இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.


காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?

சென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”

வஹாபிஸ அச்சுறுத்தல்

சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம். 

1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.

மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.

சவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது? அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது? சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன? இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!

வெற்றிடம் உருவாக்கும் செல்வாக்கு

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரைகூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடுகளின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ்லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர். வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!

இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பலம்

இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.

காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.

தமிழகத்தில் பல கோயில்கள் - மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல் மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.

இந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன?

பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன

அதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும்பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழா நடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். போன இடத்தில் பொங்கல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு உண்மையான முஸ்லிமா?’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா?”

எனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டவர். நாளடைவில் அதன் குரூர முகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளியேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக்கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் சொல்லியிருந்தார்.

“பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் தந்திருந்த நாடு பிரிட்டன். என்னுடைய இளம் வயதில் நான் பிரிட்டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத்தையே உணராதவனாக இருக்கிறாய்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள். அதுவரை நானோ, என் குடும்பமோ அறிந்திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக மாற்றினார்கள். சீக்கிரமே என் வாழ்க்கை முறை மாறியது.

ஒருகட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்தினரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத்தேன். பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல்லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போனால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண்களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச்சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டியவர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேசமானார்கள். ‘நீ மார்க்கத்தைவிட்டு விலகுகிறாய்’ என்றார்கள்.

சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ்லாமே எனக்குப் பிடித்தமானது. எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது. வெளியேறிவிட்டேன். இன்றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். இந்தக் கோபப் பயணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”

புனிதம் எனும் கொடுஞ்சொல்!

உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.

இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.

அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூகம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.

இந்தியாவில் சிறுபான்மையின அடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மையின அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!

பிப்ரவரி, 2016, ‘தி இந்து’

90 கருத்துகள்:

 1. இன்றைய இந்து-வில் தோழர் சமஸ் அவர்களின் வஹ்ஹாபிசம் குறித்த மிக சிறப்பான கட்டூரையை ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி ஓகோ.. ஆஹா என்போர் படித்துப்பாருங்கள்.. மிக எதார்த்தமான இந்த கட்டூரையை நீங்கள் நடுநிலையோடு படித்தால் பயனடைவீர்கள்.
  கட்டூரை அப்படியே அப்பட்டமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சானாக வாழ்ந்து வரும் நாட்டில் பரவும் ஆபத்தின் இன்றைய மிக மோசமான சூழலை மிக எதார்த்தமாக எடுத்துரைக்கிறது, இது படித்துவிட்டு கடந்து போகக்கூடிய கட்டூரை அல்ல, இதனை படித்து சிந்தித்துப்பார்த்து வஹாபிஸம் என்ற நஞ்சை புறந்த தள்ளவேண்டியது இஸ்லாமியர்களுடைய வசம் இருக்கும் மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் எத்தனை பேர் இதனை நடுநிலை கட்டூரையாக அணுகுவார்கள் என்பதில் தான் பிரச்சனை அந்த அளவுக்கு மூளைச் சளவை செய்திருக்கிறார்கள்.
  நமது பன்முக மண்ணுக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத மேலும் இஸ்லாத்தின் மூல அடிப்படைகருத்துக்கும், நபிகள் நாயகம் போதித்த மூல கருவுக்குமே வஹ்ஹாபியிசம் எதிரானது. தமிழகத்தின் பெரும்பான்மை முஸ்லிம்கள் சமஸ் சொல்வது போல் வஹ்ஹாபிசத்தினை ஏற்காதவற்கள் ஆனால் இன்றைக்கு வஹ்ஹாபிச கருவிகள் இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து செய்ல்பட்டு கெடுப்பதே துர்ரஷ்டம். இவ்வாறு பெருகும் வஹ்ஹாபிசத்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும், தனிமனிதனுக்கும் கேடு என்பதே எதார்த்தம்.
  அறம்சார்ந்த மண்ணுக்கு நல்வழிகாட்டும் அற்புதமான கட்டுரையை எழுதிய சமஸ் Samas மற்றும் பதித்த இந்து நாளிதழுக்கும் நெஞ்சாந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.

  பதிலளிநீக்கு
 2. இஸ்லாம் குறித்த அடிப்படை புரிதலின்றி எழுதப்பட்ட கட்டுரை. முஸ்லிம்களிடத்தில் இஸ்லாத்தின் பெயரில் நிலவும் மூட நம்பிக்கைகளையும், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய சித்தாந்தத்தையும் களைய வேண்டி 30 வருடங்களுக்கும் மேலாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் செய்யப்படுகிறது. தர்காக்களை இடிக்க வலு இருந்தும் பல இடங்களில் தர்காக்களை இடித்ததில்லை. ஏனெனில் இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை. தவறை விளங்கிய மக்களே, அதை சரி செய்ய வேண்டுமென்பது தான் தவ்ஹீத் பிரச்சாரத்தின் ஆணிவேர். எனவே எத்தகைய அடிப்படை தரவுகளுமின்றி எழுதப்பட்ட பக்கச்சார்பான கட்டுரை இது

  பதிலளிநீக்கு
 3. ஒருவேளை தவ்ஹீத் பெரும்பான்மையாக வந்து விட்டால் கோவில், தேவாலயங்கள் போன்ற பிற மத வழிபாட்டு தளங்களை இடிப்பீர்கள் என்ற சமஸின் குற்றச்சாட்டு சரியா?

  அப்பட்டமான போலியான குற்றச்சாட்டு. கோவில், தேவாலயம், சினகாக், குருதுவாராக்கள் இன்னும் பல வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றை தம்முடைய வணக்கதலங்களாக கருதுபவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் வரை, அவை பிற மத வழிபாட்டு கூடமென்று கண்ணியம் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதன் அருகில் கூட துர்நோக்கத்துடன் எவரையும் தவ்ஹீத்வாதிகள் நெருங்கவிடமாட்டார்கள். இதை தான் நபிகள் நாயகமும் அவர்களுக்கு பின்னர் வந்த நபிகளாரின் தோழர்களும் தமது ஆட்சியில் செய்து காட்டினர். நபிகள் நாயகத்தின் அடியொற்றியே நடக்க வேண்டுமென தவ்ஹீத் அமைப்பு பிரச்சாரம் செய்கின்ற போது, அவர்களின் போதனைக்கு புறம்பாக ஒருபோதும் செயல்படாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. Can we get the details for number of temples at Pakistan before Independence and after independence. The same applicable for India also. Then we will discuss your point.

   நீக்கு
  3. @raghu பாகிஸ்தான் அரசு சூபியிசத்தை தர்காக்களை நம்புகின்ற அரசு. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியா வரும் போதெல்லாம் அஜ்மீர் சென்று வழிபாடு செய்து வருவார்கள். அங்கே தவ்ஹீத் என்னும் தூய இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை

   நீக்கு
  4. Pakistan is not Sufi, they are Sunni majority muslims. Get your facts right.

   நீக்கு
 4. அன்புள்ள சமஸ், இன்றைய இந்து நாளிதழில் வெளியான உங்கள் கட்டுரைஐ படித்து வியப்படைந்ததோடு எனது பதிலையும் முன்வைக்கிறேன்.

  தலைப்பே தவறு! என்று தான் சொல்ல வேண்டும். சொந்த மதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளுவதற்கும் தன் மதம் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் பிறரை விரட்டவோ அழிக்கவோ செய்ய வேண்டும் என்ற கொள்கையையும் ஒப்பிட்டுக் கேள்வி எழுப்புவது என்ன நியாயம்?!!!!

  மூடநம்பிக்கைக் குறித்து பேசும்போது, தர்காவை இடிப்பது என்ற வாசகத்தை வலிந்து இழுத்து வந்து மையப் படுத்தி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன?!

  சமஸ் தன கட்டுரையில் "காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா? " எனக் கேட்கிறார்.

  மதச்சார்பின்மைக்கும், மதஅடிப்படை வாதத்திற்கும் இடத்திற்கு இடம், இலக்கணத்தை மாற்றி மாற்றி பேசி இன்று பலரும் அரசியல் செய்கிறார்கள். எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்வது அல்ல மதச்சார்பின்மை. எல்லா மதத்தையும் அவரவர் பின்பற்ற அனுமதிப்பதோடு தன் மதத்தை தான் சுதந்திரமாகப் பின்பற்றுதலே மதச்சார்பின்மை. ( Live And Let Live)

  இந்துத்துவ பாசிசக் கொள்கை தனிமைப் படுத்தப் பட்டு நிற்கும் இன்றைய சூழலில் எல்லா மதத்திலும் அப்படிப்பட்ட அடிப்படை வாதம் இருக்கத்தான் செய்கிறது என்று வாதிடுவது போல் உள்ளது இந்த கேள்வியும் கட்டுரையின் போக்கும்..

  நீங்கள் மேற்கோள்காட்டிய கோவிலை முஸ்லிம்கள் சுத்தம் செய்த படம் நெட்டில் உலா வந்தது உண்மைதான். அந்த சுத்தீகரிப்புப் பணியில் ஈடுபட்ட சகோதரர்கள் நீங்கள் "வகாபியிசம்" என வகைப் படுத்தும் 'தவ்ஹீத்' கொள்கை உறுதி கொண்டவர்கள் தானே...?! என்ன ஒரு முரண்பாடு!

  அப்படியிருக்கும் போது 'தவ்ஹீத்' (ஏகத்துவம்) கொள்கை உள்ளவர்களை வரலாற்றிலும் நடப்பிலும் உள்ள வன்முறையாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமா?

  இஸ்லாத்தின் கொள்கையே ஓரிறைக் கொள்கைதான். அதில் வழிபிரண்டிருந்த சமூகத்தை சீர்திருத்தும் பணிக்கு தமிழகத்தில் 30 ஆண்டு கால வரலாறு உள்ளது. இதுவரை எங்கேனும் ஏதேனும் தர்கா இடிக்கப் பட்டோ, சேதப் படுத்தப் பட்டோ வரலாறு உண்டா?! பின்பு ஏன் பாசிசத்துடன் சீர்திருத்த வாதிகளை ஒப்பிடுகிறீர்கள்?!

  சவூதி அரசாங்கத்தின் மீது மனித உரிமை பார்வையில் உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். அதற்காக ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை பினற்றுபவர்களை வரலாற்றுக் காட்டுமிராண்டித் தனங்களுடன் சேர்த்து வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருந்தாத ஒப்புமை.

  உலகத்தில் மதச்சார்பின்மை யை முதலில் கடைபிடித்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சி தான். அதற்குக் காரணமே கொள்கை வேறு, ஆன்மிகம் வேறு, அரசு வேறு என்று இல்லாதது தான். தன்னுடைய ஆட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கொள்கை விளக்கம் தந்ததன் மூலம், இஸ்லாமிய ஆட்சியில் பிற மதத்தவர்களுக்கு அங்கீகாரம் தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம். அதை அறியாதவர்கள் அல்ல ஓரிறைக் கொள்கை உடையவர்கள்.

  இது பொக்கையான ஒரு கருத்தின் மேல் வலிந்து விளக்கம் கொடுக்கும் கட்டுரை. சமஸ் அவர்களே, நீங்கள் அச்சப்படுவது போல் இங்கே அடிப்படைவாதத்திற்கு இளைஞர்கள் பலியாகவில்லை. மாறாக அடிப்படைவாதத்திற்கும், மதசார்பின்மைக்கும் தவறான பொருள் கொடுக்கப்படுகின்றன.

  உண்மைதான், நடைமுறைக்கும்,கலாச்சாரத்திர்க்கும் கொடுக்கும் முக்கியத் துவத்தை விட கொள்கைக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள் தான், இரண்டிற்குமான இடைவெளியை நிரப்பத் தெரியாமல் தனிமைப் பட்டு போகிறார்கள் தான். ஆனால் அது நீங்கள் சொல்லுமளவு அபாயமான வீரியத்தில் இல்லை, அதில் யாருக்கும் பங்கமும் இல்லை. அதுவும் சீர்செய்யப்பட்டு களைந்து போய்விடும்.

  பிறரைத் தாழ்வாகக் கருதச் சொல்லி செய்யப்பட்ட 'புனித போதனை' களுடன் அனைவரும் ஒருத்தாய் தந்தையின் மக்கள், சேரியானாலும் மாளிகையானாலும் இறைவனின் முன்னால் இறைநம்பிக்கையும், நற்பண்புகளையும், நற்காரியங்களையும் தவிர எதுவும் ஒருவரை ஒருவர் மிகைப் படுத்தாது என்ற 'புனித போதனை' யும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?! ...

  பதிலளிநீக்கு
 5. ...  பிறரின் கலாச்சாரத்தை பின்பற்ற இடையூறு செய்யாமல் ஒற்றைக் கலாச்சாரம் பின்பற்றுவதில் என்ன தவறு? ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமலே எப்படி பாதுகாப்பது?! நீங்கள் தானே சொல்கிறீர்கள், இந்தியாவின் தென்முனையில் வாளால் அல்ல, வணிகர்களின் நற்குணங்களால் இஸ்லாம் ஈர்க்கப்பட்டு பரவிய உண்மையை ?! அவர்கள் அந்த ஒற்றைக் கலாச்சாரத்தை பின்பற்றியதால் தானே அது சாத்தியமாயிற்று. அவ்வாறிருக்க உங்கள் வாதம் முரண் படுகிறது தானே?!

  நம் கண்முன் காண்கிறோமே, இந்த தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான 'முந்தானை' இதைப் பின்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று நாம் கலாச்சாரத்தை இழந்துவிட்டோம், வடக்கு ஆள்கிறது என்றெல்லாம் சலசலக்கும் நிலை வந்துவிட்டதே. ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமல் பாதுகாக்க முடியாது என்பதற்கு இது சிறு எடுத்துக் காட்டு.

  உலகிற்கு சகிப்புத் தன்மையை கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம், அதை செயல்முறைப் படுத்திக் காட்டித் தந்தவர்கள் முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இதை அவர்கள் மக்கா வாசிகளுடன் செய்துகொண்ட ஒருதலை பட்சமான ஒப்பந்தந்திலிருந்தும், மதினாவில் ஆட்சி செய்யும் போது யூதர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்தும் குறைந்தபட்சம் அறிந்து கொள்ளலாம்.

  கொள்கைகளில், மார்க்கத்தில் பகுத்தறிவுக்கு உகந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விஷயங்களில் பகுத்தறிவுக் கேள்வி எழுப்புவது காலம் காலமாக கொள்கை குழப்பவாதிகள் செய்துவரும் செயலாகும். அதை நாம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்வோம்.

  சொந்த மார்க்கத்தில் மூடநம்பிக்கையை எதிர்த்து சீர்திருத்தம் செய்வதையும், அதற்கு எள் முனையளவும் சம்பந்தமில்லாத இந்துத்துவ பாசிசத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ள உங்கள் கருத்தை நீங்கள் மீளாய்வு செய்து இன்னும் நேர்த்தியாக ஆய்வு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி!

  பதிலளிநீக்கு
 6. ஐ.எஸ்.ஐ.எஸ் வஹாபியத்தை (சவூதி அரசின் கொள்கை என்று சமஸ் கருதுகின்ற கொள்கை) தான் போதிக்கிறது என்றால், சவூதியின் அனைத்து மதகுருமார்களும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பத்வா விதித்திருப்பது ஏன்? சவூதியின் தலைமை மதகுரு முப்தி அப்துல் அஜீஸ் அவர்கள் மிக காட்டமான அறிக்கையை ஐ.எஸ் க்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏன்? இஸ்லாம் குறித்த ஆழ்ந்த புரிதல் சமஸ் அவர்களிடம் இல்லாமல் இருக்கின்றது என்ற ஆச்சர்யத்தை விட சர்வதேச அரசியல் குறித்த புரிதல் இல்லாமல் சமஸ் இருக்கிறார் என்பது தான் எனக்கு அதிக ஆச்சர்யத்தை அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Till date, the Saudi King used to be the caliph though not proclaimed so. Now ISIS seeks to establish the caliphate in a more puritan Wahhabbi way. Saudi Arabia is against ISIS for political reasons and not because of ideological reasons. Sheikh Dawood needs some understanding of international politics..

   நீக்கு
  2. Saudi is doing nothing against Isis,if they truly hated the Isis they would have asked America to fight it.

   நீக்கு
 7. இன்னும் ஆழமாக உங்களுடன் கலந்துரையாடல் செய்ய ஆசை உண்டு சமஸ். ஏனெனில் கருத்து பரிமாற்றமே கண்களை திறக்கும். கருத்தை மற்றொரு கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமென்பதில் நம்பிக்கையுடையவன்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி.சமஸ் தமிழக முஸ்லீம்களின் மனசாட்சியாய் உள்ளது இந்தக் கட்டுரை.
  முஸ்லீம்களுக்கு அரசு நிர்வாகங்களில் காட்டப்படும் பாரபட்சம் சுதந்திரம் தொட்டு இன்றுவரை முஸ்லீம்களுக்கு நீதி பரிபாலனங்களில் காட்டப்படும் ஒரு சார்புத்தன்மை இவை இந்த அமைப்புகளின் அணிதிரட்டலுக்கு ஒரு நியாயத்தையும் மிருகபலத்தையும் கொடுத்துவிடுகின்றன.இதனால் பலர் தவறென்று தெரிந்தும் பேச இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 9. இந்து மதத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க போகிறேன் என்று சொல்பவர்களை ஆராதிக்கும் உங்களை போன்ற பத்திரிகையாளர்கள், முஸ்லிம்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கி சில இடங்களில் பின்பற்றும் மூட நம்பிக்கையை ஒழிக்க, சிலர் முன்வரும் போது, அவர்களை ஏதோவொரு பெயரில் அடையாளப்படுத்தி, அடிப்படைவாதிகள் போன்று பொது சமூகத்தின் மத்தியில் முத்திரை குத்துவது சரியான அணுகுமுறையல்லவே

  பதிலளிநீக்கு
 10. சவூதி அரசின் பல நிர்வாக தவறுகளை நானும் உங்களுடன் சேர்ந்தே கண்டிக்கிறேன். கருத்துக்களை சொல்வதற்கான அனுமதியின்மை, மன்னராட்சி நீடிக்க வேண்டி சில பல நிர்வாக தவறுகள் என்று நீளும் சவுதியின் தவறுகளுக்கு நான் ஆதரவாக இங்கே நிற்கவில்லை.

  பதிலளிநீக்கு
 11. என்னுடைய நண்பன் சந்தோஷ் கோவிலுக்கு செல்வதால் , நானும் அங்கே போய் வழிபட்டு நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தொனியில் நீங்கள் முன்வைக்கும் கருத்து சிரிப்பை மட்டுமே வரவழைக்கிறது. அவன் கோவிலுக்கு செல்லட்டும். அது அவன் உரிமை. நான் மசூதிக்கு செல்கிறேன் எனது உரிமை அது. சந்தோஷின் வழிபாட்டு முறை தவறென்று நான் கருத்து சொன்னாலும் எங்களுக்குள் இருக்கும் நல்லிணக்கம் என்றும் கெடுவதில்லை. அதே போன்று என்னுடைய வழிபாட்டு முறை தவறென்று என்னுடைய நண்பன் சந்தோஷ் எண்ணினாலும், அதை என்னிடம் அவன் கூறினாலும், எங்களுக்குள் இருக்கின்ற நல்லிணக்கம் ஒரு போதும் கெடுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I don't know about santosh but if u had been my friend and u feel this way,then I ll cut contacts with you.

