இந்தியா - சீனா உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா - சீனா உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொடுத்துப் பெறுவதும் ராஜதந்திரம்!



நீங்கள் நூறு ரூபாய் பெருமானம் உள்ள, ஒன்றுக்கும் உதவாத, உங்களுக்கு முழுமையாக பாத்தியதை ஆகாத , பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை வைத்திருக்கிறீர்கள். அந்த நிலத்தைப் பாதுகாக்க எவ்வளவு வரை செலவழிப்பது லாபம்?
ஐம்பது ரூபாய்?
எழுபது ரூபாய்?
தொன்னூறு ரூபாய்?
அதிகபட்சமாக, நூறு ரூபாய்கூட செலவழிக்கலாம். அந்த நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய உங்கள் ஈகோவைக் காப்பாற்றிக்கொள்வது லாபம்.
ஆனால், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலவழிப்பீர்களா? அதற்காக ஆண்டுதோறும் உயிர்களைப் பலி கொடுப்பீர்களா? அப்படிச் செலவழித்து, பலி கொடுப்பது புத்திசாலித்தனம்தானா?
தனி மனிதர்களே செய்யத் தயங்கும் அப்படியான விஷயத்தைத்தான் ஒரு தேசம் செய்துகொண்டிருக்கிறது. நம்முடைய எல்லைப் பிரச்னைகளை நம் அரசு இப்படித்தான் அணுகுகிறது.

                 சீனாவின் இதுவரையிலான அத்துமீறல்களுக்கும்,  இந்திய எல்லைக்குள் 19 கி.மீ. வந்து ராக்கி நாளாவில் அவர்கள் முகாம் அமைத்து நடத்திய சமீபத்திய ஊடுருவலுக்கும் வேறுபாடு ஏதேனும் உண்டா? உண்டு. இந்த அத்துமீறல் இந்தியர்களுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: இந்தியா இனியும் தன்னுடைய எல்லைப் பிரச்னைகளைத் தள்ளிப் போடக் கூடாது.

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?


                                            இந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!
 ''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய  ஊடகங்களின் தலைபோகும் கவலை.