நான் தமிழீழ
விடுதலைப் புலிகளின் எதிரி
கிடையாது. அதேசமயம்
நண்பன்
என்றும் கூற
மாட்டேன். ஒரு
மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர்
இனமே
அகதியானதற்கு நானும்
ஒரு
மௌன
சாட்சி.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும்
தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட
தூரம்
பயணிக்க முடியாது. நாம்
அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.
நண்பர்களே, ஈழப்
போரின்
இறுதிகட்டத்தில் எழுத்தாளர்கள் பலரையும்போல புலிகளை விமர்சிப்பதை நானும்
தவிர்த்தேன். அதுபோன்ற ஒரு
தருணத்தில் அவர்கள் பக்கம்
நிற்பது ஒரு
தமிழனாக என்னுடைய கடமை
என்று
குருட்டுத்தனமாக எண்ணினேன். ஆனால்,
இன்று
அதற்காக வருந்துகிறேன். தமிழினம் அடைந்த
தோல்விக்கு ஏதோ
ஒரு
வகையில் நானும்
ஒரு
காரணம்
என்று
நினைக்கிறேன். இனியும் அத்தகைய முட்டாள்தனம் தொடரக்கூடாது என்றும் நினைக்கிறேன்.
உலகெங்கும் ஈழத் தமிழர்கள் மீது கரிசனம் கொண்ட தமிழர்கள் - குறிப்பாக இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் வாழும் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்து பேசும் எந்த ஒரு போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிழல் விழுவது எனக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. மீண்டும் பிரபாகரன், மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற மாய அரசியல் வலை இப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பவர்களின் பின்னணியில் அவர்களுக்குத் தெரியாமலேயே விரிக்கப்படுவது பதற்றத்துக்குள்ளாக்குகிறது. ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பிரபாகரனின் படங்களோ, புலிகளின் கொடிகளோ பின்னிருப்பதன் நோக்கம் என்ன? ஈழத் தமிழர் அரசியல் இன்னமும் புலிகள் சாயையோடு இருக்க வேண்டிய தேவை என்ன? ஏன் மீண்டும் மீண்டும் புலிகளிலிருந்தே நாம் தொடங்குகிறோம் அல்லது புலிகள் சார்ந்தே சிந்திக்கிறோம்? இது வடிகட்டிய முட்டாள்தனம் என்று ஏன் இன்னமும் நமக்கு உறைக்கவில்லை?
இன்று புலிகள் அமைப்பு யார்?
உலகின்
40-க்கும்
மேற்பட்ட நாடுகளால் தடை
விதிக்கப்பட்ட, உலகின்
மோசமான
பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர்
இயக்கம். சரியாக
உதாரணப்படுத்த வேண்டும் என்று
சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்ட செத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு
பாம்பு.
நாம்
எப்படி
அதை
நம்முடைய பிரதிநிதியாக்குகிறோம்? உலகம்
அதற்கு
ரத்தினக் கம்பளம் விரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்?
போர்க்குற்றங்களைப்
பற்றி நாம் பேசுகிறோம். போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும்
தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும்
போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மையும் நமக்கு
வேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது
குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்கும் நமக்கு, மறுபுறம், பச்சிளம்
குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள்
உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி
ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.
நண்பர்களே, ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்ட மோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முடித்துக்கொண்ட வரலாறுதான் விடுதலைப் புலிகளுடையது. தமிழர்களாகிய நமக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் பிரபாகரன் மீதும் உள்ள பரிவின் நியாயத்தை ஈழப் போராட்டத்தை முழுமையாக அறிந்த எவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக மாறியதாலேயே புலிகளும் பிரபாகரனும் இந்த அழிவைத் தேடிக்கொண்டார்கள். ஈழப் போரின் இறுதி நாட்களில் நாற்புறமும் எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட நிலையிலும்கூட, ’’புலிகளுக்குப் பிந்தைய காலகட்டம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை'' என்று கூறிக்கொண்டே அழிந்தார்கள் புலிகள். அதே மாயைதான் ஈழ ஆதரவாளர்களையும் இன்று வாரிச் சுருட்டி இருக்கிறது. ஈழத் தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வு சார்ந்து நாம் முன்னெடுக்கும் எந்தப் போராட்டத்திலும் இது பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத் தமிழர்களின்பால் அக்கறை உள்ளவர்களும் உரக்கப் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால், நம்முடைய பேச்சை உண்மையான யதார்த்தத்திலிருந்து - புலிகளுக்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்குவதே ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.
நண்பர்களே… மூர்க்கத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் செயல்பட்டாலும் தாம் கொண்ட கொள்கைக்காகப் போராடிய புலிகள் எப்போதோ செத்துவிட்டார்கள். இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள் அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில் ஆதாயம் இருக்கிறது. நீங்கள் ஏன் உச்சரிக்கிறீர்கள்?
2010
நிதர்சனம்... ஆனால், எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை அண்ணா.
பதிலளிநீக்குதற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரல் புலிகளை நியாயப்படுத்தி அல்ல சமஸ் கையறு நிலையில் சரணாகதி அடைந்துவிட்ட பொது மக்களை சர்வ சாதாரணமாக கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு தண்டனையும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் மீதமுள்ளவர்களுக்கு நலவாழ்வும், சம உரிமையும் மட்டுமே. புலிகள் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி காண்பிக்கப் பட்டது அங்கு சென்று அவர்களுடன் உரசி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நம்மூர் அரசியல்வாதிகளும், அதை அட்டைப்பக்கங்களில் பிரசுரித்த சில வெகு ஜன பத்திரிக்கைகளும் தான்!
பதிலளிநீக்குசமஸ் நீங்கள் இதை இன்னும் விரிவாக எழுதினால் நல்லதாக இருக்கும்.தயவு செய்து கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்
பதிலளிநீக்குபிரபாகரன் படத்தையும், புலிகளை குறிப்பிடும்
பதிலளிநீக்குபடங்களையும் போராட்ட களத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் போராட்டத்தின் வீச்சு இன்னும் பலமாகும் என்று உண்மையை சொன்னால் கேட்க மாட்டாங்க ஏன்னா, வியாபாரம் பாதிக்குமே சமஸ்
நெத்தியடி சமஸ்... மிச்சமுள்ள தமிழர்களுக்காவது ஒரு வழி கிடைக்க வேண்டுமென்றால்,சர்வாதிகாரி ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டுமென்றால், விடுதலைப் புலிகள் கோஷத்தை மீண்டும் எழுப்பாமல் இருப்பதே நல்லது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.
பதிலளிநீக்குசார்...ஒரு சில கருத்துகளை கூற விரும்புகிறேன்....இது முதன்முதலில் ஒரு பன்னாட்டு போர்..இந்து மகா சமுத்திரத்தில் ஒரு ஊன்று இடத்தை பிடிக்க முதலாளித்துவ நாடுகள் இனைந்து நடத்திய போர்...போருக்கு பின் இலங்கையில் அதிகரித்திருக்கும் முதலீடுகளே இதற்க்கு சாட்சி.....ஆனால் புலிகளை விட்டால் அதை எதிர்க்க யாரும் முன்வரவில்லை (அவர்கள் தரப்பிலும் தவறு இருந்தாலும்)...வேறு யார் இருந்தாலும் பன்னாட்டு சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பார்கள்.....குழந்தைகளை முன் நிறுத்தினார்கள் என்கிறீர்கள்...இன்று மீதம் இருக்கும் குழந்தைகள் நிலை என்ன??? (ஆவண படமே உள்ளது)....நாம் கையறு நிலையில் தான் இன்னமும் இருக்கிறோம்...யாரும் உண்மையான நோக்கோடு நமக்காக போராடவில்லை...8000.மக்கள் இறந்த கொசொவவே தனி நாடான போது...1.5 லட்சம் இறந்த ஈழத்துக்கு என்ன நீதி????இதை கேட்க யார் இருக்கிறார்கள்....புலிகள் இல்லையெனில் இந்த வீழ்ச்சி முன்கூட்டியே நடந்திருக்கும்...இது தான் நிதர்சனம்.....எதிர்ப்பு காட்டியதால் சேதம் அதிகமானது....
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குActually some people think that as if they them self went to Lanka and fought(won) against LTTE. You know, some people will wait and say depends on the result. If the LTTE won against then they could say entirely different. I am not sure which side the writer is.
நீக்குMost of Tamils won't accept all the activities of LTTE(mainly after Rajive Gandhi Issue). In that assassination itself there were lot of conspiracy theories and the multi level investigation still investigating the issue?
The writer may think that the approach to achieve a goal is different and he is not revealing any kind of that and what he can do is simply criticizing the approach that had happened in the Elam. I am not sure whether people can now understand the reason of the formation of LTTE. In the beginning there were lot of hunger strike and Gandhiyan way of agitation that were not worked out and ultimately a approach kind of LTTE came. Due to lot of reasons it got killed now. But one can't easily forget the Prabakaran in the history of Elam.
It is something like M.K.Ghandhi was not helping the other groups in the Indian Independent movements. No need help it could be better just keep quite.
But all the Ways are targeting to the specific goal. It is easy to criticize others it is not such easy to organize a movement in the successfully way.
You may need to watch the student's agitation which were not done in the during last Lanka war.. But I can say it started after having seen Prabhakan's Son Photo.