   நீக்கு
  2. I don't know about santosh but if u had been my friend and u feel this way,then I ll cut contacts with you.

   நீக்கு
  3. @சுப்ரமணியன்: உண்மையான நட்பைப்பற்றி ஷேக் தாவுத் பேசுகிறார்.....

   நீக்கு
  4. Knowingly or unknowingly Subramanian is exhibiting Hindutva Facism.

   நீக்கு
 12. பரஸ்பரம் கருத்துக்களை கருத்துக்களோடு மோத விடுகிறோம். சரி அல்லது தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். போலித்தனமாக அவன் எனது மசூதிக்கு வந்து எனக்காக நடிப்பதும், அதே போன்று போலித்தனமாக நான் கோவிலுக்கு சென்று அவனுக்காக நடிப்பதும், நல்லிணக்கம் உருவாக்காது. வெறும் நடிப்பாக மட்டுமே இருக்கும்

  பதிலளிநீக்கு

 13. Well thought of the past, present and the future.

  Deep, Comprenensive, Explorative, Concerned and Convincing.

  A high standard presentation, as always.

  பதிலளிநீக்கு
 14. விஷமத்தனமான கட்டுரை
  // உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”

  பதிலளிநீக்கு
 15. விஷமத்தனமான கட்டுரை
  // உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”

  பதிலளிநீக்கு
 16. ஐயா சமஸ் அவர்களே வாஹபிசம் என்றால் ஓரிறை கொள்கை. இஸ்லாத்தின் வேரும்
  அதுதான். அதை அந்த மக்களுக்கு உணர்த்தவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு. இதில் நீங்கள் ஏன்
  இந்துதுவவோடு ஒப்பிடுகிறீர்கள். எத்தனை கோவில்களை இடித்தார்கள் இஸ்லாமியர்கள்?

  "லகும் தீனுக்கும் வலியதீன்" அவரவர் மார்க்கம் அவரவருக்கு. இதுதான் islam கூறுகிறது.
  இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை களையவே இம்மாநாடு. தயவு செய்து வெறுப்பை திணிக்காதீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Ravoof......
   ..
   Islam, Basically, is A Very Refined Religion.... Almost equivalent to the Advaitha philosophy of Adi Shankara....
   Nut, as in every other Religion, those who misinterpret and radicalize are only in Power to Dictate Terms.....
   ...
   If it is Just as you had Stated above, It could be Welcome.....
   How could their Support to ISIS be taken as Peaceful Propagators ....

   நீக்கு
  2. Muslims have demolished many temples including RAM mandir at ayodhya.

   நீக்கு
  3. Muslims have demolished many temples including RAM mandir at ayodhya.

   நீக்கு
 17. திரு சமஸ் பொதுவாக முச்லிம் மக்களை பற்றி பொது தளத்தில் வைக்க படும் குற்றசாட்டு

  பெண் உரிமை யை மருப்பவர்கள் சேவை மனபான்மை இல்லாதவர் தீவிரவாதிகள்

  இது போன்ற தமிழக முச்லிம் மக்கள் மீது வைக்க முடியாத பரிதாபாத வெளிபாடு உங்கள் இன்றைய உங்கள் பதிவு
  அதனால் தான் ஒற்றை கலாச்சார என்று ஒரு புது தாக்குதலை நீங்கள் தொடுத்து இருப்பதை அறிய முடிகிறது
  சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தவறா
  இந்து சமயத்தில் மூட நம்பிக்கை க்கு எதிரான கருத்து சொன்ன பாராட்டு உங்களை போன்றவர்கள்
  முச்லிம் சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கை க்கு எதிரான பிரச்சாரம் பற்றி விசம கருத்தை பரப்புரை செய்வதின் நோக்கம் தான் புரிய வில்லை

  இந்துகலும் முச்லிம் மக்களுக்கு சொந்தம் சொல்லி வாழ்வதாக நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து 10 ஆண்டுகள் இரத்தம் தானம் செய்வதில் முதல் இடம் இதில் நன்மை அடைந்தவர்கள் அதிகமாக மக்கள் இந்து மக்கள் தான் இதன் மூலமாக முச்லிம் மக்கள் பற்றி நல்ல கருத்து உருவாகி அதன் முலம் சமூக ஒற்றுமை வளர்ந்து இருக்கு
  இவ்வாறு மற்ற மதமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மக்களை உருவாக்கியது தான் தவறா
  சென்னை மழை துயரின் போது
  யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தங்கள் உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு சேவை செய்யும் மக்களை உருவாக்கியது தான்
  ஒற்றை கலாசாரமா

  உன் மார்க்கம் உனக்கு என்ன மார்க்கம் எனக்கு
  என்ற உயர்ந்த சிந்தனை கொண்ட மக்களிடம் சேர்ப்பதும் தான் தவறா
  உங்களின் இந்த பதிவு பொது வெளியே வந்து செயல்படும் முச்லிம் மக்களை முடக்க மட்டுமே பயன் படும்

  பதிலளிநீக்கு
 18. திரு சமஸ் பொதுவாக முச்லிம் மக்களை பற்றி பொது தளத்தில் வைக்க படும் குற்றசாட்டு

  பெண் உரிமை யை மருப்பவர்கள் சேவை மனபான்மை இல்லாதவர் தீவிரவாதிகள்

  இது போன்ற தமிழக முச்லிம் மக்கள் மீது வைக்க முடியாத பரிதாபாத வெளிபாடு உங்கள் இன்றைய உங்கள் பதிவு
  அதனால் தான் ஒற்றை கலாச்சார என்று ஒரு புது தாக்குதலை நீங்கள் தொடுத்து இருப்பதை அறிய முடிகிறது
  சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தவறா
  இந்து சமயத்தில் மூட நம்பிக்கை க்கு எதிரான கருத்து சொன்ன பாராட்டு உங்களை போன்றவர்கள்
  முச்லிம் சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கை க்கு எதிரான பிரச்சாரம் பற்றி விசம கருத்தை பரப்புரை செய்வதின் நோக்கம் தான் புரிய வில்லை

  இந்துகலும் முச்லிம் மக்களுக்கு சொந்தம் சொல்லி வாழ்வதாக நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து 10 ஆண்டுகள் இரத்தம் தானம் செய்வதில் முதல் இடம் இதில் நன்மை அடைந்தவர்கள் அதிகமாக மக்கள் இந்து மக்கள் தான் இதன் மூலமாக முச்லிம் மக்கள் பற்றி நல்ல கருத்து உருவாகி அதன் முலம் சமூக ஒற்றுமை வளர்ந்து இருக்கு
  இவ்வாறு மற்ற மதமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மக்களை உருவாக்கியது தான் தவறா
  சென்னை மழை துயரின் போது
  யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தங்கள் உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு சேவை செய்யும் மக்களை உருவாக்கியது தான்
  ஒற்றை கலாசாரமா

  உன் மார்க்கம் உனக்கு என்ன மார்க்கம் எனக்கு
  என்ற உயர்ந்த சிந்தனை கொண்ட மக்களிடம் சேர்ப்பதும் தான் தவறா
  உங்களின் இந்த பதிவு பொது வெளியே வந்து செயல்படும் முச்லிம் மக்களை முடக்க மட்டுமே பயன் படும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Islam, Basically, is A Very Refined Religion.... Almost equivalent to the Advaitha philosophy of Adi Shankara....
   Nut, as in every other Religion, those who misinterpret and radicalize are only in Power to Dictate Terms.....
   ...
   If it is Just as you had Stated above, It could be Welcome.....
   How could their Support to ISIS be taken as Peaceful Propagators ....

   நீக்கு
  2. Islam, Basically, is A Very Refined Religion.... Almost equivalent to the Advaitha philosophy of Adi Shankara....
   Nut, as in every other Religion, those who misinterpret and radicalize are only in Power to Dictate Terms.....
   ...
   If it is Just as you had Stated above, It could be Welcome.....
   How could their Support to ISIS be taken as Peaceful Propagators ....

   நீக்கு
  3. Dear Mr Krishna Murthy, People who organised the shirk olippu manadu never supported ISIS or any terror organisation?

