தன்னிலை விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னிலை விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமஸ் என்றால் என்ன அர்த்தம்?

சமஸ்

என்னை முதன்முதலாகச் சந்திக்கும் நண்பர்கள் அதிகம் கேட்கும் கேள்வி...
சமஸ் என்றால், என்ன அர்த்தம்?
சமஸ் என்பது என் தாய், தந்தையினரின் பெயரோடு அவர்கள் என்னை அழைத்த பெயரை இணைத்து உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல். அது புனைப்பெயர் அல்ல. என்னுடைய அதிகாரபூர்வமான பெயர். ஆரம்பத்தில் யாராவது கேட்டால், சமஸுக்கு என்ன அர்த்தம், அது ஒரு பெயர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவேன். அப்புறம் எனக்கே ஓர் ஆர்வம் உண்டாக சமஸ் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உலகின் பல்வேறு மொழிகளை ஆராய ஆரம்பித்தேன். நிறைய அர்த்தங்கள் கிடைத்தன. அவற்றுள் தொகுக்கப்பட்ட இந்த அர்த்தங்களை என் பெயரின் விளக்கமாக அளிக்கிறேன்.