ரயில் பயணமும் ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலமும்!

     
              
                     ஆகப் பிரமாதம் எல்லாம் இல்லை. விசேஷ நாட்களில் நம் வீட்டுப் பெண்கள் இட்லியோடு செய்வார்களே... அப்படியொரு வெங்காய சாம்பாரும் அதோடு, கூட தொட்டுக்கொள்ள சட்னியும்தான். ஆனால், சாப்பிடும் சூழல் அதை அத்தனை பிரமாதமானதாக ஆக்கிவிடுகிறது!


                   ரயிலைப் பார்த்துவிட்டால் எந்த வயதில் இருப்பவர்களும் பிள்ளைகள்தான். அதிலும், ரயில் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து வட மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் திருச்சி வழியே ரயிலில் செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம். கூட்ட நெரிசல் கொஞ்சம் நசநசப்புதான். ஆனால், சற்றேறக்குறைய தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மண் வகையறாவும் பார்வைக்குப் படும். பல ஊர் பாசக்காரர்களையும் பார்க்க, பேச முடியும்.இப்படியாகப் பேசிக்கொண்டே பயணம்செய்தால் ஏதேனும் ஒரு பசி வேளையில் திருச்சி வந்துவிடும். அல்லது திருச்சி வந்தால் பசிக்க ஆரம்பிக்கும். மண்வாகு அப்படி! வறண்டதும் அழகுதான்; கருத்ததும் அழகுதான். ஆனால், நிலத்தில் மண் நிறத்தைவிடவும் பயிர் நிறம் பார்க்கக் கிடைப்பது பேரழகு! காவிரி தொட்ட இடமெல்லாம் பச்சைதான். உங்களுக்குத் தெரியுமா? திருச்சியும் ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டம்தான். அது ஒரு காலம்! திருச்சியைத் தாண்டுகிற வரைக்கும் மலைக்கோட்டையும் பார்வைக்குத் துணை வரும். மலைக்கோட்டை மறைந்தால் காவிரி. அகண்ட காவிரி. கண்ணுக்கெட்டும் வரை இரு பக்கமும் தண்ணீர். வாய்விட்டு 'அம்மா' என்று கூப்பிடச் சொல்லும். அதற்கு மேல்தான் ரயில் போகும். காவிரியைத் தாண்டினால் தென்னந்தோப்புகள், வயல்கள், பாலங்கள், சாக்கடைகள், கட்டடங்கள், இத்தியாதி இத்தியாதி... ரயில் முக்கி மூச்சுவிடும்போது ரயில் பயணமும் ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும் பசி வயிற்றைக் கிள்ளினால் அது ஸ்ரீரங்கம்!

போராட்டம் சரி... எதற்காக?



 
            ப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்?

        
ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும்  தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதாவது, இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?

தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?

            
             மிழர்
அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விஷயங்களில்கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?"
என்னையும்கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவைஉலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால்விடக் கூடியவை. எனினும், ஆங்கிலேயர்களைப்  போலவோ, ஐரோப்பியர்களைப் போலவோ ஏன் நம்மால் மகத்தான மாற்றங்களுக்கான பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியவில்லை? ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை?
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கேள்வி  என்னை அழுத்துகிறதுகுறிப்பாக, ஈழப் போருக்குப் பின் இந்த அழுத்தம் மேலும் அதிகமாகி இருக்கிறது. நினைத்துப் பாருங்கள், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தனி இனத்துவ சமூகம் ஈழத் தமிழினம். இதனால், அந்தச் சமூகம் அடைத்திருக்கும் அனுகூலம் என்ன

மன்னார்குடி அல்வா!




           
              அ
ல்வா
!

            இந்தப் பெயரைக் கேட்டாலே, திருநெல்வேலி நினைவு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா கொடி பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னோர் ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அதுமன்னார்குடி!


            நாள்தோறும் வீதியோரம் அல்வாக் கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா?! போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்!

மீண்டும் புலிகள்… முட்டாளா நீங்கள்?




            நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதேசமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.

மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் எல்லோருமே கூட்டாளிகள்: கெஜ்ரிவால்


                 இந்தியாவிலேயே அதிகம் கவனிக்கப்படும் நபராகி இருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் வாயைத் திறந்தாலே, அது செய்தியாகிறது. அவருடைய வீட்டை எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன, 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள். நூற்றுக்கணக்கான கேமராக்கள் எந்த நேரமும் அவரை மொய்க்கின்றன. அரசு நிர்வாகத்தில் புரையோடிக்கிடக்கும் லஞ்ச ஊழலைப் பார்த்து வெறுத்து, இந்திய வருவாய்ப் பணியை உதறித் தள்ளியவர், தன்னுடைய தொடர் போராட்டங்களால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர், 'மகசேசே’ விருது பெற்றவர் என்கிற அடையாளங்கள் அவர் மீது நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. இந்திய அரசியல்அமைப்புச் சட்ட விரிவாக்கம் தொடங்கிய நவம்பர் 26-ம் தேதி அன்று தன்னுடைய கட்சியின் பெயரை அர்விந்த் அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அக்டோபர் மாதத்திலேயே அவருடைய அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தின் முதல் வாரம், அவர் அம்பலப்படுத்திய ராபர்ட் வதேராவின் நில மோசடி, காங்கிரஸின் அடி மடியில் கை வைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காக வெளிப்படையாகப் புலம்பினார் பிரதமர். இரண் டாவது வாரம், சல்மான் குர்ஷித் குடும்பம் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் எப்படி எல்லாம் நிதி முறைகேடு நடந்து இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்தார். மூத்த மத்திய அமைச்சரான சல்மான் குர்ஷித் வெளிப்படை யாக அர்விந்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு, அவரை நிலைகுலைய வைத்தது இந்த விவகாரம். மூன்றாவது வாரம், நிதின் கட்காரி யின் மோசடிகளை அம்பலப்படுத்தி, பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வைத் துவைத்துக் காயப் போட்டார். அடுத்து யார் என்று மிரட்சியுடன் பார்க்கும் அரசியல் வர்க்கம், அர்விந்த் மீது அவதூறுகளை வீசுகிறது. அவரோ, 'நான் சாமானியன்’ என்கிற வாசகத்தை மிக சக்தி வாய்ந்த கோஷமாக மாற்றி அசாத்திய துணிச்சலுடன் முன்னேறுகிறார்.

''நீங்கள் போராடிக் கொண்டுவந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உங்களுடைய நடவடிக்கைகளுக்குப் பயந்தே    செல்லாக்காசு ஆக்கிவிடுவார்போல இருக்கிறதே மன்மோகன் சிங்?''
''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் செல்லாக்காசு ஆக்கிவிட வேண்டும் என்று மட்டும் இந்த அரசு நினைக்கவில்லை; அதைக் கொன்றுவிட வேண்டும் என்றும் நினைக்கிறது. ஆனால், அந்தச் சட்டம் இப்போது ஆட்சியாளர் கள் கைகளில் அல்ல; மக்களின் கையில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான, வலுவானஆயுதமாக. அவ்வளவு சீக்கிரம் அந்தச் சட்டத்தை அரசால் ஒன்றும் செய்துவிட முடியாது.''

''காங்கிரஸை வீழ்த்த எளிய இலக்காகத்தான் ராபர்ட் வதேராவைத் தேர்ந்தெடுத்தீர்களா?''
''இல்லை. புரையோடிப்போன ஒட்டுமொத்த அமைப்பையும் எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க., அ.தி.மு.க. என எல்லோருமே எங்கள் இலக்குதான். மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இவர்கள் எல்லோருமே கூட்டாளிகள். இவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. கட்சி பேதம் இல்லாத வியாபாரம் இது. இதில் சிக்குபவர்களைத் தனிநபர்களாகப் பார்க் காதீர்கள்.''

''ஒரு சாதாரண அரசு அதிகாரியான அர்விந்தை அரசியலை நோக்கி நகர்த்திய தருணம் எது?''
''இது சட்டென ஒரு நாளில் நடந்த மாற்றம் கிடையாது. நம்முடைய ஊழல் மிக்க அரசு இயந்திரத்தின் குரூர முகத்தை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து, மனம் வெதும்பி, வெறுத்துப்போய் நடந்த மாற்றம். பல ஆண்டுக் கோபத்தின் வெளிப்பாடு என்றுகூடச் சொல்லலாம்.''

''உங்கள் கட்சியின் இலக்கு என்ன?''
''அதிகாரத்தைப் பணமாகவும் பணத்தை அதிகாரமாகவும் மாற்றும் இன்றைய அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்களுடைய கைக்கு உண்மையான அதிகாரத்தைக் கொண்டுசெல்வது.''

