என்ற அடிப்படையில் இருப்பேன்.என் பகுத்தறிவு உங்கள் எழுத்திலிருந்துதான் துவங்கியது.

  பதிலளிநீக்கு
 131. உங்களுடைய "அரசியல் பழகு" நூலை வாசித்து அசந்து போனேன். பாட நூல்களை மட்டுமே தனது எதிர்கால பொருள் தேடலுக்காக வாசித்து வரும் பிள்ளைகளுக்கு சமூகத்தின் மீதான அக்கறை கொண்ட புத்தகங்களையும் வாசிக்கத் தூண்ட வேண்டும். அந்தப் பொறுப்பினை இந்து தமிழ் நாளிதழ் செவ்வனே செய்திருக்கிறது. அதில் உங்களுடைய பங்கு மேலானது. தொடர்ந்து நீங்கள் வெளியிட இருக்கும் புத்தகங்கள் பரவலாக மக்களை சென்றடைவதை கொண்டும் அவர்களது சமூக அக்கறையை நம்மால் கணக்கிட இயலும். அவ்வாறான புத்தகங்கள் உங்களுடையது. ஆழமான எழுத்துகள் அழிவில்லாமல் வாழும். என்றும் வாழட்டும் உங்களது படைப்புகள். மனமார்ந்த வாழ்த்துகள்.
  பிரியமுடன்
  பிரேமா இரவிச்சந்திரன்
  சென்னை.

  பதிலளிநீக்கு
 132. "தி இந்து" வில் சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள்... தங்கள் அடுத்த இலக்கும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு