தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?

            
             மிழர்
அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விஷயங்களில்கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?"
என்னையும்கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவைஉலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால்விடக் கூடியவை. எனினும், ஆங்கிலேயர்களைப்  போலவோ, ஐரோப்பியர்களைப் போலவோ ஏன் நம்மால் மகத்தான மாற்றங்களுக்கான பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியவில்லை? ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை?
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கேள்வி  என்னை அழுத்துகிறதுகுறிப்பாக, ஈழப் போருக்குப் பின் இந்த அழுத்தம் மேலும் அதிகமாகி இருக்கிறது. நினைத்துப் பாருங்கள், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தனி இனத்துவ சமூகம் ஈழத் தமிழினம். இதனால், அந்தச் சமூகம் அடைத்திருக்கும் அனுகூலம் என்ன


              நான் நினைக்கிறேன்தமிழர்களாகிய நாம், குறிப்பாக  கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பையே இன்னும் கற்றுக்கொள்ளவில்லைதமிழர்களில் பெரும்பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள்சாதனையாளர்களாக  இருந்தாலும் சரிஇந்தப் பலகீனத்தை நான் பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த விஷயத்தில் சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள்.  எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லைஒரு பொது நோக்கத்தின் கீழ், ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றத் தெரியவில்லை என்றால், உங்களால் வெற்றிகரமாக குடும்பம் நடத்தக்கூட முடியாது. தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில் இந்த விஷயத்தில் நாம் ஓரளவுக்குச் சமர்த்தர்களாக இருக்கிறோம். பொது வாழ்கையிலோ உருமாறிவிடுகிகிறோம்


             ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இந்தத் தனித்துவத்தையும் ஜனநாயகத்தையும் சகஜீவியாக நான் மதிக்கிறேன். அதேசமயம்ஒரு பொதுவான கருத்து - நமக்கு ஏற்புடையது - என்கிற பட்சத்தில், அந்தக் கருத்துக்கு ஆதரவளிப்பதே நம்முடைய பொதுவான கடமையும் புத்திசாலித்தனமும் ஆகும். ஆனால், நாம் அப்படி செய்வதே இல்லைநாம் செய்ய நினைத்திருக்கும் அல்லது செய்ய மறந்துபோன ஒரு காரியம், நம்மில் ஒருவன் அதை சர்வ சாதாரணமாகச் செய்வான். நாமோ அவனுடைய காரியத்தைக் கெடுப்பதிலோ, அவனை அலட்சியப்படுத்துவதிலோ முழுக் கவனத்துடன் செயலாற்றுவோம். ஒவ்வொருவர் வாழ்விலும் கணக்கெடுத்துப் பாருங்கள்… எத்தனை பேருடைய காரியங்களைக் கெடுத்திருப்போம் என்று.


             இது மோசமான ஒரு சமூக வியாதி. நீ எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ... நீ செய்வது எவ்வளவு முக்கியமான காரியமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... நான் உன்னை அங்கீகரிக்க வேண்டுமானால் - என் எதிர்ப்பை நீ தவிர்க்க வேண்டுமானால்முதலில் நீ எனக்குப் பிடித்தமானவனாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடூரமான, சர்வாதிகாரமான மனோபாவம்? இப்படிப்பட்ட மனோபவத்தைக் கொண்ட ஒரு மனிதனையே சகித்துக்கொள்வதே சவால். துரதிருஷ்டவசமாக இங்கு ஒரு சமூகத்தின் இயல்பே அப்படி இருக்கிறது. நம்மால் உன்னதங்களைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?

2010

10 கருத்துகள்:

  1. இந்த மோசமான சமூக வியாதியும், சர்வாதிகாரமான மனோபாவமும் வளர்ந்தது ஒரு புறம் இருந்தாலும், அப்படி சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டது அதிகம்...

    /// நீ எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ, நீ செய்வது எவ்வளவு பெரிய காரியமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... ///

    இந்த கடைசி வரிகளின் எழுத்துக்கள் (Font) மாறி உள்ளன... கவனிக்கவும்...

    குடும்ப வாழ்க்கை வேறு... பொது வாழ்க்கை வேறு என்றில்லாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் குழந்தைகளிடம் முதலில் உருவாக்க வேண்டும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரை. அருமையான கேள்விகளும் கூட. ஆனால் வழக்கம் போல படித்துவிட்டு கடக்கத்தான் போகிறோம்!!Free classifieds in India

    பதிலளிநீக்கு
  3. தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கென்று குணமுண்டு - அந்த குணம் பொறாமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் நீ எனக்குப் பிடித்தமானவனாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடூரமான, சர்வாதிகாரமான மனோபாவம்? இப்படிப்பட்ட மனோபவத்தைக் கொண்ட ஒரு மனிதனையே சகித்துக்கொள்வதே சவால். துரதிருஷ்டவசமாக இங்கு ஒரு சமூகத்தின் இயல்பே அப்படி இருக்கிறது. நம்மால் உன்னதங்களைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?//

      துரதிருஷ்டம் என்ற வார்த்தை வரும்போதே உங்களுக்கு பிடிச்சா மாதிரி சமூகம் இல்லைன்னு அர்த்தம் வருதே :)

      நீக்கு
  4. இன்றைய சூழ்நிலையில், நிறைய இடங்களில், விடயங்களில் நாம் ஒன்றுபடவில்லை என்பது உண்மை. அதற்கு மூலக்காரணம் நமது சமுகத்தின் பிள்ளை வளர்ப்பில் உள்ள தவறுகள்.

    பதிலளிநீக்கு
  5. தான் வாழ பிறரை கெடுக்கும் எண்ணம்,பொறாமை குணங்கள்,ஒற்றுமையின்மை,தனிமை வாழ்க்கை போன்றவைகளால் எந்த சமுதாயமும் முன்னேற்றம் காண முடியாதுதான்.நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஓர் அற்புதப் படைப்பு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. பொது திட்டத்தில் பொதுக் கருத்துடன் ஒத்துழைத்து இயங்கும் நிலையை தமிழர்கள் பெற்றிருக்கவே இல்லை, காரணம் அலட்சியம் மற்றும் பொறாமைக் குணங்களே முதன்மையானது. இரண்டு இப் பொது திட்டத்தை வகுத்து பரப்புரைத்து ஒன்றிணைக்கும் பணியை யார் முன்னெடுக்கப் போகின்றார்கள் என்ற வினாவும் உண்டு. சிங்களத்தின் அரசியல்வாதிகள், மதக்குருக்கள் அங்கு பொது திட்டத்துக்கு அம் மக்களை ஒன்றிணைக்கின்றனர். கேரளத்தில் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இச் செயலை செய்கின்றனர். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு சமூகத்தில் ஒன்றிணைப்பு பணியை யாரோ எடுக்கின்றார்கள். வடக்கு இலங்கைத் தமிழர்கள் கூட ஒத்திசைந்து பொதுத் திட்டத்தை அரசியல் மற்றும் அமைப்புக்கள் ஊடாய் முன்னெடுக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இதனை யார் செவ்வனே சிந்தித்துப் பாருங்கள்?! விடைக் கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான சிந்தனை..!
    - மலைநாடான்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு... தனிப்பட்ட மனிதனாக பொது நோக்கில் ஒன்றிணைய முற்படுவோம்.... சமூகமும் மாறும் என நம்புவோம்.... அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி....மாற்றங்கள் எதிர் நோக்குவோம்...

    பதிலளிநீக்கு
  9. People live in Tamilnadu are not belongs to Tamil Origin and this is the fundamental problem..

    பதிலளிநீக்கு