''தேர்தல் கூட்டணி வைப்பீர்களா?''
''அமைப்போம்.''

''எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்கள்?''
''எங்கள் சித்தாந்தத்துடன் அனுசரித்துப்போகும், கறை படியாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.''

''அப்படிப்பட்ட கட்சிகள் இருக்கின்றனவா என்ன?''
''இருந்தால் கூட்டணி அமைப்போம். இல்லாவிட்டால் தனித்தே நிற்போம்.''

''லட்சக்கணக்கான கிராமங்களில் இருக்கிறது இந்தியா. ஆனால், நீங்கள் டெல்லியில் இருந்தே அரசியல் நடத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?''
''கிராமங்களை நோக்கிச் செல்லாமல், இந்தியாவில் எந்த மாற்றமும் நடக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். டெல்லியில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஆனால், அதன் வீச்சு காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. இரண்டு கோடி உறுப்பினர்கள் எங்களுக்கு நாடு முழுவதும் இருக்கிறார்கள். இந்தியாவின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள். எங்கள் போராட்டங்களைக் கிராம மக்கள் சொல்வார்கள்.''

''வெறும் அறிக்கைகளும் போராட்டங்களும் மட்டுமே அரசியல் ஆகிவிடுமா?''
''இல்லை. ஆனால், அவை அரசிய லின் தவிர்க்க முடியாத அங்கம் அல்லவா? போராட்டங்கள்தானே வரலாற்றை உருவாக்கி இருக்கின்றன? அதேபோல, நாங்கள் வாய்ச் சவடா லுக்காக அறிக்கைகள் விடவில்லை. எங்கள் அறிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தகவல்களைக் கொண்டுசெல்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அரசு இயந்திரத்தின் முறைகேடுகளைக் கொண்டுசெல்கின்றன. எல்லாமே ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகள்தானே?''

''முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்னையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?''
''உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்னைகளுமே இருக்கின்றன. ஆனால், ஊழல்தான் இவற்றில் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில், இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இன்னும் பிறக்காத குழந்தைகூட இந்தியாவில் லஞ்சத் தாலும் ஊழலாலும் பாதிக்கப்படுகிறது. எனில், ஊழல்தானே முக்கியப் பிரச்னை?''

''நம்முடைய ஓட்டு அரசியல் முறையே ஊழலாக இருக்கும்போது, அதன் வழியே சென்று எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?''
''ஒழிப்போம். ஓட்டு அரசியல் முறையையே நாங்கள் சுத்தப்படுத்துவோம்.''

''மக்களே அற உணர்வுகளைப் பொருட்படுத்தாதபோது, அரசியல்வாதிகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?''
''உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். ஆனால், எது அவர்களை அற உணர்வு அற்றவர்களாக மாற்றுகிறது? நீங்களோ, நானோ பிறக்கும்போதே லஞ்ச - ஊழல் மனோபாவத்துடனா பிறந்தோம்? நாம் சார்ந்து இருக்கும் அமைப்புதானே நம்மையும் ஊழலை நோக்கித் தள்ளுகிறது? ஒரு நல்ல பாதையை வகுத்துக் கொடுத்தால், நிச்சயம் இந்திய மக்கள் அதில் சரியாகப் போவார்கள். அரசியல்வாதிகள்தான் அதைக் கெடுக்கிறார்கள்.''

''இந்தியாவில் கார்ப்பரேட் துறையின் வருகைக்குப் பிறகுதான் ஊழலின் வீச்சு ஆயிரக்கணக்கான கோடி களில் எகிறியது. ஆனால், அவர்களிடம் நிதி வாங்கித்தான் நீங்கள் இயக்கம் நடத்துகிறீர்கள். இதில் என்ன தர்மம் இருக்கிறது?''
''இது அபாண்டம். கோடிக்கணக்கான சாமானியர்கள் தரும் கொடைதான் எங்கள் இயக்கத்துக்கான ஆதாரம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் இயக்கத்துக்கு நன்கொடை அளித்தன என்பது உண்மை. ஆனால், அவர்கள் தந்த நிதியில்தான் நாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்பது நியாயமற்றது. ஊழலில் அரசுத் துறை ஊழல், கார்ப்பரேட் துறை ஊழல் என்ற பாகுபாடு எல்லாம் எங்களுக்கு இல்லை.''