   நீக்கு
 19. பாகிஸ்தான் அரசு சூபியிசத்தை தர்காக்களை நம்புகின்ற அரசு. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியா வரும் போதெல்லாம் அஜ்மீர் சென்று தர்கா வழிபாடு செய்து வருவார்கள். அங்கே தவ்ஹீத் என்னும் தூய இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை. நல்லதொரு பாயிண்டை எனக்கு எடுத்து கொடுத்த சகோதரர் ரகுவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 20. உண்மையை உரக்க சொன்னீா் நண்பா அதே இந்துத்துவா முறையில் மிரட்டல் வரும் நாங்க இருக்கிறோம் நண்பா அப்துல் கபூா் மன்னை

  பதிலளிநீக்கு
 21. ஷிர்க் ஒழிப்பு மாநாடு: சமஸ் கட்டுரைக்கு எதிர்வினை
  "இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது.
  தர்காக்கள்்மீது கை வைக்கிறீர்கள் . நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் கோயில்கள் ,
  தேவாலயங்கள் மீதுகூடக் கைவைப்பீர்கள் இல்லையா?"
  இப்படி ஷிர்க் ஒழிப்பு மாநாடு
  நடத்தியவர்களைப் பார்த்துக் கேட்டுள்ளார் சமஸ். (தமிழ் இந்து ஏடு)
  அந்த மாநாடு சொந்தமத மக்கள் மத்தியில் சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  அங்கே பிற மதங்கள் தாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சொந்தமத மக்கள் மத்தியிலும் சீர்திருத்தத்தை பிரச்சாரத்தின் மூலமாக நிறைவேற்ற முனைந்தார்கள் என்பதை மாநாட்டு
  பேச்சுக்களும் நிகழ்வுகளும் கண்காட்சிகளும் உணர்த்தின.
  எது மெய்யான இஸ்லாம்
  என்று அமைதியான வழியில் பரப்புரை செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
  தர்கா ்வழிபாட்டை மட்டுமல்ல ஜோதிடம், பில்லிசூன்யம் போன்றவற்றிற்கு எதிராகவும் அங்கே
  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, நிகழ்வுகள் நடத்தப்பட்டதற்கு, கண்காட்சிகள்
  வைக்கப்பட்டதற்கு தனது நீண்ட கட்டுரையில் முக்கியத்துவம் தரவில்லை சமஸ்.
  "நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால்" என்று ஒரு ஊகத்திற்குள் நுழைகிறார்.
  இந்தியாவில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதை அவரது மனசாட்சி அறியும்.
  காரணம்்அவர்கள் இங்கே சதவீதக்கணக்கில் குறைவாக மட்டுமல்லாது சிதறியும் கிடக்கிறார்கள் .
  இந்த நிலையில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் வீண்பீதியைக் கிளப்பும் இந்தவேலை
  எதற்கு?
  பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு தீனி போடும் வகையில் சிறுபான்மையினரின்
  செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கை அவசியமே.
  ஆனால் அதற்காக
  ஒரு மதத்தவர் மத்தியில் சீர்திருத்தமே பேசக்கூடாது என்பது நியாயமே அல்ல.
  மதநல்லிணக்கத்தை வற்புறுத்தும் நோக்கில் நாட்டின் மதப் பன்முகத்தன்மை எனும் யதார்த்தத்தை
  சுட்டிக்காட்டலாம் .
  அதற்காக ஒரு மதத்திற்குள் நிலவும் அல்லது ஊடுறுவியிருக்கும் மூட
  நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசக்கூடாது என்றால் நமது அரசியல் சாசனம் கூறுகிற
  விஞ்ஞான மனப்பான்மையை ஒருநாளும் வளர்க்க முடியாது.
  சமஸின் வாதத்தை நீட்டித்தால்
  இந்து மதத்திற்குள் நிலவும் எந்தவொரு மூடநம்பிக்கையையும் எதிர்க்கக் கூடாது என்றாகிப்
  போகும் . இதைத்தான் வைதீகவாதிகள் விரும்புகிறார்கள்.
  சமஸ் விரிந்த மனம் கொண்டவர்
  என்பதை அறிவேன் .ஆனால் இந்தக் கட்டுரையில் தன்னை அறியால் அவர் ஆர் எஸ் எஸ்
  காரர்கள் கிளப்பிவிடும் வீண் பீதியையைும் , இந்து வைதீகவாதிகளின் சிந்தனையையும்
  எதிரொலித்திருப்பது வருந்தத்தக்கது.
  மாநில அரசியல் அதிகாரம் கொண்டும் , மத்தியில்
  அரசியல் அதிகாரம் பெறவும் இடிக்கப்பட்டது பாபர் மசூதிதான் என்பதை மறந்திடவேண்டாம்.
  நன்றி சகோ Arunan Kathiresan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ISIS இங்கு வளர வேண்டும் என்றும் கோஷம் எழுபிபியுள்ளனரே....

   எப்படி அமைதி நிலவும்......

   நீக்கு
  2. ISIS இங்கு வளர வேண்டும் என்றும் கோஷம் எழுபிபியுள்ளனரே....

   எப்படி அமைதி நிலவும்......

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 22. //இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். //

  ஆம். இருவருக்குமிடையிலான ஒப்பந்தத்தின் முதல் ஷரத்தே, ‘இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது - எக்காரணம் கொண்டும்” என்பதே. இதைத்தான் முஹம்மது நபியும் போதித்தார். முஹம்மது நபி போதித்தார் என்பதால், இதன் பெயர் “முஹம்மதுயிஸம்” அல்ல!! இஸ்லாம்!

  இதைத்தான் வஹ்ஹாபும், போதித்தார், பிஜே போதிக்கிறார், இன்ன பிற இஸ்லாமிய அறிஞர்களும் போதிக்கிறார்கள்!! அதனால், இது வஹ்ஹாபியிஸம் என்றோ, பிஜேயிஸம் என்றோ ஆகிவிடாது - இஸ்லாம் மட்டுமே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ISIS கூட இப்படித்தான் ஒரு காரணத்தை சொல்லி, குழந்தைகள் பெண்கள் அனைவரையும் கொன்று குவிக்கின்றது......

   நீக்கு
  2. Yeah he need not have to know because what's said and what's been followed are very different. Don't quote papers please see how Muslims live. I'm not generalizing everybody, but, in General, wherever Islam thrives there is only terrorism, blood and fights.

   More than Mr Krishna its the people who follow Islam should grow up. One thought about Islam look at the in flow off negative comments from Muslims. There's absolutely no tolerance within you and you kill people who speak about you. There are many many classic examples.

   நீக்கு
 23. //நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?//

  ஏக இறைவன் கொள்கைப்படி ஆட்சி நடத்திய முஹம்மதுவும், அவர் பின் வந்த கலீஃபாக்களும் எப்படி நடந்து கொண்டார்கள் என்று வரலாற்றை வாசித்துப் பாருங்கள்!! அவர்கள் இடித்த சர்ச்சுகள், யூத சினகாக்-கள் என்று ”பாபர் மசூதி வரலாறுகள்” ஏதேனும் இருக்கிறதா என்ன??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமஸ் , நீங்கள் நினைக்கிறபடி இல்லாமல் பெரும்பான்மை வஹாபியிசம் நோக்கி நகர்ந்துவிட்டது ,இந்த அம்மையாரை இணையம் வந்த காலத்தில் இருந்து அறிவேன் , கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முழு வஹாபி ஆகிவிட்டார்கள் போல .

   பாமியான் புத்தரில் இருந்து , சிரியாவில் இடிக்கப்படும் ஷியா மசூதிகள் வரை சமகாலத்தில் இடிக்கப்படுபவை எல்லாமே வஹாபியிசத்தால்தான் நடக்கின்றன ,

   வட இந்தியாவெங்கும் இஸ்லாமிய ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்களும் கூட

   நீக்கு
 24. My Dear #TNTJ...
  #ANTISHIRK ....IT IS,
  ...
  So Nice.....
  Correct.....
  Perfect.....
  NOBODY SHOULD SHIRK AWAY FROM THEIR DUTIES AND RESPONSIBILITIES TOWARDS SELF, FAMILY AND STATE.....
  ...
  THAT'S WHAT YOU MEAN, ISN'T IT???
  YES...
  FOR,
  SHIRK, IN ENGLISH MEANS,
  ..
  shirk

  \ˈshərk\

  : to avoid doing something that you are supposed to do

  Full Definition

  intransitive verb1 : to go stealthily : sneak2 : to evade the performance of anobligationtransitive verb: avoid, evade shirk·er noun

  Examples

  He's too conscientious to shirk hisduty/responsibility.He never shirked from doing his duty.They did their duty without shirkingor complaining.

  Origin: origin unknown.

  First use: 1681

  Synonyms: avoid, dodge, duck, elude,eschew, evade, finesse, get around,scape, shake, escape, shuffle (out of),shun, weasel (out of)

  Antonyms: attend (to), remember

  ......
  But
  Your "Anti" is English and "Shirk" from Arabic......
  HOW MANY OF YOU COULD WRITE YOU NAME IN ARABIC, LET ALONE, READ AND UNDERSTAND THE GOSPELS IN ARABIC.....
  ...
  WHEN DID THIS SHIRK BUSINESS DAWN UPON YOU......??
  ...
  If Idolatry and Symbolism is SIN, When are You Going to Blast the Mecca and Madina ....?????
  ...
  When are you Going to
  DEMAND ALL HINDUS AND CHRISTIANS AND SIKHS AND BUDDHISTS AND JAINS, TO QUIT INDIA .....?????
  SOONER THE BETTER, ISN'T IT...?????
  ....
  See the Video below,
  AND TRY TO
  Put something Into Your Heads......!!!!!
  .......

  பதிலளிநீக்கு
 25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 26. இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை.ஆனால், இன்றைய தினம் சத்தியம் தெளிவடைந்து விட்டது என்ற புத்தாக்க சிந்தனையை தான் மூட நம்பிக்கைகளும், சமூக தீங்குகளும், பெண்ணடிமை தனமும் , பெண் குழந்தைகளை கொன்றொளிக்கும் பாங்கும், அரசு, அமைப்பு முறை என்ற நாகரீகமும் அற்ற ஒரு சமூக சூழலில் இவைகளுக்கு முரணாக இஸ்லாம் விதைத்தது .  பிறரின் நம்பிக்கைகள், நம்பிக்கை சார்ந்தவைகளை குறித்த எந்த தாக்குதல்களையும் வரலாற்றில் எந்த காலத்திலும் இஸ்லாம் வெளிபடுதியதில்லை. பிறரின் நம்பிக்கைகளுக்கும், வழிபாடுகளுக்கும் வழி ஏற்படுத்தி தந்தது கலீபா உமரின் ஆட்சி முறை . தவறுகளை கண்டிக்குமிடத்து எச்சரிக்கைகளுக்காக பயன்படுத்தும் வார்த்தைகளின் தன்மையை உணராது நடப்பவர்கள் இவர்கள்.

  ஆனால், குறிப்பிடப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கொள்கை உறுதிப்பாடு, நிலைத்தன்மை என்ற பெயரில் சுய நலம் கொண்டவர்களின் தலைமையில் ஏற்படுத்தும் இது போன்ற தேவையற்ற வெளிப்பாடுகள் கண்டிக்க தக்கவை.

  வார்த்தைகள் பிரயோகிப்பதில் கூட மிகுந்த கவனத்தோடும் , பொறுப்போடும் நடந்து கொள்ளாததும், விமர்சிப்பதில் நாகரீகத்தை பேணானதும் இத்தகைய எதிர் கருத்துகளை விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்தல் நலமென்பதறிக!

  பதிலளிநீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 29. தினகரன் ஆன்மிக மலரில் (சனிக்கிழமை இணைப்பு) எனக்கு மிகவும் பிடித்த பகுதியே கடைசி பக்கங்கள்தான். அன்பையும் கருனையையும் போதிக்கும் பைபிள் வசனங்களையும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இந்தப் பகுதிகளையே முதலில் படிப்பேன். மற்ற முக்கால் வாசி பக்கங்கள் எனக்கு ஷிர்க் காகவே தோன்றுகிறது. நான் இந்து மதத்தை சேர்ந்தவன், இதில் பின்பற்றும் மூட நம்பிக்கைகளை (எனக்கு தோன்றுவபற்றை) விமர்சிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் இஸ்லாம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை (அவர்கள் மார்க்கம் சொன்னபடி) அவர்கள் விமர்சிப்பதில் என்ன தவறு? பிற மதங்களை விமர்சிக்கும்போதே நம்மை அறியாமல் தவறிழைத்து விடுகிறோம். இந்த மண்ணில் உள்ள முஸ்லிம்கள் மற்ற எந்த மாநில/நாட்டு முஸ்லிம்முக்கோ எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது இந்த மண்ணின் மரபில் வந்ததெனப் பெருமை படுகிறோம். நம் மண்ணின் மரபு இந்துந்துவத்தை பின்பற்றுவதல்ல, இயற்கையை அரவனைப்பது. திருக்குறளும் சிலப்பதிகாரமும் இந்து மதமா? மதங்களைக் கடந்து மனிதம் வளர்ப்போம். அன்பையும், ஓரிறையும் போற்றி வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
 30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 33. ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் சமஸ் அவர்களே. உங்களுக்கு இசுலாமிய அறிவு போதாது.இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும் சரியான ஞானத்தை அடைய. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் சமஸ் அவர்களே. உங்களுக்கு இசுலாமிய அறிவு போதாது.இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும் சரியான ஞானத்தை அடைய. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 36. Really i am wandering. About your knowledge
  Who said that you dont have islamic knowledge
  I am telling that you have good understand about islam
  ex topic about MOOSA SHAH QADIRI Darga ziyarath which you have mentioned in your article

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. yes, samas knows only about MOOSA SHAH QADRI but he doesn't even have the slightest knowledge of Islam from its authentic sources of Quran and Hadis.

   நீக்கு
 37. இன்றைக்கும் இஸ்லாமியரின் குரல் என்பது மிதவாதிகளின் குரல் அல்ல , முழுதும் வ்ஹாபிகளின் குரல்தான் ,

  கருத்தால் எதிர்கொள்ளவே முடியாது ,எனவே மிதவாத முஸ்லீம்கள் எல்லோருமே ஒதுங்கிவிட்டனர் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை. அங்கே சமத்துவமும், சகோதரத்துவமும் தாண்டவமாடுகிறது. சர்ச்சுகள் முன்வைக்கும் அன்பு வழியின்படி நடப்பதால் அங்கே மதச்சண்டைகள் இல்லை. லட்சுமணானந்த ஸரஸ்வதி போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அங்கு இடமில்லை. முரணியக்க வழியில் அங்கு அறவுணர்வுடன் செயல்படும் போராளிகள் அப்படி இடம் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். அவர்களை நக்ஸலைட்டுகள் என்று இந்துத்துவ மதவெறியர்கள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால், சர்ச்சுகளோ அவர்களின் போராட்டத்தின் காரணத்தைப் புரிந்துகொள்கிறது.

   நீக்கு
  2. Laxmanand saraswati was in orissa and not in North East. Wahhabis are devils,thousand times worse than any RSS guy.

   நீக்கு
 38. ArangaKV, இஸ்லாத்தில் கொள்கை கோட்பாட்டளவில் இருக்கின்ற பிரிவினைகளை அப்படியே நீடிக்க செய்ய வேண்டுமென்பது தான் உங்களது இலக்கு என்பதை உங்களது ஆர்வமும், உங்களது கருத்தும் காட்டி கொடுத்து விடுகிறது சகோதரர் அரங்கா. சரியான ஒன்றை புரிந்து அதை நோக்கி தன்னை ஒருவன் நடைபோடுவது கூட பயங்கரவாதம் போன்று பூச்சாண்டி காட்டும் புத்தியை கைவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 39. தூய்மைவாத இஸ்லாம் பேசுகிறவர்கள் பயங்கரவாதிகள் போன்றும், ஆயுதங்களை கையில் வைத்து கொண்டு வன்முறை செய்கிறவர்கள் போன்றும் எண்ணுகிற இந்துத்துவா பொதுப்புத்தியை கழட்டி வைத்து விட்டு, இங்கே நாங்கள் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆக்கப்பூர்வ பதில்களை கொடுங்கள்.

  பதிலளிநீக்கு

 40. தூய்மைவாத இஸ்லாத்திற்கு எதிரான கருத்தை அவ்வப்போது தனது கட்டுரையில் தொடர்ச்சியாக எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார். அவரை தூய்மைவாதம் பேசுகின்ற இஸ்லாமியர்கள் தாக்கி விட்டார்களா? மாறாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் போலித்தனமானவை , இத்துத்துவா பார்வையை கொண்டது என்றும் அதே கருத்தியல் தளத்தில் பதிலடி தான் கொடுத்து கொண்டிருக்கின்றனர். எனவே அதீத கற்பனை உலகத்தை விட்டு வெளியே வாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதைக்கு ஜெயமோகனைத் தாக்க மாட்டீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி. உங்களின் நோக்கம் முதலில் முகமதியர் அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. எனவே இப்போது பலியாகக் கூடியவர்கள் தஸ்லிமா நஸ்ரீன்கள் மட்டுமே. தஸ்லீமா நஸ்ரீன் போன்று சுயமாகச் சிந்திப்பவர்களே இல்லாமல் போனபின்பு ஜெயமோகன்களை இல்லாமல் ஆக்குவீர்கள். இதுதான் உங்களது வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெளியாகும் முகமதிய செயல்பாடு.

   நீக்கு
 41. கோயில்களில் செய்த போதனைகளால் சேரிகளில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என்று சமஸ் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா ?

  பதிலளிநீக்கு
 42. சமஸ் இப்படிச் சொல்கிறார்

  //அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. //

  இதற்கு ஆதாரங்கள் அவர் தரவில்லை என்றால், அவரது இந்தக் கட்டுரை பொய்மையானது.

  பதிலளிநீக்கு
 43. சமஸ் சார்,

  நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின் மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை சந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி.

  தவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..

  என்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.

  அப்படித்தான் இந்தக் கட்டுரையும். இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest.(Comment one)

  பதிலளிநீக்கு

 44. கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.

  இந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் தங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல.

  ஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir??? (Comment two. End)

  பதிலளிநீக்கு
 45. மிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது.

  நல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை.

  மேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.

  இந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.

  கடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு, அந்த வெற்றிடத்தில் ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.

  மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நன்றி. (Comment Three. Final Comment)

  பதிலளிநீக்கு
 46. இஸ்லாமியர்களின் வாழ்வு முறையை, வரலாற்றை பதிவு செய்யும் போது. குர் ஆனை ஆராய வேண்டும். முஸ்லிம்களின் வாழ்வியல் நெடுகிழும் பிற மதங்களை அது மதிக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இஸ்லாம் கடை பிடிக்கப்பட்ட அன்றைய நாளில் ஒரு சிக்கலை சந்திக்கிறது.

  அது வர்ன அடிப்படையாக கொண்டு கடவுளின் பெயரால் மனிதத்தை குழி தோண்டி புதைத்த புரோகிதர்கள் கண்டு பிடித்த துருப்பு சீட்டுதான் பல கடவுள் கொள்கை.

  வரலாற்றை இங்கே கட்டுரையாளர் தவராக புரிதல் கொண்டு இருக்கிறார் என்பது பதிவில் அப்படமாக தெரிகிறது. அந்த அறியாமையை தனது பதிவின் மூலம் வாந்தி எடுத்து இருக்கிறார்.

  பள்ளிவாசல்கள் தோறும் பாங்கு சொல்லப்பட்டு ஒரு நாளைக்கு ஐந்து நேரம் ஒற்றை கடவுளை வழிபடுமாறு அழைப்பு விடப்படுகிறது.

  இதற்க்கு மாற்றமாக அறியாத மக்களை இஸ்லாத்தில் புரோகிதம் இருப்பதாக நம்பவைத்து. இஸ்லாத்தை வர்ணங்களின் அடிப்படையில் கட்டமை முயற்ச்சித்த கயவர்களின் கூடாரத்தில் இருந்து வந்தவர்களின் சகிப்பு தன்மையற்ற பதிவுதான் இது.

  செய்யும் தொழிலிளின் அடிப்படை வர்ணங்களான நாஸ்வன், பக்கீர்ஷா. மூசாபர், லெவெ, மோதினார், மூட்டை தூக்குபவன். என்று கூறி மனிதத்தை குழி தோண்டி புதைக்க உங்களுக்கு உதவியது எது குர் ஆனா அல்லது நபி மொழியா. இதிலே பழமை வாதம் என்ற பிதற்றல் வேறு.

  இதுக்கு மாற்றுக் கருத்தை நாம் முன்னிருத்தினால் வெளியிடுமா நடிகைகளின் தொப்புள் குழியையும். பஞ்சுவைத்து தைக்கப்பட்ட பிரா அனிந்த நடிகைகளின் மார்பாகங்களையும் நம்பி இருக்கும். தி
  இந்து பத்திரிக்கை இந்த ஆக்கத்தின் மூலம் எச்சிலை தன் முகத்தில் வாங்கிக் கொள்கிறது.

  பிற மதங்களின் கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை புறக்கனிப்பது. வெறுப்பின் காரணமாக அல்ல மதிப்பதின் காரணத்தினால்தான் என்று கட்டுரையாளர் கவணிக்க தவறி போய் விட்டார்.

  பிற கடவுள் உருவங்களிடம் படைக்கப்பட்டது உணவு என்னும் தன்மையை தாண்டி பிரசாதம் ஆகிவிடுகிறது.

  அதும் ஒரு உணவுதான் கடவுளின் பெயரால் உங்களுக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்று தரும் உணவுகளை இஸ்லாமியச் சமுகம் வரலாறு எங்கும் புறக்கனிப்பதே இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகத்தில் நாம் உணவு உண்பதை இங்கே ஒப்பு நோக்க வேண்டும்.

  பதினாலு நூற்றாண்டுகளுக்கு முன்னால். ஒன்றை கடவுள் கொள்கையை தங்கள் சமுகத்தில் சொன்ன காரணத்தினால். தங்களின் ஏகபோக புரோகித ராஜாங்கம் பரிபோய்விடும் என்பதால். நபி முகம்மது (ஸல்) அவர்களை கொலை செய்து விட புரோகிதர்கள் சதி திட்டம் தீட்டிய போது.

  நபி முகம்மது (ஸல்) அவர்களும் அவரின் தோழரான இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தின் முதல் கலிபாவாகிய அபுபக்கர் (ரலி) அவர்களும் மதினாவை நோக்கி பயணம் மேற்க்கொள்ளும் போது. பல கடவுள் கொள்கையை சார்ந்த ஒரு யூதரை துணைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றால்.

  இது ஏன் ஆக்கத்தில் முன்வைக்கப்பட வில்லை. இஸ்லாமியர்கள் பிற சமய சகிப்பு தன்மையற்றவர்கள் என்னும் ஊடக பயங்கரவாதம் சமஸ ஆக்கத்தில் முன்னிருத்தப்படுகிறது.

  எங்களுக்கு குர் ஆன் கூறும் போதனையும் அதுவேதான் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. ஆனால் எவன் எக்கேடு கெட்டாள் எனக்கு என்ன என்று இருந்து விட இஸ்லாம் எங்களுக்கு போதிக்கவோ வில்லை. தமிழகத்தில் இரத்தாண முகாம்களின் கோல்டு கப்பை தமிழ்கத்தில் பதினான்கு ஆண்டுகளாக வின்னடித்து வருகிறோம்.

  வஹாபியிஸம என்று கட்டுரையாளர் முன்னிருத்துவதும் கூட வஹாபிய புரிதல்தான் என்று தனது அறியாமையை முன்னிருத்துகிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்தியது ஷிர்க் ஒழிப்பு மாநாடுதானே தவிர. வஹாபிய எழிச்சி மாநாடு அல்ல.

  ஷிர்கை ஒழிக்க வேண்டும் என்பது குர் ஆனை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு குர் ஆன் கூறும் அறிவுரைதான். இதிலே சுத்தி சுத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு வஹாபியிஸத்துக்கும் வளையல் போட்டு கள்ளத் திருமண செய்து கொடுக்க முயற்ச்சிக்கிறார்.

  இப்பதிவு முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமியரின் பெயரை பயன்படுத்தி பயங்கரவாத ஏகாதியபத்தின் ஊடக வியாபாரியின் ஆக்கம்.

  இது போன்ற ஆக்கங்கள் பொது சமுகத்துக்கு மாபெரும் குழப்பத்தையே விளைவிக்கும்.

  தி இந்து நாளேடும் தினமலர் முன்பு கழித்த நரகல் கழிவை மீண்டும் தின்று விட்டு மீண்டு வேறு நிறத்தில் கழித்து இருக்கிறது அவ்வளவுதான்.

  மறுப்பின் ஆக்கம் முஸ்தபா கலில் ரஹ்மான்: இராமநாதபுரம்.
  https://www.facebook.com/musthafa.kaleel.rahman/posts/1552709781711345

  பதிலளிநீக்கு
 47. சகோதரர் சமஸ் அவர்களுக்கு,

  நான் இன்று உங்கள் கட்டுரை "இந்துத்துவம் அடிப்படை வாதம் என்றால் வாஹாபியிசதிற்கு என்ன பெயர் ? " ஹிந்து தமிழ் இதழில் பார்த்தேன். பயனடைந்தேன். நான் வஹாபியிசத்தை தீவிரமாக ஆதரிப்பவன் அல்லன் ஆனால் அதனை எதிர்ப்பவன் நளினமான முறையில் முஸ்லிம் மக்களிடத்தில் . அதே நேரத்தில் இப்ன் வஹ்ஹாப் அவர்களுடைய இறை நம்பிக்கை சார்ந்த கருத்துகளை முழுமையாக மறுப்பவன் அல்லன் சிலதை தவிர. இஸ்லாம் மற்ற மத மனிதர்களுடன் சகிப்பு தன்மையோடு நடக்கும்படி மிகுதமாக போதிக்கும் மார்க்கம் மட்டும் இன்றி தன் சக முஸ்லிம் சகோதரர்களுடனும் மிகவும் சகிப்பு தன்மையுடன் நடக்கும்படி சொல்லில் மட்டும் இன்றி செயலில் போதிக்கும் மார்க்கம் என்பதை முதலில் நான் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

  இஸ்லாம் கூறும் அணைத்து ஏகத்துவ போதனைகள் மனித சமூகத்திற்கு இறுதியாக அனுப்ப பட்ட இறுதி தூதர் மொஹமத் நபி (ஸல்) அவர்கள் கூறியவை. ஒரு இறைவனை மட்டுமே வணங்கும் படி மனித சமூகத்திற்கு வெறும் வார்த்தையில் மட்டும் இன்றி நபிகள் அவர்கள் வாழ்கையை முழு மனித சமூகத்திற்கு ஏகத்துவத்தை செயல் ரீதியாக செய்து காட்டிய மார்க்கம் இஸ்லாம். முழு மனித சமூகத்தை இந்த ஏகத்துவத்தின்பால் அன்போடு சகோதர வாஞ்சையோடு அழைக்கும் மார்க்கம் இஸ்லாம். அதற்கென்று ஒரு முறை வகுத்துள்ளது இஸ்லாம். இந்த வழிமுறையின் விளக்கம் சில அறியாத முஸ்லிம் அறிஞ்சர்கள் மிக உணர்ச்சி வசத்தால் முஸ்லிம் மக்களிடத்தில் பேசும்போது சில விரிசல்கள் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எப்படி தன தந்தையை விட்டு விட்டு வேறு ஒரு மனிதரை "தந்தையே !" என்று கூப்பிட்டால் தன் தாய்க்கு எவ்வளவு இலுக்கு அவதூறு பெரும் பாவம் என்பதை உணர்ந்த மனிதன் , தன்னை படைத்த அளவற்ற அன்புள்ள அந்த ஒரு இறைவனை விட்டு விட்டு மற்ற படைப்பினங்களை வழிபடுவது எவ்வளவு மகா பெரிய பாவம் என்பதை உணராமல் இருப்பது வருத்தமே.. இதனை மனிதன் உணர்வதில்லை. மனிதனை இறைவன் அவனை வணங்குமாறு கட்டாயபடுத்த வில்லை மாறாக உண்மையை இறைவன் மனித சமூகத்திற்கு சொல்கிறான் அவர்கள் இதனை உணராவிட்டால் இந்த உலகத்திலும் மறுமை நிரந்தர வாழ்க்கையிலும் என்ன ஆகும் என்று. இஸ்லாம் முஸ்லிம்களை சகிப்புத்தன்மையோடு இந்த உண்மையை மக்களுக்கு தன் உடன் பிறவா சகோதரர்களுக்கு நளினமான முறையில் அறிவுரை சொல்ல சொல்கிறது. அந்த வழிமுறையை சூபிகள் பின்பற்றியதால் இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்தது. இதற்கு இன்னொரு காரணம் மனித ஆதிக்க சக்திகளால் போலியாக உருவாக்க பட்ட ஜாதி இன ஒழிப்பில் இருந்து விடுதலை பெற சகோதர மார்க்கம் இஸ்லாத்தை அக்கால முன்னோர்கள் தழுவியதால் இப்போது என் ஜாதி என்ன என்பதே எனக்கு தெரியாமல் போனது.சில அறியாத முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம்களிடத்தில் உள்ள தவறுகளை நளினமான முறையில் அறிவுரை சொல்லாமல் உணர்ச்சி வசத்தில் பேசுவதால் ஏற்பட்ட விரிசல் தான் நீங்கள் உங்கள் சிந்தனையில் உதித்த இந்த கட்டுரை எழுத காரணமாயிற்று.இப்போது முஸ்லிம்கள் உலகளாவிய சந்தையில் முஸ்லிம்கள் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்சனை இது. நான் இன்று உங்கள் கட்டுரை "இந்துத்துவம் அடிப்படை வாதம் என்றால் வாஹாபியிசதிற்கு என்ன பெயர் ? " ஹிந்து தமிழ் இதழில் பார்த்தேன். பயனடைந்தேன். நான் வஹாபியிசத்தை தீவிரமாக ஆதரிப்பவன் அல்லன் ஆனால் அதனை எதிர்ப்பவன் நளினமான முறையில் முஸ்லிம் மக்களிடத்தில் . அதே நேரத்தில் இப்ன் வஹ்ஹாப் அவர்களுடைய இறை நம்பிக்கை சார்ந்த கருத்துகளை முழுமையாக மறுப்பவன் அல்லன் சிலதை தவிர.வஹ்ஹாபியிசதிற்கும் வஹ்ஹபிற்கும் எந்த முழு தொடர்பும் இல்லை. இஸ்லாம் மற்ற மத மனிதர்களுடன் சகிப்பு தன்மையோடு நடக்கும்படி மிகுதமாக போதிக்கும் மார்க்கம் மட்டும் இன்றி தன் சக முஸ்லிம் சகோதரர்களுடனும் மிகவும் சகிப்பு தன்மையுடன் நடக்கும்படி சொல்லில் மட்டும் இன்றி செயலில் போதிக்கும் மார்க்கம் என்பதை முதலில் நான் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 48. இந்துத்துவம் என்பது என்ன என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை . என்னை விட தாங்கள் மிகவும் இதை பற்றி அறிந்தவர். இந்துத்துவம் ஒரு தனி போலியான தேசியவாத சிந்தனை. இந்துக்கள் வேறு இந்துத்துவம் வேறு.வஹாபிசம் என்பது இப்ன் வஹ்ஹாப் "அவர்களின் போதனைகளை பின்பற்றிய மாணவர்களில் சிலரின் தவறால்" ஏற்பட்ட பெரும் சமூக எதிர் விளைவு.இதற்கு அரசியல் பின்புலன் இருந்தாலும் இந்த வாஹ்ஹபிசதிற்கும் இப்ன் வஹ்ஹாப் அவர்களுக்கும் எந்த ஒரு "முழுமையான " தொடர்பும் கிடையாது. மிக சில தொடர்புகள் உண்டு.

  முதலில் இதை பற்றி சில குறிப்புகளை தங்களிடம் பதிவு செய்யும் முன் நான் சில வரலாற்று பின்புலனை கூற ஆசை படுகிறேன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உலகில் தலைத்தொங்கியது. காலநியாதிக்கதிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டு மக்களும் போராடி வந்தது தங்களுக்கு தெரிந்த விடயம் . அக்காலத்தில் உலகில் மேலோங்கி இருந்தது இஸ்லாமிய ஆட்சி. இந்தியாவில் கூட முஸ்லிம்களின் பன்முக சமூகம் சார்பான நீதியான ஆட்சியே இருந்தது. பெரும்பான்மையான இந்து மக்கள் இந்தியாவில் வாழ்ந்த சமயத்தில் கூட இந்து மக்களின் வழிபாட்டு தளங்கள் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்டே வந்தது. . ஆங்கிலேயர்களை எதிர்த்து முஸ்லிம்கள் மற்றும் இதர சமூக மக்கள் சேர்ந்து ஒருவர் ஒருவருடன் பிறந்த சகோதரர்கள் போல் போராடிவந்தது உங்களுக்கு தெரியும். முழு உலக முஸ்லிம்களின் தனி உரிமையான சிவில் சட்டங்களுக்கு காலனி ஆதிக்க சக்திகளால் சவால் விடும் காலம் அது. இன்று இந்துத்துவ சக்திகள் இக்காலத்தில் இந்திய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை களையும் விதமாக பொது சிவில் சட்டத்தை திணிக்கிறது . இந்த இந்துத்துவ சக்திகள் நம் இந்திய இறையாண்மை அதன் மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தனது மனோயிட்சையை திணிக்கிறது என்பது வேறு விடயம். அக்காலத்தில் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே இருந்த நீதியான ஆட்சி பாதுகாக்க படும் விதமாக ஆங்கிலம் பயில்வதை கூட தடை செய்தனர் இந்திய இஸ்லாமிய அறிஞ்சர்கள் . முஸ்லிம்கள் ஆங்கிலம் படிப்பது தவறு என்பதற்காக அல்ல.மாறாக ஆங்கில கலாசாரம் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவி ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது ஆங்கிலம் கற்பது மூலம் என்பதற்காக . ஆங்கிலேயர்களும் அக்காலத்தில் முஸ்லிம்களை மட்டும் அல்ல மற்ற சமூகத்தையும் எப்படி பிரித்து ஆட்சி செய்யலாம் [இந்தியாவில் மட்டும் அல்ல முழு உலக அரங்கிலும்] என்று திட்டம் தீட்டிய காலம் அது. இந்த பிரச்சனையான கால சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் கீழே உள்ள குறிப்புகளை வாசிக்கும் முன்.

  பதிலளிநீக்கு
 49. இஸ்லாம் ஓரிறை கொள்கையை போதிக்கும் மார்க்கம். மனிதன் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறும் மார்க்கம். "இறைவன் கொடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அவைகளை தடுக்க முடியாது . இறைவன் தடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் கொடுக்க முடியாது " என்ற அடிப்படை கொள்கையை தனது வாழ்க்கை நெறியாக கொண்டது இஸ்லாம்.இஸ்லாத்தில் தர்காஹ் வழிபாடு என்ற ஒன்று இல்லை. மாறாக தர்காஹ் தரிசனம் என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டு. பெரும்பான்மையான இஸ்லாமிய தலை சிறந்த அறிஞ்சர்களின் கருத்தும் இதுதான். 1300 ஆண்டுகளாக இவ்வாரே அறிஞ்சர்கள் போதித்து வந்து உள்ளனர். இந்த தரிசனத்தை இஸ்லாத்தில் "ஜியாரத் " என்று கூறுவார்கள். தர்காஹ் வழிபாட்டிற்கும் தர்காஹ் தரிசனத்திற்கும் பல வித்யாசங்கள் உண்டு. தர்காஹ் வழிபாடு என்பது சமாதியில் அடங்கி இருப்பவர்களிடத்தில் சென்று தனது தேவைகளை முறையிடுவது அவர்களிடம் பிரார்த்திப்பது மூலம் . இது இஸ்லாத்தின் மேற்கூறப்பட்ட அடிப்படை கொள்கையை தகர்க்கும் செயல். இந்த செயலை புதிதாக மக்களிடத்தில் இந்த வாஹ்ஹபியிசம் தடுக்கவில்லை மாறாக பல தலை சிறந்த அறிந்ஜர்கள் சூபிகள் முஸ்லிம் மக்களிடத்தில் இஸ்லாம் இந்தியாவில் வந்த ஆரம்ப காலம் முதல் மிக நளினமான முறையில் அன்பான முறையில் இந்த சிந்தனையை தடுத்து வந்து உள்ளனர் . தர்காஹ் தரிசனம் என்பது "சமாதியில் அடங்கி இருப்பவருடைய நற் செயல்களின் பொருட்டால் தனது தேவை நிறைவேற மனித சமூகத்தின் இறைவனிடத்தில் பிரார்த்திப்பது, சமாதியில் சில நேரம் நிற்பதன் மூலம் தனது மரண சிந்தனையை ஏற்படுத்துவது , தானும் ஒரு நாள் மரணிக்க கூடியவனே , இறுதி முடிவு மறுமை வாழ்க்கையில்தான் என்ற நினைவை ஏற்படுத்துவது . சமாதியில் அடங்கி இருப்பவகளின் நற்செயல்கள் முழு மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிதல்" . இங்கு பிரார்த்தனை என்பது படைத்த இறைவனிடத்தில் மட்டுமே . இதைதான் சுபிகளும் தலைசிறந்த அறிந்ஜர்கள் போதித்து வந்து உள்ளனர். அறியாமல் சில மனிதர்கள் முஸ்லிம்கள் சமாதியில் இருப்பவருடன் பிரார்த்திக்கிறார்கள். அதாவது வழிபாடு செய்கின்றனர்.இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. இதனை இஸ்லாம் இந்தியாவிற்கு வந்த காலம் முதல் நளினமான முறையில் அறிஞ்சர்கள் இதனை மக்களிடம் தடுத்து வந்துள்ளனர். மேலே கூறப்பட்ட தரிசனம் கருத்தில்
  "இறந்த நல்லடியார் பொருட்டால் தனது தேவையை இறைவனிடத்தில் முறையிடுவது" [இந்த முறைக்கு இஸ்லாத்தில் "வஸீலா " என்று கூறுவர் ] என்ற கருத்து பற்றி இப்ன் வஹ்ஹாப் அவர்கள் கண்டித்தது தடுத்தது இது சமாதியில் இருப்பவருடன் நேரடியாக பிரார்த்தனை செய்ய தூண்டிவிடும் என்ற அடிப்படையில் தான் . இந்த கருத்தை இவர்களுக்கு முன்னாள் இருந்த அரிஞ்சர்கள் தெரிவிக்க வில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நபிகள் அவர்களின் போதனைகள் கோர்வை செய்தாகி விட்டது.இந்த "வஸீலா" சம்பந்தமான விடயம் "அகிதா "[ தமிழில் கொள்கை ] என்ற பிரிவில் இப்ன் வஹ்ஹாப் அவர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த அறிஞ்சர்கள் சேர்கவில்லை . ஏன் என்றால் இஸ்லாத்தில் இது ஒரு முக்கியமான விடயம் அல்ல. இப்ன் வஹ்ஹாப் என்ற அறிஞ்சர்தான் மேற்கூறப்பட்ட காரணத்தின் அடிப்படையில் "வஸீலா" வை "அகிதா " என்ற பிரிவில் கோர்வை செய்தார்கள். இது தவறல்ல மாறாக ஒரு சமூக சீர்திருத்தம் என்ற அடிப்படையில்.இதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அறிந்ஜர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்கள் நளினமான முறையில் .

