சத்யாக்களைவிடவும் நாராயணமூர்த்திகளே இந்தியாவுக்குத் தேவை!



சத்யா நாதெள்ள


லகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. பெப்சிகோநிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கியின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோநிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்‌ஷைர் ஹாத்வேநிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட மைக்ரோ சாஃப்ட்நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
சத்யா கொண்டாடப்பட வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை?

பொதுவாக, இப்படிப்பட்ட விவாதங்களின்போது உளுத்துப்போன ஒரு வாதம் முன்வைக்கப்படுவது உண்டு: என்ன செய்வது? பாழாய்ப்போன நாட்டில் இப்படிப்பட்ட அபாரமான மூளைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பு இல்லை. இங்கு திறமைசாலிகளுக்கு மரியாதையோ இடமோ இல்லைஎன்பதே அந்த வாதம். இந்த வாதத்திலும் கொஞ்சம் உண்மையும் நியாயமும் இருக்கிறதுதான். சரி, யார் அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதாம்?
 அரசா?


ஒரு தேசத்தின் முதல்தரமான, அபாரமான மூளைகள் தங்களுக்குத் தேவையான இடத்தை உருவாக்கும் பொறுப்பிலிருந்து ஒதுங்கும்போது, இரண்டாம்தர அரசியல்வாதி மூளைகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்?


இந்தியா என்ற மாபெரும் தேசத்தை உருவாக்கிய சிற்பிகள் காந்தி, நேரு போன்ற அரசியல் தலைவர்கள் மட்டும் அல்ல; அவர்களுடைய கனவைக் கட்டியெழுப்பிய எவ்வளவோ அபாரமான அதிகாரிகளும் இருக்கிறார்கள்; இந்தியாவின் தேர்தல் அமைப்பைக் கட்டமைத்த சுகுமார் சென், அரசுத் திட்டங்களுக்கு அடிப்படையை உருவாக்கிய மஹலனோபிஸ், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட ஹோமிபாபா இப்படி எவ்வளவோ பேர். 

அழகான ஒரு முரண்பாடு என்னவென்றால், இன்றைய தலைமுறையைப் போல,இந்த நாட்டில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தங்கள் மூளைகளைச் செலவிட்டவர்கள் அல்ல; வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்து இந்த நாட்டுக்குத் தங்கள் மூளையைச் செலவிட்டவர்கள் இவர்கள். இத்தனைக்கும் இன்றைய இந்திய இளைய தலைமுறையின் முன் உள்ள வாய்ப்புகளும் வசதிகளும்கூட அன்றைக்கு அவர்கள் முன் இருக்கவில்லை. அடிப்படைக் கோளாறு எங்கே என்றால், குழந்தைகளிடம் எதிர்காலம்பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது, “மருத்துவராகி, கிராம மக்களுக்குச் சேவை செய்வேன்என்று சொல்லச் சொல்லிக்கொடுத்த காலம் மலையேறி மருத்துவராகிப் பெரிய மருத்துவமனை கட்டுவேன்என்று சொல்லச் சொல்லிக்கொடுக்கும் காலமாகிவிட்டது என்பதுதான். நான் என்னவாக ஆகப்போகிறேன்?” என்ற கேள்விக்கான பதிலில்,சமூகத்துக்கும் நாட்டுக்கும் உள்ளதொடர்பு முற்றிலுமாகச் சிதைந்துகொண்டிருக்கிறது என்பதுதான். சத்யாக்களால் தேசம் மகிழ்ச்சி அடையலாம்; நாராயண மூர்த்திகளால்தான் தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்!

‘தி இந்து’, பி.ப்.2014

4 கருத்துகள்:

  1. I appreciate that you always think out of box. ஒரு தேசத்தின் முதல்தரமான, அபாரமான மூளைகள் தங்களுக்குத் தேவையான இடத்தை உருவாக்கும் பொறுப்பிலிருந்து ஒதுங்கும்போது, இரண்டாம்தர அரசியல்வாதி மூளைகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்?.
    But இரண்டாம்தர அரசியல்வாதி thaan intha desatha thai control panrar.... first class brainy people are controlled by this second class. Kalam is also kind of political person. that's why he could stand. Otherwise they would have thrown him out. Even we have very bad politics in army. No skills are encouraged or given opportunity to grow. In US and europe countries, system is hunger for efficiency and new ideas. In india, efficiency should have background and backup... Frustrated its BS.. we cant help it. it wont improve.. i was having belief that it will improve once youger generations comes up. Even i have politician friends who has good education. but they speak rubbish in public, since they are politicians.

    பதிலளிநீக்கு
  2. All politicians to be in politics he should make more poly tricks. That is what
    all politicians are doing some more other ways. We public just watching without doing anything......... when shall we start react on them?.......... One day we have to mind. When? if not now when?....... A.S.IYER.

    பதிலளிநீக்கு
  3. yes more narayana murthies are required this is the need of the hours.

    A.S.IYER.

    பதிலளிநீக்கு