''அப்படியென்றால், உங்கள் அரசியலுக்குப் பின் கார்ப்பரேட் துறையின் நிழல் இல்லை என்று உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?''
''எங்களை கார்ப்பரேட் துறையுடன் சேர்த்துப் பேசுவதே சங்கடத்தைத் தருகிறது. 'சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்காத, கடைசி மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருளாதாரமே இந்தியாவுக்குத் தேவை’ என்று நாங்கள் சொல்கிறோம். 'வளர்ச்சி என்பது சந்தைச் சக்திகளால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என்றும் சொல்கி றோம். பின் எப்படி கார்ப்பரேட் துறை எங்களுக்குப் பின் இருக்கும்?''

''பணக்கார, ஆதிக்கச் சாதியினரின், கார்ப்பரேட் குழந்தைகளின் கத்துக்குட்டி அரசியல் என்று உங்கள் அரசியலைக் குறிப்பிடுகிறார்கள் உங்கள் விமர்சகர்கள்...''
''குப்பங்களிலும் சேரிகளிலும் இருக்கும் எங்கள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைப் பற்றித் தெரியாதவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. பொறுத்திருந்து பாருங்கள். இது யாருடைய அரசியல் என்று புரியும்.''

''எனில், நீங்கள் யாருடைய பிரதிநிதி?''
''சாமானியர்களின் பிரதிநிதி.''

''ஆரம்பத்தில் நீங்கள்தான் அண்ணா ஹஜாரேவின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். இன்றைக்கு அவர் முற்றிலுமாக உங்களிடம் இருந்து விலகிவிட்டார். என்ன நடந்தது இடையில்?''
''சின்ன வேறுபாடுதான். 'அரசியல் ஒரு சாக்கடை; அதில் இறங்கினால், நாமும் நிச்சயம் அசிங்கப்பட வேண்டும்’ என்று அண்ணாஜி சொன்னார். ஆனால், அரசியலில் இறங்காமல் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் கொண்டுவர முடியாது என்று நாங்கள் நினைத்தோம். சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னோம். அவ்வளவுதான். அண்ணாஜியின் மானசீக ஆசி எங்களுக்கு உண்டு.''

''உங்களுடைய அரசியல் ஆசையும் உங்கள் சகாக்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கேலிக்கூத்தாக மாறக் காரணம், இல்லையா?''
''இல்லை. உண்மையில் எங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்தன. அண்ணா இயக்கத் தைப் பார்த்துப் பயந்த அரசியல் வர்க்கம் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி, மக்களிடம் எங்கள் மதிப்பைக் குலைக்கப் பார்த்தது. இடையில் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்தோம். ஆனால், இப்போது மக்கள் எங்களை நோக்கி மீண்டும் திரும்புகிறார்கள்.''

''உங்கள் அமைப்பினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?''
''எல்லாமே அவதூறுகள். ஆனாலும், விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.''

''அரசு வேலையை உதறினீர்கள். பிரதமரையே எதிர்க்கிறீர்கள். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பகையையும் சம்பாதித்துக்கொண்டு நிற்கிறீர்கள். இதை எல்லாம் உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள்?''
''என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் இந்தப் பயணத்தில் இறங்கினேன். நாம் எவ்வளவு மோசமான ஒரு சூழலில் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறோம் என்ற குற்ற உணர்வுதான் அரசியலை நோக்கி என்னைத் தெருவில் இறங்கவைத்தது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தைத் தங்களுடைய இயக்கமாகத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால், நான் தோற்றுப் போவேன். ஆனால், அது ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலின் தோல்வியாக இருக்காது. இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானியனின் தோல்வியாகவும் இருக்கும். நான் தோற்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்!''
 ஆனந்த விகடன் அக். 2012

கூத்தாநல்லூர் தம்ரூட்





      னக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர்நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர்  ஒரு வித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால்குட்டி வளைகுடா’ன்று ஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா  நாடுகளில் இருக்கிறார்கள். தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா  நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ  என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு  விஷயத்திலும் ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை. நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும் வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும் நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் - தம்ரூட்.

ஒரு பள்ளிக்கூடத்தின் கதை



  
        இ
ந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்று அது. ஆச்சர்யம்... அதை ஒரு நாளும் அவர்கள் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. ஏனென்றால், அவர்களுக்குப் போட்டிகள் ஒரு பொருட்டல்ல. வெற்றிகள் பொருட்டல்ல. பரிசுகளும் பொருட்டல்ல!
 

         ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தை ‘‘எனக்கு மூடு சரியில்லை, வகுப்பில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை’’ என்று ஆசிரியரிடம் சொல்லி--விட்டு, பள்ளியின் பூங்காவில் மரத்தடியில் தனிமையில் உலவ முடியும் என்றால், அதுதி ஸ்கூலில்மட்டுமே சாத்தியம். சென்னையில் 1973-ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் 9 பள்ளிக்கூடங்களில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது.  ‘‘சரியான கல்வியானது, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்போதே, அதைவிட மிக முக்கியமான ஒன்றைச் சாதிக்க வேண்டும். அதாவது, வாழ்வின் முழுப் பரிமாணத்தை மனிதன் உணரும்படிச் செய்ய வேண்டும்’’ என்று சொல்வார் ஜே.கே. ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம் வேண்டும் என்றால், அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.  போட்டிகள் கிடையாது; தேர்வுகள் கிடையாது; ஒப்பீடுகள் கிடையாது; வெற்றிகள் கிடையாது; தோல்விகள் கிடையாது; பரிசுகள் கிடையாது; தண்டனைகளும் கிடையாது என்று ஜே.கே-வின் எண்ணங்களுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை நடத்துவது என்பது இன்றைய சூழலில் அவ்வளவு எளிமையானது அல்ல. ஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் எதிர் திசையில் பயணிப்பதற்கு ஒப்பானது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டும் அல்ல; விளையாட்டிலும் பாலினப் பாகுபாடின்றி, சேர்ந்தே பங்கேற்கும் மாணவ - மாணவியரால் எப்படி விகல்பம் இல்லாமல் பழக முடியும்? எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லாமல் படிப்பவர்களால், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுத முடியும்? அசந்தால், நம் காலின் மேலேயே கண நேரத்தில் ஏறி நின்றுவிடக் கூடிய இன்றைய போட்டிச் சூழ் உலகை, போட்டிகளைச் சந்திக்காமல் வளரும் குழந்தைகள் எதிர்கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு, குழந்தைகளைப் பதில்களாக்கி நடமாடவிட்டு இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம்.

அமைதியே உன் விலை என்ன?

                      
                                ந்திய அரசின் 'காட்டு வேட்டை' தொடங்கி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. ஆனால்,  2009-க்குப் பிறகுதான் அரசு இந்த 'வேட்டை' குறித்து கொஞ்சம் பேசத் தொடங்கியது; ஊடகங்களும் இந்த விஷயத்துக்கு கொஞ்சம் இடம் கொடுக்கத் தொடங்கின. உண்மையில் இது ஒரு போர். உள்நாட்டுப் போர். அதிலும் இந்த நாட்டாலும் அரசாலும் காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவரும் எளிய மக்களுக்கு எதிரான போர். இந்திய இயற்கை வளத்தை - பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிம சுரங்கங்களை பெரு நிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக வனங்களின் பூர்வகுடிகளை அங்கிருந்து துரத்த நம்முடைய அரசு தொடுத்திருக்கும் போர்.
எனினும், பெரும்பான்மை இந்தியச் சமூகம் இந்தப் போரைப் பொருட்படுத்தவில்லை. இப்போதுதான், இப்போதுதான் அது பேசுகிறது. எப்போது? தந்தேவாடா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளால் காவல் துறையைச் சேர்ந்த 76 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு. இதற்கு முன்பும் இப்படித்தான். ஒரிஸாவில் பாலிமேலா நீர்த்தேக்கத்தில் 38 வீரர்கள் கொல்லப்பட்டபோதும் மேற்கு வங்கத்தில் சில்டா முகாம் தாக்கப்பட்டு 24 வீரர்கள் உயிரிழந்தபோதும் பேசியது. இப்படி அவ்வப்போது காவல் துறையைச் சேர்ந்தவர்களோ, சிறப்புப் படையினரோ கொல்லப்படும்போது மட்டும் முணுமுணுத்தது. 'எவ்வளவு கொடூரம்?' என்று பரிதாபப்பட்டது. கொடூரம்தான். ஆனால், போர் என்றால் அப்படித்தானே?

நீடாமங்கலம் பால்திரட்டு

                      
                    திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்...  சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே அருள்மிகு சீதா பிராட்டியார் உடன் சந்தான ராமசாமி திருக்கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!