  பதிலளிநீக்கு
 50. இப்ன் வஹ்ஹாப் அவர்களின் மாணவர்கள் சிலர்கள் இதனை மிகவும் உணர்ச்சிவசமாக மக்களிடம் பிரச்சாரம் செய்த விளைவுதான் இந்த வஹ்ஹாபியிசம் என்ற வார்த்தையை சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்ய காரணமாகிப்போனது. வாஹ்ஹபியிசம் என்ற வார்த்தை முதலில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதன்று என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்...முஸ்லிம்கள் மத்தியில் இந்த வஹ்ஹாபியிச சிந்தனை காலப்போக்கில் முஸ்லிம்கள் பிரிவதற்கும் ஆங்கிலேய ஆட்சி அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிவகை செய்தது. இன்று வரை அரசியல் சிந்தனையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட "வஹ்ஹாபியிசம்" ஒரு பிரிவினைவாதமாக இடம்பிடித்து வருவது உலக அரங்கில் பன்முக முஸ்லிம் சமூகத்தில் வாழும் என்னை போன்ற பல மக்களுக்கு வருத்தத்தை தருகிறது. இந்த சிந்தனை பிரிவிற்கும் ஒரு அரசியல் நோக்கம் இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இந்த அரசியல் சிந்தனையின் விளைவாக உருவான பல தீவிர வாத அமைப்புகளை சவுதி மற்றும் பிற அரபு தேசங்கள் தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை.

  சவுதியில் உள்ள இஸ்லாமிய தண்டனைக்கும் தீவிரவாத அமைப்புகள் சொல்லும் இஸ்லாமிய தண்டனைக்கும் வேறு பாடு உண்டு வெளிப்புறத்தில் தண்டனை ஒன்றாக தெரிந்தாலும் கூட. சவுதியில் மன்னராட்சி இஸ்லாமிய குற்ற பிரிவை பின்பற்றுகிறது. அதற்கு மக்களின் முழு நம்பகம் உள்ளது. மக்களின் நம்பகம் பெற்றே இந்த பிரிவு இயங்குகிறது. தீவிரவாதிகள் மக்களின் நம்பகத்தை எந்நேரமும் பெற்ற தில்லை இஸ்லாமிய குற்ற பிரிவை அமல் படுத்த. புரிவதற்காக சொல்கிறேன். அரசு தன் கட்டுபாட்டில் பொருளாதார சூழ்நிலைக்கு தக்கவாறு ருபாய் நோட்டுகள் அச்சிடுகிற்றன .இது மக்களிடம் பெறப்பட்ட வலுவான நம்பகத்தின் அடிப்படையில் . நம்பகம் என்பது ஒரு பெரிய அமானிதம். நம்பகம் மீறப்படுவது பெரிய அமானித மோசடி மற்றும் மிக பெரிய பாவம். மக்கள் தனது விருப்பம்படி கள்ள நோட்டு அடிப்பது எவ்வளவு பெரிய பாவமாக இந்திய இறையாண்மை கருதுகிறதோ அதைவிட மிக மேலாக இஸ்லாமிய குற்ற பிரிவை சிறு தீவிரவாத குழு மக்களின் நம்பகம் இன்றி அமல் படுத்த படுவதை வன்மையாக கண்டிக்கிறது .. முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும்போது இந்த இஸ்லாமிய குற்ற பிரிவை அமலுக்கு கொண்டு வரவில்லை. ஏன் என்றால் பன்முக சமூகத்தில் இருந்து நம்பகம் பெறப்பட வில்லை.அவர்கள் நினைத்தால் கொண்டு வந்து இருக்கலாம் வலுக்கட்டாயமாக. ஏன் செய்யவில்லை என்றால் இஸ்லாம் அதனை வன்மையாக கண்டித்து உள்ளது. "இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை" என்பது குரான் போதிக்கும் அடிப்படை கொள்கை என்பதை தங்கள் கவனத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.

  தாங்கள் கட்டுரை தலைப்பிற்கு பின்புறமாக ஒரு சாதாரண என் போன்ற முஸ்லிம் ஒரு வெள்ளை தொப்பி அணிந்த இளைஞ்சரின் படத்தை காட்டியிருப்பது பெரும்பான்மை இந்திய மற்றும் தமிழ் மக்களின் சிந்தனையில் இவ்வாறு அணிந்தவர்கள் அனைவரும் வாஹ்ஹபியிச சிந்தனை உள்ளவர்கள் என்ற போலியான சிந்தனை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் என் போன்ற இளைஞ்சர்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

  இறைவன் மனிதர்களை நேர்வழி படுத்த போதுமானவன் . நல்வழிபடுத்த போதுமானவன் என்ற பிரார்தனையுடம் நிறைவு செய்கிறேன்.

  நன்றி !

  பதிலளிநீக்கு
 51. சகோதர் சமஸ் அவர்களுக்கு
  உங்களின் திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.இந்த கேள்விக்கான விடை பல்லான்டுகளாக ர்கள் நடத்துகிற இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்சியில் பதில் அளிக்கப்பட்டவை தான்

  பதிலளிநீக்கு
 52. கோயில்கள் எதையும் இடித்த வரலாறு இருக்கிறதா என்று எல்லோரும் ஒரு கேள்வி எழுப்புகிறார்கள்..காஅபா உருவ வழிபாடு செய்யும் இடமாகத்தானே இருந்தது..? அதன் மீது கை வைக்கவில்லையா முகம்மதுவே...
  கோடிக்கணக்கான் நூல்கள் நிரம்பிய நூலகங்களை தீயிட்டு பொசுக்கவில்லையா உமர்..
  இஸ்லாமே அடிப்படைவாதம் தான் எனும்போது..வகாபிகள் குறித்து தனியே சொல்லவும் வேண்டுமா

  பதிலளிநீக்கு
 53. காஅபாவே உருவ வழிபாடு நிகழும் இடமாகத் தானே இருந்தது..கை வைக்கவில்லையா முகம்மதுவே..பல்லாயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய நூலகங்களை எரிக்கவில்லையா உமர்?
  இஸ்லாமே அடிப்படைவாதம் என்கிறபோது வஹாபிகள் குறித்து தனித்து சொல்லவும் வேண்டுமோ?

  பதிலளிநீக்கு
 54. indha katturaiyai patri TNTJ vin vimarsan kela ullathu

  https://www.facebook.com/ThouheedJamath/videos/1125823450770001/

  பதிலளிநீக்கு
 55. Dear Samas, why you are not honest to mention only TNTJ helped the flood affected people check you basic knowledge go to Saidapet Chetty thottam and check it yourself, you are media person how come you are so ignorant of these facts, really pity of your knowledge.

  பதிலளிநீக்கு
 56. எனது பார்வையில் கட்டுரை ஒரு துணிச்சலான முயற்சி..
  குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் எப்படி உலகிற்கு முன்னோடியாக இருக்க முடியும் என்று சொன்ன இடமும் அதைத் தொடர்ந்த விளக்கமும்
  செமை..
  பலரும் தொடத் துணியாத கருப்பொருளை தொட்டதிற்கே ஒரு பூங்கொத்து..
  பதிவின் பின்னூட்டங்கள் பதிவிற்கு முழுமையைத் தருகின்றன
  அம்பேத்கார் இஸ்லாத்திற்கு செல்ல விரும்பியபொழுது பெரியார் மிக அழகாக ஒரு விளக்கத்தைத் தந்திருப்பார். பெரியாரின் ஆளுமை மீது இன்னமும் கூடுதல் பிணைப்பு வரவைத்த கருத்து அது.
  பெரும்பாலான இஸ்லாமியர் உங்கள் பதிவின் வாயிலாக மனம் புண்பட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
  மீறிப் புண்படுகிறவர்கள் பண்பட வேண்டியிருக்கு..
  நடுவே சிலர் வந்து விமர்சனப் பாணியில் இந்துமதத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புகிறேன் பேர்வழி என்று என்னைச் சிரிக்க வைக்கிறார்கள் பின்னூட்டங்களில்..
  மனிதமா மதமா என்று கேள்வி வந்தால் ஒரு நொடிகூட தாமதிக்காது மதத்தை கைகழுவிவிடுவேன்
  இந்த மனப்பாங்கினை நான் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் கூட புரிதலற்றது என்பதையும் உணர்திருகிறேன்.
  இன்னும் பண்பட்ட வார்த்தைகளில் தொடருங்கள் இத்தகு கட்டுரைகளை. ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கினால் சரிதான்.
  எனக்கும் சில கருத்துக்கள் உண்டு ஆனால் ஒருபோதும் அதை என் மனம்தாண்டி வெளியிட்டதில்லை..
  நாம் ஒரு கோணத்தில் சிந்திக்க புரிதல் வேறு கோணத்தில் இருந்தால் தேவையற்ற மனக் கசப்புகள் வருமே என்பதால்தான்.
  இத்துணை பண்பட்ட வார்த்தைகளில் நீங்கள் எழுதியிருக்கும் பொழுதே எவ்வளவு உணர்வெழுச்சிகள்?
  உங்களின் மிக முக்கியமான பதிவாக இதை நான் கருதுகிறேன்.
  எல்லாப் பின்னூட்டங்களுடனும் பாதுகாத்து வையுங்கள் சமஸ்..
  I am proud of you..

  பதிலளிநீக்கு