சமஸ் நீங்கள் இன்னமும் ஈழத்தமிழர்களின் வலிகளை புரிந்து கொள்ளாதவராக ஏன் உள்ளீர்கள் என்றுதான் புரியவில்லை??? 2009 ல் இருந்து ஏன்ன்ன்ன் ? இன்று வரை பலரும் ... நானும் நீங்களும்அமைதியாக இருந்துகொண்டிருக்கிறோம் நம் வாழ்க்கை முக்கியம் என்று. அப்படியே இருந்துவிட வேண்டியதுதானே...அவரவர் வேலையை அவரவர் செய்கின்றனர்...முடிவுகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்... நீங்கள் அவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.... தயவுசெய்து உங்கள் நல்ல எழுத்துக்களை வீணாக்காதீர்கள்.... நன்றி.
பதிலளிநீக்குஉள்ளதைச் சொன்னால் உள்ளம் குமுறுவது நியாயமா? உளத்துணிவைப் பாராட்டவேண்டும் சாக்கிரட்டீசை நினைத்துப்பாருங்கள்
நீக்குநல்லதொரு தெளிவான பார்வை..... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉண்மையின் உரைக்கல்லாகவே உங்களைப் பார்க்கிறேன் சமஸ் சார். இந்த நேர்மையான பார்வையையும் ஆன்ம பலத்தையும் எங்கிருந்து நீங்கள் பெறுகிறீர்கள் என்று தெரியவில்லை. மோசமாக கருத்து எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதட்டும். நீங்கள் கவலைப்படாதீர்கள். எண்ணற்ற வாசகர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். உண்மை எப்போதுமே சுடத்தான் செய்யும். அதுவும் எதையுமே யோசிக்காமல் வாழ்க ஒழிக போட்டு பழகிய நம் மக்களிடையே இப்படிப்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் வரத்தான் செய்யும். உங்கள் பணியை தொடருங்கள்... வாழ்க உம் பணி.
பதிலளிநீக்குசெல்வ. திருநாவுக்கரசு
சென்னை,.
புலிகள் சரி கொல்லப்பட்டனர் - ஏற்போம் . பிள்ளைகள்? இப்ப பேச வேண்டிய பெரிய கருத்து - புலிகொடி வேணாம்! சயனைடு சாப்பிடாமல் வெள்ளை கொடி எப்படி நியாயம்? "சமஸ் சார். இந்த நேர்மையான பார்வையையும் ஆன்ம பலத்தையும் எங்கிருந்து நீங்கள் பெறுகிறீர்கள் என்று தெரியவில்லை." பெறும் கூலி காசில் - சிங்களன் தமிழில் நியாயம் பேச கொடுத்த காசில். கொலை செய்ய அவன் பட்ட கஷ்டம் உங்க கண்ணுக்கு ஏன் தெரியமாட்டேன்கிறது? கூலிக்கு எழுதும் போது எனக்கென்ன வலி? நாசமா போகாத தமிழனே நல்லவா இருக்கு?
பதிலளிநீக்குஈழத் தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வு சார்ந்து நாம் முன்னெடுக்கும் எந்தப் போராட்டத்திலும் இது பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத் தமிழர்களின்பால் அக்கறை உள்ளவர்களும் உரக்கப் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால், நம்முடைய பேச்சை உண்மையான யதார்த்தத்திலிருந்து - புலிகளுக்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்குவதே ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.
எதற்கு தொடங்கனும்? இன்னும் அழிவு ? பேசாம நீங்களே செத்தால் கொலை பழிக்கு பாவம் சிங்களன் ஆளாக மாட்டான். தாமாக சாவதே ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.
உங்கள் பணியை தொடருங்கள்... வாழ்க உம் பணி.
கூலிக்கு அதிகமாக இருக்கட்டும் எழுத்து. ஆயுத எழுத்தை தவிர்த்து . ஆமாம் அஃது வன்முறை.
அரசுகள் மட்டுமே அதை தண்டனை யில்லமல் பயன் படுத்த- கொல்ல வாக்களித்து விட்டோமே.
நண்பர் ஹாரிஸ்பன், முதலில் தனக்கு ஒவ்வாத கருத்துகளைச் சொல்வோர் மீது சேற்றை வாரிப் பூசும் பழக்கத்தைக் கைவிடுங்கள். என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்களோ, அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்!
நீக்குI agree with you Harrispan..I see the Ego only in his article nothing else .. More importantly there is no 'SAMAS' in his writing. May be you can say he is a smart writer but he is nothing to do with ELAM and their problem.
நீக்குI am totally agreeing with u Samas. Pls write n show lights on such matters. Keep it up.
பதிலளிநீக்குநீங்கள் கூறுவதை போல எதுவுமில்லலை புலிகள் ஒன்றும் வேற்றுகிரக வாசிகள் அல்லா எம்மூரில் நடந்தது குப்பனுக்கும் சுப்பனுக்கும் நடந்த வாய்கால் தகராறும் அல்ல ,,,,, ஒரு செல் விழுந்து வெடிக்கும்போது நிங்கள் கூட இருந்த்ருப்பிர்கலனால் உங்களுக்கு புரிந்திருக்கும் .. புலிகள் இல்லாமல் தமிழர் இல்லை தமிழர் எல்லாம் புலிகள்தான்..
பதிலளிநீக்குசமஸ் நீங்கள் இன்னமும் ஈழத்தமிழர்களின் வலிகளை புரிந்து கொள்ளாதவராக ஏன் உள்ளீர்கள் என்றுதான் புரியவில்லை??? 2009 ல் இருந்து ஏன்ன்ன்ன் ? இன்று வரை பலரும் ... நானும் நீங்களும்அமைதியாக இருந்துகொண்டிருக்கிறோம் நம் வாழ்க்கை முக்கியம் என்று. அப்படியே இருந்துவிட வேண்டியதுதானே...அவரவர் வேலையை அவரவர் செய்கின்றனர்...முடிவுகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்... நீங்கள் அவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.... தயவுசெய்து உங்கள் நல்ல எழுத்துக்களை வீணாக்காதீர்கள்.... நன்றி.
நண்பர் கஜன் பரமலிங்கம்...
நீக்குநான் ஈழத் தமிழர்களின் வலியை நான் உணராதவனும் அல்ல; புலிகளின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளாதவனும் அல்ல.
செப். 2001 தாக்குதல் உண்டாக்கிய பெரிய தாக்கம் என்னவென்றால், உலகில் எந்த ஒரு நாடும் தனியானது அல்ல; எந்த ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையானதும் அந்த நாட்டின் அபிலாஷைகளை மட்டுமே உள்ளடக்கியதல்ல என்ற சூழலை உருவாகியதுதான். 2001-க்கு முன் இருந்த உலகம் வேறு. பிறகான உலகம் வேறு. புலிகள் இந்த வேறுபாட்டின் தீவிரத்தை உணரவில்லை. அதன் விளைவே ஈழப் போரில் நமக்கு ஏற்பட்ட தோல்வி. இது உலகெங்கும் நடக்கும் அத்தனை தேசிய இனப் போராட்டங்களுக்குமே ஒரு பாடம். புலிகளைக் கடந்துவருவது காலத்தின் கட்டாயம்.
சமஸ், ஏதோ கி.மு. கி. பி. போன்று 2001 க்கு முன், 2001 க்கு பின் என்று உலகை நீங்கள் பிரித்து காண்பதும், ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கு அந்த வேறுபாட்டை நீங்கள் காரணம் கூறுவதும் வியப்பாக உள்ளது. நீங்களும் ஈழத்தில் வாழ்ந்து பார்த்திருந்தால் தெரியும் வலி. அடிமை வாழ்வை மட்டுமே தொடர்ந்து வரும் ஜால்ரா இனமாக இந்தியாவில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களை சகோதரர்களாகப் பாராமல் ஏதோ வேற்றுகிரகவாசிகளாகப் பார்க்கும் இந்தியா, ராஜபக்ச விற்கு வெண்சாமரம் வீசி இனப்படுகொலையை பின்னின்று நடத்திய காங்கிரஸ் அரசு, யார் செத்தால் எனக்கென்ன, ஆயுதம் விற்றால்போதும் என்ற அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் மற்றும் இன துரோகிகள் (தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகள்) ஆகியோரே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்பது தங்களுக்கு விளங்காமல் போனது ஆச்சரியமே...
நீக்குதற்போது இலங்கைத் தமிழர்கள் அமைதியையே அதிகமாக விரும்புகின்றனர். இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் சொல்லொனாத் துயரத்திற்கு தள்ளப்பட்டு, குடும்பத்தில் பலரை இழந்து, இன்று உயிருடன் அனாதைகளாக ஆதரவற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதாரணத் தமிழர்கள் எவரும் எவ்விதப் போராட்டத்தையும் நடத்திட விரும்பவில்லை. அவர்கள் வேண்டுவது இணக்கமான வாழ்வை மட்டுமே. ஆனால் இங்குள்ள சில தேசத்துரோக சக்திகள், புலம் பெயர்ந்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் புலிகள் ஆதரவாளர்கள் மீண்டும் மீண்டும் பிரச்னையை கிளப்பி வருகின்றன. அவர்களால் மேலும் சில தமிழர்கள் சிங்கள இன சமுக விரோத சக்திகளால் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடலாம். வேறு எதுவும் நடக்கப்போவது இல்லை. அங்குள்ள தமிழர்களின் நல வாழ்விற்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதே இப்போதைய தேவை. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் இலங்கைத் தமிழனுக்கு மீண்டும் தொல்லையையே ஏற்படுத்தும். தொடரட்டும் தங்கள் நற்பணி.
பதிலளிநீக்குவித்யா நிதி
பதிலளிநீக்குநண்பர் கஜன் பரமலிங்கம்...
நான் ஈழத் தமிழர்களின் வலியை நான் உணராதவனும் அல்ல; புலிகளின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளாதவனும் அல்ல.
செப். 2001 தாக்குதல் உண்டாக்கிய பெரிய தாக்கம் என்னவென்றால், உலகில் எந்த ஒரு நாடும் தனியானது அல்ல; எந்த ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையானதும் அந்த நாட்டின் அபிலாஷைகளை மட்டுமே உள்ளடக்கியதல்ல என்ற சூழலை உருவாகியதுதான். 2001-க்கு முன் இருந்த உலகம் வேறு. பிறகான உலகம் வேறு. புலிகள் இந்த வேறுபாட்டின் தீவிரத்தை உணரவில்லை. அதன் விளைவே ஈழப் போரில் நமக்கு ஏற்பட்ட தோல்வி. இது உலகெங்கும் நடக்கும் அத்தனை தேசிய இனப் போராட்டங்களுக்குமே ஒரு பாடம். புலிகளைக் கடந்துவருவது காலத்தின் கட்டாயம்.
நண்பர் ஹாரிஸ்பன், முதலில் தனக்கு ஒவ்வாத கருத்துகளைச் சொல்வோர் மீது சேற்றை வாரிப் பூசும் பழக்கத்தைக் கைவிடுங்கள். என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்களோ, அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்!
நண்பர் ஹாரிஸ்பன், முதலில் தனக்கு ஒவ்வாத கருத்துகளைச் சொல்வோர் மீது சேற்றை வாரிப் பூசும் பழக்கத்தைக் கைவிடுங்கள். என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்களோ, அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்/////
நீக்குஇதை இரண்டு இடங்களில்பயன் படுத்துகிறீர்கள்///
உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் சொல்ல வருவதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதா?
உங்கள் நோக்கில் கருத்தை பதிந்து விட்டீர்கள் அவர்கள் நோக்கில் பதில் சொல்கிறார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாமல்
வலுக்கட்டாயமாக திணிக்க பார்க்கிறீர்கள் (அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்!)
இது உங்களுக்கு சரி என்று படுகிறதா?
மேலும் இன்றைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் சிங்களர்களை அனுசரித்து அடங்கி நடந்து,தஙகள் பிழைப்பை ஓட்ட வேண்டுமா? உங்கள் மனதில் அவர்கள் நல்வாழ்விற்க்கான என்ன திட்டம் உள்ளது சொல்லுங்கள்
அதை அவர்கள் முன்னெடுத்து நன்றாக இருக்கட்டும்
கட்டுரையின் தலைப்பே உங்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாக உள்ளது. புலிகள் ஆதரவாளர்களை முட்டாள்கள் என விளிப்பது, நீங்கள் அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதாக உங்களுக்கு உரைக்கவில்லை. ஆனால் உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்களுக்கு பொத்துக்கொண்டு கோபம் வருகிறது
நீக்கு2008ல் ஒரு அன்பர் விகடனில் இந்த சரியான கருத்துரையை பதிவு செய்திருந்தார்:
பதிலளிநீக்குஒரு மிதமான ஒப்பந்தம் வருகின்ற சூழ் நிலைகளில் வி.பு.க்கள் அதையெல்லாம் கெடுத்து ஒழித்தார்கள். தனி ஈழம் தனி ஈழம் என்று 2 தலை முறைகளை காவு கொடுத்தாகிவிட்டது. மற்ற தமிழ்த்தலைவர்களையெல்லாம் கொன்று குவித்தாகிவிட்டது. இன்று இவர்களை விட்டால் இலங்கைத்தமிழர்களுக்கு நாதியில்லை என்று சூழ் நிலையை ஏற்படுத்திவிட்டாகிவிட்டது. ஆனால், இன்றைய நிலையில் 2001க்குப் பின் தீவிரவாதமோ, ஆயுதம் ஏந்திய விடுதலைப் போரோ, அது குறித்த உலக நாடுகளின் பார்வை மாறிவிட்டது. இப்போது, சிறீலங்கா அரசாங்கம் வலுவாக இறங்கிவிட்டது. புலிகளை ஒழித்தபின்னும் இலங்கைத்தமிழர்களின் நிலை மாறுமா என்பது ஐயமே....இந்த நிலைக்கு பாவப்பட்ட இலங்கைத்தமிழர்களை இழுத்துச்சென்றது வி.பு.க்கள் தமிழ்ச்சமுதாயத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம். ஆயுதத் தொடக்கத்திற்கு பல நியாயங்கள் இருக்கலாம். அன்பர்களின் கண்ணீர்க்கதைகள் நிச்சயம் மனதை வாட்டுகின்றன. இங்கு பதிவு செய்யும் பாதிக்கப்பட்ட உள்ளங்களின் காயங்களை உணர முடிகிறது. ஆனால் நியாயமான காரணங்களுக்கான தொடக்கம் , எப்படி தப்பிக்க எந்த ஒரு வழியும் இல்லாத சூழ் நிலையில் அடிவாங்கும் வீட்டு எலி மேலே விழுந்து கடித்து பிராண்டுமோ, அப்படி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் அது ஒரு போதையாக, ஆட்சி வெறியாக மாறிவிட்டது. அதனால் தான் தன்மானத்துடன் கூடிய சுமுகத்தீர்வு கிடைக்கவில்லை. மேலும், காசுமீர் போன்ற பிரிவினை பிரச்சனையில் தவிக்கும் இந்தியா தனி ஈழத்திற்கு தார்மீக ஆதரவு தராது. பேரறிஞர் அண்ணா, " நடைமுறையில் சாத்தியமா" என்ற நிலையில் சிந்தித்து திராவிட நாடு போன்ற கொள்கைகளை கைவிட்டது போல் நடக்கும் என்று வி.பு.க்களிடம் எதிர்பார்க்கமுடியாது. இடையில் அல்லல் என்னவோ அப்பாவித்தமிழர்களுக்குத்தான். இந்தியா, புலிகளுக்குப்பின் தமிழர்களுக்கு நியாயமான ஒரு தீர்வை தர அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து நிர்பந்திக்கலாம். ஆனால் இலங்கையின் இறையாண்மையில் தலையிடாமல் இது எவ்வகையில் சாத்தியம் என்பதைப் பார்க்கவேண்டும். பிரச்சனையில் ஒரு நலமான விவாதம் இன்றி ஒரு உணர்ச்சிபூர்வமான அணுகுமுறை யாருக்கும் பயன் தராது.
புலிகளைத் தாண்டி எந்தக் கருத்து கூறினாலும் நீ ராசபக்சே கைக்கூலி, சிங்களனின் பினாமி என்று சேற்றை அள்ளிக் கொட்டும் ஃபாசிஸ்ட்டுகளாக இருக்கிறார்கள். இன்றைய இலங்கைத் தமிழனின் பாவப்பட்ட நிலைக்குக் காரணம் உலக நாடுகளின் பார்வை மாறியதை உணராமல் ஆதிக்க வெறி ஏறி ஆட்டம்போட்ட புலிகளே. பல நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்கி தன் கை ஓங்கி அடிக்கும்போது வீரம் வீரம் என்று மார் தட்டுவதும், அதே போல் எதிரி நாலு நாடுகளுடன் சேர்ந்து ரேடார், ஆயுதம் என்று வாங்கி திருப்பி அடிக்கும்போது அய்யோ அநியாயம் இதெல்லாம் வீரமா அன்று அழுவதும் என்ன நியாயம் ?
நியாயமான கருத்துக்கூறினாலும் கண்ணை மறைத்துப் புலிக்கட்டுப் போட்டிருப்பவர்கள் கைக்கூலி என்று ஏசிக்கொள்ளுங்கள். ஆனால் செத்து மடிந்த ஒவ்வொரு ஈழச் சகோதரனின் ரத்தக்கறை உங்கள் சுயநலமான கைகளில் உள்ளது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு ரொட்டியிலும் அந்தக் குருதி தோய்ந்துள்ளது. இனியாவது மிச்சம் மீதியுள்ள பாவப்பட்ட மக்களுக்கு என்ன செய்யமுடியும் என்றி நேர்வழியில் சிந்தியுங்கள்
நான் மக்கள் ஓசை பத்திரிகையில் பணி புரிந்த காலம்...2001- என்று நினைக்கிறேன். புலிகள் வன்னிக்காட்டில் மிகப்பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்கள் பத்திர்கையில் இருந்து திரு. அக்கினி சுகுமாறன் அவர்களும் புகைப்படக் கலைஞர் மலையாண்டி அவர்களும் ஈழம் சென்று வந்தார்கள்.
பதிலளிநீக்குமலேசியாவில் இருந்து வந்திருந்த காரணத்தாலோ அல்லது வேறுவகை பற்றாலோ அந்த இருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரபாகரன் விருந்து கொடுத்து இரண்டு நாள் தங்க வைத்து அனுப்பினார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பை பற்றி பேசும் போது என்னுடைய கருத்தைக் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விரல் நுனியில் அணுகுண்டின் விசை இருக்கின்ற காலகட்டம் இது. இந்தியாவின்
ஓரத்தில் பற்றுகின்ற தீ நாக்கு இங்கிலாந்தின் மையப்பகுதியை சுடுகின்ற சூழ்நிலையைக் காலம் உருவாக்கி விட்டது. ஒத்துப் போவது புத்திசாலித்தனம். இல்லையேல் புலிகள் இருந்த இடம் தெரியாமலும் போராட்டத்தின் தடம் தெரியாமலும் அழிக்கப்படுவர் என்று சொன்னேன்.
என் வார்த்தை கடல் நீரில் விழுந்த ஒரு சொட்டு கண்ணீர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. புலிகளின் காதுக்கும் எட்டப் போவதில்லை. முகம் தெரியாத எம்முடைய சொந்தங்களும் உறவுகளும் முள்ளி வாய்க்காலிலும் வன்னிக்காட்டிலும் பதுங்கு குழியில் ஒதுங்கிக் கிடந்து மரணத்தின் வாலைப்பிடித்து ஊசலாடிக் கொண்டிருந்த அவலத்தின் வலி இதயச்சுவரை அரித்ததால் இந்தக்கருத்தை சொன்னேன்.
ஆனால், அப்போது என் நண்பர்களால் இந்த வார்த்தை வன்மையாக கண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் வணக்கம் மலேசியா வார இதழ் ஆசிரியராக பணி செய்த காலம். என் விரல்கள் சற்று சுதந்திரமாக சுழலும் சூழ்நிலை. 'திசை மாறியது புலிகளின் வீரம்.. கனவானது தனித்தமிழ் ஈழம்' என்ற கட்டுரையை எழுதினேன். இதுவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. என் எழுத்தில் இருந்த கண்ணீரின் ஈரத்தைப் பார்க்காமல் கட்டுரையின் ஓரத்தை மட்டும் பார்த்து விட்டு கைத் தொலைபேசி வழியாக பாய்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
விளைநிலங்களில் களை எடுக்கும்போது சில பயிர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது தவிர்க்க முடியாததுதான். மொத்த பயிரும் செத்து விட்டால் களை எடுப்பின் நோக்கம் என்ன? மக்களுக்காக தலைவன் தாழலாம்.. தலைவனுக்காக மக்கள் வீழக்கூடாது... புலிகளின் போராட்டத்தில் இருந்த முரண்பாடு, ஒரு வீர வரலாற்றுக்கு முடிவுரை எழுதி விட்டது.
புலிகளுக்கு ஆதரவாக போர்க்குரல் எழுப்பியவர்களுக்கு அதை மறந்து விட்டு அடுத்த பாதையில் பயணிக்க ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன். ஆனால், என்னை போன்றவர்களுக்கு அப்படி இல்லை. ஈழப் போரின் போது சிங்கள ராணுவம் வீசிய கொத்துக் குண்டுகளில் எம் சகோதர சகோதரிகளின் உடல் சிதறிய காட்சி என் கண்களில் பச்சை குத்திய படமாக நிற்கிறது. அவர்கள் எழுப்பிய மரண ஓலம் என் செவிப்பறைகளைக் கிழிக்கிறது.
ஆகவே, சமஸ் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.. முகநூலில் எம்மை ஈர்த்த முகம் தெரியாத நண்பரே.. வாழ்த்துக்கள் என்றென்றும்...
வணக்கம்,
பதிலளிநீக்குஎமது எதிர்காலம் எமக்கென்று ஒரு நாடு இவை எல்லாமே இப்போ புலம்பெயர் நாடுகளில் வாழும் இளம்சந்ததியினரிடம் கொடுக்கப்பட்டு இருக்கு, எமக்கு தெரிந்ததெல்லாம் பிரபாகரன் மட்டுமே, அந்த ஒற்றை சொல் போதும் நாம் மறுபடி ஒன்றாக, அணிதிரழ, போராட. புலிகள் மீது விமர்சனம் இருக்கலாம் ஆனால் எமக்கு எம் தலைவன் மீது எந்த விமர்சனமுமில்லை,அந்த நாமத்தை மறந்த அல்லது மறைத்துவிட்ட நிலை தான் நீங்கள் குறிப்பிடும் பல்லுபுடுங்கிய பாம்பின் நிலை, நாம் விழவிழ எழுவதற்கும் வீரியம்பெறுவதர்கும் நான் தமிழன் என்று தலை நிமிர்வதரற்கும் எனக்கு பிரபாகரன் என்ற ஒற்றை சொல் போதும்.
Samas,
பதிலளிநீக்குVery well written article. Totally agree with your views. I have read your articles in "Vikatan" too. Keep up your good work.
அருமையான தெளிவான கேள்விகள் நியாமான கருத்துக்கள்.
பதிலளிநீக்குவெளிநாடுகளில் வாழும் சிலர் பிரபாகரன் இருக்கின்றார் எனச்சொல்ல்வதன் உண்மையான காரணம், புலிகளின் பல மில்லியன் டாலர்கள் ஐறோப்பாவிலும் அமெரிக்க நாடுகளிலும் பல பினாமிகளிடம் இருக்கின்றது.அதை அவர்கள் கைப்பற்றாவே இப்படிச் சொல்ல்கிறார்கள்.
பதிலளிநீக்குஅதுமட்டுமல்ல இன்றும் ஏதுமறியா அப்பாவிகளின் பணத்தைச் சுருட்டிக்கொள்ளத்தான்
பதிலளிநீக்குYou can feel the pain if the headache is yours. Who are the LTTE's? For whom they fought? For whom they dead? Is there anything better their life? As a tamilan we need to support tamil people whoever it may for their rights bro
பதிலளிநீக்குநண்பர் ஹாரிஸ்பன், முதலில் தனக்கு ஒவ்வாத கருத்துகளைச் சொல்வோர் மீது சேற்றை வாரிப் பூசும் பழக்கத்தைக் கைவிடுங்கள். என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்களோ, அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்/////
பதிலளிநீக்குஇதை இரண்டு இடங்களில்பயன் படுத்துகிறீர்கள்///
உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் சொல்ல வருவதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதா?
உங்கள் நோக்கில் கருத்தை பதிந்து விட்டீர்கள் அவர்கள் நோக்கில் பதில் சொல்கிறார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாமல்
வலுக்கட்டாயமாக திணிக்க பார்க்கிறீர்கள்
(அப்படித்தான் உங்களுடைய புலி ஆதரவும். இந்தப் பாழாய்ப்போன கண்மூடித்தனம்தான் காலங்காலமாய் நம்மை அடித்துத் துவைக்கிறது என்பதை உணருங்கள்!)
இது உங்களுக்கு சரி என்று படுகிறதா?
மேலும் இன்றைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் சிங்களர்களை அனுசரித்து அடங்கி நடந்து,தஙகள் பிழைப்பை ஓட்ட வேண்டுமா?
அல்லது உங்கள் மனதில் அவர்கள் நல்வாழ்விற்க்கான என்ன திட்டம் ஏதேனும் உள்ளதா சொல்லுங்கள் அதன்படி நடந்து,
அதை அவர்கள் முன்னெடுத்து நன்றாக இருக்கட்டும்
கட்டுரையின் தலைப்பே உங்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாக உள்ளது. புலிகள் ஆதரவாளர்களை முட்டாள்கள் என விளிப்பது, நீங்கள் அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதாக உங்களுக்கு உரைக்கவில்லை. ஆனால் உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்களுக்கு பொத்துக்கொண்டு கோபம் வருகிறது
நீக்குஎன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்களோ, //////
பதிலளிநீக்கு////
////
இப்படி நீங்கள் கூறுவதன் மூலம் உங்கள் கர்வம் வெளிப்படுகிறது .அப்படி இல்லாமல் உங்களைப்பற்றியும் உங்கள் ஈழத்தமிழர் அக்கறை பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி
ஏஆர்கே.ராஜராஜா
திரைப்பட இயக்குனர்,
மொழிமாற்றுபட வசனகர்த்தா,
தயாரிப்பாளர்
அலைபேசி;9841280410
மின்னஞ்சல்;kanr25@gmail.com
மிகவும் சரியான பதில்...இங்கே பலரும் புலிகள் சமாதானத்தை எதிர்த்தது போலவும் போருக்கு புலிகள்தான் காரணம் என்பதுபோலவும் எழுதியுள்ளனர். புலிகள்தான் போரிட்டனர். அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியது ஏன்? புலிகளை முற்றிலும் அழித்துவிட்டோம் என மார்தட்டிய ராஜபக்ச அரசு இன்றுவரை பல்லாயிரக்கணக்கான தமிழரை இன்னும் திறந்தவெளிச் சிறையில் வைத்திருப்பது ஏன்? இவர்களின் விருப்பமெல்லாம் இலங்கைத்தமிழரும் இவர்களைப்போல் முதுகெலும்பு இல்லாமல் வாழவேண்டும் என்பதே அன்றி வேறில்லை.
நீக்குகட்டுரையின் தலைப்பே உங்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாக உள்ளது. புலிகள் ஆதரவாளர்களை முட்டாள்கள் என விளிப்பது, நீங்கள் அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதாக உங்களுக்கு உரைக்கவில்லை. ஆனால் உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்களுக்கு பொத்துக்கொண்டு கோபம் வருகிறது
நீக்குஉங்கள் கருத்தில் நான் உடன் படுகிறேன் . உயிரின் வலி எல்லோருக்கும் ஒன்று தான் . ஈழத்தில் நடந்தை யாரும் ஏற்று கொள்ள முடியாது . இதில் விடுதலை புலிகளை உத்தமர்கள் என்று என்னால் ஏற்க முடியாது . இங்கு அரசியல் வாதிகளும் , ஊடங்களும் தப்பான கருத்தை தான் பரப்புகின்றன. தன் தாய் தந்தை , உறவுகள் , பக்கத்து வீட்டுக்காரன் , இங்கே உள்ள தமிழனை பற்றி சிறிதும் கவலை இல்லை. ஆனால் எங்கோ உள்ளவனுக்காக போராடுவது என்பது ஒரு நீலி கண்ணீர் வடிப்து போல் தான் . இப்போதெல்லாம் இது ஒரு பேஷன் போல் ஆகி விட்டது .
பதிலளிநீக்குஉம்மை சொல்லிக் குற்றமில்லை, நீர் சேர்ந்த இடம் அப்படி s m stalin
பதிலளிநீக்குஇவன் பயணித்த தமிழக பத்திரிகைகளை பார்க்கும் பொழுதே தெரிகிறது இவனது தமிழின நேசம்... என்ன செய்வது தியாகத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக மிக கடினமான நேரம்...
பதிலளிநீக்கு